PDA

View Full Version : மோட்சம் பெறும் முட்டைகள்...யவனிகா
06-02-2008, 01:26 PM
இரவு உணவுக்காக...
சூடான தோசைக்கல்லில்
முட்டை உடைத்து ஊற்றிக்
காத்திருந்த கணம்...

என்னால் உடைபட்ட முட்டைகள்
ஒன்றன் பின் ஒன்றாக
நினைவுக்கு வந்தன...

சடங்கான நேரம்..
அதிகாலை,
அயர்ந்து தூங்கியவளை எழுப்பி,
வலுக்கட்டாயமாய் வாயைத் திறந்து
பச்சை முட்டையைப் பருகச் செய்த பாட்டி...

முழு முட்டையை அப்படியே,
காடியில் ஊறவைத்து..
குறுகலான ஜாடியில் உட்புகுத்தி
தோழிகளிடம் செய்து காட்டிய மாஜிக்...

வெள்ளை முட்டை ஓட்டில்,
கறுப்புக் கண்ணும் காதும் வரைந்து
"முட்டை மார்க் வாங்கிய சீனு"
என்று எழுதிய குறும்பு...

கிழக்குப் பார்த்து நான் நிற்க...
என் திருஷ்டிகள் அனைத்தையும்
சுமக்கும் வண்ணம் மூன்று முறை
என்னைச் சுற்றி, பின் எறியப்பட்ட
திருஷ்டி முட்டைகள்....

பிள்ளைப் பருவம் தொட்டு
மனதில் இருக்கும் ஆசை அது...

என்றாவது ஒருநாள்...
ஏதாவது ஒருமுட்டையாவது,
உடைக்கக் காத்திருக்கும்
என் உள்ளங்கைக் கதகதப்பில்
பொரிந்து வெண்மஞ்சள்
குஞ்சாய் வெளி வருமா?

வந்தால்...
நான் உடைத்த முட்டைகள் அனைத்தும்,
மோட்சம் பெறும் என்று நம்புகிறேன்...

சுகந்தப்ரீதன்
06-02-2008, 03:34 PM
எப்படியக்கா..? இப்படியெல்லாம்..? அதுவும் சர்வ சாதரணமாக உங்களுக்கு மட்டும் கவிதைகள் வெளிவருகிறது..? ஆம்லேட் போடும் போதே இப்படி நினைவுகளில் மூழ்கி இருக்கீங்களே..உண்மையை சொல்லுங்க.. அந்த ஆம்லெட் கருகிதானே போச்சு..?:lachen001:வெள்ளை முட்டை ஓட்டில்,
கறுப்புக் கண்ணும் காதும் வரைந்து
"முட்டை மார்க் வாங்கிய சீனு"
என்று எழுதிய குறும்பு...
...
உங்க குறும்புக்கு அளவே இல்லியா...? போயும் போயும் சீனுதான் சிக்குனானா...?:traurig001:

மதி
06-02-2008, 03:36 PM
நல்லாவே மோட்சம் பெறும் அந்த முட்டைகள்..
அதென்ன தோசை சுட்டாலும்..ஆம்லேட் போட்டாலும் உங்களுக்கு கவிதை வருது...
ரொம்ப நல்லாருக்கு...!

பூமகள்
06-02-2008, 03:45 PM
ஏனுங்க அக்கா..!
என்னை சொல்லிட்டு கொஞ்ச காலமா நீங்க ஏதோ பெரிய போதி மரத்துலயே குடி இருக்காப்ல கவிதை எழுதி தள்றீங்க??

அது எப்படி அக்கா... தூங்கினா கவிதை.. ஆம்பிளட் போட்டாலும் கவிதை... அசத்துறீங்களே...!!

புல்லரிக்குது அக்காவ்..!!

கவிதைக்கு விமர்சனம் பின்பு வந்து போடறேன்.. இப்போ கலாய்க்கும் மூடில் இருப்பதால்... மன்னித்தருள்க..!!

பாராட்டுகள் அக்கா. :)

யவனிகா
06-02-2008, 03:46 PM
[COLOR=purple]உங்க குறும்புக்கு அளவே இல்லியா...? போயும் போயும் சீனுதான் சிக்குனானா...?:traurig001:

நிஜமாவே சீனிவாசன் என் பக்கத்து வீட்டுப் பையன்...உன்னைப் போயி அப்படி சொல்ல முடியுமா? நீதான் மேத்ஸ்ல செண்டம் போட்ட முட்டை ச்ச்சீச்சீ முத்துவாச்சே....நன்றி சுகு.

யவனிகா
06-02-2008, 03:49 PM
ரொம்ப நல்லாருக்கு...!

எது ஆம்லெட்டா...அது கல்லோட ஒட்டிக் கருகிக் கிடக்கு ...பார்சல் அனுப்பவா?

மதி
06-02-2008, 03:51 PM
எது ஆம்லெட்டா...அது கல்லோட ஒட்டிக் கருகிக் கிடக்கு ...பார்சல் அனுப்பவா?
வேண்டாம்..வேண்டவே வேண்டாம்... (ஏதோ பறவைக்காய்ச்சலாமே)ஆம்லேட் செய்யற நேரம் இப்படி நினைச்சுட்டு இருந்தா கருகிப் போகாம என்னாகுமாம்..?
பாவம்..மாமா..அவர நெனச்சா அழுகாச்சி அழுகாச்சியா வருது..

யவனிகா
06-02-2008, 03:52 PM
[QUOTE=பூமகள்;323261][COLOR=DarkGreen]
அது எப்படி அக்கா... தூங்கினா கவிதை.. ஆம்பிளட் போட்டாலும் கவிதை..[QUOTE=பூமகள்;323261].

நீ திட்டறையா...பாராட்டரையன்னு தெரிய மாட்டீங்குது பூ...

பூமகள்
06-02-2008, 03:58 PM
நீ திட்டறையா...பாராட்டரையன்னு தெரிய மாட்டீங்குது பூ...
திட்டுவேனா அக்கா..???!! :icon_ush::icon_ush: இப்படி கேட்டுப்போட்டீங்களே..!:frown:
அதான் புல்லரிக்குதுன்னு சொன்னேனே... எப்படி இப்படி சாத்தியம்னு மலைச்சி போயி நிக்கிறேன் அக்கா..!! :sprachlos020::eek:

அதிசய மேஜிக் உங்க விரல்களிலும் மூளையிலும் இருக்கு..!! :)
அசத்துங்க..! :icon_b:

யவனிகா
06-02-2008, 04:05 PM
பாவம்..மாமா..அவர நெனச்சா அழுகாச்சி அழுகாச்சியா வருது..

எனக்கும் தான் அழுகை அழுகையா வருது...என்ன செய்ய?
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது
ட்டூமச்சா பேசற வாய்க்கு ஆம்லெட் கிடைக்காது.
இனி ஒன்லி பாயில்ட் எக் தான்...

யவனிகா
06-02-2008, 04:07 PM
திட்டுவேனா அக்கா..???!! :icon_ush::icon_ush: இப்படி கேட்டுப்போட்டீங்களே..!:frown:
அதான் புல்லரிக்குதுன்னு சொன்னேனே... எப்படி இப்படி சாத்தியம்னு மலைச்சி போயி நிக்கிறேன் அக்கா..!! :sprachlos020::eek:

அதிசய மேஜிக் உங்க விரல்களிலும் மூளையிலும் இருக்கு..!! :)
அசத்துங்க..! :icon_b:

அய்யோ பூவு...இன்னிக்கு தூங்காமயே கனவு காணப் போறேன்...இப்பவே சீட்ல இருந்து பறக்க ஆரம்பிச்சிட்டேன்.

சிவா.ஜி
06-02-2008, 06:22 PM
எங்களுக்கெல்லாம் முட்டையை பாத்தா..முனியாண்டிவிலாஸ் ஆஃப் பாயில்தான் ஞாபகம் வரும்.உங்களுக்கு கவிதை வருது...நிஜமாவே அந்த முட்டைகளெல்லாம் மோட்சமடைந்துவிட்டது.

ஒரு கவிதாயினியின் கை பட்டு கவிதைக்குக் கருவாகிவிட்டதே......அப்பா எத்தனை நினைவுகள்.அத்தனையையும் சுவாராசியமாக தோரணமாக்கி கவிதை படைத்துவிட்டீர்களே....அசத்தல்ம்மா.....மிக மிக பாராட்டுக்கள்.

இளசு
06-02-2008, 09:49 PM
எழுத்து உங்களுக்கு வாய்த்த வரம் என்பதை
செண்பகமரத்திலிருந்து தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள்..

இயல்பான நிகழ்வுகளைச் சங்கிலியாக்கி
இறுதியில் ஒரு ''டாலர்'' கோர்த்து
அழகாய் அணிவிக்க உங்களால் இலகுவாய் முடிகிறது..

அகலிகைக்காக எழுதப்பட்டதுண்டு...
அகால மரணமுற்ற முட்டைகளுக்காக இது முதல் முறை..

கவிமனம் மட்டுமே இவ்வகை விமோசனம் தேடிச் சிவக்கும்..

வாழ்த்துகள் யவனிகா!

ஆதவா
07-02-2008, 04:09 AM
பத்து வருடங்களுக்கு முன்.. கோழி வளர்த்தோம்... முட்டையிட்டது... ஒரு முட்டை பொரிந்து குஞ்சு வெளியே வருவதை நேரில் கண்டேன்... அடா... என்ன சுகம்.... பிறப்பின் போது அதன் பொலிவு, அழகு... சே!!! எதையும் மிஞ்ச முடியாதுங்க...

முட்டை கிடச்சா ஆம்லெட் இல்லாட்டி ஆஃபாயில் போட்டு சாப்பிடுங்க.. அதைவிட்டுட்டு இப்படி கனவு கண்டீங்கன்னா அப்பறம் அவ்வளவுதான்... கீழ்பாக்கத்தில ஒரு பெட் ரெடியாயிடும்...

ஹி ஹி ஹி.. கவிதை...

யவனிகா
07-02-2008, 04:49 AM
அதைவிட்டுட்டு இப்படி கனவு கண்டீங்கன்னா அப்பறம் அவ்வளவுதான்... கீழ்பாக்கத்தில ஒரு பெட் ரெடியாயிடும்...

ஹி ஹி ஹி.. கவிதை...

என்ன ஆதவரே இன்னும் அந்தக்காலத்திலயே இருக்கீங்க...பைத்யம் புடிச்சா கீழ்ப்பாக்கம் தானா...என் ஹாஸ்பிட்டல்ல எப்பவுமே எனக்கு பெட்டு ரெடியா இருக்கும்....அட்மிட் ஆனவுடனேயே சொல்லி விடறேன்...:icon_b:

திருப்பூர்ல என்ன சீசன் இது...:smilie_abcfra:ஆரஞ்சு ஆப்பிள் எல்லாம் வாங்கிட்டு வரக்கூடாது சொல்லிட்டேன்...எனக்குப் பலாப்பழம் தான் பிடிக்கும்...:)சுளை பிரிச்சுத் தர பூவையும் கூப்பிட்டுட்டு வாங்க...சரியா?:lachen001:

என்ன பூவு அக்காவ கீழ்ப்பாக்கத்தில அட்மிட் பண்ணுவேன்னு சொல்றாங்க...கம்னு இருக்க...:traurig001:மலரு இருந்தா இந்நேரம் ஆட்டோ....ஆதவாக்கு ஆட்டோ எதுக்கு அவர் சைசுக்கு பேபி சைக்கிள் :icon_rollout:அனுப்பிருக்கும்.....

சுகந்தா...மதி...செல்வா...அக்காக்கு ஒண்ணுன்னா இல்லாத மீசைய முறுக்கி விட்டு அறுவா எடுப்பேன்னு சொன்னீங்களே...இப்ப அக்காவ நட்டாத்தில விட்டிட்டீங்களே...:frown:

ஆதவா...கொஞ்சம் பொறுங்க ...என் தம்பிக தங்கக் கம்பிக வந்து உங்க
கண்ண நோண்டி காக்காக்கு போடுவாங்க பாருங்க....:sprachlos020:

மதி
07-02-2008, 05:03 AM
சுகந்தா...மதி...செல்வா...அக்காக்கு ஒண்ணுன்னா இல்லாத மீசைய முறுக்கி விட்டு அறுவா எடுப்பேன்னு சொன்னீங்களே...இப்ப அக்காவ நட்டாத்தில விட்டிட்டீங்களே...:frown:


ஹேஹே...யாரது...
எங்கக்காவ வம்புக்கு இழுக்கறது....
ஆதவரா...
வேணாம்ம்ம்... ஆதவரே... கனவு காணுறது அவங்க உரிமை.. அவங்க கனவு கண்டுக்கிட்டே ஆம்லேட் போடட்டும்.. முட்டை அவிக்கட்டும்..

இதுக்காக அவங்கள கீழ்பாக்கம் போக சொல்றது தப்பு... வேணாஞ் சொல்லிட்டேன்... ரொம்ப பண்ணீங்க.. ஓன்னு அழுதுடுவேன்...

ஊரே தூங்க முடியாது.. யோசிச்சுக்கோங்க..

அக்கா...
ஆதவர நல்லா மிரட்டிட்டேன்.. இனி வம்பிழுக்க மாட்டார்.. கவலைப் படாதீங்க...
இன்னொன்னு மீசையெல்லாம் இல்லாம இல்ல... முறுக்கு தானில்லை..:eek::eek::eek:

ஆதவா
08-02-2008, 11:22 AM
அக்காவும் தம்பியும் ஒண்ணு சேர்ந்துட்டா என்னை வீழ்திட முடியும்னு நினைக்கிறீங்களா??

நான் ஆதவனுங்கோ? சுட்டு எரிச்சுடுவோம்ல....:D

ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க அக்கானு சொன்னது ஒரு குத்தமா?

என்ன கொடுமையப்பா இது?

ஷீ-நிசி
08-02-2008, 02:18 PM
என்றாவது ஒருநாள்...
ஏதாவது ஒருமுட்டையாவது,
உடைக்கக் காத்திருக்கும்
என் உள்ளங்கைக் கதகதப்பில்
பொரிந்து வெண்மஞ்சள்
குஞ்சாய் வெளி வருமா?

வந்தால்...
நான் உடைத்த முட்டைகள் அனைத்தும்,
மோட்சம் பெறும் என்று நம்புகிறேன்...

கவிதையின் இந்த வரிகள் கலக்கல் என்று பார்த்தால், அதை தொடர்ந்த பின்னூட்டங்கள் சில என்னை கவர்ந்தன.ஒரு கவிதாயினியின் கை பட்டு கவிதைக்குக் கருவாகிவிட்டதே.......

முட்டை என்ற கருவை இந்த இடத்தில் கையாண்டது மிக அழகு.
இயல்பான நிகழ்வுகளைச் சங்கிலியாக்கி
இறுதியில் ஒரு ''டாலர்'' கோர்த்து
அழகாய் அணிவிக்க உங்களால் இலகுவாய் முடிகிறது..இதை நானும் பல கவிதைகளில் கண்டிருக்கிறேன். கவிதையின் ஆரம்பம் மிக சாதாரணமாகவும், பின் முடிவு அந்த கவிதையையே தூக்கி நிறுத்துவதுபோலவும் இருக்கும்.

அதை வெகு எளிமையாக விளக்கிவிட்டார் நம்ம இளசு.

வாழ்த்துக்கள் யவனி!

விகடன்
09-02-2008, 03:50 AM
மோட்சம் பெறும் முட்டைகள்.
அதீத எதிர்பார்ப்பு மட்டும் இறுதியில் கொண்ட அழகான கவிதை.

கோழி 18 நாட்கள் அடைகாத்துத்தான் குஞ்சே பொரிக்கிறது.
அதேபோல் ஒரு முட்டை (உடைத்து ) பொரிக்க 18 நாட்கள் கையில் வைத்திருப்பீர்களா??? (வெப்பத்தின அளவை இப்போதைக்கு கைவிடுங்கள்)
பாவம் உங்க ஆத்துக்காரர்!!!

சுகந்தப்ரீதன்
09-02-2008, 04:15 AM
நான் ஆதவனுங்கோ? சுட்டு எரிச்சுடுவோம்ல....:D?
விராடன்:icon_ush:(அண்ணா).. இருக்காருங்கோ...உங்க பாட்சா பளிக்காதுங்கோ..!!:traurig001:

kavitha
09-02-2008, 09:48 AM
என்றாவது ஒருநாள்...
ஏதாவது ஒருமுட்டையாவது,
உடைக்கக் காத்திருக்கும்
என் உள்ளங்கைக் கதகதப்பில்
பொரிந்து வெண்மஞ்சள்
குஞ்சாய் வெளி வருமா?

வரிசையாக நினைவுத்தெளிப்புகளின் பின்னால் கவிதை+குழந்தைத்தனமாய் ஒரு பாவ மன்னிப்புக்கோரல்!

நானும் அசைவ உண்ணி தான் யவனிகா...
என்னதான்... கொன்னாபாவம் தின்னா போச்சு.. னு சொன்னாலும்
மனசு ஒரு கணமாவது சங்கடப்படுவது இயல்பு...அதிலும் சமைப்பவர்களுக்குத் தான் அதன் கஷ்டம் தெரியும்.
இதனாலேயே வீட்டில் எதையும் சுத்தம் செய்ய நான் அனுமதிப்பதில்லை. அதிலும் குழந்தைகள் முன்பு என்றால் முதல் கண்டனக்குரல் எனதாகத்தான் இருக்கும். (குலசாமிக்கு கடாவெட்டி பொங்கலிடுவது எனது முன் தலைமுறை வரை நடைமுறைவழக்கம். இப்போது நாங்களெல்லாம் குலசாமியவே பார்ப்பதில்லை.)

சின்னவயசில் அதையெல்லாம் பார்த்தாலே மிரண்டுப்போய் நிற்பேன். இப்போது பூசாரி ஆட்டமும், உடுக்கை சத்தமும் நினைத்தாலே சிரிப்புத்தான் வருகிறது.

Narathar
09-02-2008, 05:25 PM
என்ன ஒரு தெளிவான நடையில்
எவ்வளவு எளிமையாக எழுதுகின்றீர்கள்??

பாமரனுக்கும் படும் வகையில் இப்படி எழுத சிலருக்குத்தான் வரும்
அதில் ஒருவர் நீங்கள், பாமரனில் ஒருவன் நான்

வாழ்த்துக்கள்