PDA

View Full Version : முள்ளாகும் முல்லைகள்..!



பூமகள்
05-02-2008, 07:21 AM
முள்ளாகும் முல்லைகள்..!

http://img31.picoodle.com/img/img31/4/2/5/poomagal/f_20060729x00m_189580f.jpg


காலை அவசரத்தில்
நூடில்ஸ் சிற்றுண்டி..!
வாயில் பாதி..
தட்டில் மீதி..!

ஃப்ரி.கே.ஜி ரைம்
தேர்வு.. - மனனம்
மனத்தில்..!

மாலை வந்ததும்
பூட்டிய வீடு..!

சோர்ந்து சாவி வாங்கி
தொலைக்காட்சி காட்டில்
கார்டூன் நண்பர்கள்..!

துப்பாக்கி தூக்கி
சுட்டு வீழ்த்தும்
தீரர்கள்..!

நீரின்றி மழலை
இமைக்காமல் குடிக்கும்
வன்முறை பானம்..!

குடித்து தீர்ந்ததும்
குற்றுயிராய் கிடக்கும்
மனிதம் கீழே..!

அன்னையின் அன்பு
முத்தத்தோடு வாழும்..!
பேச நேரமின்றி இரவுணவு
சமைத்தலில் மாயும்..!

மறுநாள் பள்ளியில்..
சின்ன சலசலப்பு..!
வன்முறையில் முடியும்..!

முல்லைகள் முள்ளாவது
என்று புரியும் நமக்கு??



(வெளிநாட்டில் எல்.கே.ஜி குழந்தை துப்பாக்கியோடு பள்ளிக்குச் சென்று மற்றவரைச் சுட்டுக் கொன்றதாக செய்தி அறிந்தேன். அதன் தாக்கத்தில் எழுதியது.)

ஆதி
05-02-2008, 07:33 AM
முள்ளாகும் முல்லைகள்..!




சோர்ந்து சாவி வாங்கி
தொலைக்காட்சி காட்டில்
கார்டூன் நண்பர்கள்..!


துப்பாக்கி தூக்கி
சுட்டு வீழ்த்தும்
தீரர்கள்..!


நீரின்றி மழலை
இமைக்காமல் குடிக்கும்
வன்முறை பானம்..!


குடித்து தீர்ந்ததும்
குற்றுயிராய் கிடக்கும்
மனிதம் கீழே..!


மறுநாள் பள்ளியில்..
சின்ன சலசலப்பு..!
வன்முறையில் முடியும்..!


(வெளிநாட்டில் எல்.கே.ஜி குழந்தை துப்பாக்கியோடு பள்ளிக்குச் சென்று மற்றவரைச் சுட்டுக் கொன்றதாக செய்தி அறிந்தேன். அதன் தாக்கத்தில் எழுதியது.)


சொல்லவந்தக் கருத்து இந்த சில வரிகளில் அழகாக படமாகி இருக்கிறது..

அதிலும்..

நீரின்றி மழலை
இமைக்காமல் குடிக்கும்
வன்முறை பானம்..!

இந்த வரி மிக பிராமாதம்..

எடுத்தக் கருவை பிறழாமல் அற்புதமாய் தந்த கவிதைக்கும் பூமகளுக்கும் பாராட்டுக்கள்

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
05-02-2008, 07:39 AM
பூ...குழந்தைகளின் வேதனையையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறாய் என்று ஆரம்பத்தில் தோன்றியது... ஆனால் இறுதியில் வீரியமுள்ள ஒரு நிஜத்தை கண்முன் கொண்டு வந்து காரணத்தை விளக்கியது அருமை..!

வாழ்த்துக்கள் பூ..! குழந்தைகளின் உலகையும் உணர்வையும் தெளிவாகவே தெரிவிக்கும் கவிதைக்கு..!

இதயம்
05-02-2008, 07:42 AM
கையை கொடுங்கள் தங்கையே..! அற்புதம்..!! இக்காலத்திற்கு அவசியமான, மிக மிக நல்ல கருத்தை உள்ளடக்கிய கவிதை இது. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. இந்த கலையை குழந்தை வளர்ப்பு மேற்கொள்ளும் அனைவரும் அறிய வேண்டியது அவசியம். சின்னஞ்சிறு மழலைகளின் மனம் அறியாமல் நாம் அவர்களின் மீது காட்டுவது பெரும்பாலும் அன்பல்ல, கட்டாயத்திணிப்பு..! அது கல்வி, உடை, உணவு எதுவாக இருந்தாலும் சரி..!! குழந்தை வளர்ப்பில் குறை வரும் பொழுது குழந்தைகளும் குற்றவாளியாகும் வாய்ப்பிருக்கிறது என்பதை நிரூபித்தது தான் இந்த கவிதைக்கு அடிப்படையாக அமைந்த சம்பவம். குழந்தைகளை தன் விருப்பம் தீர்க்கும் இயந்திரமாகவும், தான் சொன்னதை எல்லாம் செய்யும் செல்லப்பிராணியாகவும் அணுகாமல் அவர்களின் தேவை, விருப்பம், உணர்வறிந்து நடந்து கொள்வது மிக அவசியம். இதைச்செய்வதன் வீட்டுக்கு மட்டுமல்ல, ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதன் மூலம் நாட்டுக்கும் நாம் நன்மை செய்கிறோம்.

