PDA

View Full Version : அஜீரணம் சில டிப்ஸ்



அனுராகவன்
03-02-2008, 08:47 AM
அஜீரண கோளாறுகளுக்கான டிப்ஸ்:

* தயிருடன் வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து சாப்பிடலாம்.

* புதினா சாறு எடுத்து சாப்பிடலாம் அல்லது புதினா இலையை கொதிக்க வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

* எந்த உணவு சாப்பிட்டாலும், அன்னாசி ஜூஸ் அரை டம்ளர் எடுத்துக் கொள்ளலாம்.

* மோருடன் கால் ஸ்பூன் மிளகு துள் சேர்த்து சாப்பிடலாம்.

* குளிர்ந்த பால் ஒரு டம்ளர் குடிக்கலாம்.

* வாழைப்பழம், தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் அஜீரணத்துக்கு மிகவும் நல்லது.

* இளநீர் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

* இளநீருடன் சிறிது இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.

* ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்*ர் குடிக்கவும்.


ம்ம் தெரிந்துக்கொள்ளுங்கள்..
-அனு

இதயம்
03-02-2008, 08:52 AM
வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள், அனுபவங்களை ஜீரணிக்க முடியாமல் அது அஜீரணத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. அதை ஜீரணிக்க உங்கள் கை வசம் ஏதேனும் டிப்ஸ் உண்டா அனு...?:icon_rollout::icon_rollout:

(முறைக்காதீர்கள்.. சும்மா லுலுவாயிக்கு தான் கேட்டேன்..!!:D:D நீங்கள் அளித்தவை பயனுள்ள குறிப்புகள்.. கண்டதை தின்னும் என் நண்பர்கள் சிலருக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி..!!)

அனுராகவன்
03-02-2008, 09:07 AM
வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள், அனுபவங்களை ஜீரணிக்க முடியாமல் அது அஜீரணத்தில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. அதை ஜீரணிக்க உங்கள் கை வசம் ஏதேனும் டிப்ஸ் உண்டா

ஓ!! இதயம் உங்களுக்கா .!.
என்னிடம் பல உண்டு எதை சொல்ல..!!
முதலில் உங்களிடம் உள்ள எல்லா (அதாவது)
இப்போது உள்ள சூழ்நிலையே அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்..
அதை ஏற்றுக்கொண்டாலே பாதி தீர்ந்துவிடும்..
அப்பரம் நல்ல உணவினை நங்கு மென்று, முழுகவனமும் உண்பதியிலே இருக்கட்டும்..
டீ.வி பார்க்க வேண்டாம்(சாப்பிடும்போது)..
ம்ம் எது போதும் என்று நினைக்கிறேன்..
ம்ம் மேலும் அப்பரம் தாரேன்..!
என் நன்றி இதயம்..!!!!

ஜோய்ஸ்
15-04-2008, 02:48 PM
ஓ!! இதயம் உங்களுக்கா .!.
என்னிடம் பல உண்டு எதை சொல்ல..!!
முதலில் உங்களிடம் உள்ள எல்லா (அதாவது)
இப்போது உள்ள சூழ்நிலையே அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்..
அதை ஏற்றுக்கொண்டாலே பாதி தீர்ந்துவிடும்..
அப்பரம் நல்ல உணவினை நங்கு மென்று, முழுகவனமும் உண்பதியிலே இருக்கட்டும்..
டீ.வி பார்க்க வேண்டாம்(சாப்பிடும்போது)..
ம்ம் எது போதும் என்று நினைக்கிறேன்..
ம்ம் மேலும் அப்பரம் தாரேன்..!
என் நன்றி இதயம்..!!!!

நம் இதயத்திர்க்கு மிகச் சிறப்பான ஒரு மருத்துவத்தை குறிப்பிட்டிருந்தீர்கள்,மிக்க நடைமுறைக்கு ஒப்பதாக இருக்கிறது.இப்படி பல மர்ந்துகளும் மற்றும் மனநலம் காக்கும் அறிவுறைகளும் இன்னும் பல இருத்தால் தயவு கூர்ந்து எங்களுக்கு அறிவிக்கவும்.
நன்றி.

இனியவன்
16-04-2008, 02:06 AM
பயனுள்ள தகவல்கள் அனு. பகிர்வுக்கு நன்றி.