PDA

View Full Version : சாவி எங்கே இருக்கிறது



அனுராகவன்
03-02-2008, 07:52 AM
மாகாராஜா போல
வாழ வேண்டிய நீ,
உன்னுள் இருக்கும்
சொர்க்கத்தின் சாவியை
தொலைத்துவிட்டு;
தொலைந்ததைக்
கூடத் தெரியாமலும்,
தேடாமலும்,
அசுரனைப் போலவும்,
வாழ்வில் அல்லல்பட்டு
ஏன் வாழ வேண்டும்???
என்பதை உணர்ண்டு
சொர்க்கத்தின்
சாவியை தேட
ஆரம்த்தால்தான்
சாவி நம் கையில்
இருக்கிறது என்பது
தெரிய வரும்.!!

'தேடுதல்- தியானம்'
சாவிதான் - ஞானம்..

தியானம் செய்யுங்கள்!
ஆனந்தத்தை அடைய முயலுங்கள்!
ஞானம் தானாக கிடைக்கும்..!

-அனு

நாகரா
03-02-2008, 08:49 AM
'தேடுதல்- தியானம்'
சாவிதான் - ஞானம்..

தியானம் செய்யுங்கள்!
ஆனந்தத்தை அடைய முயலுங்கள்!
ஞானம் தானாக கிடைக்கும்..!

-அனு


பொருள் பொதிந்த வரிகள். நல்லதோர் நவகவிதை. வாழ்த்துக்கள் அனு. இன்னும் பல ஏற்ற மிகு கவிதைகளைத் தருவீர். தமிழ் மன்றத்தில் ஞான ஒளி உமிழ்வீர். நன்றி

அனுராகவன்
03-02-2008, 08:57 AM
பொருள் பொதிந்த* வ*ரிக*ள். ந*ல்ல*தோர் ந*வ*க*விதை. வாழ்த்துக்க*ள் அனு. இன்னும் ப*ல* ஏற்ற* மிகு க*விதைக*ளைத் த*ருவீர். த*மிழ் ம*ன்ற*த்தில் ஞான* ஒளி உமிழ்வீர். ந*ன்றி
நன்றி நாகரா..!
உங்கள் கருத்துக்கு..!!
ம்ம் தொடர்ந்து வாருங்கள்!!!

சிவா.ஜி
03-02-2008, 09:14 AM
பல சமயங்களில் இப்படித்தான் நிகழ்கிறது.சாவி நம்மிடமே இருப்பதை மறந்து விடுகிறோம்.அப்படியே தொலைத்து விட்டாலும், யாரோ ஒருவர் கண்டெடுத்துக் கொடுத்தாலும் அது நம்முடையதல்ல என்று வாய்ப்பை மறுத்துவிடுகிறோம்.ஞானத்தின் தேடல் மிக ஆழமானது.நல்ல கவிதைக்கு வாழ்த்துகள் அனு.

அனுராகவன்
03-02-2008, 09:19 AM
பல சமயங்களில் இப்படித்தான் நிகழ்கிறது.சாவி நம்மிடமே இருப்பதை மறந்து விடுகிறோம்.

ஆமா சிவா.ஜி அவர்களே!!
என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் வாழ்வதேன்?
அதனால் என்ன பயன்...
ம்ம் என் நன்றி..