PDA

View Full Version : தற்கொலை



rocky
04-02-2008, 06:41 AM
நான் சாவதற்கு ஒரு வழி சொல்லுங்கள்?

தூக்குப்போட்டுக் கொள்ளவா?
கழுத்துத்தை நெரிக்குமே,
வேண்டாம்.

விஷத்தைக் குடிக்கவா?
தொண்டை எரியுமே,
அதுவும் வேண்டாம்.

இரயிலில் தலை கொடுக்கவா?
பல சக்கரங்கள் ஏறுமே,
இதுவும் வேண்டாம்.

கிணற்றில் குதிக்கவா?
மூச்சுத் தினறுமே,
வேறு சொல்லுங்கள்.

மலைமேலிருந்து குதிக்வா?
உடல் சிதறிவிடுமே, என்னை
சாகத்தூண்டியவர்கள் பார்த்து
அழுவதர்க்கு உடல் வேண்டுமே,

யாராவது சொல்லுங்களேன்?
நான் வலியில்லாமல் சாக
ஒரு வழி சொல்லுங்கள்?

என்னால் இனி எந்த
வலியும் பொருக்க முடியாது,
உடலாலும், மனதாலும்.

aren
04-02-2008, 06:46 AM
கல்யாணம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் நினைப்பது நிறைவேறிவிடும்.

ஓவியன்
04-02-2008, 06:49 AM
வலிகளிலிருந்து தப்பிக்க
வழி முடிக்கும்
கோழைத்தன முடிவு - தற்கொலை
அது கூட வலியாகத் தானிருக்கிறது பாருங்களேன்..!!

வலிகளின்றி வாழ்க்கை இல்லை ராக்கி...!!
வலி தாங்கினாலே ஒரு கல் சிற்பமாகும்..
வலி தாங்கினாலே ஒரு பொற்கட்டி பொன்னாக சுடர் விடும்...!!

வலிகளைக் கண்டு
வழி மாறாதீர்கள்
மாறாக
வலிகளாலேயே
வழி சமையுங்கள்
உலகம் உம்மை
போற்றி நிற்கும்......!!

சாலைஜெயராமன்
04-02-2008, 06:59 AM
என்ன ராக்கி ஏனிந்த சலிப்பு? போன பின்னூட்ட்தில்தான் உங்களைப் புகழ்ந்தேன். அதற்குள்ளாகவா?

வேண்டாம் இந்த சிந்தனை? வாழுங்கள், உங்களுக்குள் தேடுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

ஆதவா
05-02-2008, 08:12 AM
சபாஷ் ராக்கி.

தற்கொலைக்கு எவ்வழியும் சிரந்ததல்ல.. கோழையினால் தற்கொலை மேற்க்கொள்ள இயலாது. அதை நன்றாக அழகாகக் கொடுத்திருக்கிறாய்.

இவ்வளவு சிறப்பான கவிதைக்கு முடிவு சிறப்பானதாக இல்லை. சாவதற்கு வழியே இல்லை என்று சமாதானப்படுத்தி கவிதை நாயகனை வாழ்விற்கு அனுப்பியிருக்கலாம்.

மற்று.

தற்கொலையை வேறுவிதத்தில் கொண்டால்..

விஷத்தைக் குடிக்கும் மனத்திடமும்
இரயிலில் தலைவைக்கும் தைரியமும்
(உலகக்)கிணற்றில் குதிக்கும் சாதுரியமும்
(உயர்)மலைமேல் இருந்து குதிக்கும் எளிமையும் (உயர்ந்தவராயினும் கீழறங்கி எளிமையாகப் படுதல்)

ஆகிய இவ்வலி இல்லாமல்...

வாழ வழியுண்டா?

தற்கொலை = வாழ்க்கை.. (என்னமோ அர்த்தப்படுத்திட்டேன்...:D)

ஆனால் வலி பொறுக்காமல் வாழ்வுமில்லை, சாவுமில்லை...

பூமகள்
05-02-2008, 08:37 AM
பிறப்பு நம் கையில் இல்லை..!
இறப்பும் அப்படி இருப்பது தானே முறை??!!

சாவு வருமென்று எல்லாருக்கும் தெரியும்..!
ஆயினும், ஏதோ ஒரு நம்பிக்கையில் ஒவ்வொருவரும் தனது பங்களிப்பை இப்பூவுலகுக்கு அளிக்க ஓடிக்கொண்டு சாதிக்க சோதனைகளை கடந்து கொண்டு தான் இருக்கிறோம்..!

தற்கொலை செய்யக் கூட அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலை ஏன் வாழ்வில் வைக்க கூடாது????????

எந்த பிரச்சனைகளுக்கும் சாவு தீர்வல்ல..!

காதலில் தோற்றால் தற்கொலை..!
பரிச்சையில் பெயில் ஆனால் தற்கொலை..!
அப்பா திட்டினால் தற்கொலை..!

எங்கே போய்க் கொண்டிருக்கிறது இளைய சமூகம்???!!

எல்லாமே எளிதில் கிடைத்தால் வாழ்வு இனிக்குமா??
வெற்றி தான் சுவைக்குமா??

போராட்டம் தான் வாழ்க்கை..!
போராடி வென்றால் தான் அகமகிழ்ச்சி..!

தற்கொலை என்ற சொல்லை முதலில் கொலை செய்ய வேண்டும்..!

-------------------------

ராக்கி, ஒவ்வொரு தற்கொலை உத்தியையும் எத்தனை வலி கொண்டது என்று உணர்த்தினாலும், அந்த இறுதி வரிகளில் எனக்கு உடன்பாடில்லை.

தற்கொலை பற்றி எழுத என்னைத் தூண்டும் படி அமைந்த உங்கள் கவிதைக்கு எனது நன்றிகள்.

kavitha
05-02-2008, 09:20 AM
சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும்போது
வாழ்வதற்கு ஒன்று கூடவா இருக்காது?!

வலிகளை வழிகளாக
வாழ்க்கையின் அனுபவங்களாக
துக்கத்தின் துக்கமாக
மாற்ற
அதன்முன் தைரியமாக எதிர்நின்று
உன்னால் என்னை என்ன செய்யமுடியும்?
என்று நெஞ்சை நிமிர்த்தி
ஒரே ஒருமுறை கேட்டுப்பாருங்களேன்...

ராக்கி.... உங்கள் பெயரில் தான் எத்தனை திடம்!

"என்னை
சாகத்தூண்டியவர்கள் பார்த்து
அழுவதர்க்கு உடல் வேண்டுமே,"
நீங்கள் வாழ்வதைப்பார்த்து
அவர்களையும் சிரிக்க, சிந்திக்க வையுங்கள்....
அது தான் வெற்றி.

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
உங்களை நம்பி ஓராயிரம் பேர் இல்லாவிட்டாலும் ஒருவராவது இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு பயன் தருவதே வாழ்வின் ரகசியம்.
வாழ்க்கை வாழ்வதற்கே...

தனிமை தவிர்;
வெளிச்சம் கொணர்;
வானம் காண்;
உயரே பற;
உன் காலடியில்
தளைகள் தவிடு பொடி

kavitha
05-02-2008, 09:22 AM
சொல்லைக் கடந்த பெண்ணின் மௌனக் கூட்டுக்குள்
பல கோடி கோடி பொருள் குடியிருக்கும்..!" பூமகள் இந்த வரிகளைப் படித்ததும் உங்களைப்பாராட்டவேண்டும்போல் இருந்தது. பாராட்டுகள். :)

ஆதவா
05-02-2008, 09:39 AM
அய்யோ அய்யோ!! இப்படி போட்டி போட்டு பின்னூட்டம் கொடுக்கிறீர்களே!!! சொக்கா சொக்கா...

கவீ க்காவுக்கு தம்பியின் வரவேற்புகள்...

பூமகள்
05-02-2008, 09:41 AM
பூமகள் இந்த வரிகளைப் படித்ததும் உங்களைப்பாராட்டவேண்டும்போல் இருந்தது. பாராட்டுகள். :)
மிக்க நன்றிகள் அன்புச் சகோதரி..! :)

rocky
05-02-2008, 10:22 AM
மிக்க நன்றி ஓவியன், சாலைஜெயராமன், பூமகள், கவிதா, ஆதவா அவர்களே,

காயம்பட்ட நொடிகளில் உதித்த வார்த்தைகள், யோசிக்கையில் கோழைத்தனமாகவே தோன்றுகிறது, நிச்சயமாக வலிகளைத்தாண்டியே வாழ்க்கை என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன் இதுவும் அதில் ஒன்று. உங்களின் ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நிச்சயம் வாழ்வேன் என் இறுதி நம்பிக்கையாக முகம் தெரியாத அவள் இருக்கும் வரை.

rocky
05-02-2008, 10:32 AM
கல்யாணம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் நினைப்பது நிறைவேறிவிடும்.


நிச்சயமாக ஆரென் அண்ணா,

இறுதியாக அந்த ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறேன், திருமணத்திற்கு முன்பு சந்தோஷமாக இருந்தவர்களெல்லாம் அதற்குப் பிறகு அடங்கிப்போய் கஷ்டப்படுவது போல நான் இப்பொழுதே நிறைய துன்பங்களை நான் அனுபவித்துவிட்டேன், திருமணத்திற்கு பிறகுதான் ஒரு நல்ல சந்தோஷமான வாழ்க்கை என் மனைவியின் மூலம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன், அந்த நம்பிக்கையிலும் இப்படி குண்டைத் தூக்கிப் போடுகிறீர்களே நியாயமா? ( உங்களின் இந்தப் பதில் அண்னிக்கு தெரிந்தால் என்னவாகும், வெண்டைக்காய்க்கே வாய் பேச முடியாமல் வங்கிக்கட்டிக்கொண்டீர். இது மட்டும் தெரிந்தால்?).

aren
06-02-2008, 03:51 AM
நிச்சயமாக ஆரென் அண்ணா,

இறுதியாக அந்த ஒரு நம்பிக்கையில் தான் இருக்கிறேன், திருமணத்திற்கு முன்பு சந்தோஷமாக இருந்தவர்களெல்லாம் அதற்குப் பிறகு அடங்கிப்போய் கஷ்டப்படுவது போல நான் இப்பொழுதே நிறைய துன்பங்களை நான் அனுபவித்துவிட்டேன், திருமணத்திற்கு பிறகுதான் ஒரு நல்ல சந்தோஷமான வாழ்க்கை என் மனைவியின் மூலம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன், அந்த நம்பிக்கையிலும் இப்படி குண்டைத் தூக்கிப் போடுகிறீர்களே நியாயமா? ( உங்களின் இந்தப் பதில் அண்னிக்கு தெரிந்தால் என்னவாகும், வெண்டைக்காய்க்கே வாய் பேச முடியாமல் வங்கிக்கட்டிக்கொண்டீர். இது மட்டும் தெரிந்தால்?).

சந்தோஷமாக இருக்கனும்னா என்ன சொல்றீங்க. நல்ல பணக்காரியாக பார்த்து கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா?

கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் ஒரு நபர் நம் மன்றத்திலும் இருக்கிறார். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

rocky
06-02-2008, 04:57 AM
சந்தோஷமாக இருக்கனும்னா என்ன சொல்றீங்க. நல்ல பணக்காரியாக பார்த்து கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களா?

கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் ஒரு நபர் நம் மன்றத்திலும் இருக்கிறார். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.


நான் கூறிய சந்தோஷத்திற்க்கும் பணத்திற்கும் சம்பந்தமே கிடையாது அண்ணா, தேவயான அளவு பணம் என்னிடமே இருக்கிறது, அதுமட்டுமல்லாது மனைவியிடம் பணத்தைப் பெற்று அதன்மூலம் சந்தோஷமாக இருக்க நினைக்கும் மூன்றாம் தர சாதாரண ஆணாக நான் இருக்க விரும்பவில்லை, நான் அவளிடமிருந்து பெற நினைப்பது இதுவரை என்னிடம் இல்லாத நிம்மதியையே, எனக்கு அதுமட்டுமே போதும்.

ஜெயாஸ்தா
06-02-2008, 05:17 AM
அப்படியே இதையும் கொஞ்சம் படிங்க....
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9033