மழலையர் தங்கள் இயந்திர வாழ்க்கையால் மனம் நசிந்து போவதை தன் கவிதையால் அழகாக வெளிப்படுத்தியிருக்கும் பூமகளுக்கு என் பாராட்டுக்கள்.!!

மதி
05-02-2008, 07:42 AM
நல்ல கவிதை பூமகள்....
பிஞ்சு மனதில் நஞ்சினை
விளைக்கும் காரணிகள் பல

இறுதியில் மனிதமற்றுப் போகும் மனங்கள்..
செய்வது சரியா தவறா என புரியாது செய்யும் செயல்கள்.

திறம்பட படம் பிடித்துக் காட்டியுள்ளீர்..

வாழ்த்துகள்.

பூமகள்
05-02-2008, 07:45 AM
எடுத்தக் கருவை பிறழாமல் அற்புதமாய் தந்த கவிதைக்கும் பூமகளுக்கும் பாராட்டுக்கள்
ஆஹா..
மிக்க நன்றிகள் ஆதி. :)
வெகு நாட்களாய் மனத்தினை அரித்துக் கொண்டிருந்த நெருடலை கவியாக்கினேன். உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.

பூமகள்
05-02-2008, 07:50 AM
வாழ்த்துக்கள் பூ..! குழந்தைகளின் உலகையும் உணர்வையும் தெளிவாகவே தெரிவிக்கும் கவிதைக்கு..!
மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன்.
குழந்தைகள் மனம் வன்முறையால் மாற்றமடைவதை கண்டுகொள்ள வேண்டும் என்று உணர வைக்கவே இக்கவிதை. கார்ட்டூன்கள் என்ற பெயரில் வன்முறை வருவதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.

நிலை மாற வேண்டும்.. மாற்றப் பட வேண்டும்.

தெளிவாக புரிந்து அழகாக பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் சுபி..!

பூமகள்
05-02-2008, 07:53 AM
கையை கொடுங்கள் தங்கையே..! அற்புதம்..!!
மழலையர் தங்கள் இயந்திர வாழ்க்கையால் மனம் நசிந்து போவதை தன் கவிதையால் அழகாக வெளிப்படுத்தியிருக்கும் பூமகளுக்கு என் பாராட்டுக்கள்.!!
குழந்தை வளர்ப்பில் இந்த கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் எழுதியது.
உங்கள் அனைவரின் ஊக்கம் பெற்றது என் கவிக்கு கிடைத்த வெற்றி.
பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள்.

பூமகள்
05-02-2008, 08:19 AM
நல்ல கவிதை பூமகள்....
பிஞ்சு மனதில் நஞ்சினை
விளைக்கும் காரணிகள் பல
திறம்பட படம் பிடித்துக் காட்டியுள்ளீர்..
நச் என்று நாலு வரியில் சொல்லி முடித்துவிட்டீர்கள்.
மிகுந்த நன்றிகள் மதி. :)

பூமகள்
05-02-2008, 08:57 AM
ஏங்க மத்தவங்க யாருமே இந்த பூவு கிறுக்கியதை படிக்க மாட்டீங்களா??

ஏங்க சிவா அண்ணா யூ டூ...............???

சிவா.ஜி
05-02-2008, 09:21 AM
அடடா....எப்படி இதை கவனிக்காம போனேன்(அப்படியென்ன கிழிக்கற வேலை...எனக்கு...? சவுதி வந்ததிலிருந்து காலண்டர்ல தேதிகூட கிழிக்கறதில்ல..ஹி..ஹி..)

முதலில் தலைப்புக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு...தலைப்பே கருவைச் சொல்லிவிடும் வெகு சிலவற்றில் இதுவும் ஒன்று.

மழலைகளின் தினசரி எப்படி கழிகிறது....அவை எதையெல்லாம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து கழிக்கிறது..என்று சொல்வதற்கு கவிஞர் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பிரமாதம்.

முகத்திலறையும் நிஜங்கள்.

காதுக்கும்,கழுத்துக்குமிடையில் அலைபேசி,வலது கையில் கணிணியின் சுண்டெலி,இடது கையில் காப்பிக்கோப்பை,கண்கள் மொய்ப்பது மின்னஞ்சல் பட்டியலில்....அருகிருந்து முகம் நோக்கும் மழலைக்கு இடமோ நேரமோ இல்லாத இயந்திர பெற்றோரின் முல்லைகள் முள்ளாய்த்தானாகும்.

சிந்திக்க வைக்கும் கவிதை.அசத்திட்டே பூம்மா.வாழ்த்துகள்.

பூமகள்
05-02-2008, 09:34 AM
அழகான பின்னூட்டம் கொடுத்து கவிதைக்கு அணி சேர்த்துவிட்டீர்கள் சிவா அண்ணா.

நல்லதொரு கருத்து சொல்லி சிந்திக்க வைத்துவிட்டீர்கள்..!

மிக்க மகிழ்ச்சி மற்றும் மிகுந்த நன்றிகள் சிவா அண்ணா. :)

நுரையீரல்
05-02-2008, 10:02 AM
நல்ல கவிதை பூமகள்.

எந்த விஷயத்திற்கும் ஒரு எதிர்கருத்து இருக்கும். கெட்டவைகளுக்கு ஆதரவாக பாஸிடிவ் கருத்துக்களும் இருக்குமென்பதை மறக்கமாட்டேன். ஒவ்வொரு விஷயமும் அவரவர் பார்வையிலேயே அணுகப்படுகிறது. அதனால் தான் மாறுபட்ட கண்ணோட்டங்கள் முளைக்கின்றன.

கவிதையின் கரு, வேலைக்குப் போகும் அம்மாக்களின் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் பற்றியது என்றாலும், அம்மாவின் அரவணைப்பிலே கெட்டுப் போன குழந்தைகளும் இருக்கிறார்கள். தாய், தந்தையர் இருவரையும் இழந்தும் பாதை தவறாமல் வளர்ந்த சிறுவர்களும் இருக்கின்றனர் என்பதனை ஒப்பிட்டுப் பார்க்கையில், எனது பார்வையில் கவிதைக்கரு பத்துவருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் கை தட்டல் வாங்கியிருக்கும், நீங்கள் சொன்ன விஷயங்களில் நியாயம் இருந்தாலும், அதை இந்தக்காதில் வாங்கி, அந்தக்காதில் விட்டுவிட்டு வேலைக்குப் போகும் அம்மாக்களின் சூழ்நிலையை எழுதினால் இன்னும் மெச்சமாக இருக்கும்.

எனக்கு கவிதை எழுத தெரியாது இருந்தாலும் உரைநடையில் சொல்கிறேன்..

அதிகாலையில் விழித்தெழுந்து ராத்திரி தூங்கப்போகும் வரை, வேலைக்குப் போகும் ஒரு பெண் படும் கஷ்டங்களை சொல்லிமாளாது... அது நீண்ட தொடர்கதையாகத் தான் போய்க் கொண்டிருக்கும்...

இப்படி கஷடப்படணுமா என்றும் கேள்வி கேட்கலாம்... என்ன பண்றது வாழ்க்கையே போர்க்களம் தான்..

ஆதவா
05-02-2008, 10:08 AM
பெரும்பாலும் வெளிநாடுகளில் இவ்விதம் நடப்பது அறிகிறேன். அதிலும் சில புத்தி சுவாதீனமில்லாதவர்கள் உட்புகுந்து குழந்தைகளைக் கடத்தி எந்த காரணமுமில்லாமல் சுட்டு வீழ்த்தப்படுவதைப் படிக்கும்போதெல்லாம் மனதுக்குள் சலனம்.. இவ்வகை ஆசாமிகள் நம் ஊர்களில் உலாவி வந்தால் பள்ளியே காலியாகிவிடும்.

கவிதையின் கருத்து நிகழ்காலப் படம்பிடிப்பு.

சொற்சிக்கனம்.. இன்னமும் சொல்லப்போனால் கருமித்தனம். அவ்வகை எனக்கு மிகவும் விருப்பம்.

தொலைக்காட்சிக் காடு
கார்ட்டூன் நண்பர்கள்
வன்முறை பானம்
அதோடு முல்லைகள் முள்ளாவது

என அத்தனையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன..

எல்.கே.ஜி குழந்தைக்கு துப்பாக்கியை எப்படி சுடவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது போலும்.. எப்படி அதன் பிஞ்சு விரல்களில் ஆயுதம் பிடிபட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது... எனினும், இவ்வகை அநுமதிகள் மறுக்கப்படவேண்டும்.. (குழந்தைகளுக்கு துப்பாக்கி பற்றிய விழிப்புணர்வு அதாவது அது எப்படி விசைபடுகிறது என்பதைப் பற்றிய உணர்வு தேவையா?)

நடந்தவை வெளிநாடென்றாலும் கவிதை உள்நாட்டையோ கற்பனிக்கத் தோன்றுகிறது.........

வெளிநாட்டுக் கம்பனியின் ஜிஞ்சர் சோடா..

யவனிகா
05-02-2008, 10:08 AM
பூவு நல்ல கவிதை தான்...
உள்ளே தான் உறுத்துது...நல்ல கவிதை தரும் தாக்கம் தான்...
வாழ்த்துக்கள் பூவு...


விரைவில் பின்னூட்டக் கவிதையுடன் வருகிறேன்.

சிவா.ஜி
05-02-2008, 10:15 AM
ஆதவா...இந்த வெளிநாட்டுக் கலாச்சாரமும் வழக்கம்போல் நம் நாட்டிலும் வந்துவிட்டது.பெங்களூருவில் ஒரு பள்ளி மாணவன் உடன் படிக்கும் இரண்டு சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்.(தினமலரில் வந்த செய்தி)
இன்னும் எதையெல்லாம் இறக்குமதி செய்யப்போகிறார்களோ...??

ஆதவா
05-02-2008, 10:32 AM
ஆதவா...இந்த வெளிநாட்டுக் கலாச்சாரமும் வழக்கம்போல் நம் நாட்டிலும் வந்துவிட்டது.பெங்களூருவில் ஒரு பள்ளி மாணவன் உடன் படிக்கும் இரண்டு சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்.(தினமலரில் வந்த செய்தி)
இன்னும் எதையெல்லாம் இறக்குமதி செய்யப்போகிறார்களோ...??

அடப்பாவமே! இவங்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் கிடைக்குதோ?? நமக்கும் கொடுத்தால் நாமும் நால்வரை சுடுவோம் அல்லவா:D

அமரன்
05-02-2008, 10:37 AM
நுரைண்ணா.. கையைக் கொடுங்க.. இச்சுடரொளிக்கும் ஒவ்வொரு தடவையும் எட்டிப்பார்ப்பேன். ஏமாந்து போவேன். நான் எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத விதத்தில் சொல்லி உள்ளீங்கோ..

பூவு.. வந்துட்டு அவருக்கு கைதட்டிப்போறாருன்னு நினைக்காதே.. எல்லாரும் சொன்னதன் பின்னர் சொல்லாததை சொல்லி கைதட்டல் பெறும் சுயநல நோக்கத்தால் கவிதை தொடாமல் போறேன் (சத்தியாமகத்தான் நம்புங்க)

சுட்டிபையன்
05-02-2008, 10:56 AM
உலகம் உள்ளம் கைக்குள் சுருங்கினால் உற்வுகள் உணர்வுகள் கூட சுருங்கி விடும். பூ அழகன கவிதை என்னை போன்ற குட்டிகளை வைத்து :D

பூமகள்
05-02-2008, 11:20 AM
எனது பார்வையில் கவிதைக்கரு பத்துவருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் கை தட்டல் வாங்கியிருக்கும், நீங்கள் சொன்ன விஷயங்களில் நியாயம் இருந்தாலும், அதை இந்தக்காதில் வாங்கி, அந்தக்காதில் விட்டுவிட்டு வேலைக்குப் போகும் அம்மாக்களின் சூழ்நிலையை எழுதினால் இன்னும் மெச்சமாக இருக்கும்.
இந்தக் கருத்தைத் தான் நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆயினும், இவை பத்துவருடத்துக்கு முந்திய காலகட்டத்தைச் சேர்ந்ததல்ல என்பது சிவா அண்ணாவின் உதாரணம் விளக்குகிறது.
சென்ற வருடம் நடந்த சம்பவத்தின் தாக்கம் தான் இக்கவி. அம்மாவை மட்டும் ஏன் குறை சொல்லனும்??

என் பணி, பெற்றோராகிய இருவரின் மீதும் நிலைப்பாட்டை உணர்த்தவே எழுதினேன். அம்மா வேலைக்குச் செல்வதால் வந்த பிணி இதுவல்ல. அப்போ, அப்பா ஏன் குழந்தையை கவனிக்க கூடாதா??
மாலை வீட்டுக்கு வந்து, குழந்தையோடு விளையாடி, அவர் மனம் அறியக் கூடாதா?

உண்மையில் அந்த தவறை இருபாலர் மீதும் சுட்டிக் காட்டவே இங்கே இக்கவி வடித்தேன். வார்த்தைகள் குறைத்ததால் பல விசயம் இது போல் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

என் கரு:
பெற்றோர்கள் குழந்தையோடு தினமும் சிறிது நேரம் செலவிட்டு, குழந்தை உணர்வுகளை மதித்து, அவர் சொல்லுக்கு செவி மடுத்து கேட்டாலே இது போன்ற அசம்பாவிதங்கள் பெருமளவு குறையும் என்பது தான்.

நல்ல அலசல் நுரை அண்ணா.
அழகிய விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள் அண்ணா. :)

பூமகள்
05-02-2008, 11:25 AM
கவிதையின் கருத்து நிகழ்காலப் படம்பிடிப்பு.
தொலைக்காட்சிக் காடு
கார்ட்டூன் நண்பர்கள்
வன்முறை பானம்
அதோடு முல்லைகள் முள்ளாவது என அத்தனையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன..
மிக்க நன்றிகள் தம்பி ஆதவா. :)

வெளிநாட்டுக் கம்பனியின் ஜிஞ்சர் சோடா..
சிவா அண்ணாவின் பின்னூட்டம், இங்கேயும் இறக்குமதி ஆனதைக் குறிக்கிறதே..!
வெளிநாட்டு கோக், பெப்பி போல...!

அழகான விமர்சன ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் ஆதவா.

பூமகள்
05-02-2008, 11:29 AM
பூவு நல்ல கவிதை தான்...வாழ்த்துக்கள் பூவு...
விரைவில் பின்னூட்டக் கவிதையுடன் வருகிறேன்.
வாங்க வாங்க அக்கா.. காத்துட்டு இருக்கேன்..! :)
ஓடி வந்து சொல்லிட்டு போனதற்கு ஒரு "ஓஓஓஓஓஓஓஓஓ" போடுறேன்.. அக்கா.:)

பூவு.. வந்துட்டு அவருக்கு கைதட்டிப்போறாருன்னு நினைக்காதே.. எல்லாரும் சொன்னதன் பின்னர் சொல்லாததை சொல்லி கைதட்டல் பெறும் சுயநல நோக்கத்தால் கவிதை தொடாமல் போறேன் (சத்தியாமகத்தான் நம்புங்க)
இப்படி எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க?? :sauer028::sauer028:
நான் தான் அப்பாவியா ஓடி ஓடி முதல் ஆளா விமர்சிக்கறனோ??:icon_ush::frown: இருங்க இருங்க ஆட்டோ அனுப்பறேன்..!! :wuerg019:

பூமகள்
05-02-2008, 11:31 AM
உலகம் உள்ளம் கைக்குள் சுருங்கினால் உறவுகள் உணர்வுகள் கூட சுருங்கி விடும். பூ அழகன கவிதை என்னை போன்ற குட்டிகளை வைத்து :D
ரொம்ப சரியா சொன்னீங்க..! :icon_b:
ஆனா அதுக்காக உங்களை குழந்தைன்னு எல்லாரும் சொல்லனும்னு எல்லாம் சொல்லப்படாது..!! :aetsch013: :lachen001::D

பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு நன்றிகள் சுட்டிபையன். :)

இதயம்
05-02-2008, 11:33 AM
இந்தக் கருத்தைத் தான் நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆயினும், இவை பத்துவருடத்துக்கு முந்திய காலகட்டத்தைச் சேர்ந்ததல்ல என்பது சிவா அண்ணாவின் உதாரணம் விளக்குகிறது.

குடும்ப சூழல், பெற்றோரின் புறக்கணிப்பு, நவீன உலகம், பரபரப்பு நிறைந்த வாழ்க்கை ஆகியவை குழந்தைகளுக்கு தனிமையையும், கவனிப்பின்மையையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்களுக்கு பரீட்சை வைப்பது 10 வருடங்களுக்கு முன் இல்லை. பிள்ளைகளின் புத்தக சுமை 10 வருடங்களுக்கு முன்பை விட இப்போது அதிகம். கணவனும், மனைவியும் வேலைக்கு செல்ல குழந்தை தனித்துவிடப்படும் நிலை 10 வருடத்தை விட இப்போது தான் அதிகம். பிள்ளைகளுக்கிடையேயான கல்விப்போட்டி 10 வருடத்தை விட இப்போது மிக அதிகம். பிள்ளைகளை இசை, நடனம், தற்காப்பு என்று அதன் விருப்பமில்லாமலேயே பெற்றோர் திணிப்பது 10 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது அதிகம். மொத்தத்தில் இந்த கவிதை 10 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது தான் மிகவும் பொருந்தும்..!!

குழந்தைகளை பெற்றோர் சரி வர கவனிக்காவிடில், பராமரிக்காவிடில் குழந்தை மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு மிக அதிகம் இருக்கிறது. அது அந்த குழந்தையை மனநோயாளியாகவோ, குற்றவாளியாக மாற்றிவிடக்கூடும்..! எனவே பெற்றோர்கள் மிக, மிக எச்சரிக்கையாக குழந்தைகளை கையாளவும், கவனிக்கவும் வேண்டும். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும், கண்காணிப்பும் எப்போதும் அவர்களுக்கு தேவை..!!

பூமகள்
05-02-2008, 11:43 AM
பெற்றோர்கள் மிக, மிக எச்சரிக்கையாக குழந்தைகளை கையாளவும், கவனிக்கவும் வேண்டும். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும், கண்காணிப்பும் எப்போதும் அவர்களுக்கு தேவை..!!
நல்லா சொன்னீங்க இதயம் அண்ணா. :icon_b:
என் கவியின் நோக்கம் இது தான். :)

ஓவியன்
05-02-2008, 12:03 PM
எடுத்த கருவும் சரி, சொன்ன விதமும் சரி
அழகாக, அருமையாக அமைந்துள்ளது....!! :icon_b:

ஆனால்,
தலைப்பிலே முரண்படுகிறேன் பூமகள்...

ஆம், ஒரு தாவரத்துக்கு முள் என்பது எப்போது ஒரு காப்பரணாக, பாதுகாவலனாகவே இருக்கிறது. அந்த தாவரத்தை இயற்கையாக பாதுகாத்து அந்த தாவரத்தின் தொடர்ச்சியை பேண இயற்கை அன்னை படைத்த பரிணாம விந்தைகளிலல ஒன்றே முள். முள் ஒரு போதும் தேடிப் போய் யாரையும் உறுத்துவதில்லையே, மாறாக நாம் தானே முள்ளைத் தேடிப் போய்க் குத்து வாங்குகிறோம்....

இந்த அர்த்தத்தில் நோக்கினால் இந்த தலைப்பு சரிதானா......??? :confused:

சிவா.ஜி
05-02-2008, 12:16 PM
ஓவியன் முல்லைக்கு முள் பாதுகாப்பு...ஆனால் முல்லையே முள்ளானால்....அந்த முல்லையின் தனித்தன்மை என்னாவது?
இங்கு ஒரு பொருளின் தன்மை மாற்றத்தை குறிப்பிடவேதான் இந்த தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

முல்லை போன்ற பிள்ளைகள் முள்ளானால் எவ்வளவு அனர்த்தம்?

விளக்கம் ஓக்கேவா...மாப்பிள்ளை...?(ஹி..ஹி..தலைப்பு நல்லாருக்குன்னு நான் எழுதினதால இங்கே பதில் சொன்னேன்....அதிகப் பிரசங்கித்தனமாக இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்)

பூமகள்
05-02-2008, 01:10 PM
ஆஹா.. இல்ல இல்ல சிவா அண்ணா.
சரியா தான் சொல்லியிருக்கீங்க..! :)
முல்லை பூ போன்ற மழலைச் செல்வங்கள் முள்ளாக மாறினால் சரியா? என்ற அர்த்தத்தில் எழுதியது.
மிக்க நன்றி சிவா அண்ணா. (என்னைக் காப்பாத்திட்டீங்க சிவா அண்ணா. அப்பாடா.. ஓவியன் அண்ணாவிடமிருந்து நான் தப்பிச்சேன்:D:D)
ரொம்ப ரொம்ப நன்றிகள் சிவா அண்ணா. :)

பூமகள்
05-02-2008, 05:31 PM
எடுத்த கருவும் சரி, சொன்ன விதமும் சரி
அழகாக, அருமையாக அமைந்துள்ளது....!! :icon_b:
மிக்க நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

உங்களின் நீண்ட விமர்சனத்தை எதிர்பார்த்த எனக்கு, பெயர் கொண்டே விமர்சித்து அசத்திவிட்டீர்கள்..!

பின்னூட்ட ஊக்கம் தந்ததற்கு மிகுந்த நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

இளசு
05-02-2008, 08:52 PM
சமூகப்பிரக்ஞை,அக்கறை சொல்லும் கவிதை!

கண்ணிமைக்காமல் பருகும் வன்முறை பானம் -
இது உச்சவரி!

மதுரையில் இதனால் நெருப்பு விளையாட்டு தனியே ஆடி மாண்டான் ஒரு சிறுவன்..

பாட்டிகள் கதை சொன்ன கூட்டுக்குடும்பம்..
அம்மாக்கள் கதவு திறந்து சிற்றுண்டி அளித்த பழைய குடும்பம்...
தொல்லைக்காட்சி இல்லா நல்ல குடும்பம்..

இவை இனி வாரா...

இருக்கும் சூழல் இன்னும் இறுகவே வாய்ப்பதிகம்..

என்ன செய்யப்போகிறோம்?

யவனிகா போல, எனக்கும் உள்ளுள் உறுத்தல்..


சிந்தித்து, வேதனைப்பட வைத்த கவிதை!


பாராட்டும் நன்றியும் பாமகளுக்கு!

நுரையீரல்
05-02-2008, 09:14 PM
10 வருடத்துக்கு முன் நான் என்ஜினியரிங் காலேஜில் படிக்கும்போது, படிப்பு முழுமைக்கும் நான் செய்த செலவை, இந்தக் காலத்தில் என் மகனின் L.K.G படிப்புக்கு மூன்று மாத பீஸாக கட்ட வேண்டியிருக்கு...

10 வருடத்துக்கு முன் எங்கப்பா சம்பாதித்த சம்பாதியத்தில், இந்தக் கால இன்ஜினியரிங் பீஸ் கட்ட வேண்டுமென்றால், அது எட்டாக்கனியாகிருக்கும். நானும் என் ஆசைக்கு என்ஜினியர் தான் ஆக முடியவில்லை என்று கடைசியில் டூவிலர் ஒர்க்ஷாப்பில் மெக்கானிக் ஆகி, பழைய வண்டியை துடைத்துக் கொண்டிருப்பேன்...

10 வருடத்துக்கு முன் எனக்கு ஆகும் ஒரு மாத சாப்பாடின் விலை, இன்று என் மகனுக்கு வாங்கும் ஒரு காம்ப்ளான் பாட்டிலின் விலைக்குச் சமம்.

10 வருடத்துக்கு முன் இருந்த குழந்தைகளை விட, இன்றைய குழந்தைகளின் மெச்சூரிட்டி, தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பு நிலை போன்றவை அதிகம்..

10 வருடத்துக்கு முன்னாடி வரைக்கும் வத, வதனு பெத்துப் போட்டுட்டு, கடவுளின் குழந்தையை கடவுள் காப்பாத்திக் கொள்வான் என்று தண்ணி தெளித்துவிடப்பட்ட குழந்தைகள் வெட்டியாய் ஊர் திரிஞ்ச காலம் போய் -> கருத்தரிக்கும் போதே தன் பிள்ளை இன்னவாக வரவேண்டும் என்று கனவு காணும் பெற்றோர்கள் தரணியில் மிகுந்துள்ளனர்

10 வருடத்துக்கு முன் நான் கண்ட கனவு, என் பிள்ளைகளின் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கிறது..

10 வருடத்துக்கு முன்வரை சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த பாசமலர் படத்தைப் பார்த்துவிட்டு, இக்கால குழந்தைகள் சொல்றாங்க இது வெறும் வேசமலர் என்று...

10 வருடத்துக்கு முன்னர் வரை, பாட்டி சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இன்று விசுவலாக பொவர் ரேஞ்சர்சையும், கார்ட்டூன் நிகழ்ச்சிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... பாட்டி கதையும், இக்கால நிகழ்ச்சியும் டுபாக்கூர் என்பது வேறு விஷயம்..

10 வருடத்துக்கு முன்னாடி வரை WWF இல்லை, தற்போது அதை பார்க்கும் ஆண் / பெண் குழந்தைகளில், பெண் குழந்தை மட்டும் பொறுமைகாக்க, ஆண் குழந்தைகளில் சிலர் முயற்சி சோதனை செய்து பார்க்கிறார்கள்.. காரணம் -> போர்க்குணம் ஆணுக்குச் சொந்தம்..

ஒரு மனிதனின் கேரக்டர் அவனது மரபணு சம்பந்தமானது.. ஒரே சூழ்நிலையில் இருவேறு மரபணு கொண்ட குழந்தைகளை அமர்த்திப்பாருங்கள், இருவரது செயல்பாடும் வேறுபட்டிருக்கும்...

ஏன் நமது மன்றத்தையே உற்றுப்பாருங்கள் ஏகப்பட்ட உதாரணங்கள் கிடைக்கும்,

தணிக்கை செய்யப்பட்டது...
பொறுப்பாளர்
~அக்னி
இம்மாதிரி பலப்பல கேரக்டர்கள், இவை எதுவுமே பெற்றோர்களின் வளர்ப்பு முறைக்கும், கண்காணிப்புக்கும் சம்பந்தமற்றவை...

என்னோட பார்வையில் எப்போதுமே -> ஏக் மார் தோ துக்கடா தான், அதாவது வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு... புகைபிடித்தால் கேன்சர் வரும், அப்போ கேன்சர் வந்தவனெல்லாம் புகைபிடிச்சவங்களா?

பெற்றோரின் கவனிப்பின்மையால் குழந்தைகள் மனநோயாளியாகலாமாம், அப்போ மனநோயாளி ஆன குழந்தைங்க எல்லாம் கவனிப்பாரற்ற பெற்றோர்களின் பிள்ளைகளா?

பூமகள்
06-02-2008, 03:23 AM
சமூகப்பிரக்ஞை,அக்கறை சொல்லும் கவிதை!
இருக்கும் சூழல் இன்னும் இறுகவே வாய்ப்பதிகம்..
என்ன செய்யப்போகிறோம்?
யவனிகா போல, எனக்கும் உள்ளுள் உறுத்தல்..
சிந்தித்து, வேதனைப்பட வைத்த கவிதை!
பாராட்டும் நன்றியும் பாமகளுக்கு!
எங்கே தங்களின் பின்னூட்டம் பெறாமல் போய்விடுமோ என்ற அச்சம் இருந்தது மனத்தில்..!
இப்போது தான் நிம்மதி அண்ணா. :)
பெற்றோர்களாக இருப்பவர்களும், பெற்றோராக மாறும் இளம் தம்பதிகளும் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.
அழகாய், ஆழமாய் சொன்ன என் அன்பு பெரியண்ணாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :)

வசீகரன்
06-02-2008, 04:38 AM
நமக்கு பின் சந்ததியினர் காலம் எப்படி என செய்தி
சொல்கிறது இந்த பதிவு..... சில நாட்களுக்கு முன்பு தலை நகரில்
சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சக மாணவனை சுட்ட சம்பவம் நினைவுக்கு
வருகிறது..... எங்கே போய் கொண்டிருக்கிறோம் தெரியவில்லை...?

பூமகள்
07-02-2008, 08:53 AM
உண்மை தான் வசீ..!
இப்போது தேவை சரியான வழி நடத்துதலும் அன்பான அணுகுமுறையுமே..!
குழந்தைகள் பெற்றோரின் கண் பார்வையில் வளர்ந்தால் நிச்சயம் தவறான பாதைக்குச் செல்ல மாட்டார்கள்.

பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு எனது நன்றிகள். :)

ஆர்.ஈஸ்வரன்
07-02-2008, 10:02 AM
வாழ்த்துக்கள் பூ..! கவிதைக்கு..!
__________________

மனோஜ்
07-02-2008, 10:18 AM
வெள்ளை உல்லங்கள் இன்று இரத்தம் ஆவது கொடுமை
முள்ளை அன்பால் எடுப்து நலம்

உண்மையை கவிதை உணர்த்துவது அருமை பூமா

விகடன்
07-02-2008, 10:30 AM
கவிதை நன்று.
அதில் வந்த ஒரு சொல் "வன்முறை பானம்" - புதியதொரு கலைச் சொல்.....
சேர்த்து வைத்துக்கொள்கிறேன் என் அகராதியில் பூமகளின் அறிமுகமாக.

---------
தலைப்பு...
நண்பர் ஓவியன் சொன்னதுபோல முள் ஒரு காவலரணே.
எனக்கும் ஓவியனின் ஐயம் சரியாகத்தான் படுகிறது

பூமகள்
07-02-2008, 10:37 AM
வாழ்த்துக்கள் பூ..! கவிதைக்கு..!
மிகுந்த நன்றிகள் ஈஸ்வரன் சகோதரரே..! :)

உண்மையை கவிதை உணர்த்துவது அருமை பூமா
மிக்க நன்றிகள் மனோஜ் அண்ணா. :)

பூமகள்
07-02-2008, 10:38 AM
கவிதை நன்று.
அதில் வந்த ஒரு சொல் "வன்முறை பானம்" - புதியதொரு கலைச் சொல்.....
மிக்க நன்றிகள் விராடன் அண்ணா. :)
தொடர்ந்து விமர்சியுங்கள்.

அமரன்
14-02-2008, 04:27 PM
குழந்தைகள் போகும் பள்ளி எது? கான்வெண்ட் பள்ளிக் குழந்தைகள் பாடம் தொடர்பாக பெற்றோர் குழந்தைகள் தொடர்பாடல் இல்லையா? அத்தொடர்பாடலில் படிப்பு விலகிய பரப்பு இருப்பதில்லையா? எத்தனை குடும்பத்தில் இருவரும் வேலைக்கு போகிறார்கள்? இக்காலத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடு எது? கார்டூன் இல்லாத கேபிள்/தொலைக்காட்சி எது?

அகமும் புறமும் பதில் தேடியபோது, குழந்தைகள் தடம் மாறி விபத்துக்குள்ளாகும் விபரீதம் நிகழ எத்தனையோ காரணம். அதில் கடுகளவு வேலைக்குப் போகும் அம்மாக்கள். கடுகளவு கண்டாலும் வெகுளுதல் கவிமனப்பாங்கு. பாராட்டுகள்.

பூமகள்
15-02-2008, 09:21 AM
அகமும் புறமும் பதில் தேடியபோது, குழந்தைகள் தடம் மாறி விபத்துக்குள்ளாகும் விபரீதம் நிகழ எத்தனையோ காரணம். அதில் கடுகளவு வேலைக்குப் போகும் அம்மாக்கள்.
இங்கே குறித்தது அம்மாவாயினும்
குற்றம் குடும்பத்தின் கவனிப்பு சிதறலே..!
அதைச் சுட்ட வந்தேன்..!
தவறித் தாயை மட்டும்
சுட்டிவிட்டு சென்றது
என் பிழை தான்..!

முள்ளாகும் முல்லைகளை
முல்லை பூவாக்கும்
முயற்சி தேவை என்று
வலியுறுத்தவே இக்கவி..!

படித்தமைக்கும் பின்னூட்ட ஊக்கம் தந்து ஊக்குவித்தமைக்கும் எனது நன்றிகள் அமரன் அண்ணா. :)

பூஜா
20-02-2008, 01:45 PM
புலம் பெயர் நாட்டில்
அயல் அறியா வீட்டில்,
பொருள் தேடும் வாழ்வில்,
சுயம் தொலைக்கும் சோகம்
நிதம் கனக்கும் மனசைப்
பதம் பார்க்கும் கவிதை,

நிசமான கவி சொன்ன பூமகளுக்கு பாராட்டுக்கள்.

பூஜா

ஓவியன்
20-02-2008, 02:02 PM
புலம் பெயர் நாட்டில்
அயல் அறியா வீட்டில்,
பொருள் தேடும் வாழ்வில்,
சுயம் தொலைக்கும் சோகம்
நிதம் கனக்கும் மனசைப்
பதம் பார்க்கும் கவிதை,

சுயம் தொலைக்கும்
சோகத்திடை
நிஜம் சொல்லித்
தமிழால் தாலாட்டும்
தமிழ் மன்றம்
இல்லையா பூஜா...?? :icon_b:

க.கமலக்கண்ணன்
27-02-2008, 01:49 AM
முள்ளாகும் முல்லைகள்..!
அன்னையின் அன்பு
முத்தத்தோடு வாழும்..!
பேச நேரமின்றி இரவுணவு
சமைத்தலில் மாயும்..!

கவனமான
கவனிப்பு வேண்டும்
கபடமற்ற குழந்தைகள் மீது
கவனித்தை மாற்றினால் விளைவுகள்
கவிழ்த்து விடும் நம்மை. அருமையான
கருவை அட்டகாசமாக படைத்திருக்கிறாய் பூவு...