PDA

View Full Version : போயிங் டிரீம்லைனர் விமானத்திற்கு பாகங்களை கொடுக்கிறது டாடா



ஜெகதீசன்
07-02-2008, 01:13 PM
போயிங் டிரீம்லைனர் விமானத்திற்கு முக்கிய பாகங்களை செய்து கொடுக்கிறது டாடா மோட்டார்ஸ்
பிப்ரவரி 07,2008,15:36





மும்பை : சமீபத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ காரை அறிமுகப்படுத்தி, உலக கார் கம்பெனிகளின் கவனத்தை இந்தியாவை நோக்கி திசை திருப்பிய டாடா மோட்டார்ஸ், இப்போது இன்னொரு ஒப்பந்தம் மூலம் விமான கம்பெனிகளின் கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமான கம்பெனியான அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அதன் கனவு விமானமான 787 டிரீம்லைனர் விமானத்திற்கு தேவையான முக்கிய பாகம் ஒன்றை டாடா மோட்டார்ஸ் இன் துணை நிறுவனமான டாடா ஆட்டோ மோபைல் லிமிடெட் என்ற நிறுவனம் செய்து கொடுக்க ஓப்பந்தம் செய்துள்ளது. இதன் படி அந்த விமானத்திற்கு தேவையான ஃபுளோர் பீம் ஐ தயாரித்து கொடுக்கும். இப்போதுள்ள புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டைட்டானியம் மற்றும் சில உலோகங்களின் கலவையை கொண்டு இது தயாரிக்கப்படும். இதற்காக மகாராஷ் டிராவில் உள்ள நாக்பூரில் 30 ஏக்கர் இடத்தில் ரூ.250 கோடி செலவில் புது தொழிற்கூடம் அமைக்கப்படுகிறது. இங்கு 2009 இலிருந்து தயாரிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த புது தொழிலில் இரு கம்பெனிகளும் எவ்வளவு அளவில் பங்கு பெறுகிறது போன்ற விபரங்கள் இன்னும் சொல்லப்படவில்லை. இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தையாக இப்போது மாறி விட்டது. எனவேதான் நாங்கள் இந்தியா வருகிறோம். இன்னும் பல வேலைகளை நாங்கள் இந்திய கம்பெனிகளுடன் கூட்டு சேர்ந்து நடத்த இருக்கிறோம் என்று போயிங் நிறுவன்த்தை சேர்ந்த கென் செர்சர் தெரிவித்தார். இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் விமானத்திற்கு போட்டி என்று சொல்லப்படும் போயிங்கின் 787 டிரீம்லைனர் விமானம், அளவில் ஒரு மிகப்பெரிய விமானமாகவும் குறைந்த செலவில் இயங்கக்கூடியதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விமானத்தில் தான் பெரும்பாலான பகுதிகள் கலப்பு உலோகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறதாம். மற்ற விமானங்களை விட இது 20 சதவீதம் குறைவான எரிபொருளில் இயங்கக்கூடியது. போயிங் நிறுவனம், அவர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை இந்திய கம்பெனிகளிடமிருந்து செய்து வாங்க ஏற்கனவே முயற்சி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் ஹெச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து சில பாகங்களை வாங்க அந்த நிறுவனத்துடன் போயிங் ஒப்பந்தம் செய்திருந்தது. போயிங் 757 விமானங்களுக்கான கதவுகளை ஹெச்.ஏ.எல் நிறுவனம் செய்து கொடுக்கிறது. மேலும் 777 க்கு தேவையான லேண்டிங் கியர் அன்லாக் பாக்ஸ்களையும் செய்து கொடுக்கிறது.

Print this article

- சுருக்கம்


பயன்படுத்திய கார் தொழிலில் இறங்கியது டொயோட்டா நிறுவனம்
பிப்ரவரி 07,2008,13:22

அமரன்
07-02-2008, 01:38 PM
அன்பரே!
வேற்றுதள புதினங்களின் அப்பட்டமான நேரடிப்பிரதிகளால் பதிவு எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமே அன்றி வேறெந்த அனுகூலங்களும் இல்லை. மன்றம் என்றுமே இதுபோன்ற செயல்களை விரும்புவதில்லை. புரிதலுடன் தொடர்ந்து ஒத்துழையுங்கள். நல்ல சொந்த ஆக்கங்களை தந்து திரிகளின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி

-பொறுப்பாளர்

ஜெகதீசன்
07-02-2008, 01:49 PM
அன்பரே!
வேற்றுதள புதினங்களின் அப்பட்டமான நேரடிப்பிரதிகளால் பதிவு எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமே அன்றி வேறெந்த அனுகூலங்களும் இல்லை. மன்றம் என்றுமே இதுபோன்ற செயல்களை விரும்புவதில்லை. புரிதலுடன் தொடர்ந்து ஒத்துழையுங்கள். நல்ல சொந்த ஆக்கங்களை தந்து திரிகளின் இருப்பை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி

-பொறுப்பாளர்

நான் ஓரு படைப்பாளியோ அல்லது
கவிஞனோ கிடையாது.
நான் ஓரு சாதாரண மனிதன்
என்னால் செய்திகளை பரப்ப இயலும்.
தேவையெனில் நிருத்திக்கொள்கிறேன்.

அமரன்
07-02-2008, 01:58 PM
செய்தியின் உள்ளீட்டை உங்கள் எழுத்து நடையில் தந்து சிறப்பிக்கலாமே ஜெகதீசன்.. அப்படியே பிரதி எடுத்து பதிவதை விட இது சிறப்பானது அல்லவா.. உங்கள் தமிழ், தட்டச்சு, இன்னபிற திறமைகளுக்கு தீனி கிடைத்தது போலும் இருக்கும். மன்றத்தின் நோக்கம்மும் நிறைவேறும்.

ஜெகதீசன்
07-02-2008, 02:45 PM
செய்தியின் உள்ளீட்டை உங்கள் எழுத்து நடையில் தந்து சிறப்பிக்கலாமே ஜெகதீசன்.. அப்படியே பிரதி எடுத்து பதிவதை விட இது சிறப்பானது அல்லவா.. உங்கள் தமிழ், தட்டச்சு, இன்னபிற திறமைகளுக்கு தீனி கிடைத்தது போலும் இருக்கும். மன்றத்தின் நோக்கம்மும் நிறைவேறும்.

நன்றி.முதலில் தமிழ்மன்றத்தின் முழு ரசிகனாகி பின் படைக்க முயற்சிக்கிறேன்.
இன்னும் கால அவகாசம் தேவை.:icon_rollout::icon_rollout::icon_rollout:

aren
08-02-2008, 09:04 AM
நாங்கள் முதலில் உறுப்பினராக சேர்ந்த பொழுது எங்களுக்கு தட்டச்சுகூட செய்யத் தெரியாது. மெதுவாக ஒவ்வொன்றாக தெரிந்துகொண்டோம். ஆகையால் கவலைவேண்டாம், நீங்கள் முயற்சி செய்யுங்கள் எல்லாம் தானாகவே உங்களுக்கு வரும். அதற்கு என் வாழ்த்துக்கள்.