PDA

View Full Version : நண்டு கதை போல் மாறிய பங்கு சந்தைஜெகதீசன்
03-02-2008, 08:18 PM
ஒன்றை ஒன்று இழுக்கும் நண்டு கதை போல் மாறிய பங்கு சந்தை - சேதுராமன் சாத்தப்பன் - :lachen001::lachen001:
பிப்ரவரி 03,2008,03:13
புதனன்று இரவு அமெரிக்காவின் 'பெட்' மறுபடி 50 புள்ளிகள் 'ரேட் கட்' செய்தது வட்டி வீதத்தை 3 சதவீதம் அளவிற்கு கொண்டு வந்துள்ளது. ஆதலால், அமெரிக்காவில் புதன் அன்றும், உலகத்தின் பல பகுதிகளிலும் வியாழனன்றும் பங்குச் சந்தை சிறிது மேலே செல்ல ஆரம்பித்தது, இந்தியாவில் கீழே இறங்கியே முடிவடைந்தது. காரணம் என்ன? இந்திய நண்டுகளின் கதை தான் ஞாபகத் திற்கு வந்தது. இந்தியாவிலிருந்து நண்டுகள் ஏற்றுமதி செய்த ஒருவர் நண்டுகள் அடங்கிய கூடையை மூடாமலேயே அனுப்பினார். ஏன் மூடாமல் அனுப்புகிறீர்கள், நண்டுகள் வெளி யே வந்துவிடாதா என்று கேட்ட போது அதற்கு அவர் கூறிய பதில் என்ன தெரியுமா? இந்திய நண்டுகள் ஒன்றை ஒன்று மேலே செல்ல விடாது, ஒன்று மேலே செல்ல நினைக்கும் போது ஒன்று கீழே இழுத்து விடும் என்று. அது போல தான் பங்குச் சந்தை கதையும் உள்ளது. வியாழனன்று சந்தை சிறிது மேலே எழும்பியது. மதியத்திற்கு மேல் 110 புள்ளிகள் கீழே முடிவடைந்தது. சமீபகாலமாக ஆர்வமாக வந்த முதலீட்டாளர்கள் எல்லாம் சிறிது காலத்திற்கு பங்குச் சந்தையைப் பற்றியே நினைத்துப் பார்க்கமாட் டார்கள். அவ்வளவு நஷ்டம் அவர்களுக்கு.மேலும் சிறிய கம்பெனிகள், பெயர் தெரியாத கம்பெனிகள் எல்லாம் வாங்கியதால் அடி பலமாக உள்ளது. நேற்று முன்தினம் சாப்ட்வேர், ஆட்டோ, மெட்டல், ஆயில் கம்பெனிகளின் பங்குகள் மேலே ஏறியது. சமீபகாலமாக முதலீட்டாளர்களின் டார்லிங்காக இருந்த கட்டுமானத் துறை சிறிது மேலே செல்லமுடியாமல் தவிக்கிறது. ஒரு காலத்தில் மக்களின் மிகவும் விருப்பான பங்குகளாக இருந்த சாப்ட்வேர் பங்குகள் இன்றும்
பலரின் போர்ட்போலியாவிலேயே இல்லை. நேற்று முன்தினம் மும்பை பங்குச் சந்தை 584 புள்ளிகள் கூடுதலாகி 18,233 புள்ளிகளுடன், தேசிய பங்குச் சந்தை 179 புள்ளிகள் கூடுதலாகி 5,317 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

புதிய வெளியீடுகள் வோகார்டு மருத்துவமனை வெளியீடு விலை அதிகம் என்று பலரும் கருதியதால், நன்றாக செலுத்தப்படுவேண்டுமே என்ற எண்ணத்தில் கம்பெனி விலையை குறைத் துள்ளது. முன்பு 280 முதல் 310 வரை இருந்தது, தற்போது 225 முதல் 260 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.பி., கன்ஸ்ட்ரக்ஷன் ஜனவரி 1ம் தேதி துவங்கியுள்ளது. எம்மார் எம்.ஜி.எப்., கடந்த 1ம் தேதி துவங்கியது. இது வரும் 6ம் தேதி முடிவடைகிறது. இரண்டும் போடத்தகுந்த வெளியீடுகளாகும்.


என்ன பங்குகள் வாங்கலாம்? : சமீபத்திய காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது கீழே கண்ட கம்பெனிகள் நல்ல முடிவுகளை தந்துள்ளன. நியூமரிக் பவர், வோல்டாஸ், எக்சைடு, ஜக்ரன் பிரகாசன், கோதாவரி பவர், பி.ஜி.ஆர்., எனர்ஜி, இந்தியா கிளைகோல், நித்தின் பயர், இண்டோசில், செயில், ஹாவல்ஸ, . சின்டெக்ஸ, ஐ.சி.ஆர்.எ., கே.இ.ஐ., சுசுலான், இமாமி. குளோஸ் எண்டட் மியூச்சுவல் பண்டு என்றால் என்ன?

ஒபன் எண்டட் மியூச்சுவல் பண்டுகளில் யூனிட்கள் வாங்க வேண்டுமானால் அந்த மியூச்சுவல் பண்டில் எப் போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், குளோஸ் எண்டட் என்பது மூன்று அல்லது ஐந்து வருடங்கள் போன்று ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வருவது. அதுபோல் பண்டுகளில் முதன் முறை வாங்கினால் மியூச்சுவல் பண்டுகள் மூலம் வாங்கலாம். அதை விட்டால் செகண்டரி மார்க்கெட்டில் தான் வாங்க இயலும். அதாவது மார்க்கெட் ரேட்டில்.


தற்போது என்ன மாற்றத்தை செபி அறிவித்துள்ளது? :

அதாவது ஒரு மியூச்சுவல் பண்டு ஒரு குளோஸ் எண்டடு பண்டை துவக்கி நடத்தி வருகிறது என்று வைத்துக் கொண்டால் அந்த பண்டிற்கு ஏற்படும் செலவுகள் (அதாவது இஷ்யூ செலவுகள், விற் பனை செலவுகள், மார்க் கெட்டிங் செலவுகள் ஆகியவை ஒரு தடவையாக இவ்வளவு என்று செய்யாமல் அந்த பண்டு முடியும் வகையில் வசூலித்துக் கொண்டிருந்தனர். ஒரு மூன்று ஆண்டு கால மியூச்சுவல் பண்டிற்கு 6 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வந்தது. சமீப காலாமாக குளோஸ் எண்டட் மியூச்சுவல் பண்டுகள் அதிகமாகிக் கொண்டே வருவதால், மியூச் சுவல் பண்டு முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : பங்குச் சந்தை நன்றாக வரும் வாய்ப்புகள் உள்ளன. சந்தை மிகவும் கீழே இறங்கியிருக்கிறது, இது தான் சமயம் என்று பலர் பணத்தை எடுத்துக் கொண்டு, ஆடித் தள்ளுபடிக்கு துணி வாங்க வருவது போல் பங்குச் சந்தை வரலாம். அமைதியாக இருக்கும் மியூச்சுவல் பண்டுகளும் வாங்க ஆரம்பிக்கும்.

கடந்த ஜனவரியில் வாங்கிய அடி பலருக்கு மறக்காது. பிப்ரவரி துவக்கம் நன்றாகவே உள்ளது. :icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

நன்றி தினமலர்