PDA

View Full Version : சிரிப்பு



அனுராகவன்
03-02-2008, 07:34 AM
சிரிப்பு அதுதான் மனிதனின் முதல் பொறுப்பு(பூரிப்பு)
சிரிக்க நம் துன்பம் அகலும்..அதனால் சிரியுங்கள்!!

சிரித்தால் நம்மை பைத்தியம் என்றுதானே சொல்வர்!
சிரிக்காமல் இருந்தால் நம்மை துக்கமும்,
கவலையும் மாறி மாறி ஆட்சிசெய்யும்
அப்போது சொல்பர்கள் என்ன செய்வார்கள்??
என்ன வேண்டும் இப்ப முதலில்.!

கவலையே மட்டும் வேண்டி அழைக்கும் நாம்
சிரிப்பை(ஆனந்தத்தை) மட்டும் தொலைக்கிறோம் ஏன்?
கவலை பட காரணம் ஆயிரம்
சந்தோசத்தை மட்டும் ஏன் தேடு(அடை)வதில்லை..!!

உடலுக்கு செய்யப்படும் மஸாஜுக்கு பெயர் சிரிப்பு!
சிரிக்கையில் மனிதன் ஞானியாகிறான்!
ஞானி மனிதனாக மாறுகிறார்!
சிரிப்போ ஓர் அகங்கார அழிப்பான்!
சிரிப்போ சொர்க்கத்தின் வாசல்!
சிரிப்போ ஆனந்த தெரிப்பு!
தியானம், ஆனந்தம் நமக்கு சொந்தம்!
நாம் சிரிக்கையிலே....!!
அப்ப சிரிக்க பழகுக..!!
கவலையே மறக்க சிறந்த வழி வேறுயில்லை உலகில்!!...
சிரிங்கள் நண்பர்களே!!
சிரிங்கள் உலகம் உங்கள் கையில்...!!!!

-அனு..

meera
03-02-2008, 10:39 PM
சிரிங்கள் உலகம் உங்கள் கையில்...!!!!

-அனு..

சிரிப்பு ஒரு நல்ல மருந்து.அழகான வரிகள்

கருவாய் சுமந்தேன்
புன்னகையை
காணாமல் போனது
கவலை.


வாழ்த்துகள் அனு

அனுராகவன்
04-02-2008, 12:16 AM
கருவாய் சுமந்தேன்
புன்னகையை
காணாமல் போனது
கவலை.


ஓ நன்றி மீரா..!!
ம்ம் என் வாழ்த்துக்கள்..!
சிரிப்பு ஒரு மனிதனுக்கு மட்டுமே உரிய மிக பெரிய கலை..
மற்ற மிருகங்களுக்கு இது கிடையாது..
அதனால் இன்றே செய்வோம்..
ம்ம் என் நன்றி!

ஓவியன்
04-02-2008, 12:59 AM
"சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" என்ற வரிகளை மீள ஞாபக அலைக்குள் சிக்க வைத்த கவிதை.......!! :icon_b:

அனுராகவன்
05-02-2008, 01:02 PM
"சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" என்ற வரிகளை மீள ஞாபக அலைக்குள் சிக்க வைத்த கவிதை.......!! :icon_b:

நன்றி ஓவியன்!
ம்ம் என் நன்றி!!
தொடர்ந்து வருக..!!!

அனுராகவன்
12-02-2008, 03:56 AM
சிரிப்பு ஒரு நல்ல மருந்து.
அழகான வரிகள்


சிரிக்க காசு வேண்டுமா..?
ஏன் அழுகிறீகள்..?
அழுதால் கண்ணீர்தான் சொந்தம் !
சிரித்தால் உலகமே சொந்தம்..!
இப்ப புரிகிறதா??

இளசு
12-02-2008, 05:52 AM
பாராட்டுகள் அனு அவர்களே..

உடலுக்கு மட்டுமன்று.. மனதுக்கு(ம்) மசாஜ் - சிரிப்புதான்!

ரோஜா சிரித்தால் ஜொலிக்கும் இதழும்
மழலை சிரித்தால் மின்னும் கன்னமும் -
இவ்வுலகில் சலிக்கா அழகுச் சுரங்கங்கள்!

சிரிக்கும் முகம் மலர்ச்சோலை!
பார்க்கும் முகத்தையும் மலரவைக்கும் சங்கிலிக்கணு!

மலர்ந்த முகம் - மிகச்சிறந்த முகவரி அட்டை!

மீராவின் 'சிக்'கனக்கவிதை இத்திரிக்குக் கூடுதல் அழகு..

அனுராகவன்
12-02-2008, 05:59 AM
ரோஜா சிரித்தால் ஜொலிக்கும் இதழும்
மழலை சிரித்தால் மின்னும் கன்னமும் -
இவ்வுலகில் சலிக்கா அழகுச் சுரங்கங்கள்!

ம்ம் மிகவும் நன்று!!


சிரிக்கும் முகம் மலர்ச்சோலை!
பார்க்கும் முகத்தையும் மலரவைக்கும் சங்கிலிக்கணு!

மலர்ந்த முகம் - மிகச்சிறந்த முகவரி அட்டை!

மீராவின் 'சிக்'கனக்கவிதை இத்திரிக்குக் கூடுதல் அழகு..
நல்லது இளசு..
ம்ம் என் நன்றி

ஜெகதீசன்
22-02-2008, 11:23 AM
நல்லாருக்கு அனுவக்கா

அனுராகவன்
22-02-2008, 02:50 PM
நல்லாருக்கு அனுவக்கா

நன்றி தம்பி.
தொடர்ந்து வாங்க..

ஆர்.ஈஸ்வரன்
01-08-2008, 10:22 AM
சிரிப்பு கவிதைக்கு புன்னகையுடன் நல்வாழ்த்துக்கள்