PDA

View Full Version : முதல் முத்தரப்பு போட்டியில் இந்திய அணி சாதனை



ஜெகதீசன்
03-02-2008, 07:13 PM
இந்திய அணி சாதனை::icon_rollout::icon_rollout:
நேற்று ஆஸ்திரேலியாவில் துவங்கிய முதல் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனைகளை படைத்துள்ளது.

முதலில் இந்திய அணி பேட் செய்தது. 1991-1992 ல் சஞ்சே மஞ்ரேகர்-கிரன் மோரே ஜோடி 7 விக்கெட்டுக்கு அதிகப்டசமாக 17 ரன்கள் மட்டுமே பிரிஸ்பேனில் எடுத்திருந்தது.இன்றை போட்டியில் தோனி -பதான் இருவரும் 7 வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து பிரிஸ்பேனில் இந்தியாவின் முந்தைய சாதனையை முறியடித்து , புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்திய அணி , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரு முறை 8 வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 40 ரன்களே எடுத்துள்ளது.முதலாவதாக 1989-1990 ல் பெங்களுருவில் நடந்த போட்டியில் சேட்டன் சர்மா -மனோஜ் பிரபாகர் ஜோடி(40) , 2002-2003 ல் சென்சூரியன் பார்க்கில் நடந்த போட்டியில் கும்ளே-ஹர்பஜன் சிங் ஜோடி(40 ) எடுத்துள்ளது.நேற்றைய போட்டியில் தோனி-ஹர்பஜன் ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்து இந்தியாவின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.

.

aren
03-02-2008, 10:57 PM
ஆனால் மொத்த ஆட்டத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், சொதப்பல் ஆட்டமாகத்தானே உள்ளது. எப்படியே மழை வந்து மக்கள் பிழைத்தார்கள்.

அடுத்த போட்டி எப்படி போகிறது என்று பார்க்கலாம்.

prady
04-02-2008, 06:40 AM
இந்தத் திரிக்கு இந்திய அணியின் புதிய சாதனை என்று தலைப்புக்குப் பதில் தப்பிப்பிழைத்த இந்திய அணியின் வெட்டிச் சாதனை என்றுதான் தலைப்புக் கொடுத்திருக்கவேண்டும். ஒருநாள் போட்டிகளுக்கு இளம் அணியை களம் இறக்கியிருக்கும் தேர்வாளர்கள் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் போதிய கால பயிற்சிக்கு ஏற்பாடு செய்யாமல் நேரடியாக போட்டிகளில் இறக்கிவிட்டது ஏன்? பலமான இரு அணிகளுக்கெதிராக போட்டி போடும் இந்திய அணி திறமையான இளம் வீரர்களைக் கொண்டிருந்தாலும் போதுமான பயிற்சி இல்லாததால் தடுமாறுவதை காண முடிகிறது. பதானும் இஷான் சர்மாவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு பழகிக்கொண்டுவிட்டார்கள். ஆனால் உத்தப்பா - ரொகித் சர்மா - போன்றவர்கள் தடுமாறுகிறார்கள். இவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் போர்முக்கு வரும்போது மற்றைய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுவிடும் போலிருக்கு. இதன் பின்னர் போட்டிகளில் வென்றும் புள்ளிகள் போதாமல் போய்விடும்.

வசீகரன்
04-02-2008, 06:51 AM
இதையெல்லாம் ஒரு சாதனையாக நினைப்பதை விட நேற்றைய போட்டியில்
நாம் உதை வாங்காமல் காப்பாற்றிய மழைக்கு நன்றி சொல்லவேண்டும்...
நிர்ப்பந்தங்களில் இது போன்று நடப்பதுண்டு.... நேற்றைய போட்டியை பார்த்தபோது
ரன் எடுக்க திணறிய காட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது...!

அன்புரசிகன்
04-02-2008, 07:00 AM
எவரும் பிரகாசிக்கவில்லை. அன்றய 20 20 மிகவும் மோசம். அடுத்தது நேற்றய ஆட்டம். ஹைலைட்ஸ் போனது போல் இருந்தது. படபடவென சாய்ந்தார்கள். இன்னமும் விரைவாக ஆட்டமிளக்கவேண்டியவர்கள். ஒரே பந்துபரிமாற்றங்களில் (ஜோன்ஸனினது) 3 பிடிகள் தவறவிடப்பட்டன. (ஹஸி பொன்டிங் கிளார்க்) அதில் கிளார்க்கினது பிடி சற்று சிரமமானதே. அடுத்த போட்டியில் நிலவரம் ஓரளவு தெரியும்.

அக்னி
07-02-2008, 04:41 PM
எவ்வளவோ அரிய சாதனைகளை நிகழ்த்திய இந்திய அணி, இப்படியான சாதனைகளை பெரியதாக கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதோ என்ற அச்சமே எழுகின்றது.
மீண்டும் வலுவான நிலையில் இந்திய அணி பிரகாசிக்குமா???

aren
08-02-2008, 09:09 AM
எவ்வளவோ அரிய சாதனைகளை நிகழ்த்திய இந்திய அணி, இப்படியான சாதனைகளை பெரியதாக கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதோ என்ற அச்சமே எழுகின்றது.
மீண்டும் வலுவான நிலையில் இந்திய அணி பிரகாசிக்குமா???

நன்றாக பிரகாசிக்கும் என்றே தோன்றுகிறது. புதியவர்கள் உற்சாகத்துடன் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார்கள். நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றப்பாதையில் செல்லும் என்றே நினைக்கிறேன்.

புதிதாக வந்தவர்களில் இஷான்ந் சர்மா, ரோஹிட் சர்மா, திவாரி ஆகியோர் நிச்சயம் பிரகாசிப்பார்கள் என்று நினைக்கிறேன். பங்கச் சிங் மற்றும் பரவீன் குமார் ஆகியோருக்கும் சந்தர்பம் கிடைத்தால் பிரகாசிப்பார்கள்.

இன்னொருவர் இருக்கிறார் அவர்தான் தமிழகத்தின் பத்ரிநாத். அவருக்கு இன்னும் சந்தர்பம் கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு சந்தர்பம் கொடுத்தாலும் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் விளையாடும்பொழுது கிடைத்தாலும் கிடைக்கும்.

நேசம்
08-02-2008, 11:05 AM
ஒரு மோசமான ஆட்டத்திலும் சாதனையா...? என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை..கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள்