PDA

View Full Version : தன்னம்பிக்கை



அனுராகவன்
07-02-2008, 01:35 PM
மனந்தளரும் போது தோழோடு வரும் கை!
தன்னம்பிக்கை என்றொரு சாவி.!!

சோம்பித்திரிய பிறக்கக்கல்ல எப்பிறவி அவற்றுக்கு
இருக்குது ஒருபடிகீழ்யுள்ள ஜீவன்(ஐந்தறிவு).!!

கடவுளை காண செல் உள்ளே(உட்கடந்து)
பிறவிப்பயனை நீக்க வழிதான்
கடவுளை காணும் உட்பொருள் ஆதலால்
மனதினை அறியும் கலையே காண்.!!

சாகாவரனை கேட்டால் கொடுப்பான் ஆதவன்
அதனைப் பெற்றால் உடல் வளரும்;
மனம் மந்தமடையும்; உடல் பெற்று என்ன
பயன் இப்பூவுலகில் நித்தம் நித்தம் துன்பமே..!!

சொந்தகாலில் உழைக்க நமக்குபோதும் ஆறறிவு!
பின்யேன்? மற்றபொருட்களை அபகரிக்கும் ஐந்தறிவு.!!

நம்முழைப்பில் வாழ கற்று பழகுக!!
பிறகு எந்த காலையும் நம்பாமல் வாழலாம் இனிதே!!
கதிரவன் கிழக்கே தோன்றி,மேற்கே மறைவான் அதொரு சுழற்சி!
இன்பமும்,துன்பமும் மனிதனுக்கு அவ்வாறே..!!

பிறந்து ,வளர்ந்து பின்பு இறந்தும் என்ன பயன் மானிடா.!!!.
எதற்காக வந்தோம்; எப்படி வாழ்ந்தோமென்ற குறிக்கொளின்றி பயந்து பயந்து அனுதினமும் சாவது
பிறக்காமல் இருந்திருக்கலாமே..!!

நம்பிக்கை நாம் கஸ்டப்படும்போது திடீரென
ஒரு தும்பிகையாக போல எழும்.!
எதனையும் இழக்கலாம் உலகில்
ஆனால் நம்பிக்கையே இழக்காதே !!

ஏமாற்றம்,துரதிஸ்டம்,தொல்வி-இவை
ஏற்படும் போது துவளக் கூடாது;

இவை ஆக்கத்தின் துவக்கம்தான்
துவண்டு போனால் தன்னம்பிக்கை தளரும்
தன்னம்பிக்கை தளராமல் இருக்க
நற்சிந்தனையே வளர்த்துக் கொள்;

தன்னுடலில் பல மனகாயங்கள் இருக்கலாம்
அதை வெல்ல தன்நம்பிகை கொள்க முதலில்
வாழும்வரை வெல்வோம் உலகினை
அதற்காக தன்னம்பிக்கையே வளர்ப்போம்..!!!


-அனு

அனுராகவன்
08-02-2008, 11:35 AM
தன்னம்பிக்கை வேண்டும் முதலில் ..
என் கவி எப்படி உள்ளது..
ம்ம் நல்ல பல கவி தர வேண்டும் என்பது என் ஆசை..
கருத்துக்கள் சொல்லுங்கள்..

சுகந்தப்ரீதன்
10-02-2008, 08:46 AM
தன்னம்பிக்கை வேண்டும் முதலில் ..
என் கவி எப்படி உள்ளது..
ம்ம் நல்ல பல கவி தர வேண்டும் என்பது என் ஆசை..
கருத்துக்கள் சொல்லுங்கள்..
அக்கா..கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை போதும்..உங்கள் ஆசை நிறைவேறிவிடும் விரைவில்...!!

அடுத்து தங்கள் கவிதை..சொற்பொழிவு போல் இருக்கிறது...! வார்த்தைகளை இன்னும் குறுக்க வேண்டும்...! சொல்லவந்த கருத்தை முடிந்த வரை வரிகளை குறைத்து கூற முயல வேண்டும்...!! உங்கள் தன்னம்பிக்கை பற்றிய கவிதை கவிதை எழுத வேண்டும் எழுத முடியும் என்ற உங்கள் தன்னம்பிக்கையை வெளிபடுத்துகிறது..! ஆகையால் தொடர்ந்து முயலுங்கள் வெற்றி நிச்சயம் கிட்டும் உங்களுக்கு..! அத்துடன் மன்றத்தில் கவிசமர்-களத்திலும் பங்கு கொள்ளுங்கள்...கூடவே ஆதவனின் "கவிதை எழுதுவது எப்படி..?" (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8497)என்ற இந்த திரியையும் படியுங்கள்..உங்களுக்கு உதவலாம்..!!

வாழ்த்துக்கள் அனு அக்கா..! தொடர்ந்து முயற்ச்சியுங்கள் தளராத தன்னம்பிக்கையோடு..!!

சிவா.ஜி
10-02-2008, 09:04 AM
சுகந்த் சொன்னதைப் போல எப்படி கவிதை எழுதுவது என்ற திரியை படித்தால் கண்டிப்பாக உங்களால்,உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் நல்ல கவிதைகள் எழுத முடியும் அனு.
முயற்சி செய்யுங்கள்...நிச்சயம் முடியும்.வாழ்த்துகள்.

ஆர்.ஈஸ்வரன்
10-02-2008, 09:16 AM
குறுங்கவிதைத் தலைப்பில் ஒரு நீண்ட கவிதை

அனுராகவன்
17-02-2008, 01:07 AM
குறுங்கவிதைத் தலைப்பில் ஒரு நீண்ட கவிதை

நன்றி ஆர்.ஈஸ்வரன்!!
இது என் கவி ஆரம்பம்தானே..

அனுராகவன்
17-02-2008, 01:11 AM
சுகந்த் சொன்னதைப் போல எப்படி கவிதை எழுதுவது என்ற திரியை படித்தால் கண்டிப்பாக உங்களால்,உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் நல்ல கவிதைகள் எழுத முடியும் அனு.
முயற்சி செய்யுங்கள்...நிச்சயம் முடியும்.வாழ்த்துகள்.

நன்றி சிவா..
ம்ம் பார்த்தேன்
கவி பயில பெற்றேன்..
மிக்க நன்றி

அனுராகவன்
17-02-2008, 01:13 AM
அக்கா..கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை போதும்..உங்கள் ஆசை நிறைவேறிவிடும் விரைவில்...!!

அடுத்து தங்கள் கவிதை..சொற்பொழிவு போல் இருக்கிறது...! வார்த்தைகளை இன்னும் குறுக்க வேண்டும்...! சொல்லவந்த கருத்தை முடிந்த வரை வரிகளை குறைத்து கூற முயல வேண்டும்...!! உங்கள் தன்னம்பிக்கை பற்றிய கவிதை கவிதை எழுத வேண்டும் எழுத முடியும் என்ற உங்கள் தன்னம்பிக்கையை வெளிபடுத்துகிறது..! ஆகையால் தொடர்ந்து முயலுங்கள் வெற்றி நிச்சயம் கிட்டும் உங்களுக்கு..! அத்துடன் மன்றத்தில் கவிசமர்-களத்திலும் பங்கு கொள்ளுங்கள்...கூடவே ஆதவனின் "கவிதை எழுதுவது எப்படி..?" (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8497)என்ற இந்த திரியையும் படியுங்கள்..உங்களுக்கு உதவலாம்..!!

வாழ்த்துக்கள் அனு அக்கா..! தொடர்ந்து முயற்ச்சியுங்கள் தளராத தன்னம்பிக்கையோடு..!!

நன்றி சுகந்தா..!!
ம்ம் நான் கண்டேன்..
இனி நீங்கள் சொல்வது போல் தர முயல்கிறேன்..
என் வாழ்த்துக்கள்!!

அமரன்
17-02-2008, 08:15 PM
நல்ல கருத்து (க)விதை. பாராட்டுகளும் நன்றியும்.
(பூமியே நம்பிக்கை என்ற அச்சில்தான் சுழல்கிறது என்று நண்பன் ஒருவனுக்கு சொன்னேன். ஓ... பூமியின் நிறை தாங்கமாட்டாது அச்சு சாய்ந்துவிட்டதோ என்று எள்ளுகிறான். சும்மா ஒரு பகிர்வுக்காக மட்டுமே)

அனுராகவன்
23-02-2008, 03:13 AM
நன்றி அமரன் அவர்களே..

எண்ணம்
15-04-2008, 02:43 PM
சோம்பித்திரிய பிறக்கக்கல்ல எப்பிறவி அவற்றுக்கு
இருக்குது ஒருபடிகீழ்யுள்ள ஜீவன்(ஐந்தறிவு).!!

கடவுளை காண செல் உள்ளே(உட்கடந்து)
பிறவிப்பயனை நீக்க வழிதான்
கடவுளை காணும் உட்பொருள் ஆதலால்
மனதினை அறியும் கலையே காண்.!!



பிறவி பயனை தெரிந்து கொள்வதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
எப்போது பிறவி பயனை அடைவது.

ஓவியன்
17-04-2008, 06:17 AM
முன்னேறுவதற்கு வேண்டும்
இரண்டு கையுடன்
மூன்றாவது கை
- தன்னம்பிக்கை

__________________________________________________________________________________

பாராட்டுக்கள் அனு...!! :icon_b: