PDA

View Full Version : முகத்திரை



rocky
04-02-2008, 11:19 AM
கடையிலிருந்த கண்ணாடிகள்
இரண்டு பேசிக்கொண்டன,

நமக்கு மனிதர்களின்
முகத்தைக் காட்டுவதுபோல்
அகத்தைக் காட்டும்
சக்தி இருந்தால் இவர்களின்
முகத்திரையைக் கிழிக்கலாமே,
என்றது?

கிழித்தாய்,
அதற்குள் இவர்கள்
நம் இனத்தையே
அழித்துவிடுவார்களென்றது மற்றொன்று.

சிவா.ஜி
04-02-2008, 11:58 AM
மிகச் சரியாக சொன்னீர்கள் ராக்கி...முகத்திரையை கிழிக்க முற்படுபவர்களை அழித்து விடுவதுதானே அந்த முகமூடி மனிதர்கள் தொன்றுதொட்டு செய்து வருவது.

ஆனாலும் சில சமயங்களில் அந்த திரை கிழிக்கப்பட்டு அசிங்கமான அகம் தெரிந்த சில சரித்திர சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது.

வாழ்த்துகள் ராக்கி.

rocky
04-02-2008, 12:20 PM
மிகச் சரியாக சொன்னீர்கள் ராக்கி...முகத்திரையை கிழிக்க முற்படுபவர்களை அழித்து விடுவதுதானே அந்த முகமூடி மனிதர்கள் தொன்றுதொட்டு செய்து வருவது.

ஆனாலும் சில சமயங்களில் அந்த திரை கிழிக்கப்பட்டு அசிங்கமான அகம் தெரிந்த சில சரித்திர சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது.

வாழ்த்துகள் ராக்கி.

உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே,

உங்களின் கருத்தை நானும் ஆத்ரிக்கிறேன், மனித்ர்களின் அகம் தெரியாமலிருப்பதும் சில சமயம் நல்லதே. தெரியும் போது நாம் பல ஏமாற்றங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

ஆதவா
05-02-2008, 07:47 AM
கடையிலிருந்த கண்ணாடிகள்
இரண்டு பேசிக்கொண்டன,

நமக்கு மனிதர்களின்
முகத்தைக் காட்டுவதுபோல்
அகத்தைக் காட்டும்
சக்தி இருந்தால் இவர்களின்
முகத்திரையைக் கிழிக்கலாமே,
என்றது?

கிழித்தாய்,
அதற்குள் இவர்கள்
நம் இனத்தையே
அழித்துவிடுவார்களென்றது மற்றொன்று.

அழகாக கோர்க்கப்பட்ட சிறு முத்து மாலை..

மனிதர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பதை இது காட்டுகிறது :D

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். - நன்றாக நடிக்கத் தெரிந்தவனுக்கு என்னதான் தெரியும்?

சரிதான் அகத்தைக் காட்டுவோமே என்று கண்ணைக் காட்டினால் குத்திக் கிழித்துவிடுவார்களாம் மனிதர்கள். எத்தனைக் கொடூரமானவர்கள் பார்,.

நல்லது அல்லன நமக்கும் அல்லன என்பது கண்ணாடிகள் தமக்குள் இட்டிருக்கும் சுயநல விதிகள்..

சிலசமயத்தில் சுயநலம் காத்தலும் நலமே!

நல்ல கவிதை... கவிதையின் காலடியில் விழுந்துவிட்டாய் ராக்கி... இவ்வன்னையின் பாலுண்ண இன்னும் மேலெழு..

சுகந்தப்ரீதன்
05-02-2008, 08:39 AM
மனிதர்களின் குணத்திரையை மிக அழகாக கிழித்திருக்கிறீர்கள் ராக்கி..கவிதை வடிவில்..!

வாழ்த்துக்கள்...தொடருங்கள் நண்பரே...!

rocky
05-02-2008, 10:30 AM
மிக்க நன்றி ஆதவன் மற்றும் சுகந்தப்பிரீதன் அவர்களே,

உங்களின் பாராட்டுக்களே மென்மேலும் என்னை ஓரளவுக்கு எழுதவைத்திருக்கிறது, நிச்சயம் இன்னமும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி.