PDA

View Full Version : என்னை இழந்தேன்....எப்படி இழந்தேன்...!



வசீகரன்
05-02-2008, 07:44 AM
என்னை இழந்தேன் எப்படி இழந்தேன்
தெரியவில்லை...!
எப்படி இணைந்தேன்.... எப்போது இணைந்தேன்
தெரியவில்லை....!

பரபரப்பில் ஆர்வமில்லாதவன்
பம்பரமாக சூழல்கிறேன்...

கட கடப்பில் கவலை இல்லாதவன்
கால்களில் சக்கரங்களுடன் உழல்கிறேன்....

கனவுகளில் நிறைய கவிந்திருந்தவன்
கடிகார முட்கள் பார்த்து உறங்குகிறேன்....

காலைப்பொழுதுகளை காதலித்தவன்
களேபரமாக விழி பிதுங்கிய நகர
காலையில் இதயம் தொலைத்துவிட்டேன்

புதினங்களையும் புதுக்கவிதைகளையும்
ஆர்வமுடன் படித்தவன்
நிறைய கவிதைகளை இழந்துவிட்டேன்....
புத்தகத்தின் மனம் மறந்துவிட்டேன்...!

அழகுத் தமிழை நிறைய நேரம் மெய் மறந்தவன்
புரியாத ஆங்கிலத்தில் புதியவனிடம் புலம்புகிறேன்.....!

இயல்பு புன்னகைகள் புரிந்தவன்
போலி புன்னகைகள் பல புரிகிறேன்....
சந்தர்ப்பங்களுக்காக சிரிக்கிறேன்....
மனம் ஒட்டாத சில நிகழ்வுகளையும் மாற்றாணுக்காய்
மனமின்றி ஆமென ஒப்புகிறேன்....!

ஆரவாரங்கள் அண்டாதவன்
ஆதாயம் வேண்டி பல நேரங்களில் பல அரிதாரங்கள்
தரிக்கிறேன்.... எண்ணியம் துறந்து...!

இதயங்கள் நிறைய இசைவானவன்
இசை கேட்பதை மறந்து விட்டேன்....
இனிய நேரங்கள் சில இழந்துவிட்டேன்....

அவளுடன் களித்த அழகான நேரங்கள்.....
அவளுக்கென பூரித்த இனிமையான தருணங்கள்...
கொஞ்ச கொஞ்சமாக தூரசெல்கிறது......!

நான் என் சுயம் இழந்து விட்டதாக உணர்கிறேன்..!
நகரத்தின் நாற்றமெடுத்த வாழ்க்கையில்
என்னை இணைந்துவிட்டேன்..!

எப்போது இணைந்தேன்.... எப்படி இணைந்தேன்......!

சுகந்தப்ரீதன்
05-02-2008, 08:35 AM
இயல்பு புன்னகைகள் புரிந்தவன்
போலி புன்னகைகள் பல புரிகிறேன்....
சந்தர்ப்பங்களுக்காக சிரிக்கிறேன்....
மனம் ஒட்டாத சில நிகழ்வுகளையும் மாற்றாணுக்காய்
மனமின்றி ஆமென ஒப்புகிறேன்....!

ஆரவாரங்கள் அண்டாதவன்
ஆதாயம் வேண்டி பல நேரங்களில் பல அரிதாரங்கள்
தரிக்கிறேன்.... எண்ணியம் துறந்து...!.....!
வசீகரா..அத்தனையும் நிஜம்..நிஜம்..!!

என்னை போல நீயா..? உன்னைப் போல நானா..? உனக்கு நேர்ந்த மாற்றம் எனக்கும் நேர்ந்திருக்கிறது.. என்னையறியாமல் எனக்குள்.. அதை நினைத்து வியந்திருக்கிறேன்..வருந்தியிருக்கிறேன்.. ஆனால் கருவாக்கி கவிதையாக்க தெரியவில்லை..!

உள்மனக் குமுறலை குறையின்றி கொட்டி இருக்கிறாய்.. வாழ்த்துக்கள் நண்பா..!!

பூமகள்
05-02-2008, 08:46 AM
விரைந்தோடும் வாழ்க்கையில்
தூசாகும் சம்பவங்கள்..!

சுயம் இழப்பு போராட்டம்
மனத்தில்..!

"எண்ணியம்" சொல்லாடல் அசர வைக்கிறது..!

காதலியின் கனவுகளும்
கானல் கணங்களும்
தூரமான விந்தை -நவீன
யுகத்தின் விதை..!

அழகான கவிதை..!

சலிப்பான தருணத்தை
சந்தோசமாக்குவதும்
நம்மில் தான் உண்டு..!

