PDA

View Full Version : கடலுக்கடியில் பழுதடைந்த இன்டெர்நெட் கேப



ஜெகதீசன்
06-02-2008, 05:27 AM
கடலுக்கடியில் பழுதடைந்த இன்டெர்நெட் கேபிள்களை சரிபார்க்கும் பணி துவக்கம்
கெய்ரோ : கடலுக்கடியில் உள்ள இன்டெர்நெட் கேபிள்களை பழுது பார்க்கும் பணி துவங்கியுள்ளது. கடந்த வாரம் வடக்கு எகிப்து பகுதியில் கடலுக்கடியில் கப்பலின் நங்கூரத்தால் இன்டெர்நெட் கேபிள்கள் அறுந்தன. இதனால் இந்தியா உட்பட உலகின் பல இடங்களில் இன்டர்நெட் சேவை பாதிப்படைந்தது. பழுதடைந்த கேபிள்களை சரிபார்க்க பழுது பார்க்கும் கப்பல் பெர்சியன் வளைகுடா கடல்பகுதிக்கு வந்தடைந்துள்ளது. அடுத்து இரண்டு நாட்களுக்கு முன் வடக்கு எகிப்தின் கடல் பகுதியில் ஏற்பட்ட பழுதையும் சரிபார்க்க உள்ளது. :icon_b::icon_b::icon_b::icon_b:

மன்மதன்
06-02-2008, 02:02 PM
இந்த ஒரு வாரத்தில் எதையும் டவுன்லோடு செய்யமுடியவில்லை.. இப்பொழுது வேகம் நன்றாக இருக்கிறது.. பணி முடிந்து விட்டதா?

aren
06-02-2008, 02:03 PM
இந்த ஒரு வாரத்தில் எதையும் டவுன்லோடு செய்யமுடியவில்லை.. இப்பொழுது வேகம் நன்றாக இருக்கிறது.. பணி முடிந்து விட்டதா?

இன்னும் பழுதடைந்து இருப்பதால்தான் சரியாக வேலை செய்கிறது!!!