PDA

View Full Version : பழமொழிகள்



mgandhi
16-10-2006, 07:44 PM
பண்டைகாலம் தொட்டு நம் தமிழர்கள் வாழ்கையில் ''பழமொழிகள்''முக்கியமான இடத்தை பெற்றுவந்தன இப்போதும் பல கிராமங்களிலும்,நகரங்களிலும் சில பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன சில காலப்போக்கில் மறைந்து விட்டன.
பழமொழிகள் நம்முடைய வாழ்கையில் ஓவ்வருவருக்கும் ஏதாவது ஓரு சூழலில் மிகவும் பொருத்தமாக இருப்பதை நாம் அனைவரும் அனுபவ பூர்வமாக உணர்த்து இருப்போம்.
அவர்றில் சிலவற்றை இந்த மன்றத்தின் சர்பாக உங்களுடன் பகிர்த்துகொள்ள என்னி இங்கு பதிவு செய்கிறேன் நண்பர்களும் தாங்கள் கோட்டு அறித்தவற்றை இந்த பகுதியில் பதிவுசெய்யும் படியும் கோட்டு கொள்கிறேன்.

முதலில் ''அ'' கர வரிசையில் இருந்து துவங்குகிறேன்.


அகதிக்கு தெய்வமே துணை.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

அகல இருந்தால் நிகள(நீள) உறவு.

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவன்.

நீங்களும் ''அ'' கர வரிசையில் இருந்து துவங்குங்கள்.

பென்ஸ்
17-10-2006, 04:13 AM
காந்தி..
இதே போலவே இன்னும் சில (ஒன்று அல்ல) திரிகள் உள்ளனவே.. அவற்றை மேலேலுப்பி அவற்றில் இல்லாத பழமொழிகளை மட்டும் பதிக்கலாமே...

pradeepkt
17-10-2006, 04:50 AM
அத்தோடு... ஒவ்வொரு பழமொழியாக எடுத்து சிறு சிறு கதைகள் மூலம் விளக்கமும் தரலாமே...

ஓவியா
17-10-2006, 04:27 PM
நன்றி காந்தி..

அகல இருந்தால் நிகள(நீள) உறவு.

இந்த பழமொழியை நான் கேட்டதே இல்லை....

சான்றோர்கள் யாரவது விளக்கினால் நலம்

நன்றி

அறிஞர்
17-10-2006, 04:34 PM
காந்தி..
இதே போலவே இன்னும் சில (ஒன்று அல்ல) திரிகள் உள்ளனவே.. அவற்றை மேலேலுப்பி அவற்றில் இல்லாத பழமொழிகளை மட்டும் பதிக்கலாமே... அதை தொகுக்கும் வேலையை பென்ஸை செய்ய சொல்லலாமா..... :rolleyes: :rolleyes: :rolleyes:

தொடர்ந்து கொடுங்கள் காந்தி.. பழைய பதிப்புக்களின் லிங்கை கண்டுபிடித்தவுடன் அனைத்தையும் இணைத்துக்கொள்ளலாம்.

mgandhi
17-10-2006, 07:18 PM
நன்றி காந்தி..

அகல இருந்தால் நிகள(நீள) உறவு.

இந்த பழமொழியை நான் கேட்டதே இல்லை....

சான்றோர்கள் யாரவது விளக்கினால் நலம்

நன்றி

கிட்ட இருந்தால் முட்டப் பகை

சற்று விலகி இருந்நல் தான் உறவு இணிக்கும்

mgandhi
17-10-2006, 07:25 PM
அகத்தின் அழகு முகத்திலே.
அடி உதவுறாப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
இனம் இனத்தையே சாரும்.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
ஈர நாவிற்கு எலும்பில்லை.
உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
உளவு இல்லாமல் களவு இல்லை.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
எங்கே பர வாசனை?
கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
கரும்பு தின்னக் கூலியா?
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
குடல் காய்ந்தால் குதிரையும் புல்லைத் தின்னும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கெடுவான் கேடு நினைப்பான்.
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
தன் கையே தனக்கு உதவி.
தன் முதுகு தனக்கு உதவி.
தன் வினை தன்னைச் சுடும்.
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
துணை போனாலும் பிணை போகாதே.
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
நிறை குடம் நீர் தளும்பாது.
நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
நெருப்பு இல்லாமல் புகையாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
பாம்பின் கால் பாம்பு அறியும்
பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.
பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
விளையாட்டு வினையாயிற்று.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.
வெறுங்கை முழம் போடுமா?
வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?

mgandhi
22-10-2006, 06:36 PM
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
இரைச்சல் இலாபம்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அறச் செட்டு முழு நட்டம் .
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அறமுறுக்கினால் அற்றும் போகும்.


அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி
தான் தியாகம் வாங்கவேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அற்ப அறிவு அல்லற் கிடம்.

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

mgandhi
27-10-2006, 06:35 PM
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

mgandhi
30-10-2006, 05:38 PM
இ, ஈ

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
இராச திசையில் கெட்டவணுமில்லை
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி
இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.

ஓவியா
30-10-2006, 06:34 PM
சார் ,
மன்னிக்கவும் ஒரு கேள்வி
பழமொழிக்கு அர்த்தம் தெரியாமல் படித்து என்ன பயன்?

தாழ்மையுடன்
ஓவியா

mgandhi
02-11-2006, 05:11 PM
உ, ஊ

உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

'' உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார்
தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ''
[ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]
இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலோபிக்கு இரட்டை செலவு.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.
உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
[இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]

ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊண் அற்றபோது உடலற்றது.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

mgandhi
07-11-2006, 06:07 PM
எ, ஏ


எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்
என்ன தருவாய் ?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[நெருப்பில்லாது புகையாது]

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
எறும்புந் தன் கையால் எண் சாண்

ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்
கோபம்.

mgandhi
22-11-2006, 05:29 PM
ஐ, ஒ, ஓ, ஒள

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

mgandhi
30-11-2006, 06:08 PM


கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.

கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கண் கண்டது கை செய்யும்.
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கரணம் தப்பினால் மரணம்.
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

mgandhi
03-12-2006, 05:34 PM
கா

காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்

pradeepkt
04-12-2006, 04:59 AM
அத்தோடு... ஒவ்வொரு பழமொழியாக எடுத்து சிறு சிறு கதைகள் மூலம் விளக்கமும் தரலாமே...




சார் ,
மன்னிக்கவும் ஒரு கேள்வி
பழமொழிக்கு அர்த்தம் தெரியாமல் படித்து என்ன பயன்?

தாழ்மையுடன்
ஓவியா


ஐயா இந்த வேண்டுகோள்களையும் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா? பழமொழிகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிற மாதிரி இருக்கு :)

mgandhi
06-12-2006, 04:57 PM
நன்பர் களே உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாள் இப்பதிவை நான் நிருத்திக் கெள்கிறேன்.

paarthiban
06-12-2006, 05:07 PM
காந்தி, நல்ல பதிவு. இன்னும் பதியுங்கள் ப்ளீஸ்

ஓவியா
06-12-2006, 05:28 PM
காந்தி, நல்ல பதிவு. இன்னும் பதியுங்கள் ப்ளீஸ்

ஆம் பார்த்திபன்

இந்த பதிவுகள் அருமையான பதிவுதான்....

நண்பர் காந்தியின் அருஞ்செவையைக்கு ஒரு பாராட்டு

ஓவியா
06-12-2006, 05:32 PM
நன்பர்களே உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாள் இப்பதிவை நான் நிருத்திக் கெள்கிறேன்.


அன்பு நண்பரே

தங்களின் ஓவ்வொரு பதிவும் முத்துப்போல், அருமையோ அருமை

இருப்பினும்
''பழமொழிகள்'' விளக்கங்கள் இல்லாமல் இருப்பின் யாருக்கு என்ன லாபம்...????????????

விருப்பங்களும் விளக்கங்களும் இரண்டு தனி விசயங்கள்......

தங்களின் விருப்பபடியே செய்யவும்

நன்றி

அறிஞர்
06-12-2006, 06:25 PM
காந்தி.. தொடர்ந்து.. கொடுங்கள்.. நண்பர்களுக்கு மிகவும் பிரயோஜனமானவை....

பிறகு சிலர் விளக்கம் கொடுப்பர்.... பொறுங்கள் ஓவியா

mgandhi
06-12-2006, 06:28 PM
காந்தி.. தொடர்ந்து.. கொடுங்கள்.. நண்பர்களுக்கு மிகவும் பிரயோஜனமானவை....

பிறகு சிலர் விளக்கம் கொடுப்பர்.... பொறுங்கள் ஓவியா
மிக்க நன்றி,ஓவியா, பார்த்திபன்,அறிஞர்.

mgandhi
06-12-2006, 06:35 PM
கி, கீ, கு, கூ

கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.

குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்றக் குருவில்லை.
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்பை உயரும் கோபுரம் தாழும்.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குரங்கின் கைப் பூமாலை.
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

இளசு
06-12-2006, 07:23 PM
வாழ்க்கைச் சம்பவங்களை சுவைபட சொல்வதற்கும் -
பிறர் வாழ்விலிருந்து ' சாறு' எடுத்து கற்பதற்கும்
பழந்தமிழர் விட்டுச் சென்ற பொக்கிஷங்கள் இவை..

ஒவ்வொரு பழமொழியும் ஒரு தனிக்கதை சொல்லும்!

நல்ல பதிவை காந்தி தொடர வேண்டுகோள்..

(கடமையச் செய்வோம் - பலன் பின்னால் வரும்!)

pradeepkt
07-12-2006, 04:59 AM
நன்பர் களே உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாள் இப்பதிவை நான் நிருத்திக் கெள்கிறேன்.
விருப்பம் இல்லைன்னு யாருங்க சொன்னது? தப்பா நினைச்சுக்காதீங்க.
நான் சொல்ல வந்தது சின்னக் கதைகள் மூலம் சொன்னால் இந்தப் பழமொழிகள் நம் மக்கள் மனதில் காலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் என்பதால்தான்.

mgandhi
07-12-2006, 05:47 PM
மன்ற நன்பர்கள் விருப்பபடி பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் தருகிறேன் எனக்கு தெரிந்த, படித்த,கேட்ட, வரையில்

கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு? பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்? எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள் மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்

இந்த கருத்தை யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்

கடைதேங்காயை எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.

ஈகை ஒரு மனிதனுக்கு சிறப்பைத் தரும். ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு பகுதியைசேமிப்பது எப்படி நல்லதோ,அதுபோலவே ஒரு பகுதியை தர்ம்ம்செய்வதும் நல்லது.அதுவும் நம்முடைய சுய வருவாயில் செய்யப்பட்ட வேண்டும். அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது.இந்த கருத்தை தான் இப்பழமொழி உனர்த்துகிறது.


அரசமரத்தை சுற்றி வருவதற்குள்
அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் தினமும் அரச மரத்தைச்சுற்றி வந்தால் குழந்தைபேறு உண்டாகும் என்பது ஒரு நம்பிக்கை இந்த பழமொழி கூறுவது அவசரம் பற்றியே
மரத்தை சுற்றிக் கொண்டே வரும்போது அடிவயிறு பெருத்துவிடுமா என்ன? கரு உருவாக வேண்டும் மாதங்கள் சில போக வேண்டும் அல்லவா.

pradeepkt
08-12-2006, 03:29 AM
ம்ம்ம்.... இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.
மிக்க நன்றி காந்தி.

