PDA

View Full Version : கொடுத்து வச்சிருக்கனும்டா



சுகந்தப்ரீதன்
04-02-2008, 08:23 AM
காலை எட்டு மணிக்கு மணி செல்வாவின் அறைக்கதவை தட்டிக் கொண்டிருந்தான்..!

"டேய் டேய்...மாப்ள..? கதவை திறடா..! மணி எட்டாச்சு இன்னுமா தூங்கிகிட்டு இருக்க..?"

கதவு தட்டும் ஓசை கேட்கவும் செல்வா படுக்கையிலிருந்து எழாமலே "யார்ரா அவன் காலாங்காத்தால கதவை தட்டுறது..?" என்றான்!
"டேய் நான் தாண்டா மாப்ளே மணி, கதவை திறடா முதல்ல..!" என்றான் மணி!

மணியும் செல்வாவும் அந்த கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள்.. பார்ப்பதற்க்கு தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் கல்லூரி வளாகத்தில் எந்த இடத்திலும் இந்த இருவரும் சேர்ந்தே காணப்படுவதால் மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு ட்விண்ஸ் என்ற பட்டப்பெயர் உண்டு.!

மெல்ல போர்வையை விலக்கி எழுந்த செல்வா "வீட்டுல நிம்மதியா தூங்க முடியலன்னு படிக்க முடியலன்னு பொய்சொல்லி விடுதியில சேந்தேன், இங்க என்னடான்னா இவன் தொல்லை தாங்கமுடியல!" என்றுக் கூறிக்கொண்டே தட்டுதடுமாறி கதவை திறந்தான்..!

வெளியே மணி படுஜோராக குளித்து முடித்து புதிய உடையை உடுத்தியபடி பிரகாசமாக நிற்பதை பார்த்ததும் செல்வா "சரி எப்படா ட்ரீட்?" என்று மணியை கேட்டான்..!
"ட்ரீடா.. எதுக்கு...?"-இது மணி!

"காலையிலியே எழுந்திரிச்சி குளிச்சி புதுட்ரஸ் போட்டுட்டு வந்து நிக்கிறன்னா உனக்கு பிறந்தாநாளாதான் இருக்கும் அதுக்குதான் கேட்டேன்" என்றான் செல்வா..!

"டேய் கடுப்படிக்காத மாப்ள..! நேத்திக்கு உன்கிட்ட நான் சொன்னது மறந்து போச்சாடா..?"

"யாரு நான் கடுப்படிக்கிறனா..? திரும்ப திரும்ப மாப்ள மாப்ளன்னு கூப்பிட்டு நீதான் கடுப்படிக்கிற" என்றான் செல்வா..!

"சரிடா மாப்ள..இனி நான் உன்னை மாப்ளன்னு கூப்பிடல..சரியா..?"
"ம்ம்ம் சரி வந்த விசயத்த சொல்லுடா..?சுந்தரியை பாத்தியா..?"

"இல்லடா மாப்ள.. எனக்கு தயக்கமா இருக்கு.. அதானல நேத்திக்கு நாம பேசியதுல சின்ன மாற்றம் செஞ்சிருக்கேன், அதுக்கு எனக்கு நீதான் உதவுனும்.." என்றான் மணி..!

"போடா பாடு... இதெல்லாம் நமக்கு ஒத்துவராது... வேற ஏதாவதுன்னு சொல்லு நான் செய்யுறேன்.." என்றான் செல்வா..!

"டேய்..டேய்.. எனக்கு உன்னவிட்டா யாருடா இருக்கா..? இதக்கூட நீ எனக்காக செய்யலன்னா எப்பிடிடா..?"- செண்டிமெண்டாக பேசினான் மணி..!

செல்வாவும் அதில் மதி மயங்கி, " சரி நான் என்ன பண்ணனும் சொல்லு..?" என்றான்.

"நீ ஒன்னும் பண்ண வேணாம் நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும்" என்ற மணி தொடர்ந்து, "நாளைக்கு காதலர்தினம் வருதுல்ல..?" என்றான்..!

"பொய் சொல்லாத நேத்து நைட் ஷோவுலக்கூட நாளை முதல் உங்கள் கணேஷாவில் "சேது"-ன்னுதான் சிலைடு போட்டான்..நீயும்தான பாத்தா..?." நக்கலாக கேட்டான் செல்வா..!

அதற்கு மணி, "ம்ம்ம் என்ன பண்ண நீயெல்லாம் நக்கல் பன்னுற அளவுக்கு ஆகிபோச்சு என்நிலமை.. இருக்கட்டும் இருக்கட்டும்" என்றுக்கூறிக் கொண்டே தொடர்ந்தான். " சரி நீ போயி குளிச்சிட்டு நல்லா ட்ரஸ் பண்ணிட்டு என்னோட ரூமுக்கு வா" என்றான்..!

"என்ன விசயம்னு நீ சொல்லாம நான் குளிக்க மாட்டேன் ஆமாம்..!" என்றான் செல்வா..!
"சரி சரி வீம்பு வெட்டாத சொல்லுறேன் கேளு.."
"ம்ம்ம் சொல்லு கேட்குறேன்..."
"நம்ப காலேஜ்ல ரோஸ் கிளப் இருக்கறது உனக்கு தெரியுமில்ல..?"

