PDA

View Full Version : தொலைந்து போகாமல்...சிறகுகள் கிடைக்காது...யவனிகா
05-02-2008, 10:48 AM
அதிகாலை தூக்கத்தின்
அற்புதக் கனவு அது...

மூடிய இமைகளில்,
உருளும் கருவிழிகளூடே
எனக்கு நேர்பவைகளுக்கு
நானே பார்வையாளர் ஆகிறேன்...

எட்டு வயதில் நான்,
சீட்டிப் பாவாடையும்...
மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலும்
குழந்தைமை மாறா விழிகளுடன்
தாயைப் பிடித்திருந்த விரல் நழுவத்
தொலைந்து போகிறேன்....

கூட்டம் மிகுந்த கடைவீதி
கூவிக் கூவி எதையோ விற்கும் மக்கள்...
ஆரஞ்சு விற்கும் தாத்தா ஒருவர்...
கடைபரப்பபட்ட வளையல்,பாசிகள்...
சாணமிட்டபடி செல்லும் யானை ஒன்று...

தொலைந்து போனதை மறந்து
பார்ப்பவற்றில் லயிக்கும் மனது...
தனிமையை உணரும் நேரம்
கண்கள் கசிந்து அழுகை ஆரம்பிக்கிறது...

தேம்பழும் விசும்பலும் அதிகமாக ஆக
தோளிலிருந்து சிறகுகள் முளைக்கின்றன...

சடசடவென்று சிறகுகள் அடித்து
மேலே எழும்பிப் பறக்க ஆரம்பிக்கின்றேன்...

இதோ வெகு கீழே,
என்னை தேடியபடி அலையும் அம்மா...
கண்டு கொண்ட நிறைவில்....
இறங்க விழைகிறேன்...

இறங்க மறுத்த என் சிறகுகள்
வலுக்கட்டாயமாக என்னை
வேறெங்கோ தூக்கிச் செல்கின்றன...

திடுக்கிட்டு விழிக்கிறேன்
இனி தொலைந்து போக முடியாத நிதர்சனம்
நிம்மதி தருகிறது..

தொலைந்து போகாமல்
சிறகுகள் கிடைக்காது...
நிஜம் நிம்மதியைக் கேலி செய்கிறது...

சிவா.ஜி
05-02-2008, 11:00 AM
தொலைந்து போகாமல் சிறகுகள் கிடைக்காது.....அடடா....எவ்வலவு அழகான கவித்துவமான தலைப்பு.....பிரமாதம் தங்கையே....

பற்றிக்கொண்ட கைகள் விடுபட்டவுடன் தோன்றும் பய உணர்வு அந்த குழந்தைமையில் அதிக பட்ச அச்சத்தைக் கொடுக்கும்.காட்சிகளின் லயிப்பில் அதே குழந்தைமை அச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து குதூகலப்படுத்தும்.
பிஞ்சு மனதின் தாய்த்தேடல்தான் சிறகுகளாய் கனவில் தெரிகிறது.
அது வளர்ந்த குழந்தைக்கும் உண்டு.
தாய்மடியைக் காண விழையும்போதெல்லாம் சிறகுகள் முளைத்துக்கொள்ளும்.
சீக்கிரம்...நுரையை ஊருக்குக் கூட்டிப் போகச் சொல்லுங்கள்.
ஆர்ப்பாட்டமில்லாத வரிகளில் உணர்வுகள் சொல்லும் அழகிய கவிதை.
வாழ்த்துகள் தங்கையே.

அமரன்
05-02-2008, 11:32 AM
இப்போதைக்கு ஒரு பொறுப்பாளனாக என் கடமையை செஞ்சிருக்கேன்.. புதுக்கவிதை பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.. வாசகனாக எனது கடமையை பின்னர் செய்கிறேன்...

பூமகள்
05-02-2008, 12:04 PM
அச்சச்சோ அக்கா.. என்னைப் போலவே நீங்களும் கனவு காண ஆரம்பிச்சிட்டீங்களா???!!!!

இதுல காணாம வேற போயிட்டீங்களே...!! அந்த சிறகு பேசாம நம்ம வீட்டுக்கு கொண்டு வந்திருந்தா பரவாயில்லையே... ஏர் டிக்கட், விசா எல்லாம் மிச்சமாகியிருக்கும்..!

------------------------

கவிதைக் கரு எங்கோ
என்னை இட்டுச் செல்கிறது...!!

கிடைத்த சுதந்திரம்...
சிறகாய் முளைக்க..!

சிறகல்ல சிறையென்று
காட்டிக் கொடுத்து
கட்டாயமாய் தாவி
பறக்க விடுகிறது..!!

