PDA

View Full Version : சிரித்துக் கொல்!!.சிவா.ஜி
05-02-2008, 04:16 AM
நான் காதலித்த காதலியே
உன் வாழ்க்கையின் வளத்துக்கு
என் சாம்பல் உரம் தேவையா...?
எரித்துக்கொள்
நெருப்பாலல்ல.....
ஒரு ஏளன சிரிப்பால்
சிரித்துக்கொல்.....!

இளசு
05-02-2008, 05:39 AM
அன்பு வைத்து வஞ்சிக்கப்பட்டுவிட்டோம்
என்ற ஏமாற்றம் வந்துவிட்டபின்
இதயம் வெறும் இலவம்பஞ்சு...

ஏளனச் சிரிப்பால் எரித்துவிட முடியும் அப்போது!

குற்றம் நெருப்பிடம் மட்டுமா???


வாழ்த்துகள் சிவா!

சிவா.ஜி
05-02-2008, 06:39 AM
ஆஹா.....இலவம்பஞ்சு...அருமை. ஒரு வார்த்தை போதும்....முழுக்கவிதைக்கும் முத்தாய்ப்பாக.நன்றி இளசு.

சுகந்தப்ரீதன்
05-02-2008, 06:49 AM
நான் காதலித்த காதலியே
.....!
என்ன..அண்ணா..!:sprachlos020: நீங்க மட்டுமே காதலிச்சிட்டு.. காதலிக்காத பொண்ணுக்கிட்ட சிரித்துக்கொல்ல சொல்லுறீங்க...! வேணும்ணா..உன்னை நான் காதலிச்சேன்னு அவக்கிட்ட சொல்லி நாம சிரிச்சி கொள்ளலாம்..!:fragend005:

எடக்கு மடக்கு வடிவில்..கவிதை கலக்குது அண்ணா.. வாழ்த்துக்கள்..!:icon_b:

சிவா.ஜி
05-02-2008, 06:55 AM
அவ காதலிக்கலன்னு சொன்ன பிறகுதானே...நான் மட்டும் காதலித்தன்னு அழுத்தி சொல்ல வேண்டியதாகிவிட்டது.இல்லன்னா வெறும் காதலியேன்னு சொல்லியிருக்க மாட்டமா...(கொஞ்ச நாள் காதலிக்கறா மாதிரி ஃபிலிம் காட்டிட்டு....திமிங்கிலம் ஏதாவது மாட்னா...டாடா காட்டிட்டுப் போற மகராசிங்களுக்குக்காத்தான் சுபி இது)
ரொம்ப நன்றிப்பா.

வசீகரன்
05-02-2008, 07:54 AM
ஏன் எப்போதும் காதலில் தோற்று புலம்புவது ஆணாகவே இருக்கிறது....?
பொண்ணுக்காக நாம ஏன் நம்மள வருததிக்கணும்..... அப்பா அவ காதலிக்கலைய்யா...?
உங்களை நேசிப்புவரை மட்டும் நேசியுங்கள் அண்ணா...!

சிவா.ஜி
05-02-2008, 08:24 AM
ஏன் எப்போதும் காதலில் தோற்று புலம்புவது ஆணாகவே இருக்கிறது....?
பொண்ணுக்காக நாம ஏன் நம்மள வருததிக்கணும்..... அப்பா அவ காதலிக்கலைய்யா...?
உங்களை நேசிப்புவரை மட்டும் நேசியுங்கள் அண்ணா...!

உங்கள் முதல் கேள்விக்கு: கம்பீரமான ஆண் உதாசீனப்படுத்தப்படும்போது உடைந்து போகிறான்.வியாபாரத்தில் தோல்வியடைந்தால் புலம்பாத ஆண் காதலியிடமோ,மனைவியிடமோ தோற்றால் புலம்புகிறான்...ஏன்...காதல் வன்மையை மென்மையாக்கும்,மென்மையை வன்மையாக்கும்.வித்தியாசம்,ஜெயிப்பதிலும்,தோற்பதிலும்தான் இருக்கிறது.

இரண்டாவதற்கு:பெண்ணுக்காக இல்லை அன்புக்காக.

மூன்றாவதற்கு:ரொம்பச் சரி....அந்த நேசிப்பை அறிந்துகொள்வதற்கு முன் ஏற்படும் காயங்களுக்குத்தான் இந்த கண்ணீர்.(இந்த கவிதை என்னை வெச்சு எழுதலப்பா வசீகரா...எனக்கு யாரும் டாட்டா காட்டல.....)

நீளமா எழுதிட்டேன்.ரொம்ப நன்றி.

பூமகள்
05-02-2008, 08:30 AM
தலைப்பே கவிதையாய்..!!
வந்து பார்த்தால்,

காதலி மறுத்து சிரித்தல்
காதலனைக் கொல்லுமாம்..!

உடைந்த உள்ளம்
பஞ்சானாலும்
மென்மை கொண்ட
அனுபவம் கிட்டியதே..!

வாழ்க்கை சாலையில்
கடக்கும் தருணத்தில்
காதல் வீட்டின்
கதவுகள் ஏனோ
பலருக்கு பூட்டியே இருக்கின்றன..!

கிட்டியவருக்கு சொர்க்கம்..!
கிட்டாதோருக்கு நேரமிச்சம்..!

சில வரிகளில் வார்த்தையாடல்களாலும் கருவாலும் அசத்திவிட்டீர்கள்..!
ஆயினும்.. நெருப்பு மட்டுமே பொறுப்பல்லவே...!

பாராட்டுகள் அண்ணா. :)

சிவா.ஜி
05-02-2008, 08:49 AM
ஆஹா...பூ....சமீபத்துல ஏதாவது(போதி) மரத்தடியில ரொம்ப நேரம் நின்றிருந்தாயா.....சிந்தனையில் அசத்துறயே....ஆழமான பின்னூட்டம்....மிக அருமை.
நெருப்பு மட்டுமே பொறுப்பு....ஏன் தெரியுமா...இல்லறக்கணவை இல்லாததாக்கி.....அவனையே இலவாக்கி....நேசித்த பாவத்துக்கு...அவனை இரையாக்கி....தின்ற தீதானே ஆம்பளையை...சாம்பலாக்கியது.

மிக்க நன்றிம்மா.

பூமகள்
05-02-2008, 08:54 AM
ஆஹா...பூ....சமீபத்துல ஏதாவது(போதி) மரத்தடியில ரொம்ப நேரம் நின்றிருந்தாயா.....சிந்தனையில் அசத்துறயே....ஆழமான பின்னூட்டம்....மிக அருமை.
அதான் அண்ணா எனக்கும் தெரியலை.. :icon_ush: தத்து பித்துன்னு உளறிட்டு இருப்பேனே... இப்போ என்னாச்சு எனக்குன்னு விளங்கவே இல்லை.:confused:
ஏதோ உங்களுக்கு எல்லாம் சந்தோசமா இருந்தா சரி தான். :icon_ush::rolleyes:

ரொம்ப நன்றி சிவா அண்ணா. :)

அமரன்
05-02-2008, 08:57 AM
ஏன் எப்போதும் காதலில் தோற்று புலம்புவது ஆணாகவே இருக்கிறது....?

ஆண்கள் அழுறோமா? பீத்திக்கிறோமா? இரண்டு வகையானோரையும் காண்கிறேன். பீத்திக்கும் குழுவை ஆண்வர்க்கத்திலிருந்து விலக்கி வைக்கிறேன்.

நான் பத்து பேரைக் காதலிச்சேன்னு சொன்னாலும் ஆண்களுக்கு கல்யாணம் ஆவதில் சிக்கலில்லை. நான் ஒருத்தனைக் காதலித்து ஏமாந்து விட்டேன்ன்னு ஒரு பொண்ணு சொன்னால் போதும், குறிப்பிட்ட காலத்துக்கு அவள் கல்யணம் தள்ளிப்போகிறது. சிலருக்கு தள்ளிபோட்ட்ட தேதி காலாவதி ஆனாலும் கல்யாணமே ஆவதில்லை.. மந்தகதியில் இருக்கும் மாற்றத்தை நாம் தீவிரப்படுத்துவோம்.. பொண்ணுங்களும் தமது காதல் வலிகளை சொல்லிப் புலம்புவார்கள்.

சிவா.ஜி
05-02-2008, 09:02 AM
அடடா அமரன்....சரியாக நாடி பிடித்துவிட்டீர்கள்.ஆம்...காதலில் தோற்றதாய் புலம்புவதும் ஒரு வகையில் பீற்றிக்கொள்வதுதான்.
ஆனால் பெண்களுக்கு நீங்கள் சொன்ன அந்த சமுதாய சங்கடமிருக்கிறது.
அருமை அமரன்.

அமரன்
05-02-2008, 09:03 AM
பொண்ணுக்காக நாம ஏன் நம்மள வருததிக்கணும்..... அப்பா அவ காதலிக்கலைய்யா...?...!

ஒருத்தருக்காக ஒருத்தர் வருந்திக்கிறது வாழ்க்கையில் அவசியம். வருந்துவது என்றால் என்ன? நம்மை நாமே வருத்திக்கிறதுதானே? என்னை யாராச்சும் காதலிச்சு விட்டு போனால் நான் வருந்துவேன். எனக்கக அல்ல. அவளுக்காக.

உதாசீனப்படுத்தப்படும் அன்புக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் வலிக்கத்தான் செய்யும் என்பது மற்று.

அமரன்
05-02-2008, 09:19 AM
அடடா அமரன்....சரியாக நாடி பிடித்துவிட்டீர்கள்.ஆம்...காதலில் தோற்றதாய் புலம்புவதும் ஒரு வகையில் பீற்றிக்கொள்வதுதான்.
ஆனால் பெண்களுக்கு நீங்கள் சொன்ன அந்த சமுதாய சங்கடமிருக்கிறது.
அருமை அமரன்.
கவிதையை படித்தது. ஆடிப்போயிட்டேன்.. அற்புதம்.
எங்கிருந்தாலும் வாழ்க வகையை அறிவேன். அவர்களில் பிரிவுக்கு காரணமென எதிரே கைநீட்டுவோர் நிகழ்தகவு அதிகம்..
"கவர்ந்த உன்னை தொடர்ந்து தக்கவைக்கும் ஈர்ப்பு என்னிடம் இல்லை, வாட்டும் குற்ற உணர்வை எள்ளல் நகையால் சுட்டுப் பொசுக்கு."கவிதையில் எனக்குப் புதுசு. பாராட்டுகள்.

சிவா.ஜி
05-02-2008, 09:24 AM
நன்றி அமரன்.என்னவொரு அழகான விளக்கம்.....சூப்பருங்கோ கவுண்டரே(நன்றி-நுரை)

ஆதி
05-02-2008, 09:32 AM
திறவுகோளாய் காதலை
திறந்தாய் உட்புகுந்ததும்
திரும்பாதவாறு தாழிட்டு
திரும்பிவிட்டாய்..

உனதிந்த மறுதலிப்பு
இழப்பா ?
இன்னொரு பிழைப்பா ?
தெரியவில்லை..

தெரியாதவற்றில்தான்
தெரியாமல் போனேன் நான்..
தெரியாமல் போனதனால்
தெரியாதவையெல்லாம்
தெரியாமல் தெரிந்தேன்
தெரிந்தாலும் மீண்டும்
தெரியாமல் விழுகிறேன்
தெரிந்தவற்றில்..

அண்ணா, என்னதான் இருந்தாலும் நம்மை மீறி நாம் வழியாத வரை வலிகள் இல்லை வாழ்வில்..

பொறுப்பு இரண்டுக்கும் உண்டு என்னைப் பொருத்தவரையில்..

பாராட்டுக்கள் அண்ணா..

அன்புடன் ஆதி

இன்பா
05-02-2008, 09:39 AM
நான் காதலித்த காதலியே
உன் வாழ்க்கையின் வளத்துக்கு
என் சாம்பல் உரம் தேவையா...?
எரித்துக்கொள்
நெருப்பாலல்ல.....
ஒரு ஏளன சிரிப்பால்
சிரித்துக்கொல்.....!

ஒரு தலை காதலின் ஆழம் உணரமுடிகிறது...

சிவா.ஜி
05-02-2008, 09:40 AM
அசத்தும் பின்னூட்டக்கவிதை....அது எப்படிப்பா எந்த கருவுக்கும் ஏத்த மாதிரி இப்படி போட்டுத் தாக்கறீங்க....அதுவும் எதுவுமே ஏனோ தானோ என்றில்லாமல்.....அத்தனையும் தரத்துடன் தர முடிகிறது?
வியக்கிறேன்.மிக்க நன்றி ஆதி.

வழியாத வரையில் வலியில்லை...எனவே பொறுப்பு இரு பக்கமும்...இந்த கருத்தை ஒத்துக்கொள்கிறேன்.

இரு பக்கமிருந்தும் வழிந்த அன்பு ஒரு பக்க வெப்பத்தால் ஆவியாகிவிடும்போது.....அது அன்பின் குற்றமா..? வெப்பத்தின் குற்றமா...?(இளையராஜா குரல்ல பாடிப்பாருங்க..ஹா..ஹா..)

அமரன்
05-02-2008, 09:40 AM
வாழ்க்கை சாலையில்
கடக்கும் தருணத்தில்
காதல் வீட்டின்
கதவுகள் ஏனோ
பலருக்கு பூட்டியே இருக்கின்றன..!

கிட்டியவருக்கு சொர்க்கம்..!
கிட்டாதோருக்கு நேரமிச்சம்..!


நல்லா இருக்கு பூமகளே..
கவுண்டரேன்னு விளித்து உசுப்பி விட்டதால குசும்பு விழித்துக்கொண்டது..

சாலை ஓரத்து வீடுகள்
பல பொழுதுகளில்
கதவடைத்து கொள்கின்றன.

விருந்தினரை
புறக்கணிக்க அல்ல
தூசிகளை
வடிகட்டிய சுகவாழ்வுக்காக..

தட்டிப்பாருங்கள் திறக்கும்
திறக்கும் வரை தட்டுங்கள்.
திறக்கா விடின்
அடுத்த கதவை நாடுங்கள்..

கிட்டியவன் நேரத்தை
கிட்டியவள்(ன்) களவாடுவாள்(ன்)
கிட்டாதவன் நேரத்தை
தட்டுவது கையாடும்...

இவர்களுக்கு நடுவில் சிக்கி
நேரம் சீரழி(ளி)ஞ்சதுதான்
மிச்சம்!

யவனிகா
05-02-2008, 09:57 AM
சிவா அண்ணாவின் அசத்தல் கவிதையும் அதை தொடர்ந்த பின்னூட்டக் கவிதைகளும் கொஞ்ச நாளாகவே சோம்பிக் கிடந்த மன்றத்துக்கு புத்துயிர் கொடுப்பதாய்...

பூவுக்கு என்ன ஆச்சின்னே தெரியல...அசத்துது...வாழ்த்துக்கள் தங்கையே...
அமரன் ஆதியின் கவிதைகளும் அருமை...அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பூமகள்
05-02-2008, 10:05 AM
நல்லா இருக்கு பூமகளே..
கவுண்டரேன்னு விளித்து உசுப்பி விட்டதால குசும்பு விழித்துக்கொண்டது..
கொள்ளும் கொள்ளும்..!:rolleyes: - இனி
எங்களை செல்லமாய்
கொல்லும் கொல்லும்..! :D:D

கிட்டியவன் நேரத்தை
கிட்டியவள்(ன்) களவாடுவாள்(ன்)
கிட்டாதவன் நேரத்தை
தட்டுவது கையாடும்...
இழப்பின்றி எது கிடைக்கும்??

உடல் உழைப்பை இழந்தால்
ஊதியம் உண்டு..!
இளமையில் களியாட்டம் இழந்தால்
போராடி கற்றால்
நல்வாழ்க்கை உண்டு..!

ஒன்றை இழந்து தான்
மற்றொன்று..!

காதலில் கூட நேரமட்டுமா?
மனமும் தானே களவாடப்படுகிறது??!!

இவர்களுக்கு நடுவில் சிக்கி
நேரம் சீரழி(ளி)ஞ்சதுதான்
மிச்சம்!
ஏன் இடையில் சென்றீர்??
காதலரிடையே நாட்டாமை
போனால், நட்டாற்றில்
நின்ற கதை தான்..!!:rolleyes:

புரியாதோ உமக்கு...??!!
ஏனிந்த சலிப்பு??:lachen001::lachen001:

சிவா.ஜி
05-02-2008, 10:08 AM
காலையிலருந்தே தங்கையை காணோமேன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன்...வாங்க...வாங்க...நீங்க்கதான் பூமகளுக்கு சுத்திப் போடனும்...புள்ளைக்கு கண்ணு பட்டுடும்.
பின்னூட்டத்திற்கு நன்றிம்மா.

சிவா.ஜி
05-02-2008, 10:10 AM
கவுண்டரே....குசும்புக்கவிதை நிஜமாவே சூப்பர்.இப்படியே அடுத்தடுத்த வீட்டுக்கதவை தட்டிக்கிட்டிருந்தா....பெரிய தட்டா....கிடைக்கும்...ஹா..ஹா..

அமரன்
05-02-2008, 10:15 AM
கவுண்டரே....குசும்புக்கவிதை நிஜமாவே சூப்பர்.இப்படியே அடுத்தடுத்த வீட்டுக்கதவை தட்டிக்கிட்டிருந்தா....பெரிய தட்டா....கிடைக்கும்...ஹா..ஹா..

ஆமாமா..
தட்ட தட்ட
தட்டுக் கிடைக்கும்..

கிடைக்கும் தட்டு

தாம்பூலத்தட்டா?
தாம் தூம் தட்டா?
ததிங்கிணதொம் தட்டா?

தீர்மானிப்பது நம்ம தட்டு
அப்படித்தானுங்களே!:lachen001:

சிவா.ஜி
05-02-2008, 10:21 AM
அமரன்..நீங்க சொல்லாம விட்ட இன்னொரு தட்டு இருக்கு...அது...தாமரைக்கனி(மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தட்டு.

பூமகள்
05-02-2008, 11:10 AM
கவுண்டரே....குசும்புக்கவிதை நிஜமாவே சூப்பர்.இப்படியே அடுத்தடுத்த வீட்டுக்கதவை தட்டிக்கிட்டிருந்தா....பெரிய தட்டா....கிடைக்கும்...ஹா..ஹா..
ஆமா சிவா அண்ணா... வர வர நாட்டாமை குசும்புக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு..! :icon_b:

நிஜமா பின்னூட்ட கவிதை சூப்பர் நாட்டாமை..!!:)

அசத்துறாரே அமரரு...! :icon_b:

பூமகள்
05-02-2008, 11:41 AM
பூவுக்கு என்ன ஆச்சின்னே தெரியல...அசத்துது...வாழ்த்துக்கள் தங்கையே...

காலையிலருந்தே தங்கையை காணோமேன்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன்...வாங்க...வாங்க...நீங்க்கதான் பூமகளுக்கு சுத்திப் போடனும்...புள்ளைக்கு கண்ணு பட்டுடும்.
பின்னூட்டத்திற்கு நன்றிம்மா.
அண்ணாவும் அக்காவும் மாற்றி மாற்றி ஏதோ சொல்றீங்க.. எனக்கு தான் ஒன்னுமே புரியலை..:icon_ush: ஏதோ பூவுக்கு ஆயிடிச்சின்னு மட்டும் தெரியுது..!!:shutup:

அக்கா சிறகடிச்சி விட ஆள் அனுப்புங்க அக்கா..!:icon_shok:
எல்லாம் தங்களின் படைப்புகள் தரும் அறிவு தான். நான் ஒன்றுமே இல்லை உங்கள் முன் சிவா அண்ணா மற்றும் யவனி அக்கா. :icon_03:
உங்க பதில்களைப் பார்த்தா வெட்க வெட்கமா வருது..!!:icon_blush:

ஆர்.ஈஸ்வரன்
05-02-2008, 11:45 AM
நான் காதலித்த காதலியே
உன் வாழ்க்கையின் வளத்துக்கு
என் சாம்பல் உரம் தேவையா...?
எரித்துக்கொள்
நெருப்பாலல்ல.....
ஒரு ஏளன சிரிப்பால்
சிரித்துக்கொல்.....!

நல்ல கவிதை வரிகள். கவிதையாலே கன்னம் வீங்கட்டும்.

சிவா.ஜி
05-02-2008, 11:48 AM
நன்றி ஈஸ்வரன்.

ஆதவா
05-02-2008, 11:53 AM
நான் காதலித்த காதலியே
உன் வாழ்க்கையின் வளத்துக்கு
என் சாம்பல் உரம் தேவையா...?
எரித்துக்கொள்
நெருப்பாலல்ல.....
ஒரு ஏளனச் சிரிப்பால்
சிரித்துக் கொல்.....!

என்ன சொல்வது? எங்கு பார்த்தாலும் ஒரே பின்னூட்ட மழை.. அசாத்துகிறார்கள் மக்கள்.

மற்றபடி என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.... இது அழகிய கவிதத என்பதைத் தவிர....:icon_b:

சிவா.ஜி
05-02-2008, 11:59 AM
ஏனுங் தம்பி இப்படி பொசுக்குன்னு சொல்லிபோட்டு போய்ட்டீங்க....எப்பிடியோ ஒரு கவிஞரு என்ற கவிதையையும் நல்லாருக்குதுன்னு சொன்னதுல குளுந்து போச்சுங்கோ....நன்றிப்பா.

ஆதவா
05-02-2008, 12:34 PM
ஏனுங் தம்பி இப்படி பொசுக்குன்னு சொல்லிபோட்டு போய்ட்டீங்க....எப்பிடியோ ஒரு கவிஞரு என்ற கவிதையையும் நல்லாருக்குதுன்னு சொன்னதுல குளுந்து போச்சுங்கோ....நன்றிப்பா.

உண்மையிலேயே ஒண்ணும் வரலை.. என்னடா இது? இப்படி ஒரு வரட்சின்னு என்னை நானே நொந்துகிட்டேன். இதே மாதிரி ஒரு கவிதை ரொம்ப வருசத்திற்கு முன்ன நானும் எழுதியிருக்கேன்..

இங்கே வாசிச்சுப் பாருங்க... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7365)

ஆனாலும் என்னாச்சு? ம்ஹூம்.... வடிவேலு பாணியில் சொன்னால்,, முடியலை :icon_rollout:

அனுராகவன்
05-02-2008, 12:51 PM
சிரிக்க மனமில்லை!!
சிந்திக்க மனம் வேண்டும்!!!
காதலுக்கு இதெல்லாம் சகஜம்தானே சிவா.ஜி!!

சிவா.ஜி
05-02-2008, 01:40 PM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அனு.