"ஆமாம்.. தெரியும்.. வருசத்துக்கு ஒருநாள் மட்டும் மாமா வேலை பாத்துட்டு மத்த நாளெல்லாம் கிளப்ப கிடப்புள போடுற அந்த குரூப்ப தெரியாமா இருக்குமா என்ன..?" என்றான் செல்வா..!

"அதேதாண்டா மாப்ள..! நீ என்ன பன்னுற அந்த கிளப்புல நான் வாங்கி கொடுக்கற ரோசாப்பூவ கொண்டுபோயி சுந்தரிக்கிட்ட நான் சொல்ற மாதிரி சொல்லி ஒப்படைக்கனும் சரியா?" என்றான்.

"அது சரி சுந்தரிக்கிட்ட நான் எதுக்கு கொண்டுபோயி கொடுக்கனும்..? ரோசாப்பூவுக்கு மேல இன்னும் பத்துரூபா காசக்கொடுத்தா அந்த குருப்புல இருக்குறவங்களே அதையும் செஞ்சிருவாங்களே..!" என்றான் செல்வா..!

"அதெல்லாம் எனக்கு மட்டும் தெரியாதா என்ன..? ஆனா நம்ப காலேஜ்லதான் தனக்கு புடிச்ச பொண்ணுக்கு அடுத்தவன் பேர போட்டு அனுப்பறதையே எல்லா பயலும் வழக்கமா வச்சிருக்கறதால அந்த மாமா குருப் கொடுக்கற எதையும் எவளும் சீரியஸா எடுத்துக்க மாட்டா..? இப்ப இதை நீ கொண்டுபோயி சுந்தரிக்கிட்ட கொடுத்தன்னு வச்சிக்க.. அவ கண்டிப்பா இதை நம்புவா..? ஏன்னா நம்ப ரெண்டுபேரை பத்திதான் நம்ப காலேஜூக்கே தெரியுமாச்சே..! ப்ளீஸ்டா மச்சான் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதடா.." என்று கெஞ்சினான் மணி செல்வாவிடம்..!

"தினம்தினம் உன்ன சுந்தரி பாக்கறத நானும் பாத்துக்கிட்டுதான இருக்கேன்.. அப்புறம் எப்படிடா முடியாதுன்னு சொல்ல முடியும்.. உனக்காக இதை நான் செய்ய்றேண்டா மணி" என்றான் செல்வா..!

"ரொம்ப நன்றிடா மாப்ள.. சரி போயி குளிச்சிட்டு வா... கேண்டின்ல இன்னிக்கு உனக்கு என்னோட ட்ரீட்" என்றான் உற்சாகமாக மணி..!

"இது ட்ரீடா..?இல்ல நாளைக்கு நான் செய்ய போற உபகாரத்துக்கு லஞ்சமா..?" என்றான் செல்வா..!

"எப்பிடி வேணாலும் வச்சிக்க..! இப்ப நான் சந்தோசமா இருக்கேன் அதை கொண்டாடனும் அவ்வளவுதான்" என்றான் மணி..!

"அப்ப சரி ஒரு பத்து நிமிசத்துல உன் ரூம்ல இருப்பான் இந்த செல்வா" என்றுக் கூறிக்கொண்டே குளியலறைக்கு செல்வா செல்லவும் மணி தன்னறைக்கு திரும்பினான்..!

அடுத்தநாள் காலை வழக்கத்துக்கு மாறாக செல்வா சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து தன் நண்பனுக்கு உதவ தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்..!

அதற்குள் மணியே செல்வாவின் அறைக்கு வந்துவிட்டான்..! வந்தவன் செல்வாவை பார்த்ததும், " டேய் என்னடா மாப்ள.. மாப்பிள்ளை கணக்கா கிளம்பிட்டு இருக்க..? நேரமாச்சுடா.. இப்ப போனாதான் சுந்தரியை கேண்டில வச்சி பிடிக்கமுடியும்..காலையில கேண்டில்ல அவ்வளவா யாரும் இருக்க மாட்டாங்க.. இல்லண்ணா அப்புறம் அவ கிளாஸூக்கு போயிடுவா.. அதன்பிறகு அவளை சந்திக்கறது கஸ்டமாயிடும்.. அதனால இந்த ரோஸ்சை எடுத்துக்கிட்டு கிளம்புடா" என்றான் மணி..!

"சரி சரி டென்ஷனாகாத இதோ கிளம்பிட்டேன்.. என்று கூறியவாறு வாசனை திரவியத்தை வழியவிட்டபடி வெளியே வந்தான் செல்வா..!
இருவரும் கேண்டினை அடைந்து முதன்முறையாக தனித்தனியாக அமர்ந்து கொண்டனர். செல்வா வழக்கமாக சுந்தரி அமரும் இருக்கைக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்..! மணிக்கு செல்வா சுந்தரியிடன் தன் காதலை சொல்வதை காணவேண்டும் என்ற ஆவலில் அறையின் மூலையிலிருந்த இருக்கையில் சென்று அமைதியாக அமர்ந்துக் கொண்டான்..!

சற்று நேரத்தில் சுந்தரி சந்தனக்கலர் சுடிதாரில் தேவதை போல நடந்து வந்தாள்..! வந்தவள் வழக்கமாக செல்வாவும் மணியும் அமரும் இடத்தில் பார்வையை செலுத்த அங்கே இருவரும் இல்லாமல் போகவே வாட்டத்துடன் தன் இருக்கைக்கு திரும்பியவளுக்கு அங்கே செல்வா அமர்ந்திருப்பதை கண்டதும் முகத்தில் பிரகாசம் தோன்றியது..!
மெல்ல அன்னநடை நடந்து வந்து செல்வாவுக்கு எதிரில் அமர்ந்தாள்..! சுந்தரியை அருகில் கண்டதும் ஏனோ செல்வாவுக்கு ஒருவித நடுக்கம் தோன்ற ஆரம்பித்தது..! எப்படி ஆரம்பிப்பது என்று ஒரே குழப்பம் செல்வாவுக்கு.. உடனே எதிர்மூலையில் அமர்ந்திருந்த மணியை நோக்கினான்..! மணி சைகை மூலம் நம்பிக்கை கொடுக்க.. ஒருவழியாகதைரியத்தை வரவழைத்துக் கொண்டு ரோசாவை எடுத்து நீட்டியவாறு பேச ஆரம்பித்தான் செல்வா..!

"சுந்தரி உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனும்..அதுக்கு முன்னாடி இந்த ரோசாவ புடிங்க.." என்றான் செல்வா..!

சிறிதும் தயக்கமின்றி ரோசாவை வாங்கி கொண்ட சுந்தரி "சரி எதோ சொல்லனும்ன்னு சொன்னீங்களே சொல்லுங்கசெல்வா..?" என்றாள்..!

"அது அது வந்து எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல.. நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..?" என்று தயங்கினான்செல்வா..!

"நீங்க ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டேன் ரெண்டு சொன்னாதான் தப்பா எடுத்துக்குவேன்" என்று செல்வாவை கிண்டலடித்தாள் சுந்தரி..!

"அது ஒன்னுமில்ல... நான் வந்து வந்து..." என்று இழுத்தான் செல்வா..!
"அதான் கிட்ட வந்தாச்சே இன்னும் என்ன வந்து வந்துன்னுக்கிட்டு சொல்ல வந்ததை தயங்காம சொல்லுங்க செல்வா.." என்றாள்..!

"என் நண்பன் உன்னை காதலிக்கிறேன்னு..." செல்வா சொல்லி முடிப்பதற்க்குள் சுந்தரி, "உங்கள சொன்னாரா..? ஆமா அந்த அண்ணாவுக்கு எப்படி தெரிஞ்சுது..? நானே வந்து உங்ககிட்ட சொல்லமுடியாம இத்தனை நாளா தவிச்சிக்கிட்டு இருந்தேன்...! ஆனா என் அதிர்ஷ்டம் பாருங்க செல்வா.. வழக்கமா உன்கூட வர அந்த அண்ணா இன்னிக்கு வரல.. சரி நானே உங்ககிட்ட சொல்லலாம்ன்னு வந்தா எனக்கு முன்னாடி முந்திக்கிட்டு நீங்களே சொல்லிட்டீங்க என்ன காதலிக்கிறன்னு.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு செல்வா..! ஆமாம் தினம்தினம் நான் உன்ன பாக்கறது கூட தெரியாத மரமண்டையா நீங்க..? அந்த அண்ணா சொன்ன பிறகுதான் உங்களுக்கு தெரிஞ்சுதாக்கும்.. எப்படியோ அந்த அண்ணாவுக்குதான் நன்றி சொல்லனும்.." என்று கடகடவென சொல்லி முடித்துதான் கொண்டுவந்த ரோசாப்பூவை செல்வாவிடம் நீட்டினாள்..! அனிச்சை செயலாக அதை வாங்கிய செல்வா..சுந்தரியின் சொற்பொழிவில் சொக்கிபோய் வாயடைத்து அமர்ந்திருந்தான்..!

அதைக் கண்ட சுந்தரி "ஏய்..செல்வா என்னாச்சு.. அதுக்குள்ள கனவுல என்கூட டூயட்பாட கிளம்பிட்டியா..?! சரி சரி எனக்கு கிளாஸுக்கு நேரமாச்சு.. நான் இப்ப கிளம்புறேன்.. நீயும் கிளாஸூக்கு கிளம்பு.. மதியத்துக்கு மேல நாம வெளியில போகலாம்" என்று கூறிவிட்டு கேண்டினிலிருந்து வெளியே புறப்பட்டாள்..!

தூரத்திலிருந்து என்ன நடக்கிறது என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மணி சுந்தரி கிளம்பி போகவும் ஆர்வமுடன் செல்வாவை நோக்கி வந்தான்..! வந்தவன்.. செல்வாவிடம், "என்னடா மாப்ளே என்ன சொன்னா சுந்தரி..?" என்றான் ஆர்வமுடன்..!

"ஒன்னுமில்ல மச்சான்(?) உன்னை மாதிரியேதாண்டா இருக்கா அவளும்" என்றான்..!

"என்னடா சொல்ற..? அவளும் காதலிக்கிறாளா..?" என்றான் மணி!

"ஆமாண்டா மச்சான் உன்ன மாதிரியே அவளும் என்னை பாத்து மாப்ளன்னுட்டு போறாடா" என்றான் செல்வா..!

"டேய்..என்னடா சொல்ற..? எனக்கு ஒன்னும் புரியல..!" -இது மணி..!

"எனக்கு மட்டும் புரியுதாக்கும்..? ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.. நான் பலதடவை உன்கிட்ட என்ன மாப்ளன்னு கூப்பிடாதன்னு சொன்னேன்.. நீ கேட்கல.. கடையில பாரு இப்ப நிஜமாலுமே நான் மாப்ளையாயிட்டேன்.. நீ எனக்கு மச்சானாயிட்ட..!" என்றான் செல்வா..!

"டேய் கொன்னே போட்டுருவேன் என்ன நடந்துதுன்னு தெளிவா சொல்லி தொலைடா.." என்றான் மணி கோபமாக..!

செல்வாவோ (கூலாக )" மச்சான் நான் நீ சொன்ன மாதிரி சுந்தரிக்கிட்ட ரோசாவை குடுத்து என் நண்பன் உன்னை காதலிக்கிறேன்னு என்கிட்ட சொன்னான்..அதை உன்கிட்ட சொல்லிட்டு அவன் கொடுத்த ரோசாவ உன்கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்னு சொல்ல வந்தேன்.. அதற்குள் அவள் முந்திக்கொண்டு என்னன்னவோ பேசிட்டு போயிட்டாடா..முக்கியமா உன்னை அண்ணான்னும் என்னை காதலிக்கிறேன்னும் சொன்னாடா மச்சான்..!" என்றான்..!

செல்வா சொல்ல சொல்ல மணிவாயடைத்து போய் உட்காந்திருந்தான்..! இப்படி நடக்கும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை..! செல்வா கூறியதை கேட்டு மணி அந்த நொடியில் தன் மனதுக்குள் ஒரு முடிவெடுத்தான்..இனி யாரையும் எதற்காகவும் மாப்ளன்னு அழைக்ககூடாதென்று..!!!

பின்னர் மணி செல்வாவை பார்த்து சந்தோசமாக, " சரி மாப்ள... அப்ப இன்னிக்கு எனக்கு நீ ட்ரீட் தரப்போற..!" என்றான் புன்னகையுடன்..!

செல்வா அவனை குழப்பமாக பார்த்தபடி, " டேய் அவ உன்னை அண்ணான்னு சொல்லிட்டு என்ன காதலிக்கிறேன்னு சொன்னதுல உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா..?" என்றான்..!

அதற்கு மணி, "எதுக்கு வருத்தப்படனும்.. என் தங்கச்சி உன்னைதான் விரும்புறான்னு எனக்கு ஏற்கனவே தெரியும்டா.. அதனாலதான் நீ என்னை மாப்ளன்னு கூப்பிடாதன்னு சொன்னதையும் கேட்காம நான் உன்னை அப்படி கூப்பிட்டேன்!" என்றான்..!

இப்போது செல்வாவுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.."என்னடா சொல்லுற நீ..?" என்றான் மணியிடம்..!

"மாப்ள நீயும் சுந்தரியும் ஒருத்தரை ஒருத்தர் மனதுக்குள்ளியே விரும்புறீங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்.. உங்கள் இருவரோட பார்வை பறிமாற்றத்துலியே அதை நான் புரிஞ்சுக்கிட்டேன்.. ஆனா ஏதோ ஒரு தயக்கத்துல நீ அதை என்கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்ட.. நானும் நீயா சொல்லுவன்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.. சரி சுந்தரியை கேட்கலாம்ன்னு பாத்தா.. அவ நீங்களா எப்படி கற்பனை பண்ணலாம்ன்னு என்னை கேட்டுவிடுவாளோன்னு ஒரு பயம்.. உங்கள்ல ஒருத்தராவது தன்காதலை உங்களுக்குள் வெளிபடுத்திக்கீவிங்கன்னு எதிர்பார்த்தேன்..ம்ம்ம்ஹூம் சரி கடைசிவரை இப்படியே இருந்து ரெண்டு பேரும் உங்க காதலை புதைச்சிட்டு போயிடுவீங்களோன்னு பயந்துபோய்இதுக்கு வேறென்னதான் வழின்னு யோசிச்சப்பத்தான் எனக்கு இந்த ஐடியா ஒர்க்கவுட் ஆச்சி..! எனக்காக நீ எதையும் செய்வன்னு எனக்கு தெரியும்..அதனால நான் அவளை காதலிப்பதாக கூறி அதற்கு தூதாக உன்னை அனுப்புவதுபோல் உன்னை அவளிடம் தனிமையில் பேச வைக்க முயற்ச்சித்தேன்.. என் முயற்சியும் வெற்றியடைஞ்சிருச்சி.. நான் எதிர்பார்த்த பலனும் கிடைச்சிருச்சிடா மாப்ள..ஆனா அது நடந்த விதத்தை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.. அதாண்டா மாப்ள.. நீ சொல்லி முடிச்சதும் கொஞ்ச நேரம் வாயடைச்சு போயி உட்காந்துட்டேன்.." என்றான்மணி மகிழ்ச்சியுடன்..!

கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய தன் நண்பணை கட்டி அணைத்த செல்வா, " உன்னைபோல் ஒரு நண்பன் கிடைக்க உண்மையிலியே நான் கொடுத்து வச்சிருக்கனும்டா.." என்றான் நாதழுதழுக்க..!!


*****முற்றும்*****

பார்த்திபன்
04-02-2008, 08:55 AM
இதுவும் "மின்சாரக்கனவு" மாதிரி "Short Circuit" ஆயிடுச்சோ என்று நெனைச்சேன்....

இங்க "கரண்டு" சரியான பாதையிலதான் ஓடுது.

பாராட்டுகள் சு.பி.

சுகந்தப்ரீதன்
04-02-2008, 09:11 AM
இதுவும் "மின்சாரக்கனவு" மாதிரி "Short Circuit" ஆயிடுச்சோ என்று நெனைச்சேன்....

இங்க "கரண்டு" சரியான பாதையிலதான் ஓடுது.

பாராட்டுகள் சு.பி.
மிக்க நன்றி...பார்த்திபா..! இது என் முதல் கதை.. உற்சாகபடுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பா...!

அன்புரசிகன்
04-02-2008, 09:20 AM
இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் முடிவு தான் சற்றே வித்தியாசம். :D

யவனிகா
04-02-2008, 09:22 AM
அய்யோ...சுகந்தனுக்கு சுத்தித் தான் போடணும். உண்மைக்கதையா சுகந்தா...இல்ல ஆள் சிக்கலேன்னு தெரிஞ்சவுடனே தோழனுக்கு உண்மையாயிடறது...என்னதிது....பரவாயில்லை...பாஸ் பண்ணிட்டே...

இதா முடியப் போகுதுன்னு சூடா ஒரு டீய கையில எடுத்துட்டு உக்காந்தா நீ குடித்த ஏண்டி கிளைமாக்ஸ் அதிர்ச்சில...தெரியாம டீய கொதிக்கக் கொதிக்க குடிச்சு நாக்கு சுட்டுடுச்சு.

முதல் கதை எழுதிய அன்புத் தம்பிக்கு அக்காவின் வாழ்த்துக்கள்.
கவிதையைத் தாண்டி கதைக்குள் நுழைந்த தம்பியே...ஜே...ஜே...உனக்கு ஜே..ஜே...

மதி
04-02-2008, 09:29 AM
சூப்பர்...
இப்படியெல்லாம் கூட நடக்குமா..? எனக்கு இப்படி ஒரு நண்பன் இல்லாம போயிட்டானே..!
ஒரு சந்தேகம்... தான் காதலிக்கற பெண்ணை தன் நண்பன் காதலிப்பதாக சொல்லும் போதும் தூது போக சொல்லும் போதும் எந்த ரியாஷனும் செல்வா காண்பிக்காதது.. ஏன்? தியாகமா? இல்லை க்லைமாக்ஸ்காக சஸ்பென்ஸா?

சுகந்தப்ரீதன்
04-02-2008, 09:57 AM
இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் முடிவு தான் சற்றே வித்தியாசம். :D

அப்படியா...? ஆமாம் அது உங்க வாழ்க்கையிலதான அன்பு...?


முதல் கதை எழுதிய அன்புத் தம்பிக்கு அக்காவின் வாழ்த்துக்கள்.
கவிதையைத் தாண்டி கதைக்குள் நுழைந்த தம்பியே...ஜே...ஜே...உனக்கு ஜே..ஜே...
பாவம் அக்கா..நீ..! என்னாலதான உன் நாக்க நீ சுட்டுக்கிட்ட.. ஐம் வெரி சாரிக்கா..! ஆமாம் உனக்குதான் வைத்தியம் தெரியுமாச்சே.. மருந்து போட்டா சரியாடுமில்ல...?!:icon_rollout:

அப்புறம் நான் கவிதையை தாண்டல அக்கா.. கவிதையை குறுக்கி கதையாக்கி இருக்கேன்...! என்ன புரியலையா...? கவிதை=க(வி)தை.. 'வி'யை விழுங்கிட்டேன்..:wuerg019:

சுகந்தப்ரீதன்
04-02-2008, 10:23 AM
ஒரு சந்தேகம்... தான் காதலிக்கற பெண்ணை தன் நண்பன் காதலிப்பதாக சொல்லும் போதும் தூது போக சொல்லும் போதும் எந்த ரியாஷனும் செல்வா காண்பிக்காதது.. ஏன்? தியாகமா? இல்லை க்லைமாக்ஸ்காக சஸ்பென்ஸா?
யோவ்...மதி...! உங்கள மாதிரி ஆளுங்க மதியை உபயோகிச்சி மடக்குவீங்கன்னு எனக்கு தெரியும்.. அதுக்குதான் உங்க மதியை உபயோசிக்கிற மாதிரி நான் கதையை எழுதினேன்.. ஆனா நீங்க அதை கொஞ்சம்கூட உபயோகிக்காம கேள்வி கேட்குறீங்களே..நியாயமா..? கீழ பாருங்க நண்பரே...!!



"தினம்தினம் உன்ன சுந்தரி பாக்கறத நானும் பாத்துக்கிட்டுதான இருக்கேன்.. அப்புறம் எப்படிடா முடியாதுன்னு சொல்ல முடியும்.. உனக்காக இதை நான் செய்ய்றேண்டா மணி" என்றான் செல்வா..!
..
செல்வா மனசுக்குள்ள சுந்தரியை விரும்புனாலும் அவ தன்னை பார்கிறாளா..இல்லை தன் நண்பனை பார்க்கிறாளாங்கிறதுல அவனுக்கு குழப்பம் இருந்தது.. ஏன்னா செல்வாவும் மணியும் இரட்டையர்களாச்சே.. பிரிஞ்சி இருந்ததே கிடையாது பாருங்கோ..!!


இதுக்கு வேறென்னதான் வழின்னு யோசிச்சப்பத்தான் எனக்கு இந்த ஐடியா ஒர்க்கவுட் ஆச்சி..! எனக்காக நீ எதையும் செய்வன்னு எனக்கு தெரியும்..அதனால நான் அவளை காதலிப்பதாக கூறி அதற்கு தூதாக உன்னை அனுப்புவதுபோல் உன்னை அவளிடம் தனிமையில் பேச வைக்க முயற்ச்சித்தேன்.

இதையும் கவனிங்க மதி..! இப்ப புரியுதா ஏன் செல்வா தன் அதிர்ச்சியை வெளிபடுத்தலன்னு..?!:icon_rollout:

மதி
04-02-2008, 10:42 AM
[QUOTE=சுகந்தப்ரீதன்;322347]
[SIZE=3]செல்வா மனசுக்குள்ள சுந்தரியை விரும்புனாலும் அவ தன்னை பார்கிறாளா..இல்லை தன் நண்பனை பார்க்கிறாளாங்கிறதுல அவனுக்கு குழப்பம் இருந்தது.. ஏன்னா செல்வாவும் மணியும் இரட்டையர்களாச்சே.. பிரிஞ்சி இருந்ததே கிடையாது பாருங்கோ..!!
எல்லாம் சரி... ஆனாலும் எந்தவித தயக்கத்தையும் வார்த்தைகள்ல காண்பிக்காதது.. தான் கொஞ்சம் இடித்தது.. நண்பனுக்காக உடனே ஒத்து கொள்வது போலில்லாமல் சற்று மென்று முழுங்கி ஓக்கே சொல்லிருந்தால் இருவிதவாகவும் (1. எப்படி தன் நண்பனுக்காக ஒரு பெண்ணிடம் சென்று காதலை சொல்வது என்ற தயக்கம். 2. தான் விரும்பும் பெண்ணை தன் நண்பனும் விரும்புவது கண்டு தயக்கம்) கொண்டு போயிருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து.. குத்தம் குறை சொல்வதற்கில்லை சுகந்தப்ரீத்தா.. சில இடங்கள்ல தயக்கங்கள் காட்டிருக்கலாம் என்பது என் கருத்து.. அதே சமயம்..நண்பங்கற ஒரே காரணத்துக்காக எல்லோரும் எல்லா செயல்களையும் காரண காரியமின்றி செய்து விட மாட்டார்கள் என்பதும் என் கருத்து..

சுகந்தப்ரீதன்
04-02-2008, 10:52 AM
அய்யோ...மதி...அசத்துறீங்க போங்க..! உங்க அளவுக்கு யோசிச்சி எழுத எனக்கு மதியில்லைன்னு ஒத்துக்குறேன் நண்பரே..! அது மட்டும் இல்லாமல் இது என் முதல் முயற்சி என்பதால் சில சறுக்கல்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்..! குறையை குறிப்பிட்டு கருத்து சொல்லி என்னை ஊக்க படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பா..! இப்ப கடைசியா எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.. அது என்னன்னா.. மதி அளவுக்கு தெளிவா என்னால திரைக்கதை எழுத முடியாதுன்னு...?!

மதி
04-02-2008, 10:57 AM
அய்யோ...மதி...அசத்துறீங்க போங்க..! உங்க அளவுக்கு யோசிச்சி எழுத எனக்கு மதியில்லைன்னு ஒத்துக்குறேன் நண்பரே..! அது மட்டும் இல்லாமல் இது என் முதல் முயற்சி என்பதால் சில சறுக்கல்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன்..! குறையை குறிப்பிட்டு கருத்து சொல்லி என்னை ஊக்க படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பா..! இப்ப கடைசியா எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.. அது என்னன்னா.. மதி அளவுக்கு தெளிவா என்னால திரைக்கதை எழுத முடியாதுன்னு...?!

புரிதலுக்கு நன்றி நண்பரே...
நான் யாரிடமும் குறைகளை சட்டென சொல்லிவிடுவதில்லை.. தவறாக எடுத்துக் கொள்ளப் படுமோ என்ற அச்சத்தில்... ஏனோ..சின்னதாய் உறுத்தியதால் சொன்னேன்.. சரியாக எடுத்துக்கொண்டமைக்கு நன்றி..

சிவா.ஜி
04-02-2008, 11:37 AM
சுபி கங்க்ராட்ஸ்....உங்கள் முதல் கதையே நல்ல கதையாக அமைந்து விட்டது.அருமை.கல்லூரி நன்பர்களின் உரையாடல்களை அமைத்த விதம்,மாப்ளே அழைப்பில் சின்ன உள்கருத்து வைத்தது.....என்னடா வழக்கமான கதாயா என்று நினைப்பதற்குள் கிளைமேக்ஸை மாத்திப்போட்டு அசத்தியது...சூப்பர்.மதி சொன்னதும் சரிதான்.இனி அடுத்த கதைகளில் அந்த யோசனை வந்துவிடும்.

முடிவுக்குப் பின்னே ஒரு முடிவாக

கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய தன் நண்பணை கட்டி அணைத்த செல்வா
உன்னைபோல் ஒரு நண்பன் கிடைக்க உண்மையிலியே நான் கொடுத்து வச்சிருக்கனும்டா\\\" என்றான்நாதழுதழுக்க.

முதுகுக்குப் பின்னே கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டான் மணி...அவன் உண்மையாகவே சுந்தரியைக் காதலித்தது அந்த கண்ணீரில் கரைந்துகொண்டிரூந்தது.

சும்மா படிச்சதும் தோன்றியது.

மனமார்ந்த பாராட்டுகள் சுகந்த்.

பார்த்திபன்
04-02-2008, 12:01 PM
முதுகுக்குப் பின்னே கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டான் மணி...அவன் உண்மையாகவே சுந்தரியைக் காதலித்தது அந்த கண்ணீரில் கரைந்துகொண்டிரூந்தது.


எப்படி சிவாண்ணா.... எப்படி...
இன்னாமா யோசிக்கிறாய்ங்கையா........

சிவா.ஜி
04-02-2008, 12:07 PM
ஹி..ஹி..எல்லாம் மன்றம் கற்றுக்கொடுத்தது பார்த்திபன்.

சுகந்தப்ரீதன்
04-02-2008, 01:17 PM
முதுகுக்குப் பின்னே கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டான் மணி...அவன் உண்மையாகவே சுந்தரியைக் காதலித்தது அந்த கண்ணீரில் கரைந்துகொண்டிரூந்தது.

சும்மா படிச்சதும் தோன்றியது.

மனமார்ந்த பாராட்டுகள் சுகந்த்.

வாவ்... சிவா அண்ணா.. கலக்கிட்டீங்க..அண்ணா..! இப்படிக்கூட எழுத முடியுமான்னு என்னை ஒரு நிமிசம் யோசிக்க வச்சிட்டீங்க...! நிறைய நிறைய உங்க அனுபவத்துல கத்துக்கலாம்ன்னு தெரியுது.. நம்பிக்கையுடன்...தம்பி நான்..! மிக்க நன்றி அண்ணா..!:icon_b:

சிவா.ஜி
04-02-2008, 01:25 PM
ஆஹா...ரொம்ப பெரிய மனசுப்பா உங்களுக்கு.நன்றி.எப்போதும் இந்த அண்ணன் உங்களுடன் உண்டு.

பூமகள்
04-02-2008, 01:59 PM
சுபி.......................................................!!!! வாவ்...!! :icon_b:


எப்படி இப்படி எல்லாம்??? என்ன இது உனது முதல் கதையா????!!!! :sprachlos020::eek:


நம்ப முடியவில்லை... இல்லை..... ல்லை..................!!:icon_b:

அற்புதமான கதையோட்டம்.. சஸ்பென்ஸான முடிவு..!! :icon_b:

சத்தியமா நான் யோசிக்கலை.. ஒரு தொடர்கதையாக போகுமோ என்று நம்பி படித்தால்.. அழகாய் முத்தாய்ப்பாய் முடிவு..!!


ஹாப்பி எண்டிங்..!!

கலக்கிட்ட சுகந்தப்ரீதன்.!

கதாசிரியரா பெரும் புகழோடு வலம் வர வாழ்த்துகள்..!!:icon_rollout:

அமரன்
04-02-2008, 03:20 PM
முதலில் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள் சுகந்தா. இனிதே தொடரட்டும்..

சிரத்தை எடுத்து திரைக்கதை நகர்வை அமைத்த நீ கதைத்தெரிவில் சறுக்கவில்லை. ஆனால் தெரிவுசெய்ததை சொல்ல முயன்று சறுக்கிவிட்டாய்.. என்னடா இவன் நிறைகளை விடுத்து குறையை சுட்டுகிறானே என எண்ணாதே.. நிறைய இருப்பதை விடக் குறைய இருப்பதை சொல்லவே நேரம் அனுமதிக்கிறது.


செல்வா சொல்ல சொல்ல மணிவாயடைத்து போய் உட்காந்திருந்தான்..! இப்படி நடக்கும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை..! செல்வா கூறியதை கேட்டு மணி அந்த நொடியில் தன் மனதுக்குள் ஒரு முடிவெடுத்தான்..இனி யாரையும் எதற்காகவும் மாப்ளன்னு அழைக்ககூடாதென்று..!!!

காதலிக்காத ஒருவன் ஏன் வாயடைத்து நிற்கவேண்டும்.. எதிர்கால முன்னெடுப்பை தீர்மானிக்கவேண்டும்.. கனவில் அவளென்பதால்தானே கனவில் எதிர் மறைமுடிவை அவன் நினைக்கவில்லை. இக்கதையின் இவ்விடம் மனதில் பார மேற்றியது. சிவாவின் முத்துகளின் சாயலில் கோர்த்திருக்க கனதியை அதிகமாக்கியிருப்பாய்.. தொடர்ந்து முன்னேற வாழ்த்துகிறேன்.

அனுராகவன்
05-02-2008, 02:53 AM
ம்ம் நன்றி சுகந்தப்ரீதன்!!
கதை முடிந்ததா..
ம்ம் மீண்டும் நல்ல கதை ஆரபிக்க வாழ்த்துக்கள்..
அனைத்தும் நல்ல உரையாடல்கள்..

மலர்
05-02-2008, 03:24 AM
சுகு...வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துக்கோ...
கதையாக இல்லாமல் அதை நாமே உணரும் உணர்ச்சியாக மாற்றணும்....
அப்போ இன்னும் அழகா ஆயிரும்...
முதல் கதை...
வாழ்த்துக்கள் சுகு....

சுகந்தப்ரீதன்
05-02-2008, 03:57 AM
காதலிக்காத ஒருவன் ஏன் வாயடைத்து நிற்கவேண்டும்.. எதிர்கால முன்னெடுப்பை தீர்மானிக்கவேண்டும்.. கனவில் அவளென்பதால்தானே கனவில் எதிர் மறைமுடிவை அவன் நினைக்கவில்லை. இக்கதையின் இவ்விடம் மனதில் பார மேற்றியது. சிவாவின் முத்துகளின் சாயலில் கோர்த்திருக்க கனதியை அதிகமாக்கியிருப்பாய்.. தொடர்ந்து முன்னேற வாழ்த்துகிறேன்.
தவறிருந்தால் சுட்டி காட்டி திருத்துவது தமயனின் பொறுப்புதானே..? அதைத்தானே நீங்களும் செய்து இருக்கிறீர்கள்..! மிக்க மகிழ்ச்சி அண்ணா.. உங்களின் உந்துதலில் இன்னும் எழுத முயற்ச்சிக்கிறேன்..!

அடுத்து நீங்கள் கேட்டதற்கான விடை இதோ கீழே பாருங்கள் அண்ணா..!


.. என் முயற்சியும் வெற்றியடைஞ்சிருச்சி.. நான் எதிர்பார்த்த பலனும் கிடைச்சிருச்சிடா மாப்ள..ஆனா அது நடந்த விதத்தை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.. அதாண்டா மாப்ள.. நீ சொல்லி முடிச்சதும் கொஞ்ச நேரம் வாயடைச்சு போயி உட்காந்துட்டேன்.." என்றான் மணி மகிழ்ச்சியுடன்..!

சுகந்தப்ரீதன்
05-02-2008, 04:06 AM
எப்படி இப்படி எல்லாம்??? என்ன இது உனது முதல் கதையா????!!!! :sprachlos020::eek:
கதாசிரியரா பெரும் புகழோடு வலம் வர வாழ்த்துகள்..!!:icon_rollout:

ஏன்..பூ..இப்பிடியெல்லாம்...? என் கதைதான் இது.. அதுவும் நான் கற்பனை பண்ணி எழுதிய முதல் கதை...!

கவிதாயினி..கதையாயினி நீங்க எல்லாம் இருக்கும் போது நான் எப்படி பெரும் புகழோட வலம் வர முடியும்.. வேணும்ன்னா இடம் வர முயற்ச்சிக்கிறேன் சரியா...?!


ம்ம் நன்றி சுகந்தப்ரீதன்!!
கதை முடிந்ததா..
ம்ம் மீண்டும் நல்ல கதை ஆரபிக்க வாழ்த்துக்கள்..
அனைத்தும் நல்ல உரையாடல்கள்..

என்ன அக்கா இது.. முற்றும் போட்ட பிறகும் முடிந்ததான்னு கேட்குறீங்களே...?:traurig001:
சரிக்கா...முயற்ச்சிக்கிறேன்... மிக்க நன்றி அனு அக்காவுக்கு..!


சுகு...வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துக்கோ...
கதையாக இல்லாமல் அதை நாமே உணரும் உணர்ச்சியாக மாற்றணும்....
அப்போ இன்னும் அழகா ஆயிரும்...
முதல் கதை...
வாழ்த்துக்கள் சுகு....
மிக்க நன்றி மலர்...! சரி அது என்ன மொட்ட தாத்தா குட்டையில விழுந்த கதையா இருக்கு....? கதையை எப்படி நாமே உணரும் முயற்ச்சியா மாத்தறதுன்னு உங்கள மாதிரி ஆளுங்க தெளிவா(?) சொன்னாதான நான் தெரிஞ்சுக்க முடியும்...!:icon_rollout:

மனோஜ்
08-02-2008, 03:00 PM
வாழ்த்துக்கள் சுபி நன்றாக எழுதுகிறீர்கள்
ஆனா அந்த கடைசி கட்டம் நண்பனின் நல்ல சமாளிப்பை உணர்த்துகிறது
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
09-02-2008, 03:18 AM
வாழ்த்துக்கள் சுபி நன்றாக எழுதுகிறீர்கள்
ஆனா அந்த கடைசி கட்டம் நண்பனின் நல்ல சமாளிப்பை உணர்த்துகிறது
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
மிக்க நன்றி... அண்ணா..!
உங்கள் உற்சாகமூட்டல்கள் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது..!!

MURALINITHISH
23-08-2008, 08:24 AM
அடடா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாருங்க ரொம்ப கஷ்டம் ஆனாலும் நண்பரே ஒரு தடவை அண்ணன் சொன்னல் போதுமே இத்தனை தடவை சொல்லி என்னையே கஷ்டபடுத்திட்டீங்க

சுகந்தப்ரீதன்
24-08-2008, 02:11 AM
ஆனாலும் நண்பரே ஒரு தடவை அண்ணன் சொன்னல் போதுமே இத்தனை தடவை சொல்லி என்னையே கஷ்டபடுத்திட்டீங்கஅப்படியா அண்ணா.. அப்ப என்னை மன்னிச்சுடுங்க அண்ணா..!!:fragend005:

mukilan
24-08-2008, 03:16 AM
முதல் கதையா, சொந்தக் கதையா சுபி?

நிறைய டிப்ஸ் எல்லாம் நம்ம மக்களே கொடுத்திட்டாங்க. அதனால பாராட்டு மட்டும் என்னிடம் இருந்து. இயல்பான கதையோட்டம். அதிகமான வர்ணனைகள் இல்லாமல் கல்லூரியில் படிக்கும் வயதுடைய நண்பர்கள் பேசும் அந்த வயதுக்குரிய வார்த்தைகளுடன் கதை நகர்த்திய பாங்கு அருமை. மேலும் கதைகள் எழுதி சிறந்த கதைஞர் ஆக என் வாழ்த்துகள்.