தொலையாததன் வலி
நிதர்சனத்தில் சுட..!

தொலைந்தால் சிறகு
கிடைக்குமென ஏங்கும்
உள் மனம்..!

சிறகு கிடைத்தால்
சுதந்திரம் இருக்குமா?

சிந்திக்க வைத்த கவிதை..!!

அசத்தல் யவனி அக்கா..!!

உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைல்..!

அசத்துறீங்க.! பாராட்டுகள்..! :)

ஆதவா
05-02-2008, 12:40 PM
உண்மையிலேயே வித்தியாசம்தான்.

கனவுலகம் சஞ்சாரிக்கையில் மனம் நெடுக பறந்துவிடுகிறது ஒரு குழந்தையின் எதுவுமறியா நொடிகளைப் போல. நமக்கு நாமே நாயகர்கள் ஆகிவிடுகிறோம். கனவில் ஒரே பாத்திரம்.. அல்லது பல பாத்திரங்களைத் தாங்கும் தலைமைப் பாத்திரம் நாமாகவே

நினைவுகளோடுக் குழைத்துக் கொடுத்திருந்தாலும் கனவுகள் என்ற போர்வை கண்ணுக்குத் தெரியாமலேதான் கவிதையின் உறக்கம் இருக்கிறது.

வயதின் ஏற்ற இறக்கம் அதன் பிண்ணனியில் நமது அலங்காரம், கூட்டமிகு தேர்த்திருவிழா, தொலைந்துபோன நாம்.

சுற்றிவளைத்துப் பேசுவானேன்? வாழ்வுப் பிண்ணனியில் நமது அலங்காரத்தில் தொலைகிறோம். இது மறைமுகக் கருத்து.

சாணமிட்டபடி செல்லும் யானை - நிரம்ப ரசிக்கவைக்கிறது இந்த வரிகள். ஏன்? வெகு அழகாக வழுக்கிக் கொண்டு உள்ளே நுழையும் கருத்தை அதிலும் சிறு கவிதையாலான வரிகள் நம்முள் ஏனோ பரவசப்படுத்தும். மற்றெவ்வரிகளைக் காட்டிலும்.
நாம் தொலைந்துபோனதை மறந்துவிடுகிறோம்.. வாழ்விலும்தான். பார்க்கும் காட்சிகள் பழகிய நபர்கள் என, புதுமைகள் ஏற ஏற நாம் ஏதாவது ஒன்றைத் தொலைத்துக் கொண்டேதான் இருக்கிறோம்.

ஏனோ அவ்வகைத் தொலைப்பு, நம்மை ஒருவிதத்தில் உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ ஆக்கும். கனவில் திரும்பிப் பார்த்தல் இருக்கிறதென்றால் காண்பவர் அவ்வகையில்தான் இருக்கவேண்டும் என்பது எனது யூகம்.

இறகுகள் முளைத்து வேறெங்கோ... செல்லவேண்டாம். நம் வட்டத்தை நாம் பெரிதாக்குவோம். கிணற்றைச் சுற்றியே வருவதைக் காட்டிலும் கிணற்றைப் பெரிதுபடுத்துவதே சிறந்தது.

ஆனால் பாருங்கள் உங்கள் வரிகள்... நிஜம் நிம்மதியைக் கேலி செய்கிறதாம்.. இல்லை இல்லை. உங்களுக்கு நிம்மதியை உணர்த்தியதே இந்த நிஜம் தானே! பிறகெப்படி கேலி செய்யும்? கனவுகள் நம் நிஜத்திலே உருவாகலாம். உண்மையின் ஒரு பொறிதான் பல்வேறு கிளைகளாக வெட்டி கனவுகளாகப் பரிணமிக்கிறது. ஆதிமூலம் என்று சொல்வார்களே! அதுதான்..

தொலையாமல் எதுவும் கிடைக்காது..
நிஜமில்லாமல் நிம்மதியும்..

வாழ்த்துகள்

சுகந்தப்ரீதன்
05-02-2008, 01:16 PM
வாழ்த்துக்கள் அக்கா..! என்னால மேல இருக்குற மாதிரி பெரிய விரிவான பின்னூட்டமெல்லாம் கொடுக்க முடியாது.. அதனால பாராட்டும் வாழ்த்தும் மட்டும்தான்..!

தலைப்பும் சரி..கவிதையும் சரி..ஒரு கனவுபோல அழகாய் இருக்கிறது.. அத்துடன்.. சிந்தையையும் சென்று கவர்கிறது.. நன்றி அக்கா..!

யவனிகா
05-02-2008, 03:58 PM
அண்மையில் ஒரு கவிதை படித்த படி உறங்கிப் போனேன். அதன் பாதிப்பாகக் கூட இருக்கலாம்.நான் கண்ட கனவு.....

பறக்கும் கனவு பற்றி பிராய்டு என்ன சொல்கிறார் தெரியுமா?

சிக்கலான ஒரு விசயத்தில் முடிவு எடுத்த பின் உறங்கும் போதும், எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியேற நினைக்கும் போதும்...பறக்கும் கனவு வரலாம். ஆனால் நான் அப்படி ஒன்றும் செய்தது போல தெரியவில்லை....மொத்ததில் பறக்கும் கனவு ஒருவித சுதந்திர உணர்வைக் குறிக்கிறது. விரைவில் விடுமுறை செல்லக் கூடும் என்ற நினைவு கூட அதன் காரண கர்த்தாவாக இருக்கலாம்.

பின்னூட்டம் இட்ட அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

இளசு
06-02-2008, 06:23 AM
ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்ல 90 நிமிடங்கள் ஆகும்...
அந்நிலையில் கனவுகள் தொடங்கும்.
அப்போது விழிகள் உருளும்.. (Rapid Eye Movements - REM stage of sleep).

இந்த அறிவியல் உண்மையை இலகுவாய்ப் புகுத்திய தொடக்கமே அசத்தியது..

கனவுகள்... எத்தனை பேசலாம்.. எழுதலாம் இவை பற்றி!

தொலைந்து போதல் - இவ்வகைக்கனவு இதுவரை வந்ததே இல்லை எனக்கு!!!

தேர்வு இருக்கும் சென்னையில்.. 10 மணிக்கு
நான் திண்டிவனத்தில் இருப்பேன் - வண்டியில் 9 மணிக்கு
வண்டி பழுதாகும்... உடை சேறாகும்..பாழாகும்
இதயம் இரட்டிப்பாகும்.. பதைக்கும்..அரற்றும்..
நேரம் கரையும்...
ஆனால் தேர்வைக் கைகழுவாமல் எப்படியும் ..எப்படியாவது
என இந்த மனச்சுழல் இன்னும் இன்னும் நீடிக்கும்...

(இதே கரு உள்ள கனவுகள் என் இரவு அரங்கில் சில நூறு காட்சிகளாவது இதுவரை ..இனியும் வரும்..)

சில நொடிகள் நீடிக்கும் இக்கனவை மனம் உணர்வது - சில மணி நேரங்களாய்..

அத்தனை மணி நேர வேதனையும் அடர்த்தியாய் அந்நொடிகளில் ...

வாய்விட்டே அரற்றி விழிநிலைக்கு வந்தால்..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடி..நிஜமல்ல என்ற நிம்மதி..

அந்த நிம்மதி - முந்தைய அடர்ந்த வலியின் கசப்பை விட அதிக இனிப்பானது..

---------------------------------------

இங்கே நிஜம் நிம்மதியைக் கேலி செய்யும் இறுதிவரி
என்னை நிலைகுலைய வைத்துவிட்டது..

எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை..
எழுத்து உங்கள் வசமாகிவிட்ட வரம் என்பது மட்டும் புரிகிறது..

வாழ்த்துகள் யவனிகா!

மதி
06-02-2008, 06:33 AM
எப்படியக்கா இப்படி..?
அழகான வரிகளில் ஆழமான கவிதை
கனவுகள் பலமுறை வருவதுண்டு..

உங்கள் கனவு வித்தியாசமாய்...

வேறென்ன..பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

அக்னி
06-02-2008, 06:40 AM
சிறகுகள் முளைத்துக் கனவிற் பறந்தாலும்,
பிரிவின் வலியும், பிரிந்த வலியும்,
உணர்வில் படர்ந்த கணங்களில்,
பறந்த மகிழ்வை மீறி
துடித்தது நிஜமாகவே
எனையாளும் என் மனமன்றோ...

பாராட்டுக்கள் யவனிகா...
பாராட்டுக்கள் அழகிய பின்னூட்டங்கள் தந்த அனைவருக்கும்...

நுரையீரல்
06-02-2008, 07:42 AM
வித்தியாசமான கனவுகள், மிக வித்தியாசமான கவிதை...

எனக்கும் கனவுக்கும் தொடர்பற்றுப் போய் 20 வருடங்கள் இருக்கும்..

ஒரு தடவை எழுத்தாளர் ராஜேஷ் குமாருடன் சென்னைப்பயணம், எங்களுக்குள் விவாதித்த விஷயம் கனவு.. எனது நண்பரும், ராஜேஷ்குமாரும் தாங்கள் கண்ட, மிகவும் ரசித்த கனவுகளைப் பற்றி அலசிக் கொண்டிருந்தனர். கடைசியில் என் முறை வர, எனக்கேதும் பிடித்த கனவுகள் இருக்கின்றனவா என்று கேட்டனர். சமீபகாலங்களில் கனவே வருவதில்லை என்று சொன்னதற்கு, என்னை ஆச்சரியத்துடன் பார்த்தனர்..

கனவு என்பது நமது ஆழ்மனதில் (sub conscious) புதைந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடே... கனவைப் பற்றி ஆராய்வதோ / பயமுறுவதோ இல்லை என்பதாலோ, கனவுக்கு என்னை பிடிப்பதில்லை..

ஆனால் என்னுடைய கற்பனைக்கும் / ஆசைகளுக்கும் எல்லைக்கோடு போட்டதாய் எனக்கு ஞாபகமில்லை...

இதயம்
06-02-2008, 08:42 AM
கனவுகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள், ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அதற்கான கனவு என்ற நிகழ்வின் இறுதி வரையறையை யாராலும் தர இயலவில்லை என்பது தான் உண்மை. உள் மன எண்ணத்தின் வெளிப்பாடே கனவு என்றால் என் அனுபவத்தில் கண்டவரை நான் அதை இல்லை என்று தான் சொல்வேன். காரணம், நான் சந்திக்காத, நினைத்துப்பார்க்காத அனுபவங்கள் கூட கனவாய் என்னுள் அடிக்கடி வந்ததுண்டு. நம் மனதால் அறியப்படாத உள் மன எண்ணங்கள் நம்மிடம் இருக்க வாய்ப்பிருக்கிறதா..? தெரியவில்லை..!! நான் கண்ட அந்த அறிமுகமற்ற கனவுகளில் சில இது நிஜமில்லையா..? என்று ஏங்கும் அளவுக்கு இனிப்பானவை.! சிலதோ, நல்லவேளை இது வெறும் கனவு தான்...? எனும் அளவுக்கு கசப்பானவை..!! எண்ணங்களோடு தொடர்பு கொண்டு வரும் கனவிலும் இந்த இரு வகைகள் உண்டு.

கனவுகளில் வருபவை எல்லாம் எதிர்காலத்தில் நிஜமாவதில்லை என்றாலும் கனவு பற்றி எதிர்பார்ப்பு, எண்ணங்கள், கணிப்புகள் மனிதர்களிடையே நிறைந்து கிடக்கிறது. நம்மில் பெரும்பாலானோர் கனவுகளும், பலன்களும் என்ற புத்தகத்தை ஆவலோடு புரட்டுகிறோம். ஒரு முறை கனவுகளை பற்றி என் மனைவியிடம் விவாதித்துக்கொண்டிருந்த போது அவளுக்கு அடிக்கடி வருவதாக சொன்ன கனவு விசித்திரமானது. அவள் தேர்வு அறையில் இருப்பது போலவும், படித்த அனைத்தும் மறந்து அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்திருப்பது போலவும் அடிக்கடி வரும் என்று சொல்வாள். ஒரே கனவு மீண்டும், மீண்டும் ஒரு மனிதனுக்கு வர வேண்டியதன் உளவியல் காரணம் பற்றி அறிவியல் ஏதேனும் சொல்கிறதா..? அவள் காணும் கனவை விட விசித்திரமான விஷயம் நம் மன்ற சகோதரி ஒருவர் (அவர் யாரென்றும், எந்த திரி என்றும் எனக்கு நினைவிலில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.!) என் மனைவி சொன்ன அதே கனவு (தேர்வு அறை, மறத்தல், அதிர்ச்சியில் விழித்தல்) அவருக்கும் வருமென்று சொன்ன போது இரு பெண்களுக்கிடையேயான அந்த ஒற்றுமை என்னை வியக்க வைத்தது.!!

பொதுவாக கனவுகள் என்பவை விழித்து எழும் போது உண்மையில்லையா என்று ஏமாற்றத்தையும், நல்லவேளை கனவு தான் என்று நிம்மதியையும் தரும். ஆனால், யவனி(யக்)கா கண்ட கனவு அவரைப்போலவே மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. அவர் கண்ட ஒரே கனவு இரு வேறு நேரெதிர் உணர்வுகளை ஏற்படுத்தியது வித்தியாசமாகவும் விநோதமாகவும் இருக்கிறது. ஆனால், அந்த கனவு தொடர்பில் அவர் உணர்ந்த வாழ்க்கையின் தத்துவம் பெரும் பாராட்டிற்குரியது. தொலைத்தல் என்பது ஏதோ ஒரு இழப்பின் அறிகுறி, அங்கே தொலைவது தானாக இருந்தாலும்..! அது கொடுக்கும் துயரம் பொய் என்று உணர்ந்து நிம்மதியடையும் மனது, இன்னொரு பக்கத்தில் அந்த தொலைத்தல் பொய்யாகும் போது கிடைக்கும் சுதந்திர இழப்பை எண்ணி கவலை கொள்கிறது. இதை நாம் வெறும் கனவாக எண்ணாமல், நடைமுறை வாழ்க்கையிலும் பொருத்திப்பார்த்தால் சர்வ நிச்சயமாய் பொருந்தும்.

வாழ்க்கையில் நாம் இழக்கும் எதுவும் உண்மையில் இழப்பில்லை, அது இழப்பை போன்ற ஒரு தோற்றமே என்ற உண்மையை நாம் உணரும் போது சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால், அதை இழக்காததால் நமக்கு கிடைக்க வேண்டிய உண்மையான நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை பறி கொடுப்பது தானே உண்மையான இழப்பு..!! புரியவில்லையா நண்பர்களே..?!! தயவு செய்து மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்களேன்..இழத்தலை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகம் செய்திருந்தால் சட்டென புரியும் வாய்ப்பிருக்கிறது..!!! (இன்னும் புரியாதவர்களுக்கு சொல்ல என்னிடம் பல உதாரணங்கள் இருந்தாலும், எளிய உதாரணமாக மன நிம்மதிக்காக நாம் தான தர்மம் செய்வதை பொருத்திப்பாருங்கள்..!!)

வாழ்க்கைத்தத்துவத்தை தன் வண்ணக்கனவு மூலம் உணர்த்திய யவனி(யக்)காவுக்கு என் நன்றிகள் + பாராட்டுக்கள்..!!

நுரையீரல்
06-02-2008, 09:28 AM
மனது என்பது எங்கே இருக்கிறது என்று கேட்டால், நமது நெஞ்சின் இடப்புறம் கையை வைத்து இங்கே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தோம்.

ஏன் காதலுக்கு குறியாகக் கூட இதயத்தில் ஒரு அம்புக்குறி இட்டு (அவள்/அவன்) இதயத்தினுள் உள்ளே செல்வதாய் நம்பிக் கொண்டிருந்தோம். கடைசியில் பார்த்தால் இரத்தத்தை pump செய்யும் ஒரு சாதாரண உறுப்பு தான் இதயம், அங்கு வேறொன்றும் இல்லை என்று அறிந்து கொண்டோம்.

அதுபோல் தான் கனவும். கனவு என்பது உள்மனத்திலிருக்கும் எதிர்பார்ப்புகள் / ஏமாற்றங்கள் மற்றும் வக்கிரங்களின் வெளிப்பாடே.. தன் உள்மனதில் என்ன இருக்கிறது எவராலும், தனக்குத் தானே அறிந்துகொள்ள முடியாது. அதை அறிந்து கொள்வதற்கு உதவுபவர்கள் தான் மனநல மருத்துவர் (Psychiatric specialist).

மற்றவர்களின் ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்று அறியக்கூடிய தன்மைகளைக் கொண்டும் எந்த மனநல மருத்துவரும் பிறக்கவில்லை. அதற்கென்று ஒரு படிப்பு இருக்கிறது, அந்த படிப்பில் சில உத்திகளையும், சில நியதிகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் நியதிப்படி தான் ஒரு மனநல மருத்துவர், தனது client-ஐ அணுகி அவரது பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

உறங்குவதற்கு முன் நினைத்துக் கொண்டிருந்த, சில விஷயங்கள் கனவாக வரும். இவைகளுக்கும் ஆழ்மனதிற்கும் சம்பந்தமில்லை. ஆழ்மனது என்பது ஒருவர், தனது சுய அறிவால் monitor பண்ணவோ control பண்ணவோ இயலாத ஒன்று.

நாம் சிந்தனையால் நினைக்காத ஒன்று கனவாய் வருகிறது என்றால், அது ஆழ்மனதிலிருந்து வருவது. ஆழ்மனதிலிருந்து வரும் கனவுகள், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது மட்டுமே வருபவை.

கனவுகளுக்கு கலரில்லை என்பதை உணரத் தொடங்கும் போதே, கனவுகளையும் அது எங்கேயிருந்து புறப்படுகிறது என்பதையும் அறியத் தொடங்கிவிட்டான் மனிதன்.

சிவா.ஜி
06-02-2008, 09:50 AM
கனவுகள் என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.மனோதத்துவ நிபுனர்கள் நாம் காணும் கனவுக்கு விளக்கம் சொல்வார்கள்.உதாரனமாக பறப்பதைப் போல கனவு கண்டால்...சுதந்திரத்துக்காக ஏங்கும் மனநிலையிலிருக்கிறார்கள் என்றும்,ஏதோ ஒரு ஆசையை ஆழ்மனதில் பதித்து வைத்திருக்கிறார்களென்றும் சொல்வார்கள்.ஆனால் நான் அடிக்கடி காணும் கனவு பறப்பது.ஆனால் நான் மிக சுதந்திரமானவன்,என் மனதில் அப்படிப்பட்ட எந்த மறைத்துவைத்த ஆசையுமில்லை...பின் ஏன் அப்படி வருகிறது.அதிகாலை கணவுகள் பலிக்கும் என்று சொல்வார்கள்.ஆனால் நிபுனர்கள் என்ன சொல்கிறார்கள் இரவு முழுவதும் காண்பதைப்போல தோன்றினாலும்....விழிப்பு வருவதற்கு சில நொடிகளுக்கு முன்தான் எல்லா கனவுகளுமே காணப்படுகின்றன என்கிறார்கள்.

பாம்பு துரத்தினால் ஆபத்து என்றும்,அதுவே கடித்துவிட்டால் நல்லது என்றும் சொல்கிறார்கள்....நிஜத்தில் அதுவும் உண்மையில்லை என்று தெரிகிறது....சொல்லப்போனால்...கனவும்...கவிஞர்களுக்கான..ஒரு கவிதைப் பொருளோ என தோன்றுகிறது

ஆதி
06-02-2008, 01:14 PM
விழிகள் இருட்டும் பொழுதெல்லாம்
விரிக்கின்றின கனவு மயில்கள்
தன் கோகைகளை..

வெவ்வேறு வண்ணங்களாலான
அதன் தோகைகள்
அவ்வப்பொழுது நிறமும் மாறுகின்றன*..

உறக்க மேடையில்
அரங்கேறும் நடனங்கள்
புன்னகை
கண்ணீர்
மலர்
சருகு என
எதையாவது ஒன்றை
உதிர்த்துவிட்டு செல்கின்றன
விடியல்களில்..

பனித்துளிகளாய்
விழுகிற சில உதிர்வுகள்
விழிப்புகளில் இமைக்கரையில்
சிறிது நேர
சிலெழுப்புகின்றன..

வெற்று சிப்பிகளாகவும்
வந்து விழுகின்றன சில
அர்த்தமற்றக் கனவுகள்..

உறக்கத்தை உடைத்து
வெளியே எடுக்கவும்
செய்கின்றன
சிலக் கனவுகள் என்னை..

எல்லா கனவிலும்
கதாநாயகனாய் இருக்கும் நான்
முடிவுகளில் மிச்சங்களாய் தேங்குகிறேன்..

ஏக்கங்களுமாய் மனத்
தக்கங்களுமாய் வெளிபட்டாலும்
காத்துவிட முடிவதில்லை
கனவுகளை கலையாமல்..

மன அழங்களில் நடமாடும் உணர்வுகளே உறக்கத்தில் கனவேன கண்திறக்கும் என்று கனவு நிபுனர்கள் சொன்னாலும், சிலக் கனவுகள் நிகழ்வுகளாய் நேர்ந்துவிடுகையில் தெரிவியல் புரிவியல் படி பொய்யாகிவிடுகிறது...

அக்காவின் இந்த கவிதை என்னை தெரியாத பிரதேசங்களுக்கு எல்லாம் இழுத்துச் சென்றது.. கனவையும் கவிதையாக்க இயன்றிருக்கிறது அக்கா உங்களால், கனவு நிகழ்வாகிறதோ இல்லையோ இந்த கவிதை எல்லார் மனதிலும் நினைவாகும் என்பது உறுதி..

பாராட்டுக்களுடன் ஆதி

யவனிகா
06-02-2008, 01:32 PM
வெகு அழகான, மீண்டும் மீண்டும் காணத்தூண்டும் கனவுகளைப் போன்ற பின்னூட்டங்கள்...இருட்டுக் கூதல்...கனவு மயில்கள்...ரசித்தேன் ஆதி...ஆதவா, அக்னி, இளசண்ணா,சிவா அண்ணா, இதயம் அண்ணா, சுகு, ராஜா, ஆதி...அனைவரின் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

மதி
06-02-2008, 02:33 PM
என் பேர் விட்டுப்போச்சு... :(

பூமகள்
06-02-2008, 02:41 PM
என் பேர் விட்டுப்போச்சு... :(
சேம் டூ யூ மதி..!! :traurig001::traurig001:

நுரையீரல்
06-02-2008, 02:45 PM
என் பேர் விட்டுப்போச்சு... :(
ஆதிக்குப் பக்கத்தில மூணு புள்ளி இருக்குது மச்சான், புரிஞ்சுக்குவீங்கணு பார்த்தா உங்க அக்காவப் போலவே ... ஆ இருக்கீங்களே மச்சான்..

சரி மச்சான் மதிக்கு எல்லாரும் ஒரு 'ஓ' போடுங்க..

என் திரியில வந்த கலாய்க்கிறனு இன்னிக்கு முதுவுல உங்கக்கா நாலு போடப்போவுது...

இது ஒரு பொழப்பானு தானே நினைக்கிற மதி.. பொறுத்திருந்து பாரு உனக்கும் கல்யாணம் ஆகும், அப்பத்தெரியும்...

அம்மா கையில அடி வாங்குறதும், பொண்டாட்டி கையில அடிவாங்குறதும் தனி சுகம் போ...

சிவா.ஜி
06-02-2008, 02:45 PM
சேம் டூ யூ மதி..!! http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

அது சேம் டூ மீ ன்னு வரனும்....அழுவாதம்மா...அக்காகிட்ட சொல்லிடறேன்.இம்புட்டு நல்லா பின்னூட்டம் போட்ட கொழந்தயோட பேர மறக்கலாமா..?

மதி
06-02-2008, 02:51 PM
ஆதிக்குப் பக்கத்தில மூணு புள்ளி இருக்குது மச்சான், புரிஞ்சுக்குவீங்கணு பார்த்தா உங்க அக்காவப் போலவே ... ஆ இருக்கீங்களே மச்சான்..

சரி மச்சான் மதிக்கு எல்லாரும் ஒரு 'ஓ' போடுங்க..

என் திரியில வந்த கலாய்க்கிறனு இன்னிக்கு முதுவுல உங்கக்கா நாலு போடப்போவுது...

இது ஒரு பொழப்பானு தானே நினைக்கிற மதி.. பொறுத்திருந்து பாரு உனக்கும் கல்யாணம் ஆகும், அப்பத்தெரியும்...

அம்மா கையில அடி வாங்குறதும், பொண்டாட்டி கையில அடிவாங்குறதும் தனி சுகம் போ...
நல்லாவே புரியுது கல்யாணத்துக்கு எப்படியெல்லாம் ஜால்ரா போடணும்னு...
எனிஹவ்.. அக்காவின் திரியில கலாய்க்கற எண்ணத்துல பதியல.. :eek::eek:

இதயம்
06-02-2008, 02:53 PM
சேம் டூ யூ மதி..!! :traurig001::traurig001:

கடைசீல ஒரு கேள்விக்குறி போடாததால தங்கைக்கு இங்கிலீசு தெரியாதோன்னு நினைக்கிற அளவுக்கூ ஆயிடிச்சி.. ஷேம்.. ஷேம்.... பப்பி ஷேம்..!! :D:D

பூமகள்
06-02-2008, 02:57 PM
அது சேம் டூ மீ ன்னு வரனும்....அழுவாதம்மா...அக்காகிட்ட சொல்லிடறேன்.இம்புட்டு நல்லா பின்னூட்டம் போட்ட கொழந்தயோட பேர மறக்கலாமா..?
ஹி ஹி.. அண்ணாவ்...!
எப்படித் தான் குத்தம் கண்டுபிடிக்கறீங்கன்னு தெரியலை..(கண்ணு சூப்பர் பவர் ஃபுல்னு மட்டும் தெரியுது..) தமிழில் தான் எழுத்துப் பிழை விட்டா நக்கீரர் மாதிரி வந்து தாக்குவீங்கன்னா ஆங்கிலத்திலுமா???!! :rolleyes:
பொதுவா பேசுகையில் சேம் டூ யூ.. இங்கையும் அதே தான் அப்படின்னு தான் பேசுவோம்..! அப்படியே போட்டுட்டேன்..!! :D:D
( அப்பாடா.. சமாளிச்சாச்சு..! :rolleyes:)

அப்புறம்.. அக்காகிட்ட சொல்லுங்க அண்ணாவ்.. என்ர அக்கா எப்படி என்னை மறக்கலாம்???!!! :icon_ush::rolleyes:

யவனிகா
07-02-2008, 03:08 AM
நம்ம தம்பிதானே நேரில நன்றி சொல்லிக்கலாம்னு விட்டிட்டேன் மதி...சேசே எப்பப் பாத்தாலும் இந்த மதி விசயத்தில தப்பு செஞ்சு சாரி கேக்கிறதே எனக்கு வேலையாப் போச்சு...உன் பேரில சாரி அக்கவுண்ட் ஒன்னு ஒபன் பண்ணிவிடறேன்...அப்பப்போ அதிலிருந்து எடுத்துக்கோ...குறையக் குறைய ஞாபகப் படுத்து சரியா?

அன்புத் தம்பி மதி...தங்கை பூ..ரெண்டு பேரையும் டீல்ல வுட்டதுக்கு அக்கா சபையோர் முன்னிலையில் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.உங்கள் பின்னூட்டங்கள் நிஜமாவே...சாக்லேட் காம்ப்ளான்...அப்படியே சாப்பிட்டுட்டேன்...ஒ.கே. வா?

யவனிகா
07-02-2008, 03:49 AM
எனிஹவ்.. அக்காவின் திரியில கலாய்க்கற எண்ணத்துல பதியல.. :eek::eek:

அக்கா திரில கலாய்க்கறக்கு புல் ரைட்ஸ் உனக்குத் தர்றேன்...ஒன்னுமே எழுதாத பாண்டு பேப்பர்ல்ல கைநாட்டு வெக்கனுமா...சொல்லு...உனக்காக வெச்சுத் தர்றேன் தம்பி...மனிதர் உனர்ந்து கொள்ள இது சாதாப் பாசம்....மச்சானை மண்டை காய வைக்கும் மெகா சகோதரப் பாசம்....:traurig001::traurig001:

யவனிகா
07-02-2008, 03:53 AM
அச்சச்சோ அக்கா.. என்னைப் போலவே நீங்களும் கனவு காண ஆரம்பிச்சிட்டீங்களா???!!!!ரொம்ப நல்லது...அப்ப நம்ம எல்லாருமே கனவு பேமிலியாமா...
அது சரி கொஞ்ச நாளாவே ரொம்ப அசத்தல் கவிதைகள் தர்றே பூவு...ஏதாவது ஸ்பெசலா சாப்பிடறயா? பின்னூட்டத்திற்கு நன்றி தங்கையே...

மதி
07-02-2008, 04:57 AM
அக்கா திரில கலாய்க்கறக்கு புல் ரைட்ஸ் உனக்குத் தர்றேன்...ஒன்னுமே எழுதாத பாண்டு பேப்பர்ல்ல கைநாட்டு வெக்கனுமா...சொல்லு...உனக்காக வெச்சுத் தர்றேன் தம்பி...மனிதர் உனர்ந்து கொள்ள இது சாதாப் பாசம்....மச்சானை மண்டை காய வைக்கும் மெகா சகோதரப் பாசம்....:traurig001::traurig001:

:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:
ஹிஹி.. இது ஆனந்த கண்ணீர்.

யவனிகா
07-02-2008, 05:00 AM
அய்யைய்யோ...இந்தா துடைச்சிக்கோ_______ இது டிஸ்ஸூ பேப்பர்.

மதி
07-02-2008, 05:10 AM
அய்யைய்யோ...இந்தா துடைச்சிக்கோ_______ இது டிஸ்ஸூ பேப்பர்.

சரிக்கா...
பக்கத்தில பண்டில் பண்டிலா வச்சிருக்கேன்...

விகடன்
07-02-2008, 12:00 PM
ஆக்கத்தோடு எங்களையும் தூக்கிச் சென்று படுகையில் விழிக்கச் செய்திருந்தீர்கள்.
பாராட்டுக்கள் யவனிக்கா

பி:கு:- விஞ்னானி அப்துல்கலாம் சொன்னதை நீங்களும் செய்கிறீர்கள் என்றுமட்டும் எண்ணிவிடாதீர்கள். அவர் காணச் சொன்ன கனவு வேறு

பூமகள்
07-02-2008, 12:07 PM
ரொம்ப நல்லது...அப்ப நம்ம எல்லாருமே கனவு பேமிலியாமா...
ஹா ஹா...:lachen001::lachen001: ஆமா அக்கா..! :icon_b:
அது தான் தெரிஞ்ச விசயம் ஆச்சே..!!:D:D

அது சரி கொஞ்ச நாளாவே ரொம்ப அசத்தல் கவிதைகள் தர்றே பூவு...ஏதாவது ஸ்பெசலா சாப்பிடறயா?
அதான் உங்க தங்கச்சி ஆயிட்டேனே.. இப்படி கூட எழுதலைன்னா உங்க பேரு என்னாவது அக்கா??!! :rolleyes::rolleyes:
அதான் ஏதோ என்னால முடிஞ்சத செய்யறேன்.. ஆனா நான் கடுகளவு செய்தாலும் உங்களுக்கு மலை அளவு பெரிசா பாசத்துல மேக்சிமைஸ் ஆகி தெரியுதுன்னு நினைக்கிறேன்...!! என் மேல வைச்சிருக்கும் பாசம் கண்ணை மறைக்குதோ அக்கா??!! :icon_ush::icon_ush: