PDA

View Full Version : கசடதபற கண்ணாடி



அமரன்
04-02-2008, 11:21 AM
நம்மைப் பார்த்து
விஞ்ஞானம் விக்கித்து..

ரசமிருந்தும் நம்மால்
ஒற்றைக் கீற்றைக் கூட
சிறையிட முடியவில்லை..

இலவச இணைவில்
இளக்காரம் படுகையில்
உடைந்து போகிறோம்..

இரவைக் குடித்து
சிவப்பேற்றிக்கொண்ட
வறண்ட விழிகள்.

தனிமையில் புகுந்து
அடிவயிறு தடவுமுன்
காந்தள் விரல்கள்..

சேதி சொல்லா தேதி
கிழித்து வீசுகையில்
ஆடும் கற்றைக் கூந்தல்..

ஏகாந்தம் உன்னைக்
கடக்கும் கணத்தில்
தொலைந்து போகும் நீ.

எல்லாம் சேர்ந்து
என்னைத் தொடுகையில்
நொருங்கிப் போகிறேன்.

துகள்களின் மேல்
நீ போர்த்தும் நிழலில்
உயிர் வாழ்கிறேன்..

ஓவியன்
04-02-2008, 12:35 PM
க்ச்ட்த்ப்ற் - வல்லினம்...
வல்லினக் கண்ணாடி பற்றி அமரன் வரைந்த கவி...!! :)

இங்கே இந்தக் கவிதையின் கருப்பொருள் இரண்டு தடவை உடைகிறதே...?
ஒன்று இலவச இணைப்பில் இளக்காரம் படுகையில்...
அப்புறம் இறுதியாக எல்லாம் சேர்ந்து ஒன்றாகப் படுகையில்....

இரண்டு உடைவும் ஒன்றா, இல்லை வெவ்வேறா விளக்கம் வேண்டும் அமரா.......!!

அமரன்
04-02-2008, 12:47 PM
இரண்டு உடைவும் ஒன்றா, இல்லை வெவ்வேறா விளக்கம் வேண்டும் அமரா.......!!
உடைந்தால் சில்லு சில்லாகும் அல்லது துண்டு துண்டாகும்..
நொருங்கினால் துகள்களாகும்.. துண்டு துகளாகலாம்.. துகள்கள் துண்டாகாது..
அப்படி நினைத்தே எழுதினேன்... ஓவியன்.. ஒன்று... திட்டமிட்ட செயல்.. மற்றயது எதேட்சையானது..

பூமகள்
04-02-2008, 01:17 PM
வல்லின கண்ணாடி.. என்பது மட்டும் புரியுது..!!

மற்றவை என் மர மண்டைக்கு பத்து தடவ படிச்சா தான் புரியும்..!!

பொறுமையா படிச்சிட்டு விமர்சிக்கிறேன் அமரன் அண்ணா.

அசத்துங்க..!! :)

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்..!! எனக்கும் மூளைக்கு வேலை கொடுக்கனும் இல்ல...!! ;)

சிவா.ஜி
04-02-2008, 01:32 PM
மூணாவது முறையா இந்த திரிக்கு வந்திருக்கேன்.ஒவ்வொருவரும் பின்னூட்டமிடும்போது ஆவலாய் வந்து பார்த்துப்போகிறேன்.அப்படியாவது என் மண்டையில் ஏதாவது புரிகிறாதா என்பதற்காக.மிக அழுத்தமான ஒரு கரு என்பதுவரை புரிகிறது...அதற்குமேல்....இன்னும் சில வல்லுநர்களின்ன் பின்னூட்டம் படித்து தெரிந்துகொள்கிறேன் அமரன்.வாழ்த்துகள்.

சாம்பவி
04-02-2008, 04:04 PM
இரவைக் குடித்து
சிவப்பேற்றிக்கொண்ட
வரண்ட விழிகள்.



இடையிலென்ன*
இடையினம்... ????

அமரன்
04-02-2008, 04:09 PM
இடையிலென்ன*
இடையினம்... ????

'மேல்லிடை'யின விழியாதலால்
இடையினமாக அமைந்ந்ததோ..
நன்றி.... :icon_b::icon_b::icon_b:
வல்லினம் மா(ற்)றிவிட்டது.

ஆதவா
05-02-2008, 09:56 AM
ஒரு கண்ணாடி சொன்னது.

பாரடா சிவம்.. இந்த மனிதர்கள் நம் முன்னே எத்தனை உண்மையாக நடந்துகொள்கிறார்கள்.. மற்ற உலகத்திலே அறிவைக் குடித்து மூர்ச்சையடைந்துவிட்டாலும் மூலமில்லாத உரையைப் போலத் தெளிவாக நிற்கிறார்களே! கவனித்தாயா?

இன்னொறு சொன்னதாம்..

நிறுத்து பாரு! உமது வியாக்கியானங்களைக் குப்பைக்குக் கொண்டுசெல். நாம் நடத்தும் உபகாரங்களுக்குப் பதிலுபகாரம் எவனும் பண்ணுவதில்லை. . உன் முன்னே நடிக்கிறான். பாபி. அவன் அத்தனையும் அடக்கிவிட்டுத்தான் வருகிறான்..

அடே! சிவம். உனக்குக் கிலிபிடித்துக் கொண்டது. நீ வெகுவாக பயப்படுகிறாய்..

ஒன்றிற்கொண்டு சண்டையிட்டதாம்.. இரு ஆடிகளும் தம்பதிகளென்க.

ஒன்று தனிமையில் விட்டுவிட்டு சென்றது. மற்றது புலம்பியது..

கண்விழித்து விழித்து நிர்மூலமாக்கிய விழிகளின் ரணங்களை இந்த ஆடிகளின் ரசவாதங்களுக்குப் பொருத்தமாக சொல்ல முடியுமா? எல்லா தனிமையும் இப்படித்தான்..

சரி சரி.. விசயம் என்னாயிற்று?

பாவம். இக்கண்ணாடிகளுக்கு சம்பாஷணைப் பதிவுகள் இல்லை.. இருந்திருந்தால் இக்கணம் எத்தனையோ தம்பதிகள் பிரிந்திருக்கக் கூடும்.

கசடதபற - வல்லினம். வல்லினமும் வாழ்வில் வேண்டும்.

பூமகள்
05-02-2008, 01:59 PM
ஏதோ விளங்கியது போல் தோன்ற பதிவிட முடிவெடுத்து வந்துவிட்டேன்..!

தவறாயின் கவியாசான் மன்னிக்க..!

திருமணமான கண்ணாடிகள்..!
திருப்தியான வாழ்க்கை
மாய்ந்த கணங்கள்..!

ஏளன பார்வைகள்
உடல் மனம் சுருக்க..!
ஏக்கத்தோடு நாள்கள்
நாட்காட்டி சுட்டியில்..!

பிஞ்சு ஒன்றின் வரவு
சேதி சொல்லா தேதிகள்..!

நெருப்பாய் பார்க்கும்
இரவு நிலவால்..
நொருங்கும் ஆணுள்ளம்..!

நொருங்குவது வெளியில்
இருபாலரும் தானே..!

கண்ணாடி கொண்டு ஒரு கோணம் காண முடிந்தது..!

வேதனை இருபாலருக்கும் உண்டு.. இங்கே கணவர் வேதனை மனம் கனக்க வைக்கிறது.

பாராட்ட வார்த்தைகள் இல்லை. கண் கலங்கி மட்டுமே நிற்கிறது.

வாழ்த்துகள் அமரன் அண்ணா. :)

இளசு
06-02-2008, 06:23 AM
பூவின் பின்னூட்டத்தைக் கண்டபின் மீண்டும் வாசித்தால்...

நொறுங்கும் இயல்புடையவை மனமும் கண்ணாடியும்...

ஒன்றுக்கு மருந்து - இணையின் நேசநிழல்..
இன்னொன்றுக்கு - இல்பொருள் தீர்வாய் - தலைப்பு!

நன்றி பூ!

அசத்திய அமரனுக்குப் பாராட்டு!

சுகந்தப்ரீதன்
06-02-2008, 06:29 AM
அடேங்கப்பா... அமரர் அண்ணா..அசத்தல் ரகம் கவிதை.. ஆனாலும் பூவின் பின்னூட்டம் படித்தபின் என் புத்திக்கு புலப்பட்டது கவிதையின் மையக்கரு..!

திரும்ப படித்தபோது தித்திக்கிறது வரிகள்.. எனக்கு..! ஆனால் அந்த இரு கண்ணாடி மனிதர்களுக்கும்...?? எல்லாம் நிறைந்ததுதானோ வாழ்க்கை..?

வாழ்த்துக்கள் அண்ணா..உங்களுக்கும் பூவுக்கும்..!

பூமகள்
06-02-2008, 06:49 AM
ஆஹா.. என் அன்பு பெரியண்ணாவும், சுகந்தப்ரீதனும் என் பின்னூட்டம் சரி என்று சொல்லி தேர்வாக்கி விட்டார்கள் என்னை..! ;)

மிக்க மகிழ்ச்சி அண்ணலே..!

மிகுந்த நன்றிகள் இனிய தோழர் சுபி மற்றும் எனதன்பு பெரியண்ணா..!! :)