PDA

View Full Version : வெற்றி நிச்சயம்அனுராகவன்
07-02-2008, 02:41 PM
வெற்றிப் பெற்றவனெல்லொருமே சாதனையாளனல்ல;
தோற்றவன் அனைவருமே முட்டாளுமில்லை;

வெற்றியாளன் தன்னையொரு வெற்றிபெறுவேன் என்று
தன்னை நம்பி செயல்களில் இறங்கி

வெற்றிநடையில் ஆழ்ந்துசென்று தொடர்ச்சியாக
இன்னல் வந்தாலும் அதை தனக்கு ஒரு

அனுபவமாக எடுத்து சாதிக்கிறான்; ஆனால்
தோற்றவன் நிலை இதற்கு தலைக்கீழ்

தோல்விகள் ஒரு பாதாள குழியல்ல; ஒரு
முறை விழுந்தால் அதில் மூழ்கிவிடுகிறான்

அதற்கு காரணம் அவந்தன்னை தொல்வியால்
எழமுடியாது என்று நம்புவதாலே..

அப்படி நினைப்பதால் அவன் என்றுமே
வெற்றிபெறப் போவதுமில்லை தொடர்ந்து
இருந்தயிடந் தெரியாமல் போவான்.

வெற்றிப்பெற்றவனைக் கேட்டுப்பாருங்கள்
அவனடைந்த தோல்வி எண்ணிக்கையடங்கா

பிறகு ஏன்?? ஒரு முறை வீழ்ந்தால்
யார் தூக்கிவிடுவார்கள் ;எத்தனைமுறை

தொடர்ந்து பல தோல்விவந்தாலும் மனந்தளராமல்
முன்னோக்கி செல்; நீ செய்ய வேண்டியவை தானாக

முன்நோக்கி பாயும் நீ ஆச்சிரியம்படியாக
ஆக முயலுங்கள்;முயன்றுக்கொண்டேயிருங்கள்;

யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்,
எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம்,

எப்பொழுது வேண்டுமானாலும் சாதிக்கலாம்,
சாதிக்க தடையேதுமில்லை;

சாதிக்க நீங்க தயாரா..அப்படியென்றால் உங்களுக்கு
வெற்றி நிச்சயம் ;வெற்றி நிச்சயம்

அறிஞர்
07-02-2008, 02:44 PM
தோல்வி கண்டு துவளாமல்..
சாதிக்கத் துடிக்கும் எவருக்கும்
வெற்றி நிச்சயமே..
---
நல்ல வரிகள் அனு..

அனுராகவன்
07-02-2008, 02:56 PM
தோல்வி கண்டு துவளாமல்..
சாதிக்கத் துடிக்கும் எவருக்கும்
வெற்றி நிச்சயமே..
---
நல்ல வரிகள் அனு..

ஓ நன்றி அறிஞர் அவர்களே!!
ம்ம் என் வாழ்த்துக்கள்!
தொடர்ந்து வருக..!!!

ஜெகதீசன்
07-02-2008, 03:57 PM
அனு

நல்ல தனனம்பிக்கை மிகுந்த வரிகள்.

தன்னம்பிக்கை கொண்ட பாடல் எனில் எனக்கு
ஓவ்வொரு பூக்களுமே ஸ்னேகா ஞமகம் வரும்

தன்னம்பிககையினை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி.:icon_rollout::icon_rollout:

இளசு
07-02-2008, 07:55 PM
பத்தாவது முறை விழுந்தவனைப்பார்த்து
பூமித்தாய் சொன்னாளாம்:
எழுந்திரு மகனே
ஏற்கனவே ஒன்பது முறை
எழுந்தவனல்லவா நீ!

எங்கோ கேட்ட கவிதை இது..

நம்பிக்கைதான் மனிதனின் உண்மையான கை!

இதைச் சொன்ன அனுவின் கவிதைக்குப் பாராட்டுகள்..

-------------------------------------------

ஜெகதீசன் அவர்கள் சொன்ன பா.விஜய்யின் பாடல் மதுரைப் பல்கலையில் பாடத்திட்டம்...

அனுராகவன்
07-02-2008, 09:26 PM
பத்தாவது முறை விழுந்தவனைப்பார்த்து
பூமித்தாய் சொன்னாளாம்:
எழுந்திரு மகனே
ஏற்கனவே ஒன்பது முறை
எழுந்தவனல்லவா நீ!

எங்கோ கேட்ட கவிதை இது..

நம்பிக்கைதான் மனிதனின் உண்மையான கை!

இதைச் சொன்ன அனுவின் கவிதைக்குப் பாராட்டுகள்..

-------------------------------------------

ஜெகதீசன் அவர்கள் சொன்ன பா.விஜய்யின் பாடல் மதுரைப் பல்கலையில் பாடத்திட்டம்...

நன்றி இளசு..
தங்கள் கருத்துக்கு என் நன்றி.
ம்ம் வாழ்த்துக்கள்

அமரன்
07-02-2008, 09:36 PM
துக்கத்தை துரத்த துணையிருந்த பாவேந்தரை
தூக்கி தூர வைத்து விட்டு - இங்கு வந்தேன்.
எதுகை மோனை இல்லா அவர் நடையில்.
ததும்புவது என்னே உமது தமிழ் புலமை.:icon_b:

நடைபயிலும் சிறு குழந்தை புகட்டும் பாடம்..
நடைவண்டி மட்டும் கை கொடுக்கா பயில.
நம்பிக்கை உடனிருந்தால் விழுவதும் எழுவதும்
நறுவிசான நடைக்கு அத்திவாரம். அத்தீ வரம்..:icon_b:

நறுகவிதை நல்கிய நங்கைக்கு நன்றியும் பாராட்டும்.

அனுராகவன்
07-02-2008, 09:47 PM
துக்கத்தை துரத்த துணையிருந்த பாவேந்தரை
தூக்கி தூர வைத்து விட்டு - இங்கு வந்தேன்.
எதுகை மோனை இல்லா அவர் நடையில்.
ததும்புவது என்னே உமது தமிழ் புலமை.:icon_b:

நடைபயிலும் சிறு குழந்தை புகட்டும் பாடம்..
நடைவண்டி மட்டும் கை கொடுக்கா பயில.
நம்பிக்கை உடனிருந்தால் விழுவது எழுவதும்
நவிசான நடைக்கு அத்திவாரம். அத்தீ வரம்..:icon_b:

நறுகவிதை நல்கிய நங்கைக்கு நன்றியும் பாராட்டும்.

ஓ நன்றி அமரன்..
ம்ம் என் வாழ்த்துக்கள்
ம்ம் தொடர்ந்து வாங்க..!!

அனுராகவன்
12-02-2008, 04:26 AM
அனு

நல்ல தனனம்பிக்கை மிகுந்த வரிகள்.

தன்னம்பிக்கை கொண்ட பாடல் எனில் எனக்கு
ஓவ்வொரு பூக்களுமே ஸ்னேகா ஞமகம் வரும்

தன்னம்பிககையினை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி.:icon_rollout::icon_rollout:

நண்பரே நான் ஏதாவது சொல்ல வந்தா !
அதை சினிமா பாடலுடன் சொல்வதை பார்த்தால்
நீங்கள் நிறைய படம் பார்ப்பீர்கள் போல..
ம்ம் உங்கள் கருத்துக்கு நன்றி!!