PDA

View Full Version : கடன்



அனுராகவன்
03-02-2008, 06:59 AM
கடன், பகை, நெருப்பு மூன்றையும் மிச்சமைக்காதே..
வைத்தால் உன் கதி அதோகதி..!!
கடன் வாங்குவது என்பது முன்பே யோசிக்காமல்
வாங்கி தன் வாழ்க்கையே விற்பதற்கு சமமே..!!
கடனாக பணத்தை மட்டும் வாங்குவத்தில்லை நாம்
அதற்காக மற்றவரின் வாழ்க்கையும் வாங்குகிறோம்
கடனாக அவர்களின் ஆசையும் கூட ...!!
கடன் வாங்காதே!!
கடன்காரனாக மாறாதே!!
பின்பு உன் வாழ்க்கையே விற்காதே!!
வாழ்வது நாம் முறையே- வாழ்க்கை வாழ் உனக்காக..!!
எல்லாம் உனக்காக..!!

-அனு...!

இதயம்
03-02-2008, 07:11 AM
கடனே என்று சிலவற்றை எழுதாமல் கடன் வாங்குவதை கூட கருத்து வைத்து எழுதின நீங்கள் உண்மையிலேயே கருத்து கண்ணம்மா தான். கடன் வாங்குதல், கொடுத்தல் என்பது அதன் இலக்கணங்களுக்குள் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால், எல்லை தாண்டும் போது அது உற்ற உறவுகளையும் சீரழித்து விடும். கடனின் பரிணாம வளர்ச்சி தான் பலர் குடியை கெடுக்கும் வட்டி..!! பெரும்பாலும் கடன் பேராசையின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. அதற்கு ஒரே தீர்வு போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இருப்பதே.!

நற்கருத்தை நல்லவர்கள் மத்தியில் வைத்த உங்களுக்கு வட்டியில்லா கடனில் என் இதயம் நிறைந்த நன்றிகள்..!!

அனுராகவன்
03-02-2008, 07:39 AM
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இருப்பதே.!

நன்றி இதயமே!!
கடன் நமக்கு கீழ்யிருதால் ஒன்றுமே இல்லை..
ஆனால் நம் வரவுக்கு மீறியிருந்தால் அதற்கு நாம் அடிமை.
ம்ம் கருத்துக்கு என் நன்றி