எவ்விடத்தும் சுயமிழக்கா
மனம் தான் தேவை..!

சிந்திக்க வைத்த கவிதை..!
பாராட்டுகள் வசீ..!! :)

சிவா.ஜி
05-02-2008, 08:59 AM
இயல்பு மாறி...ஒட்டா வாழ்வை ஒட்டிக்கொண்ட இதயம்.
சுவை மாறிப்போனது,விருப்பம் மாறிப்போனது,வழக்கம் மாறிப்போனது.....இவையெல்லாம்....நாறிப்போன நகர வாழ்க்கையோடு
இணைந்துவிட்டதால் நிகழ்ந்து விட்டது.

தங்கை பூ சொன்னதைப்போல சலிப்பு தவிர்க்கப்படவேண்டியது.
சலிப்பு வந்துவிட்டவனைப் பார்த்து சந்தோஷம் பழிப்பு காட்டும்.
உள்ளத்தை உற்சாகப்படுத்தாவிடில் உள்ளதும் போகும்.
நல்லது....உன்...சலிப்பை....நீ வெல்வது.

வாழ்த்துகள் வசீகரா.

வசீகரன்
05-02-2008, 12:48 PM
வசீகரா..அத்தனையும் நிஜம்..நிஜம்..!!

என்னை போல நீயா..? உன்னைப் போல நானா..? உனக்கு நேர்ந்த மாற்றம் எனக்கும் நேர்ந்திருக்கிறது.. என்னையறியாமல் எனக்குள்.. அதை நினைத்து வியந்திருக்கிறேன்..வருந்தியிருக்கிறேன்.. ஆனால் கருவாக்கி கவிதையாக்க தெரியவில்லை..!

உள்மனக் குமுறலை குறையின்றி கொட்டி இருக்கிறாய்.. வாழ்த்துக்கள் நண்பா..!!

ஆம் சுகந்த்.... போராட்டமான வாழ்க்கைதான்.... இருந்தாலும்... மன்றம்....
என்னவள்.... என் நண்பன் (நீயும்தான்) என சில சந்தோஷங்கள்....
இருக்கிறது.... நான் சோர்ந்து போகும் நேரங்களில் இவைகள் எனக்கு ஒத்தடமாக
இருக்கின்றன.... மனதை இலகுவாக்குகின்றன.... சொல்ல நிறைய இருக்கிறது சுகந்த்...
என் அதெல்லாம்...! இதை நீ படிக்கிறாயோ இல்லையோ... தெரியாது....
ஆனாலும் எழுதுகிறேன் என் இதயம் திறந்து......!

தோழமைக்கு மிக்க நன்றி என் நண்பா சுகந்த்......!

வசீகரன்
05-02-2008, 12:52 PM
"எண்ணியம்" [/COLOR]சொல்லாடல் அசர வைக்கிறது..![/COLOR]

காதலியின் கனவுகளும்
கானல் கணங்களும்
தூரமான விந்தை -நவீன
யுகத்தின் விதை..!

அழகான கவிதை..!

சலிப்பான தருணத்தை
சந்தோசமாக்குவதும்
நம்மில் தான் உண்டு..!

எவ்விடத்தும் சுயமிழக்கா
மனம் தான் தேவை..![/COLOR]

சிந்திக்க வைத்த கவிதை..!
பாராட்டுகள் வசீ..!! :)


மிகவும் சந்தோஷம் பூ..... உங்கள் வார்த்தைகள் அத்தனையும் உண்மை
அதை மனதிர்கொண்டுதான்..... நடை போடுகிறேன்....

நன்றி மிக்க நன்றி பூ..!

வசீகரன்
05-02-2008, 01:00 PM
இயல்பு மாறி...ஒட்டா வாழ்வை ஒட்டிக்கொண்ட இதயம்.
சுவை மாறிப்போனது,விருப்பம் மாறிப்போனது,வழக்கம் மாறிப்போனது.....இவையெல்லாம்....நாறிப்போன நகர வாழ்க்கையோடு
இணைந்துவிட்டதால் நிகழ்ந்து விட்டது.

தங்கை பூ சொன்னதைப்போல சலிப்பு தவிர்க்கப்படவேண்டியது.
சலிப்பு வந்துவிட்டவனைப் பார்த்து சந்தோஷம் பழிப்பு காட்டும்.
உள்ளத்தை உற்சாகப்படுத்தாவிடில் உள்ளதும் போகும்.
நல்லது....உன்...சலிப்பை....நீ வெல்வது.

வாழ்த்துகள் வசீகரா.

நிச்சயமாக அண்ணா... உங்கள் கருத்தை ஏற்கிறேன்.... உங்களை போன்று
அனுபவர்கள் தான்... எங்களுக்கு இது போன்று..... ஊக்க வார்த்தைகளை
தந்து முன்னோடிகளாக விளங்கவேண்டும்....!
தொடர்ந்து மன்றத்தில் எனக்கு உற்ற அன்ணானாக..... நண்பராக இருந்து வருகிறீர்கள் அண்ணா.... மிக்க..மிக்க...நான்றிகள்!!!
ஊடகத்தின் வாயிலாகத்தான் என்னால் சொல்ல முடியும்.....

சுகந்தப்ரீதன்
06-02-2008, 03:27 AM
என் அதெல்லாம்...! இதை நீ படிக்கிறாயோ இல்லையோ... தெரியாது....
ஆனாலும் எழுதுகிறேன் என் இதயம் திறந்து......!

தோழமைக்கு மிக்க நன்றி என் நண்பா சுகந்த்......!
படித்தேன்...மனம் மகிழ்ந்தேன் நண்பா..!..தொடர்ந்து எழுது..உடனடியாக இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக வாசிப்பேன் உன் பதிவை..நட்பன்புடன்..நான்..!

நாகரா
06-02-2008, 03:59 AM
என்னை இழந்தேன் எப்படி இழந்தேன்

எப்போது இணைந்தேன்.... எப்படி இணைந்தேன்......!

உமது இந்த ஆதங்கமே இணைந்த நரகத்திலிருந்து உம்மை மீட்டு இழந்த சொர்க்கத்தை உமக்கு ஈட்டிக் கொடுக்கும் மனந்திரும்புதலுக்கான முதற்படி.

"மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது"

உம் கவிதையைப் படித்ததும் இயேசு நாதரின் புத்திமதி நினைவுக்கு வருகிறது. மனந்திரும்ப முனையும் இந்த ஆதங்கக் கவிதைக்கு என் பாராட்டுகள் வசீகரரே!

வசீகரன்
06-02-2008, 04:06 AM
உம் கவிதையைப் படித்ததும் இயேசு நாதரின் புத்திமதி நினைவுக்கு வருகிறது. மனந்திரும்ப முனையும் இந்த ஆதங்கக் கவிதைக்கு என் பாராட்டுகள் வசீகரரே!

தங்கள் பின்னூட்டத்திர்க்கு மிக்க நன்றிகள் நாகரா அவர்களே....!
தொடர்ந்து விமர்சியுங்கள்...!

இளசு
06-02-2008, 05:07 AM
பேருந்து ஏறினால்
நடப்பது இழப்பு
கார் வாங்கினால்
பஸ் பயண இழப்பு

சென்னை - தில்லி
விமானம் - ரயில்
இரண்டில் ஒன்றில் பயணித்தால்
இன்னொன்று இழப்பு..

இதுதான் வாழ்க்கைப்பயணம் வசீகரன்..

இன்றைய வாழ்க்கை வாகனம் - அமைந்ததற்கு
ஏதோ ஒரு காரணம் - பணி, பணம், இப்படி...

இந்த பயணக்கட்டத்திலும் ஏதோ சுவை இருக்கும்..

அன்று பற்றி இன்று நினைப்பதும்
இன்று பற்றி நாளை ஏங்குவதும்
என்றும் தொடரும்...

இழந்ததை எண்ணி எழுதும் சுயம் இருக்கும்வரை
எதையும் உண்மையில் இழக்கவில்லை என்பேன்..

வாழ்த்துகள் நல்ல கவிதைக்கு!

யவனிகா
06-02-2008, 05:30 AM
பேருந்து ஏறினால்
நடப்பது இழப்பு
கார் வாங்கினால்
பஸ் பயண இழப்பு

சென்னை - தில்லி
விமானம் - ரயில்
இரண்டில் ஒன்றில் பயணித்தால்
இன்னொன்று இழப்பு..

இதுதான் வாழ்க்கைப்பயணம் வசீகரன்..



வசீகரனின் உணர்வுக் குவியலான கவிதையும், அதைத் தொடர்ந்து இளசு அண்ணாவின் அழகான பின்னூட்டமும். இழந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால் வேதனை தான் எஞ்சும். என்ன கொண்டு வந்தோம் விட்டுச் செல்வதற்கு? குறை ஒன்றும் இல்லை என்று போய்க் கொண்டே இருக்க வேண்டியது.நம்க்கு மேலே உள்ளவர்களைப் பார்த்தால்...முன்னேற்றம் கிடைக்கும். நமக்கு கீழே உள்ளவர்களைப் பார்த்தால் நிம்மதி கிடைக்கும்.அனைவரையுமே உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் சில நேரம் சிரிப்பு வருகிறது.

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரா..