PDA

View Full Version : நிதியமைச்சர் சிதம்பரத்துடன் காங்கிரஸ் த



ஜெகதீசன்
06-02-2008, 09:42 PM
நிதியமைச்சர் சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர்கள் பட்ஜெட் ஆலோசனை : ஏழை மக்கள் பலன் பெற வேண்டும் என யோசனை



புதுடில்லி : மத்திய பட்ஜெட் குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்தனர்.



இதில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம், விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி, வீட்டுக் கடன் களுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. `பிப்ரவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், இதற்கான பதில் அளிக்கப்படும்' என, சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2004ம் ஆண்டு பதவியேற்றது. இதுவரை நான்கு முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. ஐந்தாவது முறையாக, வரும் 29ம் தேதி, பார்லிமென்ட்டில், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய பட் ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்னதாக, பல்வேறு தரப்பினரிடமும் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், செயற்குழு உறுப்பினர்கள் 38 பேர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர்கள், இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் என பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டம், இரண்டரை மணி நேரம் நடந்தது. ஏழை மக்களை முன்னேற்ற, மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீடு சீராக உள்ளதையும் பலரும் பாராட்டினர். நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், பொருளாதார முன்னேற்றம் மேல் தட்டு மக்களுக்கு தான் பலன் அளித்துள்ளது, ஏழை மக்களுக்கு பலன் போய் சேரவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கவலை தெரிவித்தனர். இப்பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதம் அதிகமாக உள்ளது. நடுத்தர குடும்பத்தினரின் வீட்டுக் கனவு நிறைவேற முடியாமல் உள்ளது. எனவே, வீட்டுக் கடன்களுக் கான வட்டி வீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடன் நெருக்கடியால் விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கின்றனர். எனவே, விவசாயிகள் பெற்ற கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு, நிருபர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மீடியா பிரிவு தலைவர் வீரப்ப மொய்லி, நிருபர்களிடம் கூறுகையில், `நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாவிடில், இதன் பலன்கள் ஏழை மக்களை சென்றடையாது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. சிறப்பான நிதி நிர்வாகம் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது ஒரு புறம் இருக்க, சமூக முன்னேற்றத் துக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது' என்றார்.

கூட்டம் முடிந்த பிறகு, நிருபர்களை சந்தித்த நிதி அமைச்சர் சிதம்பரம், `காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கவலைகளுக்கு, பிப்ரவரி 29ம் தேதி பதில் அளிக்கப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பானவை என்ற எண்ணம் மக்களிடம் தொடர்ந்து இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.நன்றி தினமலர்:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_rollout::icon_rollout::icon_rollout:

தங்கவேல்
08-02-2008, 12:46 PM
அரசின் திட்டங்கள் எதுவும் ஏழை மக்களுக்கு என்றும் எட்டாக்கனி தான். இந்திய அரசியல் காசு கொட்டும் பிசினஸாக மாறி விட்டது. எத்தனையோ நல்லவர்கள் இருந்தாலும்...அவர்களால் எதுவும் நடக்க போவதுமில்லை. நடந்து விடுவதும் இல்லை. இன்றும் 40 ரூபாய்க்கு கூலி வேலைக்கு செல்லும் மனிதர்கள் உண்டு இந்தியாவில்.. இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா ?

தங்கவேல்
08-02-2008, 12:48 PM
நிதி அமைச்சரும், பிரதமரும் நினைத்தால் முடியும். செய்வார்களா ?

ஜெகதீசன்
08-02-2008, 01:22 PM
இருவருக்கும் திட்டஙகளை தீட்டத்தெரியும்.
கடைசி வரை கொண்டு சேர்ப்பதில் தான் பிரச்சனை