PDA

View Full Version : ஐஸ்கிரீமும் நானும்..!



பூமகள்
07-02-2008, 10:17 AM
ஐஸ்கிரீமும் நானும்..!

http://img01.picoodle.com/img/img01/4/2/7/poomagal/f_nbgppl00080m_3491acf.jpg


மருத்துவமனை சுவர்களோடு
மனம் பேசும் வாசனை
பினாயில் நெடியோடு
கரைந்து போகும்..!

வெள்ளை உடுப்பிட்டு
புன்னகையை பூட்டி
அறைகளின் உயிருக்கு
பூ வைத்தியம்.!

இன்று முதல்
பூக்கள் நடுவில்
இரவுப் பணி..!

அந்த அறையை
அடையும் போதெல்லாம்
மனம் துடிக்கும்..!
வெள்ளை உடை தாண்டி
தாயுள்ளம் பரிதவிக்கும்.!

"சிஸ்டர்..! நீங்களே..எப்பவும் ஊசி போடுங்களேன்.
காலையில் வந்த சிஸ்டர்.. கை வலிக்க போடுறாங்க..!"

புன் சிரிப்பு ஒட்டவைத்து
மென் ஊசி போட்டு
உச்சி முகர்ந்து முத்தமிட்டு
உறங்கச் சொல்கிறேன்..!

மூன்று மாத கெடுவில்
முத்தான பிள்ளை
முகம் மாறா சிரிப்புடன்
சொல்கையில்
செவிலிப்பணி தாண்டி
சொல்லறுத்து விழி செல்துடித்து
அழுகிறது..!

மருத்துவ அறிக்கையில்
மாதம் இரண்டு கடந்து
பதினைந்து ஆகிருந்தது.!

"சிஸ்டர்.. எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடனும்..!
நாளை வாங்கி வருவீங்களா?"
ரகசிய குரலோடு சுற்றுமுற்றும் பார்க்கிறான்
பயமாய்..!

தலையாட்டி விடைபெறுகிறேன்..!

அடுத்த இரவுக்கு காத்திருந்தது
இருவரின் மழலை மனமும்..!

ஐஸ்கிரீம் வாங்கி
பையில் பத்திரப்படுத்தி
ஓடிச் செல்கிறேன்
அறை நோக்கி..!

மருத்துவர் கூட்டம்
கூடி இருக்க..
அவசரப்பிரிவில்
அவதியுறும் மழலை..!

புற்றுநோயின் புற்றுக்குள்
புதையுறுகையிலும்..
என் முகம் கண்டதும்
கண்ணில் வெளிச்சம்..!

ரகசிய சம்பாசனையில்
"ஐஸ்கிரீம் இருக்கா?" ஆவல் வினா..!

ஆமென்று நான் தலையசைக்க
நிம்மதியொளி முகத்தில் தெரிய
மெல்ல மூடியது மழலைக் கண்கள்..!

ஐஸ்கிரீமும் நானும்
அடங்கா துக்கத்தில்
உருகி வழிந்து
ஓடிக் கொண்டிருந்தோம்..!

விகடன்
07-02-2008, 10:39 AM
கவிதையில் இருக்கும் கரிசனையும் அன்பும் பூமகளின் மனதில் இல்லையோ?

இப்படி ஒரு கவிதையை எழுதி கனக்க வைத்துவிட்டீரே எம் மனங்களை.
---------
சொல்ல வந்த கருவை அருமையாகவும் தெளிவாகவும் சொல்லிவைத்திட்ட கவிதை.
கவிதைக்கு உரமாக அங்கங்கே போடப்பட்ட மழழைப் பேச்சு.

பூமகள்
07-02-2008, 11:02 AM
சொல்ல வந்த கருவை அருமையாகவும் தெளிவாகவும் சொல்லிவைத்திட்ட கவிதை.
மிகுந்த நன்றிகள் விராடன் அண்ணா.
திட்டினால் என் கவிதை வெற்றி பெற்றது என்று தானே பொருள்??

விகடன்
07-02-2008, 11:06 AM
அதுதான் சொல்கிறேன்.
எழுதப்பட்ட கவிதையில் உங்களது திறமை ஜொலிக்கிறது.

அதேவேளை,
சென்வனே என்று வேலை செய்துகொண்டிருந்தவன் சற்று விடுதலைக்காய் நேரமொதுக்கி மன்றத்தில் தவழ்தபோது இதைப்படித்தேன்.
மீண்டும் பணிக்குள் நுழைந்தேன் மனத்தில் கனத்துடன்.

கவிதைக்கு கிடைத்த வெற்றி என்று (மட்டும்) சொல்லலாம்.

பூமகள்
07-02-2008, 11:12 AM
உங்கள் மனம் கனக்க வைத்து அழ வைப்பது எனது நோக்கமல்ல அண்ணா.
இப்படி பலப்பல சம்பவங்கள் இப்பூமியில் இதை விட கொடுமையாய் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை பதிவாக்கும் சிறு முயற்சி. அவ்வளவே..!

கதையாய் எழுதலாம் என்று எண்ணி கடைசியில் கவிதையாய் வந்துவிட்டது.

உங்கள் மனம் கனக்க வைத்திருந்தால் மன்னித்தருள்க விராடன் அண்ணா.

மன்மதன்
07-02-2008, 11:14 AM
ஐஸ்கிரீமும் நானும்
அடங்கா துக்கத்தில்
உருகி வழிந்து
ஓடிக் கொண்டிருந்தோம்..!




கவிதையை படித்ததும்
கடைசி வரிகளில்
நாங்களும் புதையுண்டோம்...!!

மருத்துவமனையில் குழந்தை நோயாளிகளை
காண்பதை விட துயரம் வேறில்லை..

பூமகள்
07-02-2008, 11:18 AM
உண்மை தான் மதன் ஜி..!
அப்படி ஒரு செவிலியர் பட்ட மன வேதனையை கற்பனை கலந்து கொடுத்தேன்.
பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் மதன் ஜி..!

அக்னி
07-02-2008, 11:21 AM
வில்லின் இரு புள்ளிகளாய்..,
நோயின் வேதனை தாண்டி, எட்டிப் பார்க்கும் மழலையின் ஆசை...
கடமை உணர்வைத் மேவி, கண்ணீரோடு வழியும் தாதியின் பாசம்...

இழுக்கப்பட்ட நாணாய்...
சிறு உயிரைத் தள்ளும் புற்றுநோய்...

வழுக்கும் பிடியை அழுத்திப் பிடிக்கும்
வைத்தியர்கள்...

இவை எல்லாவற்றையும் தாண்டி...
எகிறத் துடிக்கும் அம்பாய்...
சிறு உயிர்...

துளையிடும் வேதனை
உணர்கின்றது மனம்... தருகின்றது கவிதை...

பாராட்ட முடியவில்லை இந்தக் கவிநிலையை...
பாராட்டாமல் இருக்க முடியவில்லை பூமகளின் கவி நிலையை...

அமரன்
07-02-2008, 11:57 AM
வேரறுக்கும் புற்றுநோயை
வேரறுக்க முயலும் சாலைக்குள்
செல்பவனுக்கு நிச்சயமரணம்...

நோயுற்றவர்களில் பலர்
மீளாத்துயிலில் சங்கமமாக..
நோயற்றவர்கள்
புதிதாய்ப் பிறக்கிறார்கள்....

பூ மனமென்ன விதிவிலக்கா!!

மனிதனையும் மரணத்தையும்
மாற்றி மாற்றித் தரும் கோவிலில்
பூமகள் கண்டெடுத்த கவிதை.

உணர்வுகளின் கூடாரத்துக்குள்
நுழைந்த உணர்வை தருகிறது..
அறையெண் 406 க்கு-கூடவே
அழைத்துச் செல்கின்றது...

கண்டுவிட்ட திருப்தியில்
கண்குவிக்கும் குருத்தோலை.
உருகும் ஐசுக்கு நிகராக
மருகும் செவிலித் தாய்..

இளந்தேன் விழி நாவின்
இறுதிநேரப் பரிபாசையால்
இழந்தேன் என்னை நான்.

பாமகளின் காட்சிப்பாவால்
என் விழிப்பூக்களும் பூத்தன
உவர் நீர்த்திவலைகளாக..:icon_b:

மதி
07-02-2008, 12:07 PM
நன்றாய் படித்துக் கொண்டு வருகையில் இறுதியில் மனம் கனக்க வைத்து விட்டீர்களே..!

மழலை உள்ளம் பயமறியாது... மன வலியும் அறியாது..

கவிதையோடு மனம் பதைக்க எங்களையும் பயணிக்க வைத்துவிட்டீர்.. அதற்காக பாராட்டுக்கள்..!

சுகந்தப்ரீதன்
07-02-2008, 12:07 PM
பூ..உண்மையிலேயே..நல்ல முன்னேற்றம் உன் கவிநடையில்...!!
காட்சிகளும் உணர்வுகளும் கண்முன்னே வந்து கண்ணை கசிய செய்கின்றன..!!
வாழ்த்துக்கள் பூ... தொடரட்டும் உன் நேசமும்..பரிவும்..மன்றம் முழுதும்..!!

பூமகள்
07-02-2008, 12:11 PM
பாராட்ட முடியவில்லை இந்தக் கவிநிலையை...
பாராட்டாமல் இருக்க முடியவில்லை பூமகளின் கவி நிலையை...
அக்னி அண்ணாவின் பாணியில்
அற்புதமான பின்னூட்ட கவிதை..!

கவிதையின் கனத்தை கூட்டுகிறது
உங்களின் வலிகள் தரும் வரிகள்..!

நன்றிகள் அக்னி அண்ணா.

பாரதி
07-02-2008, 04:25 PM
கருத்தோடு கவிதை சொல்ல வேண்டும் என்ற கரிசனம் எழுத்தில் தெரிகிறது பூ.

காத்திருப்பதில் இருக்கும் இன்பமும் துன்பமும்...!!

ஆனால் ஏனோ தெரிவதில்லை... இறுதி வரையில் மனதில் நிற்பது என்னவோ இன்னல்தான்...

தொழிலை மீறி மனிதாபிமானம் முன்வருவது பாராட்டுக்குரியது. (ஆனால் அது பணியை பாதிக்கக்கூடுமோ என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது).

சில இடங்களில் மீள வருகிறதோ என்ற உணர்வைத்தரும் வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

தொடர்ந்து மன்ற உறவுகளின் மனதைக் கவரும் வகையில் கவிதைகளைப் படைத்து வரும் "பூ"விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

அக்னி
07-02-2008, 04:58 PM
நோயுற்றவர்களில் பலர்
மீளாத்துயிலில் சங்கமமாக..
நோயற்றவர்கள்
புதிதாய்ப் பிறக்கிறார்கள்....

இழப்பின் வலிதாங்கும் சக்தி திரள்வதும்,
துயர்களின் பிடி நின்று மீள்வதும்,
புதுப்(மீள்)பிறப்புத்தான்...



மனிதனையும் மரணத்தையும்
மாற்றி மாற்றித் தரும் கோவிலில்

வைத்தியசாலையை விளிக்கும் வித்தியாச வரிகள்...
சொல்கின்றது அதன் புனிதத் தன்மையை...

பாராட்டுக்கள் அமரன்...

இளசு
07-02-2008, 05:46 PM
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது பழமொழி..

ஆனால் ஆறில் சாவதைக் காணத் தாங்குமா?

கடமை உடைக்குள்ளே தாய்மை மனம் இருப்பதால்தான்
தமிழில் செவிலித்தாய் என்றும்
ஆங்கிலத்தில் 'சிஸ்டர்'' என்றும்...

தாய்மை என்பது ஓர் உணர்வுநிலை..
பெற்ற பிள்ளைகளிடத்தில் நிச்சயம் வருவது..
பிற மனிதர்களிடத்தும் அவசியமானால் வருவது..

ஏன் ஆண்களும் அவ்வப்போது இந்நிலைக்கு ஆட்பட்டே ஆகவேண்டும்..

இங்கே அப்படி ஓர் உன்னத நிலையை
விழி உருகும் கனத்த முடிவோடு ..
ஆனால் இனிப்பான தலைப்பு உறைமூடித்தந்த
பாமகளுக்குப் பாராட்டும்...
கவிதை தந்த கனத்த மனதின் நெடிய பெருமூச்சும்...

-----------------------------

இங்கு(ம்) அக்னி,அமரன் பின்னூட்டங்கள் கண்டு அசந்தேன்..

பூமகள்
07-02-2008, 05:55 PM
அண்ணலின் பெரிய விமர்சனத்துக்கு இக்குட்டி பூவின் கவியும் உட்பட்டதா??
வியப்பில் முகம் மலர்ந்தேன்..! :)

பெரியண்ணாவின் உள்ளத்தின்
அன்னை உருவ அன்பு
கண்டு அளவில்லா
களிப்புற்றேன்..!

என் கவிதையின்
வெற்றி..
கண்ணில் தெறிக்கும்
கருணையில் இருக்கிறது..!!!

புற்றுநோய்க்கு தீர்வு
கண்டு வையம்
வாழ்வாங்கு வாழச்
செய்திடல் வேண்டுமென
திடமான சிந்தனை
தீட்டிட வேண்டும்..!!

நன்றிகள் கோடி அண்ணலே..!! :)

அக்னி
07-02-2008, 06:57 PM
தாய்மை என்பது ஓர் உணர்வுநிலை..
பெற்ற பிள்ளைகளிடத்தில் நிச்சயம் வருவது..
பிற மனிதர்களிடத்தும் அவசியமானால் வருவது..

ஏன் ஆண்களும் அவ்வப்போது இந்நிலைக்கு ஆட்பட்டே ஆகவேண்டும்..

பெண்களுக்குத் தாய்மை என்பது மனித இயல்பு...
ஆண்களுக்குத் தாய்மை என்பது மனித உணர்வு...
இல்லையா அண்ணா...


புற்றுநோய்க்கு தீர்வு
கண்டு வையம்
வாழ்வாங்கு வாழச்
செய்திடல் வேண்டுமென
திடமான சிந்தனை
தீட்டிட வேண்டும்..!!

உண்மைதான் பூமகள்...
நான் சிறு வயதில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இன்றளவும் அந்தக் காட்சிகள் என்னை விட்டு அகலவில்லை.

சில வியாதிகள் மனித தவறால் வருபவை...
சில வியாதிகள் இறைவன் தவறுவதால் வருகின்றனவோ...
என இன்றும் எண்ணுமளவுக்கு மனதைக் கனதியாக்கின அன்று கண்ட காட்சிகள்.

மனோஜ்
07-02-2008, 07:13 PM
வெள்லை உள்த்தில்
வென்மை உடை உதிர்ந்த கண்ணீர்
உண்மைகண்களும் நனைத்தது கொடுமை பூ மா....

சிவா.ஜி
08-02-2008, 05:40 AM
மொட்டு மலர்வதற்குள் கருகிவிடும் வேதனை,அந்த பிஞ்சு நெஞ்சின் சின்ன ஆசைகூட கண்மூடும் வரை நிறைவேறாத துக்கம்,அதனைக்கண்டு மௌன அழுகையில் தவிக்கும் செவிலியின் மென் உள்ளம் அனைத்தையும் இந்த கவிதையில் கண்டு மனம் வலிக்கிறது.
இதுவே இந்த கவிதைக்கு கிட்டிய வெற்றி.
கனமான மனதுடன்.....பாராட்டுக்கள் தங்கையே.

பூமகள்
08-02-2008, 06:02 AM
வேரறுக்கும் புற்றுநோயை
வேரறுக்க முயலும் சாலைக்குள்
செல்பவனுக்கு நிச்சயமரணம்...
கொடிது நோயால்
இளந்தளிர் மரணம்..!
நெடிது தேவை
இன்னல் தீர்க்கும் சூரணம்..!

நோயுற்றவர்களில் பலர்
மீளாத்துயிலில் சங்கமமாக..
நோயற்றவர்கள்
புதிதாய்ப் பிறக்கிறார்கள்....
பூ மனமென்ன விதிவிலக்கா!!
நோயல்லார் நோயுற்றார்
நோவு கண்ணுற்று
நொறுங்குதலும்.. மனித
இயல்பு அன்றோ..?!
பூவென்ன மரமும் வேரும்
இலையும் தளையும்
செய்வது அது தானே..!

மனிதனையும் மரணத்தையும்
மாற்றி மாற்றித் தரும் கோவிலில்
பூமகள் கண்டெடுத்த கவிதை.
பிணி நீக்கும் அட்சயப்பாத்திரத்தின்
புது உருவகம் அருமை..!
மழலையும் மரணமும்
சங்கமிக்கும் இடம்..!

கிழக்கின் உதித்தலும்
மேற்கின் மறைதலும்
ஒன்றாக நிகழும்
இரு திசை கலந்த திசையிலி..!

உணர்வுகளின் கூடாரத்துக்குள்
நுழைந்த உணர்வை தருகிறது..
அறையெண் 406 க்கு-கூடவே
அழைத்துச் செல்கின்றது...
எழுதும் வரை அறியவில்லை
அறையெண் பற்றி..!
இங்கு கேட்டதும் நினைவு
தட்டி சுட்டுகிறது..!

கண்டுவிட்ட திருப்தியில்
கண்குவிக்கும் குருத்தோலை.
உருகும் ஐசுக்கு நிகராக
மருகும் செவிலித் தாய்..
செவிலி ஒருவரின்
மீளாத்துயரின் தாக்கமே
இக்கவி..!:traurig001:
கேட்டதன் விளைவே இப்படியெனில்
பார்த்து பழகி இருந்தால்..! :frown:

பாமகளின் காட்சிப்பாவால்
என் விழிப்பூக்களும் பூத்தன
உவர் நீர்த்திவலைகளாக..:icon_b:
மனிதம் விழிக்கையில்
அன்பு ஊற்று பெருகுவதை
யாரால் தடைசெய்ய இயலும்??

அழகான பின்னூட்ட கவி..!
அமரன் அண்ணாவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பூமகள்
08-02-2008, 06:11 AM
கவிதையோடு மனம் பதைக்க எங்களையும் பயணிக்க வைத்துவிட்டீர்.. அதற்காக பாராட்டுக்கள்..!
மிகுந்த நன்றிகள் மதி..!

பூ..உண்மையிலேயே..நல்ல முன்னேற்றம் உன் கவிநடையில்...!!வாழ்த்துக்கள் பூ... தொடரட்டும் உன் நேசமும்..பரிவும்..மன்றம் முழுதும்..!!
மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன்.
என்னால் இயன்ற அளவு முயல்கிறேன். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்ற கூற்று எத்தனை உண்மை என்று தங்களின் வரிகள் கண்டதும் புரிகிறது.

பூமகள்
08-02-2008, 06:19 AM
தொழிலை மீறி மனிதாபிமானம் முன்வருவது பாராட்டுக்குரியது. (ஆனால் அது பணியை பாதிக்கக்கூடுமோ என்ற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது).
சில நேரங்களில் தொழிலை மீறிய மனிதம் தலைகாட்டத் தான் செய்கிறது. அது அப்படி இருப்பது பணியை பாதிக்காத வகையில் இருத்தல் நலம்.

மருந்தில்லா பிணியால்
மகவு ஒன்று வாடுகையில்
முடிந்த மட்டும் மகிழ்வித்து
மரணத்தை சிரிப்போடே
ஸ்பரிசிக்க செய்வதில்
ஏது குற்றம்??

சில இடங்களில் மீள வருகிறதோ என்ற உணர்வைத்தரும் வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என் உள்ளுணர்வு சொன்ன செய்தி, அதே விமர்சனம் இங்கே கண்டேன்.
முடிந்த மட்டும் இன்னும் சிறப்பாய் செதுக்க முயல்கிறேன்.

அருமை பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் பாரதி அண்ணா.

ஆதி
08-02-2008, 06:20 AM
கனம் தோய்ந்த கவிதை _ மனதிலும்
கனம் கோய்த்த கவிதை..

என்னை பத்து வருடங்கள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டக் கவிதை..

விளக்கமாக பின்னூட்டம் தர நான் அதிகமாக கதறி அழவேண்டும்..

அழுத கண்ணீரே இன்னும் காயாமல் இருக்கிறது இன்னும் என்னை அழவிட எனக்கு சம்மதமில்லை..

விழிநீர் பிழிந்த கவிதைக்கும் பூமகளுக்கும் என் பாராட்டுகள்..

அன்புடன் ஆதி

பூமகள்
08-02-2008, 06:24 AM
ஆதியின் உள் மனத்தை
தொட்டு துடிக்க
செய்துவிட்டதா என் வரிகள்??

ஆதியின் வலியும்
அது தந்த வேதனையும்
உணர முடிகிறது..!

பூவுக்கு அழுதேனும்
பின்னூட்டமிட
பாய்ந்து வந்தமை கண்டு
மனம் நெகிழ்கிறது.

நன்றிகள் மட்டுமே
உங்கள் கண்ணீர்
துடைக்குமென்று
நன்றி சொல்லி
விழி நீர் உலர
தென்றல் அனுப்புகிறேன்..!

பூமகள்
08-02-2008, 06:27 AM
வெள்ளை உள்ளத்தில்
வெண்மை உடை உதிர்ந்த கண்ணீர்
உண்மை கண்களும் நனைத்தது கொடுமை பூ மா....
பின்னூட்டத்துக்கு நன்றிகள் மனோஜ் அண்ணா.

கனமான மனதுடன்.....பாராட்டுக்கள் தங்கையே.
கனம் தோய்ந்த இதயத்தோடு தங்கைக்கு மனமுவந்து பாராட்டியதற்கு நன்றிகள் சிவா அண்ணா.

ஷீ-நிசி
08-02-2008, 01:44 PM
வாழ்த்துக்கள் பூ!

கவிதையின் கடைசி வரிகளை நெருங்கும்போது ரோமங்கள் சிலிர்த்தது. மிக மனம் கணக்க வைக்கும் நிகழ்வு, கவிதையாய்...

அறிஞர்
08-02-2008, 01:50 PM
மனதை பாரமாக்கும் வரிகள்...

மருத்துவமனையில் இருக்கும்பொழுது தங்களுக்கு உண்டான கரு....
அனைவரின் மனதிலும் மருத்துவமனை காட்சியை உருவாக்கி..
வரிகள்.... மனதை பாரமாக்குகிறது.

அருமை பூமகளே..

பூமகள்
08-02-2008, 04:47 PM
வாழ்த்துக்கள் பூ!
கவிதையின் கடைசி வரிகளை நெருங்கும்போது ரோமங்கள் சிலிர்த்தது. மிக மனம் கணக்க வைக்கும் நிகழ்வு, கவிதையாய்...
பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் ஷீ..!

பூமகள்
08-02-2008, 04:48 PM
மனதை பாரமாக்கும் வரிகள்...அருமை பூமகளே..
பின்னூட்டம் தந்து என்னை ஊக்குவித்தமைக்கு மிகுந்த நன்றிகள் அறிஞர் அண்ணா.

யவனிகா
09-02-2008, 03:40 PM
சத்தியமாய் உருகிப் போனேன் பூ...

நினைத்துப் பார்த்து வார்த்தையில் வடிக்கும் உனக்கே இந்நிலை என்றால்...தினமும் நேரிலேயே பார்க்கும் எனக்கு...

திட உணவே உட்கொள்ள முடியாத குழந்தைகளுக்கு பார்முலா உணவு தயாரித்து கொடுக்க வேண்டியிருக்கும். தயாரித்து எப்படி ட்யூப் வழியே உணவளிப்பது என்று தாய்க்கோ, செவிலிக்கோ விளக்கச் செல்கையில்...குழந்தை மரித்திருக்கும். கையில் உணவு கனக்கும்,கண்ணில் கண்ணீர் முட்டும்.

இது போல எத்தனை அனுபவங்கள்....நெகிழ்ச்சி அடைய வைத்த கவிதை...வாழ்த்துக்கள் பூ.

Narathar
09-02-2008, 03:45 PM
அருமையான ஒரு சிறுகதையை அசத்தலாக கவி வடிவில் வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

மிக நீண்ட நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பெண்" தொலைக்காட்சி நாடகத்தில் இதே கதை படமாகியிருந்தது

பூமகள்
09-02-2008, 03:58 PM
சத்தியமாய் உருகிப் போனேன் பூ...

நினைத்துப் பார்த்து வார்த்தையில் வடிக்கும் உனக்கே இந்நிலை என்றால்...தினமும் நேரிலேயே பார்க்கும் எனக்கு...
இது போல எத்தனை அனுபவங்கள்....நெகிழ்ச்சி அடைய வைத்த கவிதை...வாழ்த்துக்கள் பூ.
அக்கா.. சத்தியமா உங்களை எழுதிய பின் நினைத்தேன்..!
எத்தனை எத்தனை கொடுமை அக்கா..!!:frown:
என்னிடம் சிஸ்டர் ஒருவர் சொல்லியதை கற்பனை கலந்து இங்கே கொடுத்தேன்.. ஆனால் நீங்க தினம் தினம் நேரில் பார்த்து படும் துயரை நான் எழுதுகையிலேயே என்னால் உணர முடிகிறது அக்கா..:frown:

மிகுந்த நன்றிகள் யவனி அக்கா.

sarathecreator
09-02-2008, 04:00 PM
ஐஸ்கிரீமும் நானும்..!

http://img01.picoodle.com/img/img01/4/2/7/poomagal/f_nbgppl00080m_3491acf.jpg


மருத்துவமனை சுவர்களோடு
மனம் பேசும் வாசனை
பினாயில் நெடியோடு
கரைந்து போகும்..!

ஐஸ்கிரீமும் நானும்
அடங்கா துக்கத்தில்
உருகி வழிந்து
ஓடிக் கொண்டிருந்தோம்..!



ஐஸ்கிரீம் அதுவாகவே உருகிவிடும் சிறிது நேரத்தில். ஆனால் கவிதை படித்த நேரத்தில் என்தன் மன் ஓட்டத்தை நிறுத்தி வேறேதும் சிந்திக்காது செய்து உருக்கிப் பிழிந்து விட்டீர்கள். புற்றுநோய்க்குப் பழியான புதல்வனுக்காக அந்த ஐஸ்கிரீமும் கண்ணீர் வடித்து உருகியதோ?

சோகத்தை வடித்து நெஞ்சத்தைக் கனக்க வைத்துவிட்டீர்கள்

சாலைஜெயராமன்
09-02-2008, 04:00 PM
ஐஸ்கிரீமும் நானும்..!



ஐஸ்கிரீமும் நானும்
அடங்கா துக்கத்தில்
உருகி வழிந்து
ஓடிக் கொண்டிருந்தோம்..!



முதல்ல இந்தத் திரியைக் கால தாமதமாப் பார்த்ததற்கு பூ விடம் மன்னிப்பு. மிக நீண்ட பின்னூட்டம் இட வேண்டுமென்று இரண்டு நாட்களாக காத்திருந்தேன்.

கவிதையின் கருவினில் கனத்த இதயத்தோடு கவிழ்ந்ததால், பின்னூட்டம் இட்டு அனைவரின் உணர்வுகளைத் திசை திருப்ப மனம் வரவில்லை.

உருகி வழிந்ததில் ஒன்றுக்கு உயிருண்டு.

சுற்றத்தை உற்று நோக்க நுண்மதி வேண்டும். இங்கு சுற்றம் என்று சொல்ல வந்தது சொந்தங்களை அல்ல. அன்பின் அடைக்கலத்தை நாடி நிற்கும் அனைத்துமே நமக்கு சொந்தங்கள்தானே. பிற உயிருக்கு நேரும் துன்பம் தன்னதாகக் கருதும் சில ஜீவன்கள் இந்த பூமியைத் தாங்கி நிற்பதால்தானே இது இன்னும் வீழாமல் இருக்கிறது.

பூ-மகள். பூமித் தாயின் புதல்வி. அல்லலுற்ற அந்த அபலைப் பிஞ்சின் உள்ளக் கிடைக்கையை மன்றத்து உறவுகளின் மனங்கலங்க எடுத்து வைத்தது இக் கவிதைக்கு வெற்றி. இது கற்பனைக் கவிதை அல்ல. வாழ்வியலில் இருட்டின் ஒரு பகுதி. கொஞ்சமாவது வெளிச்சத்திற்கு கொணர்ந்ததில் பூவிற்கு நல்ல பங்கு.

கனத்த கவிதை. கலங்கியது கல் மனம்.

பூமகள்
15-02-2008, 09:24 AM
மிக நீண்ட நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பெண்" தொலைக்காட்சி நாடகத்தில் இதே கதை படமாகியிருந்தது
நானும் பார்த்த நினைவு இப்போது லேசா மனத்தில் வருகிறது நாரதர் அண்ணா.
நெஞ்சை உருக வைக்கும் எத்தனை எத்தனை துயர் மருத்துவமனையில்..???!!:frown:
உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் நாரதர் அண்ணா. :)

பூமகள்
15-02-2008, 09:29 AM
முதல்ல இந்தத் திரியைக் கால தாமதமாப் பார்த்ததற்கு பூ விடம் மன்னிப்பு. மிக நீண்ட பின்னூட்டம் இட வேண்டுமென்று இரண்டு நாட்களாக காத்திருந்தேன்.
மன்னிப்பு எனும் வார்த்தையின் எழுத்துகளை விட சிறியவள் நான் ஐயா..!:icon_ush:
இங்கே உங்கள் மூத்த குழந்தையிடம்:icon_rollout: பெரிய வார்த்தைகள் பேசி அந்நியப்படுத்தலாமா??:frown:

பூ-மகள். பூமித் தாயின் புதல்வி. அல்லலுற்ற அந்த அபலைப் பிஞ்சின் உள்ளக் கிடைக்கையை மன்றத்து உறவுகளின் மனங்கலங்க எடுத்து வைத்தது இக் கவிதைக்கு வெற்றி. இது கற்பனைக் கவிதை அல்ல. வாழ்வியலில் இருட்டின் ஒரு பகுதி. கொஞ்சமாவது வெளிச்சத்திற்கு கொணர்ந்ததில் பூவிற்கு நல்ல பங்கு.
கனத்த கவிதை. கலங்கியது கல் மனம்.சமுதாயத்தினை இயல்பாக பிரதிபலிப்பதும், தவறைச் சுட்டுவதும் நல்ல கவிஞரின் கடமை. அந்த வகையில் என்னால் இயன்ற அளவு காட்ட முயல்கின்றேன் ஐயா.

தங்களின் பெரும் பாராட்டு கிட்டியது கண்டு கண்கள் கலங்குகிறது.:traurig001:
பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் சாலைஜெயராமன் ஐயா.

ஆர்.ஈஸ்வரன்
15-02-2008, 09:46 AM
கவிதையில் என் கண்களும் கலங்கின

பூமகள்
15-02-2008, 10:17 AM
பின்னூட்டம் கொடுத்து ஊக்க்குவித்தமைக்கு நன்றிகள் ஈஸ்வரன்.

aren
15-02-2008, 12:28 PM
கவிதை அருமை. ஆனால் மனதை அதிகம் கணக்கவைத்துவிட்டது.

பூமகள்
15-02-2008, 12:30 PM
உண்மைகள் சில சமயம் இப்படித் தான் கனக்க வைக்கும் அரென் அண்ணா.
உங்களின் பின்னூட்டத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

aren
15-02-2008, 12:32 PM
இது மாதிரியாக விஷயங்கள் தினமும் நடக்கின்றன. ஆனால் நமக்குத் தெரியவரும்பொழுது மனதை ஏதோ ஒன்று வந்து வாட்டுகிறது. நம்மால் ஏதும் செய்யமுடியவில்லையே என்ற கையாலாகத்தனமும் தெரிகிறது

நேசம்
15-02-2008, 12:56 PM
நிண்ட நாட்களூக்கு பிறகு படித்த சகோதரி பூ வியின் கவிதை மனதை நெகிழ செய்தது.

வசீகரன்
17-02-2008, 05:46 AM
வசூல் ராஜா படம் ஞாபகம் வருகிறது எனக்கு பூ.....! மருந்து மாத்திரைகள் நோயாளிகளுக்கு
இரண்டாம் பட்சம்தான் முதன் கண்களில் கருணையும் பரிவும் பனிவிடையும் தான் அவர்களுக்கு முதல் மருந்து... என்பதனை அதுவும் சிறு குழந்தையின் ஐஸ் க்ரீம் ஆசை உவமானம் வைத்து சொல்லி இருக்கும் பூ....
நான் இது போன்ற சிஸ்டர் காளை பார்த்திருக்கிறேன்..... உங்களை சின்ன பெண் என நினைத்துவிட்டேன் பூ.... வாழ்க்கையில் சில உயி ரோட்டமான நிகழ்வுகளை படம் பிடித்து காட்ட
ஆரம்பித்து விட்டீர்கள்.... இப்பொழுதெல்லாம்.....! அருமையான இந்த படைப்புக்கு
எனது இதயமார்ந்த நன்றிகள் பூ.....!
லேட்டாக தான் இந்த பதிவை பார்த்தேன்.....!

இதயத்து கீறல்...!

பூமகள்
17-02-2008, 05:55 AM
இது மாதிரியாக விஷயங்கள் தினமும் நடக்கின்றன. ஆனால் நமக்குத் தெரியவரும்பொழுது மனதை ஏதோ ஒன்று வந்து வாட்டுகிறது. நம்மால் ஏதும் செய்யமுடியவில்லையே என்ற கையாலாகத்தனமும் தெரிகிறது
உண்மை தான் அரென் அண்ணா.
நம்மால் முடிந்தது கடைசி வரை அவர்களை மகிழ்வித்து நல்ல முறையில் அவர்களை வழி அனுப்புவதே..!:frown:
பிழைக்க வைக்க வழி இல்லாத போது, வலி குறைக்க இது போல முயன்றால் நிம்மதியேனும் அவர்களுக்கு மிஞ்சுமே...!:icon_ush:

நிண்ட நாட்களூக்கு பிறகு படித்த சகோதரி பூ வியின் கவிதை மனதை நெகிழ செய்தது.
மிகுந்த நன்றிகள் நேசம் அண்ணா.
நலமா இருக்கீங்களா?? வெகு நாட்களாய் உங்களை மன்றத்தில் காணோமே..!:icon_rollout: உங்களின் பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி. :)
பணிப் பளு கூடிவிட்டதா அண்ணா?

பூமகள்
17-02-2008, 06:02 AM
முதன் கண்களில் கருணையும் பரிவும் பனிவிடையும் தான் அவர்களுக்கு முதல் மருந்து...
நிச்சயமாக வசீ.:icon_rollout:
உங்களின் கருத்து மிகச் சரியானது.:icon_b:

உங்களை சின்ன பெண் என நினைத்துவிட்டேன் பூ....
ஹையோ..! நான் எப்பவும் சின்ன பொண்ணு தாங்க.:sprachlos020::eek::D ஏதோ கொஞ்சம் என் மூளை அதிசயமாய் வேலை செய்துட்டதுன்னு இப்போ உங்க பதில் பார்த்து புரிந்தது. மிக்க நன்றிகள் வசீ.:)

லேட்டாக தான் இந்த பதிவை பார்த்தேன்.....!
இதயத்து கீறல்...!
தாமதமாக வந்தாலும் பின்னூட்ட ஊக்கம் மறக்காமல் தந்தீர்களே.. அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள்.:icon_rollout: