PDA

View Full Version : வாழ்வை கொண்டாடுவோம்அனுராகவன்
07-02-2008, 01:46 PM
வாழ்வென்பது போராடும் போர்களமல்ல; நாம்
நம்மையறிந்த மறுநொடியில்
வாழ்வைக் கொண்டாடும்போது
கொண்டாட துவங்குவோம் என்று.

உலகத்தை முழுமையாக வாழ
பிறந்தோம் என்று அறியாமல்
உலகில் துன்பத்தையே நினைத்து
சுகந்தையிழந்து தேடி அலைகிறோம் இன்று.

காந்தி பிறந்த மண்ணில் பிறந்த நாம்
நம்மில் ஒன்றுமில்லை என்று புலம்பல்ல..
பணம் வேணும் வாழ்க்கையில் ;ஆனால்
பணமே எல்லாமல்ல

மனிதன் மிக உயர்ந்தவன் மற்ற
உயிர்களிலே; ஏன் புரியவில்லை
வாழும் இவ்வுலகிலே;முதலில்
சிந்தித்து பட்டியிடுக வாழ்வதற்கு.

வாழ்வில் அடைவதைக் குறிக்கோளாக்கி
அதை நேர்வழியில் செல்ல முயற்சி எடுக
வாழ்வு அப்போது உன் கைகளில்
அதை கொண்டாட முழுமைத்துவம் கிடைக்கும்.

-அனு

இளசு
07-02-2008, 06:01 PM
கருத்து சிறப்பு.. வாழ்த்துகள் அனு!

தமிழ்மன்றம் ஓர் பலகை போல..

எழுதிப்பழக நல்ல களம்..

தொடர்ந்து எழுதுங்கள்..

வார்த்தைச் சிக்கனம், வரிவடிவம், ஒலிநயம், நச்சென ஓர் இறுதிவரி
இப்படி மெல்ல மெல்ல செதுக்கும் சூட்சுமம் தன்னாலே கைவரும்..

அதுவரை நிறைய நிறைய வாசியுங்கள்..
நிறைய யோசியுங்கள்..
நிறைவாய் எழுதுங்கள்...

கவிதையும் கைப்பழக்கம்.

தொடருங்கள்.. என் ஊக்கங்கள்!

ஜெகதீசன்
07-02-2008, 06:18 PM
அனு
வாழப்பழத்துல எப்படி ஈசியா ஊசி ஏத்துறதுன்னு
இளசுகிட்டதான் தெரிஞசுக்கனும்.

அனுவோட கவிதை மிண்டும் ஸ்னேகாவ
நினைவூட்டுது.எனக்கு மட்டும்.

வாழ்க்கையே ஓர் போர்க்களம்
போர்க்களம் மாறலாம் ஆனால்
போர்கள் மாறுவதில்லை.

அதில் வாழ்ந்துதான் ஆகனும் ன்னு
பகவான் கிருஷ்ணர் சொல்லியிருக்காரே
அதுக்கு என்ன சொல்லறீங்கக்கா ?

இளசு
07-02-2008, 06:29 PM
ஊக்கத்தேன் அல்லவா ஊட்டியிருக்கிறேன் ஜெகதீசன் அவர்களே..

(ஊசி எங்கே இங்கே?)

நான் முதலில் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது பற்றி
''அண்ணனின் வி(வ)சனக் கவிதை'' என்ற படைப்பை
(வசனத்தை வரிமடக்கி) கவிதைப்பகுதியில் பதித்தேன்..

அதையும் வாசித்து, ஊக்கி, செப்பனிட்ட தோழர்கள் நம் மன்றத்தவர்..
அப்புறம் அதையே பிடித்து நானும் பல ஆக்கங்கள் தரும் அளவு
தெம்பு கொடுத்த இடம் நம் மன்றம்..

அன்று மன்றத்தவரிடம் பெற்றதை
இன்று மன்றத்தவர்க்குக் கொடுக்கிறேன்..

அவ்வளவே..

தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல நாம்..
நம் எழுத்தை நாமே பார்த்து, மற்றவர் விமர்சிக்க அங்கீகாரம் பெற்றும்
மெல்ல உருப்பெறுபவர்கள் நாம்..
(சிலர் பிறவி எழுத்தாளர்கள் - அவர்கள் விதிவிலக்கு)

எனவே ஊக்கம் கெடுக்கும் பின்பதிவுகள் நான் தர விரும்புவதில்லை..

பின்னூட்டம் - சொல்லுக்குப் பொருளாய் பதிக்கவே ஆசை..

அதை மீறி எங்காவது யாரும் புண்பட்டால், என் மன்னிப்பு கோரல் நிச்சயம் இருக்கும்..

பூமகள்
07-02-2008, 06:34 PM
அண்ணலின் உள்ளம்
சொல்ல ஆயிரமாயிரம் பதிவிருந்தும்..!

இங்கே உள்ளங்கை நெல்லிக்கனியாய்
காணக் கிடைத்திருக்கிறது..!

எழுத்தாளர் வளர..!
எழுத்து எவ்வளவு முக்கியமோ..!
அதே அளவு முக்கியம்
அண்ணலின் பின்னூட்ட விமர்சனமும்..!!

தேன் தோய்ந்த மயிலிறகு
வருடலில் எங்கே ஊசி..??

மீண்டும் தாழ் போற்றுகிறேன் பெரியண்ணா. :)

மனோஜ்
07-02-2008, 07:00 PM
வாழ்வை அறிவாய்
வயதென்னும் பாதையில்
இன்பத்தை மறந்து
துன்பத்தை கையில் எடுப்பதேன்
காந்தியின் வாழ்க்கை
உதரானங்கலாய் உத்துகோலக்கிடு
பணம் மட்டும் வாழ்வா
விலங்கிலும் சிறந்தது மனம்
வாழக்கை வாழ்வதற்கு
விதிகள் விதித்திடு
குறிக்கோல்கள் மையமாக்கு
வாழ்கை இனிக்கும்
மகிழ்ந்திடு அன்று உண்விழாகாலமாய்

- இந்த கவிதை என் மனதில்

அருமையான கவிதை கரு அனு அக்கா

ஜெகதீசன்
07-02-2008, 07:10 PM
ஓரு கவிதைக்கு
எத்தனை எத்தனை பதில்
கவிதைகள்.இதில்
எந்த கவிதைக்கு எத்தனை முறை
விமர்சிக்க முடியும் ஓருவனால் ?
யாரிடம் கேட்பது இந்த கேள்வியை ?

அனுராகவன்
07-02-2008, 08:58 PM
கருத்து சிறப்பு.. வாழ்த்துகள் அனு!

தமிழ்மன்றம் ஓர் பலகை போல..

எழுதிப்பழக நல்ல களம்..

தொடர்ந்து எழுதுங்கள்..

வார்த்தைச் சிக்கனம், வரிவடிவம், ஒலிநயம், நச்சென ஓர் இறுதிவரி
இப்படி மெல்ல மெல்ல செதுக்கும் சூட்சுமம் தன்னாலே கைவரும்..

அதுவரை நிறைய நிறைய வாசியுங்கள்..
நிறைய யோசியுங்கள்..
நிறைவாய் எழுதுங்கள்...

கவிதையும் கைப்பழக்கம்.

தொடருங்கள்.. என் ஊக்கங்கள்!
ஓ நன்றி இளசு..
ம்ம் உங்கள் ஊக்கத்திற்கு என் நன்றி..
ம்ம் இதுபோல் ஊக்கம்தந்தால் நானும் பல ஆக்கம்தர நல்ல உற்சாகமாக அமையும்..
ம்ம் என் வாழ்த்துக்கள்!!!

அனுராகவன்
07-02-2008, 09:01 PM
அண்ணலின் உள்ளம்
சொல்ல ஆயிரமாயிரம் பதிவிருந்தும்..!

இங்கே உள்ளங்கை நெல்லிக்கனியாய்
காணக் கிடைத்திருக்கிறது..!

எழுத்தாளர் வளர..!
எழுத்து எவ்வளவு முக்கியமோ..!
அதே அளவு முக்கியம்
அண்ணலின் பின்னூட்ட விமர்சனமும்..!!

தேன் தோய்ந்த மயிலிறகு
வருடலில் எங்கே ஊசி..??

மீண்டும் தாழ் போற்றுகிறேன் பெரியண்ணா. :)

நன்றி பூமகள்..!!!
இப்படியும் சிந்திக்ககும் மனிதர்கள் உள்ளனர்.!!

அனுராகவன்
07-02-2008, 09:02 PM
வாழ்வை அறிவாய்
வயதென்னும் பாதையில்
இன்பத்தை மறந்து
துன்பத்தை கையில் எடுப்பதேன்
காந்தியின் வாழ்க்கை
உதரானங்கலாய் உத்துகோலக்கிடு
பணம் மட்டும் வாழ்வா
விலங்கிலும் சிறந்தது மனம்
வாழக்கை வாழ்வதற்கு
விதிகள் விதித்திடு
குறிக்கோல்கள் மையமாக்கு
வாழ்கை இனிக்கும்
மகிழ்ந்திடு அன்று உண்விழாகாலமாய்

- இந்த கவிதை என் மனதில்

அருமையான கவிதை கரு அனு அக்கா
நன்றி மனோஜ்...
ம்ம் என் வாழ்த்துக்கள்!!

அனுராகவன்
12-02-2008, 03:30 AM
தமிழ்மன்றம் ஓர் பலகை போல..

எழுதிப்பழக நல்ல களம்..

தொடர்ந்து எழுதுங்கள்..

வார்த்தைச் சிக்கனம், வரிவடிவம், ஒலிநயம், நச்சென ஓர் இறுதிவரி
இப்படி மெல்ல மெல்ல செதுக்கும் சூட்சுமம் தன்னாலே கைவரும்..

அதுவரை நிறைய நிறைய வாசியுங்கள்..
நிறைய யோசியுங்கள்..
நிறைவாய் எழுதுங்கள்...

கவிதையும் கைப்பழக்கம்.

தொடருங்கள்.. என் ஊக்கங்கள்!

நன்றி இளசு மிக்க நன்றி!!
ம்ம் நான் கவிதை எழுத இப்பதான் ஆரம்பித்தேன் அல்லவா..!
போக போக நான் நன்கு எழுத உங்கள் ஊக்கமே எனக்கும் போதும்..!
ம்ம் என் நன்றி!