PDA

View Full Version : சீனாவில் பனிச் சீற்றம்!!!



சராஜ்
03-02-2008, 02:26 PM
சீனாவில் பனிச் சீற்றம்

http://tamil.cri.cn/mmsource/images/2008/01/28/080128xuezai2.jpg

புள்ளிவிபரங்களின் படி, இத்திங்கள் 10ம் நாள் முதல் இன்று பிற்பகல் 2மணி வரை பனிச் சீற்றத்தால் 7கோடியே 78இலட்சத்து 60ஆயிரம் சீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 பேர் இதில் உயிரிழந்தனர் என்று சீனப் பொதுப் பணித் துறை அமைச்சகம் அறிவித்தது.

http://tamil.cri.cn/mmsource/images/2008/01/28/080128xuezai3.jpg

இதன் விளைவாக, ஹுனான், ஹுபெய், குய்செவ், சான்சி முதலிய 14 மாநிலங்களும் தன்னாட்சிப் பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சீற்றம் ஏற்ப்பட்ட பின், பொதுப் பணித் துறை அமைச்சகம் அவசரத் திட்டங்களை காலதாமதமின்றி துவக்கியது. தற்போது, 3இலட்சத்து 50ஆயிரத்துக்கு மோன மக்களுக்கு அவசரமாக உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை உத்தரவாதம் செய்யும் வகையில், 20க்கு மேற்பட்ட பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், நேரடி ஆட்சியிலான நகரங்கள் ஆகியவை, தற்காலிக விலைவாசிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

thanks tamil CRI FM