PDA

View Full Version : காதல்!.



அனுராகவன்
07-02-2008, 01:29 PM
நீ சிரித்தாலும்
நானும் சிரிக்கிறேன்;

நீ அழுதாலும்
நானும் அழுகிறேன்;

நீ பேசினால்
நான் அதை ரசிக்கிறேன்;

நீ திட்டினால்
நான் அமைதியாகிறேன்;

உன்னுடன் பழகியதே;
சில காலமே
காலங்காலமாக
தொடரும்
பந்தம் போல் உள்ளதே;

இது எனக்கு மட்டும்தானா??
இல்லை
அங்கும் இதே புலம்பல்தானா;

என்னை நீ
நேசிக்கும் முன்னே
உன்னை நான்
அடைவது எளிதோ!!

நீ என்னை விட்டு பிரிந்தால்
நான் என்ன செய்வேன் ;
அன்பே..??

-அனு


.

ஜெகதீசன்
07-02-2008, 01:40 PM
அனு

தங்களின் கனவுக் காதல் கவிதை
நினைவிலும் வெற்றி பெற
இந்த ஜெகனின்
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

அனுராகவன்
07-02-2008, 02:00 PM
அனு

தங்களின் கனவுக் காதல் கவிதை
நினைவிலும் வெற்றி பெற
இந்த ஜெகனின்
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

நன்றி நண்பரே..!
எனக்கு திருமணம் ஆகிருச்சு,,!
ஆக இது இந்த மாதம் காதலர்தினம்தானே,,,...!
அதான் நானும் காதல் கவி தீட்டீனேன்..!
ம்ம் என் வாழ்த்துக்கள்!!

ஜெகதீசன்
07-02-2008, 02:40 PM
நன்றி நண்பரே..!
எனக்கு திருமணம் ஆகிருச்சு,,!
ஆக இது இந்த மாதம் காதலர்தினம்தானே,,,...!
அதான் நானும் காதல் கவி தீட்டீனேன்..!
ம்ம் என் வாழ்த்துக்கள்!!


ரொம்ப கூர்மையா தீட்டிடாதிங்கோ
அப்புறம் காதலரதினம் கத்திதினமாகிடும்

நன்றி

அனுராகவன்
07-02-2008, 02:57 PM
ரொம்ப கூர்மையா தீட்டிடாதிங்கோ
அப்புறம் காதலரதினம் கத்திதினமாகிடும்

நன்றி

எப்படி ஜெகதீசன்..
இப்படியெல்லாம் பேசதோனுது,,..
கையில் அம்பேத்காரை வைத்துக்கொண்டு..
ம்ம் என் நன்றி!!

ஜெகதீசன்
07-02-2008, 03:03 PM
எப்படி ஜெகதீசன்..
இப்படியெல்லாம் பேசதோனுது,,..
கையில் அம்பேத்காரை வைத்துக்கொண்டு..
ம்ம் என் நன்றி!!

அனு

என் கையில் அம்பேத்காரா ?

அப்படின்னா இந்திய அரசியலமமைப்பே

என்கையிலதான்:icon_b: சொல்லுங்கோ.... நல்ல கண்டுபிடிப்பு

அனுராகவன்
07-02-2008, 03:07 PM
அனு

என் கையில் அம்பேத்காரா ?

அப்படின்னா இந்திய அரசியலமமைப்பே

என்கையிலதான்:icon_b: சொல்லுங்கோ.... நல்ல கண்டுபிடிப்பு

சாரி ஜெகதீசன்..!!!
உங்கள் படத்தைதான் அப்படி சொன்னேன்..
ஏன் இப்படி சொல்லுரிங்க..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

ஜெகதீசன்
07-02-2008, 03:18 PM
சாரி ஜெகதீசன்..!!!
உங்கள் படத்தைதான் அப்படி சொன்னேன்..
ஏன் இப்படி சொல்லுரிங்க..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

கோபப்படாதிங்கோ அக்கா கூல் கூல் கூல்

இனி உங்களோட அடுத்த பதிப்பில்

பார்க்கலாம். விளையாட்டுக்கு நன்றி:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

பூமகள்
07-02-2008, 05:26 PM
கண்ணாடி பிம்பமாய்
என் உருவம்
உன்னில்..!

எல்லா உணர்வும்
பகிர்தலின்றியே
உணரப்படுகிறதே..!

இது தான் காதலென்றால்
எப்போது வருவாய்
என்னை கொண்டு செல்ல..!

வருவாயா.. பிரிவாயா..!
வந்தால் வளர்பிறை..!
பிரிந்தால் தேய்பிறை..!

முடிவெடு கண்ணா..!
அமாவாசை வரும் நாள்
வெகு தொலைவிலில்லை..!!

அருமை அனு அக்கா..!!

கலக்கிட்டீங்க..!! வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!

-------------------

அப்புறம் அனு அக்கா, சகோதரர் ஜெகதீசன் அவதாரில் இருப்பது.. பா.சிதம்பரம். இந்தியாவின் நிதி அமைச்சர்.

அழகுக் கவிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!! :)

இளசு
07-02-2008, 06:13 PM
ஒரு முற்றப்போகும் காதலின் அத்தனை ஆரம்ப அம்சங்களும்..அம்சமாய்!

வாழ்த்துகள் அனு!

அனுராகவன்
07-02-2008, 08:31 PM
[COLOR=Red]கண்ணாடி பிம்பமாய்
என் உருவம்
உன்னில்..!

எல்லா உணர்வும்
பகிர்தலின்றியே
உணரப்படுகிறதே..!

இது தான் காதலென்றால்
எப்போது வருவாய்
என்னை கொண்டு செல்ல..!

வருவாயா.. பிரிவாயா..!
வந்தால் வளர்பிறை..!
பிரிந்தால் தேய்பிறை..!

முடிவெடு கண்ணா..!
அமாவாசை வரும் நாள்
வெகு தொலைவிலில்லை..!

நன்றி பூமகள்!!
உங்கள் பின்யூட்டு மிக அருமை..
ம்ம் என் வாழ்த்துக்கள்
காதலின் ஏக்கம் உங்களையும் தாக்கிவிட்டதோ!!
ம்ம் என் நன்றி

அனுராகவன்
07-02-2008, 08:38 PM
ஒரு முற்றப்போகும் காதலின் அத்தனை ஆரம்ப அம்சங்களும்..அம்சமாய்!

வாழ்த்துகள் அனு!

ம்ம் நன்றி இளசு...!
ம்ம் வாழ்த்துக்கள்..!

இன்பா
08-02-2008, 02:37 AM
உம்....

காதல் கவிதை நன்று...
வாழ்த்துக்கள் அனு...

அனுராகவன்
08-02-2008, 11:27 AM
உம்....

காதல் கவிதை நன்று...
வாழ்த்துக்கள் அனு...

நன்றி வரிப்புலி..
ம்ம் என் வாழ்த்துக்கள்