PDA

View Full Version : நாளை மீண்டும் திறப்பு



ஜெகதீசன்
03-02-2008, 07:16 PM
எம்.ஆர்.எப் நிறுவனம் நாளை மீண்டும் திறப்பு
சென்னை : எம் .ஆர்.எப் நிறுவனம் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது . இது குறித்து அதன நிர்வாகிகள் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தி்**த்து உறுதி அளித்துள்ளனர்.:lachen001::lachen001::lachen001::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

தங்கவேல்
03-02-2008, 11:26 PM
இது டயர் கம்பனி தானே...

ஓவியன்
04-02-2008, 12:52 AM
செய்திகளைக் கொஞ்சம் விளக்கமாகவும், செய்திகளைப் பெற்ற ஊடகத்தையும் குறிப்பிட்டால் செய்திகளின் நம்பகத் தன்மை இன்னும் அதிகரிக்குமே, ஜெகதீசன் .

அன்புரசிகன்
04-02-2008, 07:07 AM
இது தினகரன் இல் வெளியாகியிருக்ம் செய்தி.





எம்.ஆர்.எப் நிறுவனம் திறப்பு : ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும்


சென்னை : எம் .ஆர்.எப் நிறுவனம் திறக்கப்படுவது குறித்து ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் எம்.ஆர்.எப்., நிர்வாகிகள் தெரிவித்தனர். திருவொற்றியூரில் உள்ள எம்.ஆர்.எப்., நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இதனால் அங்கு வேலை செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதுதொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. எம்.ஆர்.எப்., நிறுவனம் மீண்டும் திறக்காவிட்டால் நாட்டுடைமை ஆக்கப்படும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் எம்.ஆர்.எப்., நிர்வாகிகள் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தி**த்து பேசினர். எம்.ஆர்.எப்., நிறுவனம் சட்டவிரோதமாக கதவடைத்தது தொடர்பாக சென்னை ஐகோர்ட் கிளையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஓரிரு நாளில் நிறுவனத்தை திறப்பது குறித்து தெரிவிக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நன்றி - தினகரன் (http://www.dinamalar.com/2008FEB04/final.asp#2)