PDA

View Full Version : சிறந்த பங்காளர் புதிய நடைமுறை.



அக்னி
07-02-2008, 12:06 PM
மன்றத்தில் சென்ற மாத சிறந்த பங்காளர் போட்டிகள் நடைபெற்று, உறவுகளுக்கு ஊக்குவிப்பும் கௌரவிப்பும் வழங்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த போட்டியை விறுவிறுப்பாக்கும் நோக்கத்துடன், இனிவரும் காலங்களில் சுழற்சி முறை விருது வழங்குவதற்கு தமிழ்மன்ற நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

இதனால், தொடர்ந்தும் ஒருவரே சென்ற மாத சிறந்த பங்காளர் கௌரவிப்பை வென்று தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது, ஒருவர் தொடர்ந்தும் சிபாரிசு செய்யப்படவோ, அல்லது, தெரிவு செய்யப்படவோ வழி வகை ஏற்படுகின்றது.

இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் இதுவரை வழங்கப்பட்ட பதக்கங்களை என்ன செய்வது என்பதே...
எதிர்காலத்தில் எழப்போகும் கேள்விகளையும் குழப்பங்களையும் தவிர்க்கும் நோக்குடன்,
இதுவரை பதக்கங்கள் வழங்கப்பட்டவர்களிடமிருந்து அவை மீளப் பெறப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 1000 இபணம் வழங்கப்படவுள்ளது.

எனவே கௌரவிக்கப்பட்ட உறவுகள் சஞ்சலப்படாமல், தளர்ச்சியடையாமல் புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கின்றது.

இனி வரும் காலங்களில் சிறந்த பங்காளர் போட்டிகள்,
மனங்கவர் பதிவாளர் என்ற தலைப்பில் நடாத்தப்படும்.

இதுவரை தெரிவுசெய்யப்பட்ட, தெரிவு செய்யப்படப்போகின்ற மனங்கவர் பதிவாளர்கள்,
மனங்கவர் பதிவாளர்கள் - பதிவேடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14468) என்ற திரியில் பதிந்து கொள்ளப்படுவார்கள்.

மன்ற வளர்ச்சியில் மாற்றங்களை வரவேற்போம்.

நன்றி!

~நிர்வாகக்குழு

.

மதி
07-02-2008, 12:08 PM
அப்படியே ஆகட்டும்..அக்னி.

மலர்
07-02-2008, 01:01 PM
ம்ம் இதுவும் நல்ல ஐடியா தான்....:icon_b::icon_b:
ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் மன்றத்தில் ஒவ்வொரு வளர்ச்சிகள்...
பிரமிப்பாக இருக்கு....
புதிய மாற்றங்கள் நமக்கு தேவையே.. நிர்வாககுழுவின் இந்த புதிய முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்... :aktion033::aktion033:

பூமகள்
07-02-2008, 03:41 PM
பெயர் மாற்றம் மற்றும் எல்லா விதிகளும் நான் வரவேற்கிறேன்.
மன்றம் புத்துணர்வு பெற இவ்வகை மாற்றங்கள் நிச்சயம் அவசியமானது.

ஆயினும், எனக்கு நெருடலான ஒரு விதியானது, கொடுத்த விருதுகளை திரும்ப பெறுவது தான். அந்த விருதிலேயே விருது பெற்ற ஆண்டும் மாதமும் தெளிவாக உள்ளதே. இதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்று எனக்கு புரியவில்லை.

இனி மேல் வரப்போகும் நாட்களில் இந்த விதியை பின்பற்றலாமே..!

மன்ற பொறுப்பாளர்களும் நிர்வாகியும் எனது வேண்டுகோளை ஏற்பீர்களா??

.

அக்னி
07-02-2008, 05:27 PM
ஆயினும், எனக்கு நெருடலான ஒரு விதியானது, கொடுத்த விருதுகளை திரும்ப பெறுவது தான்.
அது விதி அல்ல... ஒத்துழைக்க வேண்டுகோள்...
அவை பறிக்கப்படவில்லை. அதற்கென ஒரு ஆவணத் திரி ஏற்படுத்தப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளன.
ஒரு சிறு வடிவ மாற்றம்.
பதக்கங்கள்தான் மீளப் பெறப்பட்டனவே தவிர, விருதுகள் மீளப்பெறப்படவில்லை.
அனைவர் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

.

இளசு
07-02-2008, 05:51 PM
வருந்தவேண்டாம் பாமகளே

எங்கள் தங்க நெஞ்சங்களில் வைரப்பதக்கமாய் நிரந்தரமாய் நீ ஒளிர்கிறாய்..

---------------------

பப்பி அவர்கள் சென்ற மாத நட்சத்திரம் என்று ஒரு பட்டம் சுழல் முறையில் வழங்கி வந்த காலம் இப்போது என் நினைவாடலில்..

ஆக்கமான போட்டிகள் அதை வாங்க - அந்த நல்ல சூழல் மீண்டும் இப்போது..

நிர்வாகக்குழுவினருக்கு என் விசேஷ அன்பு..

.

பூமகள்
07-02-2008, 06:01 PM
விரிவான விளக்கத்துக்கும் ஊக்கத்துக்கும் எனது நன்றிகள் அன்பு அக்னி அண்ணா மற்றும் பெரியண்ணா. :)

மன்றத்தின் வளர்ச்சிக்கு இது துணை போகுமென்றால் எனது ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும். :)

அக்னி
07-02-2008, 06:04 PM
விரிவான விளக்கத்துக்கும் ஊக்கத்துக்கும் எனது நன்றிகள் அன்பு அக்னி அண்ணா மற்றும் பெரியண்ணா. :)

மன்றத்தின் வளர்ச்சிக்கு இது துணை போகுமென்றால் எனது ஒத்துழைப்பும் நிச்சயம் இருக்கும். :)


புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் மிகவும் நன்றி பூமகள்...
ஒன்றிணைந்த கரங்கள், மன்றத்தின் ஆரமாக, என்றென்றும் ஜொலிக்கும்...


.

மனோஜ்
07-02-2008, 06:43 PM
புதிய முயற்சிக்கு என்வாழ்த்துக்கள்
தொடரட்டும் ஊக்கம் வளரட்டும் மன்றம்

.

சிவா.ஜி
08-02-2008, 05:02 AM
நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படவேண்டியவை.மன்றத்தின் எந்த புதிய முயற்சிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளுடன் ஒத்துழைப்புமுண்டு.
மன்ற நிர்வாகத்துக்கு என் வாழ்த்துகள்.

.

சூரியன்
16-03-2008, 11:22 AM
இதுவும் நல்ல முயற்சிதான் நடக்கட்டும்.