ஏன் சொல்றேன்னா ஒரு பரீட்சையில் "well begun is half done" என்பதன் பொருளறியாமல் "நன்றாகத் தொடங்கியது பாதியிலேயே முடிந்தது" என்று தப்பாக உணர்ந்து முட்டை மார்க்கு வாங்கினேன்.

mgandhi
08-12-2006, 06:02 PM
இருட்டு வீட்டுக்குப் போனாலும்
திருட்டு கை கேட்காது


மனிதன் தன் செயலைமாற்றிக் கொள்வது கடினம்.இயல்பாய் அமைந்து விட்ட சுபாவம் எளிதில் மாறாது மறையாது.இதனால்""தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்""
என்று ஒரு பழமொழி வந்தது.திருடுயே பழக்கப்பட்டவன் திருட்டை விடுவது கடினம்.யொய் பேசி பழக்கப்பட்டவன் பொய்யே பேசுவான்.இந்தகருத்தை சொல்லும் பழமொழி இது.
இருட்டு-வறுமையான வீடு என்பதை குறிக்கும்


இப்படி மனித இயல்பு மாறாது என்ற கருத்தில் வழங்கப்படும் மற்றோரு பழமொழி.

கிழிஞ்ச சேலையும்
புழுங்கரிசி தின்ன வாயும்
சும்மா இருக்காது.
சேலை பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட கிழியும்.
கிராமத்தில் சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை
போட்டுகொண்டே இருக்கும்.

இந்த வாய் மெல்லுதல்க்கு வேறு ஒரு கருத்தும்
உண்டு அது.


சும்மா இருந்த வாய்க்கு
கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி..
சாதாரணமாகவே (வாய் சதா அசை) பிறர்
பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு
அவனை பற்றி செய்தி கிடைத்துவிட்டால்
கேட்கவா வேண்டும்?

mgandhi
09-12-2006, 05:07 PM
ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்.

ஆநெய்க்கு- பூநெய்க்கு - என்றால் ஆவினம் (பசு) பசுவின் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வனப்பு ஏற்படும்.பூநெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேனை முதுமைக் காலத்தில் சப்பிட்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்பதை உணர்த்தவே இந்த பழமொழி பிற்காலத்தில் உருமாரியது..

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

என உருமாறியது.
வலிமை யானவனுக்கு ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.

கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?
இந்த பழமொழு உருமாறியிருக்கிறது. கைபுண் அல்ல"கைப்பூண்"அணியக்கூடிய ஆபரணம்,அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி அவசியம்.ஆனால் கையில் அணியும் பரணத்தைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள மூன்றாவது மனிதன்க் கேட்க வேண்டிய அவசியமில்லை
என்பதே இதன் உட்கருத்து.

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே!
இந்த பழமொழி உருமாறியிருக்கிறது. கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும், செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து.
கன்னம் என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்"
கப்பல் கடலில் முழ்கி பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ
மீண்டும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமே தவிர, கன்னக்கோல்
வைத்து திருடி பிழைக்கக் கூடாது.
"கன்னக்கோல்"-அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு திருடுவார்கள்.

இளசு
09-12-2006, 10:45 PM
அருமை காந்தி...

கன்னக்கோல் விளக்கம் நான் அறியாதது.

நன்றி..


அரசமரப் பழமொழி கருவுறுதலுக்கு மட்டுமல்ல..
விவசாயம், வணிகம், கல்வி உள்பட... உழைப்புக்கும் பலனுக்கும்
உள்ள முதிரும் இடைவெளியில் பொறுமை காக்க வேண்டும்..

ஓவியா
10-12-2006, 01:41 PM
இப்பதான் இந்த பதிவு ரொம்ப அருமையாய் இருக்கு

நன்றி காந்தி

mgandhi
10-12-2006, 05:22 PM
பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
இந்த பழமொழி உருமாறி இருக்கிறது.சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும், கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதால்,பந்திக்கு முந்தவேண்டும், சண்டை ச்ச்சரவுகள் ஏற்படும்பொழுது நாம் பிந்திச்சென்று விடவேண்டும். என்று எண்ணத் தோன்றும்.
இது உண்மையல்ல!

சாப்பிடுவதாற்க்கு நம் கை (வலது கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம்.
எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும்.இதுவே பந்திக்கு முந்தும்,படைக்கு பிந்தும்என்று சொல்கின்றார்கள்.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
இப்பழமொழி உருமாறியிருக்கிறது.மண்ணால் செய்யப்பட்டிருக்கும் குதிரையின்மீது ஏறி அமர்த்து ஆற்றில் சென்றால் அது கரைந்துவிடும். என்று எண்ணத் தோன்றும்.
பொதுவாக ஆறு இருக்கும் இடத்தில் மண்மேடுகள் அதிகம் இருக்கும்.அந்த மண்மேடு திடீரென்று கரைந்து விடும் தன்மையுடையது. இதை மண்குதிர் என்பர்.இந்த மண்குதிரை
நம்பி அதன்மீது கால் வைத்தால் நாம் ஆற்றில் மூழ்கவும் நேரலாம் என்பதால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதேஎன்று நம் முன்னோர்கள் கூறினர்.

pradeepkt
11-12-2006, 05:00 AM
காந்தி... அசத்திட்டீங்க... இதில் பல பழமொழிகள் நான் தவறான கண்ணோட்டத்தில் கண்டவை. நீங்கள் இதே போல் அனைத்துப் பழமொழிகளுக்கும் சரியான விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன்.

வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

ஓவியா
11-12-2006, 11:48 AM
அடடே அடடே

அருமை அருமை

அசத்துரீங்க காந்தி

meera
11-12-2006, 03:32 PM
நன்றி காந்தி,

அருமையான விளக்கம்.

மதி
12-12-2006, 01:56 AM
நல்ல விளக்கங்கள் காந்தி..!

mgandhi
12-12-2006, 04:26 PM
அடியாத மாடு படியாது

ஒரு மாடு அடங்காமல் துள்ளித் திரிந்து கொண்டும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தால்
அந்த மாட்டை கம்பால் அடித்து நம் கட்டளைக்குப் பணியும்படி
செய்ய வேண்டும்.அடிக்காமல் தடவிக்கொடுத்து வளர்த்தோமேயானால் அது நம் கட்டளைக்கு பணியாது. என்று எண்ணத் தோன்றும். இது உண்மையல்ல!
இப்பழமொழி மாட்டின் மூலம் நமக்குச் சொன்னதாகும். அதாவது நம் மனமென்னும் மாட்டை (அடங்காத)அடக்காமல் அதன்போக்கிற்கு விட்டுவிட்டோமேயானால் நம்எதிர்காலம் என்பது சூன்யமாகிவிடும். என்பதால், நம் மனதை அவ்வப்போது எது தவறு எது சரி என்பதையறிந்து மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆசைஅறுபது நாள்
மோகம் முப்பது நாள்

இப்பழமொழி காமத்திற்கு மட்டும் சொன்னதன்று.பொதுவாக மணமுடித்து வாழத் துவங்கும் தம்பதிகள்அநேக ஆசைகளும்,மோகமும் ஏற்படும். அந்த ஆசையும்,மோகமும்
சேர்ந்து தொண்ணூறு நாள் கழிந்த பின் மங்கத் தொடங்கும்.
அந்த தொண்ணூறு நாளில் இருந்த உற்சாகமும்,மனக்கிளர்ச்சியும் பின்னாளில் குறையும்.இதையே பல்வேறு செல்வத்துடனும் ஒப்பிடலாம் .உதாரணத்திற்கு நாம் புதிதாக ஒரு கலர்டிவி வாங்கினோமேயானால் அந்த டிவியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வோம், பிறகு நாள் செல்லச் செல்ல முன் இருந்த அக்கறை குறையும். இண்னும் பல உதாரணம் கூறலாம். நாம் புதியதாக இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பும்,மரியாதையும் தருகிறோம்.

mgandhi
14-12-2006, 04:59 PM
நாய் விற்ற காசு குறைக்காது
பூ விற்ற காசு மணக்காது

நாய்,பூ விற்ற பணம் முறையே குறைக்கவே, மணக்கவே செய்யாது.அது போல தப்பான வழியில் வந்த பணத்திற்க்கு எந்த
வித்தியாசமும் தெரியாது.அதற்காக நாம் தப்பான வழியில் பணம் சம்பாதிக்கக் கூடாது.என்பதை உணர்த்தவே இந்த பழமொழி.

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை மாதம் தான் அறுவடை காலம் அப்போதுதான் நெல், கரும்பு,வாழை பேன்ற பயிர்கள் அறுவடை செய்யப்படும்.அந்த சமயத்தில் விவசாயிகளிடம் நல்ல பணப் புழக்கம் இருக்கும். பணம் இருந்தால் தான் எந்த காரியமும் செய்ய முடியும். பணம்
பத்தும் செய்யும் ஆகவேதான்,தை மாத வாக்கில் நல்ல (வழி)காலம் பிறக்கும் என்று கூறுவர்

காலத்தே பயிர் செய்

எந்த காரியமும் அதை செய்வதிற்க்கு எற்ற நேரம் காலம்,சந்தர்ப்பம்,சுழ்நிலை, பார்த்து செய்ய வேண்டும்.அப்படி செய்யா விட்டால் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்காது.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு
நாம் ஒருவனுக்கு செய்யும் உதவியால் அவன் பயன் அடைய வேண்டும். அப்படி சரியான ஆட்களுக்கு சரியான உதவியைதான் செய்ய வெண்டும்,அதாவது எந்த ஆட்களுக்கு என்ன உதவி தேவைஎன்பதை உணர்ந்து, செய்ய வேண்டும்.மாறு பட்டு சரியான ஆட்களுக்கு சரியான உதவி செய்யா விட்டால். அது அவர்க்கும் நமக்கும் எந்த நன்மையும் ஏற்படுத்தாது.

mgandhi
17-12-2006, 04:46 PM
உரலில் தலையை கொடுத்துட்டு
உலக்கைக்கு பயந்தா ஆகுமா?

ஒரு செயல் செய்யத் துவங்குகிறோம். அதில் பல தடைகள் வருகின்றன அதற்க்காக பாதியில் பின்வாங்கலாமா? கூடாது
துன்பங்களையும், தடைகளையும் எதிர் கொண்டே ஆக வேண்டும். இந்த துணிவை மனத்தில் விதைக்கும் வாசகம் இது.
துணிவும்,தடையை எதிர்க்கும் ஆற்றலும் இல்லாது ஏது வெற்றி.


ஆசையிருக்கு தாசில் பண்ண
அம்சம் இருக்கு கழுதை மேய்க்க

ஆசையால் மட்டும் எதுவும் நிறைவேறிவிடாது. அதற்க்கு அயராத முயற்சி வேண்டும்.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லை என்ற உண்மையை உரைப்பதே இது. தாசில் என்பது தாசில்தார் உத்யோகம் என்பதை குறிக்கும். பலர் நினைப்பது நடவாத போது தனக்கு அதுஷ்டம் இல்லை என்று புலம்புவர் அதை கூறும் பழமொழி

அதிஷ்டம் தபாலில் வந்தா
தரித்திரம் தந்தியில் வருது

mgandhi
19-12-2006, 04:47 PM
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல மணிதனுக்கு ஒரு சொல்

படியாத மாட்டை படிய வைக்க கம்பியை காய்ச்சி சூடு போடும் வழக்கம் முன்பு இருந்தது. அப்படி சூடு போட்டால் அந்த மாடு நம் வழிக்கு வந்து விடும்.அது போல நல்ல மனிதர்கள் ஏதாவது தவறு செய்தால்அவர்களை கடுமையான ஒரு சொல் சொன்னாலே அவர்கள் நல் வழிக்கு திரும்பி,திருந்தி விடுவார்கள்.இதனால் தான் நல்ல மணிதனுக்கு ஒரு சொல் என்று கூறுவார்கள்.

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை

கரும்பு ஆலை இல்லாத ஊர்களில் சர்க்கரை கிடைக்காது அதற்க்கு பதில் இலுப்பம்பூ இந்த பூ தித்திப்பு தன்மை உடையது இந்த பூ தான் அவர்களுக்கு சர்க்கரை இதன் உட் கருத்து என்ன வென்றால், நாம் ஆசை படும் சில நமக்கு கிடைக்க வில்லை என்றால் அதற்க்காக வருத்தப் படாமல். நமக்கு கிடைக்கக் கூடியதை வைத்து திருப்தி பட்டு கொள்ள வேண்டும்.

இருப்பதை கொன்டு சிறப்புடன் வாழ் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

யானைக்கும் அடி சறுக்கும்.

மிக பெரிய உருவம் யானை அது தன் கால்களை பூமியில் நடக்கும்போது வலுவாக தன் கால்களைப்பதிக்கும், அப்படி பதிக்கும்போது சற்று கவனக்குறைவாக இருந்தால் அது சறுக்கி விழுந்துவிடும்.அப்படி விழுந்தால் அதற்க்கு அடி பலமாக இருக்கும்.அதுபோல மனிதர்களாகிய நாம் எவ்வளவு புத்தாசாலியாக,அல்லது பலசாலியாக இருந்தாலும் நாம் செய்யும் காரியத்தில் சற்று கவனப்பிசகாக நடந்து கொண்டால்.நம்முன்னேற்த்திற்க்கு அது முட்டு கட்டையாக அமைந்துவிடும்.ஆகையால் நாம் ஒவ்வொறு அடியும் மிக கவனமாக முன்வைத்து முன்னேற வேண்டும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.

mgandhi
24-12-2006, 04:20 PM
அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

ஒரு மனிதன் தான் செய்யும் செயல்கள் தவறு அல்லது பாவம் என்று தெரிந்தும் அந்த செயலை அவன் செய்வானேயானால் அந்த செயலுக்கு அவன் அழுது அழுது என்பதற்கு விளக்கம் என்னவென்றால், கைப்பொருளை இழந்தவன் எந்த அளவிற்கு அழுது மனவருத்தப்பட்டு துடிப்பானோ அது போல் இவன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு,அல்லது நிம்மதியைத் தொலைத்துவிட்டு. அவன் வாழ்க்கையில் நரகத்தைவிட கொடுமையான வேதனையை அனுபவிப்பான்.

உயிர் காப்பான் தோழன்.

ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த மானத்திற்க்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்து நின்று நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே நம் உயிர்த்தோழன்.அப்படி இல்லாமல் தூர நின்று வேடிக்கை, பார்ப்பதே,அல்லது தன்னை காத்துக் கொள்ள நம்மை மாட்டி விடுபவனோ நண்பன் இல்லை.

யானையானய நண்பரைக் கழிக்கொளல் வேண்டும்
நாயனைய நண்பரைத் தழிக்கொளல் வேண்டும்.

யானையின் குணம் என்னவென்றால் நாம் அதற்கு எவ்வளவுதான் அன்பும்,பாசமும் காட்டி வளர்த்தாலும் அதற்க்கு மதம் பிடித்து விட்டால் அது நம்மையே தூக்கி போட்டு மிதித்து விடும்.ஆனால் நாய் அப்படி செய்யாது எஜமான் கோப, தாபங்களை உணந்து செயல் படும்.அதற்கு கோபம் வந்தால் குரைத்து கொண்டேயிருக்கும்.ஏஐமீனூ ஒன்றும் செய்யாது.
யானை குணம் கொண்ட நண்பனை ஒதுக்கி விட்டு, நாய்குணம் உள்ள நண்பனை தேர்ந்து எடுக்க வேண்டும்

mgandhi
28-12-2006, 04:07 PM
தேன் எடுப்பவன்
புறங்கை நக்காமல் இருப்பானா?மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில் ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
இருத்தாலும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும், தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுட்டாலும் வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி

குப்பையிலே காடந்தாலும்
குண்டு மணி நிறம் மாறாது.

கருப்பு சிவப்பு நிறத்தில் ஒளி விடும் ஒரு விதை தான் குண்டுமனி. இது குப்பையில் எவ்வளவு நாள் இருந்தாலும் இதன் நிறம் மாறாது இதை உதாரணமாக்கி உயர்ந்தவர்கள் எவ்வளவு தாழ்த நிலைக்கு வந்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள் என்பதை விளக்கும் பழமொழி இது.

தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்?

ஒரு செயலை செய்கிற ஊக்கம் தானாகவே வரவேண்டும்.பிறர் சொல்லி வரக்கூடாது.அப்படி சொன்னாலும் உண்மையான ஊக்கம் வராது இதை விளக்கிட தான் இந்த பழமொழி

எலி பிடிக்க வேண்டும் என்றால் முதலில் பூனைக்கு பசியும், தேவையும் வேண்டும்.பின் அது தானாக எழுந்து பதுங்கி,சாதுர்யமாய் எலியை பிடிக்க வேண்டும்.சோம்பிக்கிடக்கும் பூனையை நாமே தூக்கிவிட்டு எலியை பிடி என்றாள் அது பிடிக்குமா, அது நடக்குமா?

mgandhi
02-01-2007, 05:45 PM
சிலர் சில காரியத்தை தேவையில்லாமல்,முட்டாள் தனமாக, செய்வார்கள்,ஏன் இப்படி செய்தீர்கள் என்றால் புத்திசாலிதனமாக தான் செய்ததாக கூறுவார்கள்.அதற்கான பழமொழி இதோ

அரைக்காசுக்கு மொட்டை போட்டாளாம்
அடுத்த வீட்டம்மா.

இதற்க்கு ஒரு கதை உண்டு.

ஒரு ஊரில் ஒரு அம்மா, அவளுக்கு இரண்டு பிள்ளைகள்.இரண்டு பேருக்கும் மொட்டை அடிக்க நாவிதரிடம் அழைத்துச்சென்றார் அவரும் மொட்டை அடித்து விட்டார்.அதற்கு கூலியாக ஒருவருக்கு அரைக்காசு விதம் இருவருக்கு ஒரு காசு கூலி. அந்த அம்மாவிடம் இருந்தது காலணா. (அந்த காலத்தில் காலணா என்பது ஒன்றரை காசு.) மீதி அரை காசு கேட்டால் அந்த அம்மா நாவிதரிடம்சில்லரை இல்லை சரி எனக்கும் அடிச்சிடு என்று மொட்டை அடித்து கொண்டாளாம்.
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டாள் அவனிடம் இருந்து பாக்கி சில்லரை வராது அதனால் தான் இப்படி செய்தேன் என்றாலாம்.

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

என்பார்கள் ஆனால் சமயத்தில் அப்பா அம்மா நல்லவர்களாக இருத்தும் குழந்தைகள் தீயவர்களாய் பிறப்பதுண்டு. அப்பா திருடனாக இருந்து பிள்ளை திருடனாய் இருந்தால் அதை அப்படியே அப்பனை உறிச்சிட்டு வந்திருக்கான் என்றும் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்றும்.சொல்லி விம்ர்சிப்பார்கள்.
மரபு நிலை மட்டுமே காரணம் இல்லாது சூழ்நிலையும் ஒருவனைப் பாதிக்கும் அப்பாவுக்கு சம்மந்தமே இல்லாத பிள்ளை பற்றி இப்படி கூறுவார்கள்.

வாத்தியார் பிள்ளை மக்கு
வைத்தியன் பிள்ளை சீக்கு

mgandhi
06-01-2007, 04:31 PM
சிலர் தனக்கு சம்மந்தம் இல்லாத காரியத்தில் வந்து தானாகவே வந்து ஆலோசனை செல்வார்கள் இதற்கு மூக்கை நுத்தல்
என்பார்கள். இவர்களை யாரும் அங்கு மதிக்கவும் மாட்டார்கள் ஆனாலும் இவர்கள் விடாமல் தங்களுடைய கருத்தை கூறிக்கொண்டே இருப்பார்கள்.இதை விளக்க

பந்திலேயே இடமில்லை
இவன் இலை கிழிசல் என்றானாம்.

அவனை அழைக்கவும் இல்லை, ப்பிட செல்லவும் இல்லை ,
ஆனால் அவன் எனக்கு கிழிசல் இலையை போட்டு இருக்கிȣகள் என்று கூறுவது போல் தனக்கு சம்மந்தம் இல்லாதவற்றில் புகுந்து கருத்து செல்வதை விளக்குகிறது இது.


இலவு காத்த கிளி

இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும்.இந்த மரத்தில் காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும்.இது பழுத்து பழமாக மாறாது, அந்த மரத்திற்க்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும் நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது ஆனால் அது பழுக்காமல் வெடித்து சிறி பஞ்சுகள் காற்றைல் பறந்து விடும் தன்மையை கொன்டது. தினம் தினம் காத்து இருந்த அந்த கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது.
இந்த பழமொழி முலம் விலக்குவது என்ன வென்றால்,நம்ஒரு காறியத்தில் இறங்கும்பேது அதன் தன்மைகளை நன்கு உனர்ந்து,அவற்றை பற்றி நன்கு கற்று அல்லது அறிஞர்களிடம் கேட்டு உணர்ந்து பின் தான் அந்த காரியத்தில் இறங்க வேண்டும் அப்படி செய்யா விட்டால் அந்த கிளி போல நாமும் ஏமாற்றம் தான் அடைவோம் என்பதை விலக்கு கிறது.

சிலர் இதையே நிலவு காத்த கிளி என்றும் கூறுவர்.

mgandhi
09-01-2007, 04:34 PM
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
நம் முன்னோர்கள் முற்காலத்தில் பல் துலக்க ஆலமரத்து குச்சியையும்,வேப்ப மரத்து குச்சியையும் பயன் படுத்தினர்.இப்போதும்,சில கிராமங்களிலும் சிலர் இந்த முறையை பயன் படுத்துகிறார்கள்.இந்த குச்சிகளின் சார் நம் பல்லுக்கு நல்ல உறுதியும்,உடல் நலத்தையும் தரவல்லது.
அது போல தமிழுக்கு நான்கு அடிகளை உடைய நூல், நால்அடியார் என்ற பாடலும், இரண்டு அடிகளை உடைய நூல் திருக்குறளும், தமிழுக்கு அழகும் வாழ்க்கைக்கு தேவையான கருத்தும் உடையன என்பதை விளக்கு கிறது.

தீரா கோபம் போராய் முடியும்.
நாம் ஒருவர்மோல் கோபம் ஏற்பட்டால் அதை நாம் மேலும்,மேலும்வளர்த்துக் கொண்டே போனால்,அதன் பயனாக அது சண்டையில் தான் போய் முடியும்.கோபம் நமக்கு அதிகரிக்க ,அதிகரிக்க,உண்மையை அறிந்து கொள்ளும் தன்மையை நாம் இழந்து விடுகிறோம்.
இதை தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றும் கூறுவர்.அகவே நாம் கோபம் கொள்ள கூடாது பொறுமை காத்தல் பொருமைகள் பல வந்து சேறும் இந்த கருத்தை மற்றொறு பழமொழி முலம் விலக்குகின்றனர் அது.

பொருமை கடலைன் பொறியது.
உலகில் கடல் தான் பொறியது அதை விட பொறியது பொருமை.

mgandhi
23-01-2007, 04:28 PM
குப்புற விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டலே
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு.என்பார்கள்.வெற்றியில் மமதை கூடாது.அதுபோலவே தோல்வியில் துவண்டும் போக கூடாது.
தான் சண்டையில் தோற்று கீழே விழுந்தாலும் என்னுடைய மீசையில் மண் ஒட்ட வில்லை பார்த்திர்களா என்பார்கள். சிலர் தோல்வியை ஓப்புக்கொள்ளவே மாட்டார்கள்.ஏதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிக்கப் பார்ப்பார்கள்.அந்த கருத்தை கூறத்தான் இந்த பழமொழி.

நல்ல பாம்மை நாம் மிதித்து விட்டால் ,அது நம் காலைச் சுற்றிக் கொள்ளும் .உதறவும் முடியாது, அடிக்கவும் முடியாது .நிச்சயம் அது நம்மை கடிக்காமல் விடாது.
அதுபோல சிலசமயம் நாம் சில ஆபத்துக்களையும்,சில கெட்ட மனிதர்களையும் சந்தித்துதான் ஆகவேண்டியுள்ளது. அது உடன் இருப்பவர்களால் கூட நிகழும். இதை விளக்க உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்ற பழமொழி வந்தது .நம்மை நிழலாய் தொடரும் சில ஆபத்தால் நாம் துயர்படுவது தவிர்க்க முடியாமலும் போகலாம்.
காலைச் சுத்தின பாம்பு
கடிக்காமல் விடாது.
என்ற பழமொழி வந்தது.

அறிஞர்
23-01-2007, 07:07 PM
குப்புற விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டலே
---------. வடிவேலு படம் பார்த்த பின் பழமொழியின் விளக்கம் எல்லாருக்கும் தெளிவா தெரிய வந்தது...

இப்பொழுது காந்தியின் தயவால் மீண்டும் ஒரு முறை தெளிவான விளக்கம்.

mgandhi
24-01-2007, 05:28 PM
நாம் பிறருக்கு ஆலோசனை கூறலாம்,நீதி சொல்லலாம்.அறிவுரை தரலாம். கேட்பதும் கேட்காததும் அவர் விருப்பம்.சாப்பாடு தான் போடலாம் ஊட்டியா விட முடியும்.சொல்வதை சொல்லிவிட்டேன், கேட்பதும் கேட்காததும் உன் இஷ்டம் என்று கூறும் கருத்து உள்ள பழமொழி. இது.

பாப்பாத்தியம்மா! மாடு வந்தது
கட்டுனா கட்டு கட்டாட்டிப் போ!

ஊர் மாடு மேய்தல் என்பது கிராமத்து பழக்கம்.நம் விட்டு செந்த வேலைக்காரன் என்றால் நமது மாட்டை அவனே அவிழ்த்து போய் மேய்த்துக் கொண்டு வந்து கட்டுவான்.ஆனால் ஊருக்கு பொதுவாய் மேய்க்கிறவன் வாசலில் குரல் கொடுத்தால். நாம் தான் மாட்டை அவிழ்த்து விடவேண்டும், மாலையில் மாடு திரும்பும் போது, அதை நாம் தான் பிடித்து கட்ட வேண்டும்.அது போல சொல்கிற நல்லதை நாம்தான் ஏற்று நடக்க வேண்டும்.

ஒரு காரியம் சாதிக்க சாம,பேத, தான,தண்டம் என்று பல வழிகள் உன்டு. வெற்றியை அடைய இந்த நாலு வழிகளில் ஏதாவது ஒன்று தேவை. சமய, சந்தர்பம் பார்த்து நமது அறிவைப் பயன்படுத்திதான் வெற்றி காண வேண்டும்.எந்த சமயத்தில் எதை பயன் படுத்த வேண்டுமோ அதை சரியாகப் பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம் .இதை விளக்கும் பழமொழி இது.

ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடிக்கறக்கிற மாட்டை பாடித்தான் கறக்கனும்.

மனோஜ்
25-01-2007, 02:20 PM
செல்புத்தி வேனும் இல்ல
சுயபுத்தி வேனும்
இத விளக்கனுமா
புரியலனா
23 ம் ...:D பாருங்க

mgandhi
08-02-2007, 04:45 PM
கொலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.

pradeepkt
09-02-2007, 03:59 AM
ம்ம்.. இது அருமையான விளக்கம்.
நம்ம மக்கள் கொலையும் செய்வாள் பத்தினிக்கு ஒரு வெட்டி விளக்கம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க.

mgandhi
12-02-2007, 04:45 PM
துள்ளுகிற மாடு பொதி சுமக்குமா
துள்ளி கொண்டே உள்ள மாடு எப்படி பொதிசுமப்பதே,வண்டியே இழுக்காதோ அதுபோல எவன் ஒருவன் அதிகம்தேவையற்ற விஷயங்களை பேசுகிறானோ,அல்லதுசெய்கின்றானோ, அவனால் அந்தக் காரியத்தை சரிவர செய்ய முடியாது.என்பதை தான் இந்த பழமொழி கூறுகிறது.

வாயாலயே வானத்தை அளப்பான்,
குலைக்கிற நாய் கடிக்காது,
என்பதும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

drjperumal
12-02-2007, 05:02 PM
கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.

மனோஜ்
12-02-2007, 07:23 PM
ஏட்டு சுரக்கா வாழ்க்கைக்கு உதவாது
எவ்வளவு படித்தாலும் அனுபவம் இல்லாவிட்டல் அது வீன்தான் என்பதை உனர்த்துகிறது இந்த பழமொழி

pradeepkt
13-02-2007, 03:42 AM
துள்ளுகிற மாடு பொதி சுமக்குமா
துள்ளி கொண்டே உள்ள மாடு எப்படி பொதிசுமப்பதே,வண்டியே இழுக்காதோ அதுபோல எவன் ஒருவன் அதிகம்தேவையற்ற விஷயங்களை பேசுகிறானோ,அல்லதுசெய்கின்றானோ, அவனால் அந்தக் காரியத்தை சரிவர செய்ய முடியாது.என்பதை தான் இந்த பழமொழி கூறுகிறது.

வாயாலயே வானத்தை அளப்பான்,
குலைக்கிற நாய் கடிக்காது,
என்பதும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
In much of your talking, thinking is half murdered என்றார் கலீல் கிப்ரான்!

mgandhi
15-02-2007, 04:24 PM
அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்
குழந்தை அழுதால் தாய்க்கு அதன் அழகையை கண்டு,அதற்க்கு பசி அல்லது உடல் கோளாரா என்பதை அறிந்து பசி என்றாள் உடனே பால் தருவாள் அதுபோல நமக்கு உதவ பலர் இருப்பார்கள்.அவர்களிடம் நாம்தான் சென்று நமக்கு தேவை என்ன என்பதை கூறி அவர்கள்இடம் கேட்டால் அவர்கள் உதவி செய்வார்கள் நாம் கேட்காவிட்டால் உதவமாட்டார்கள் நம் தேவையை உணர்ந்து எவரும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள்.ஏன் கடவுள் கூட தட்டினால் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும்என்று ஏசுவையும், கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா என்று கூறுகிறார்கள்.கடவுளே அப்படி என்றாள், மனிதர்களாகிய நாம் கேட்டுத்தான் எதையும் பெறமுடியும் என்பதை விளக்கும் பழமொழிதான் இது.

அறிஞர்
15-02-2007, 04:26 PM
அழுது அழுது அடம்பிடித்து குழந்தைகள் சாதிக்கிறது.

நாமும் கடவுளிடம் அழுது சாதிக்கிறோம்.

தொடரட்டும்.. காந்தி...

mgandhi
16-02-2007, 04:45 PM
எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றிணால் போல
கொள்ளி என்பது சாதாரனமாகவே நன்றாக எரியும், அதில் மேலும் எண்ணெயை ஊற்றிணால் அது இன்னும் அதிக வேகத்துடனும்,
மிக பிரகாசத்துடனும் எரியும். அது போல சிலர் வீட்டில் யாராவது ஓருவர் சிறு தவறு செய்து விட்டால் அவரை மற்றவர்கள் திட்டிக்கொண்டு இருக்கும் போது, அவறைப்பற்றிய மற்ற தவறுகளை அதே நேரத்தில் சிலர் எடுத்து கூறி மேலும் அவர் மிது கோபம் ஏற்படும்படி செய்வார்கள். இதைத்தான் இந்த பழமொழி விளக்குகிறது.

அறிஞர்
16-02-2007, 04:47 PM
ஆஹா நம்ம ஆட்களுக்கு எரிகிற தீயில எண்ணெய் ஊத்துவது கைவந்த கலையாயிற்றே.....

இது பிரச்சனையை அதிகரிக்கும் என யோசிப்பதில்லை

ஓவியன்
17-02-2007, 05:14 AM
இது ஒரு பயனுள்ள திரி. ஏனெனில் நம் இளைய சமூதாயத்தினருக்கு இதிலே பல பழமொழிகள் பரீட்சயம் இல்லாதவை. அவர்களிற்கு இந்ததிரி பல பழ மொழிகளை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அவ்வாறே இந்த பழமொழிகள் எல்லாவற்றையும் ஒரு தொகுப்பாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

mgandhi
18-02-2007, 05:12 PM
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.

நாம் செய்த தவறை மறைக்க சில சமயம் சாமார்த்தியமாக பொய் சொல்லி அதை அப்போது மறைத்து விடுட்டாலும், சில நாட்கள் கழித்து அந்த பொய், யாராவது ஒருவர் மூலம் அல்லது நம் வாய் வழியாகவே உண்மை வெளி வந்துவிடும். எப்போதும் உண்மையை மறைக்க முடியாது. என்பதையே இந்த பழமொழி விளக்குகிறது. ஆகவே நாம் எப்போதும் உண்மையே பேச வேண்டும்.

mgandhi
26-02-2007, 04:20 PM
பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது


பூமலர்ந்து விட்டால் மறுநாள் வாடிவிடிம் அல்லது கெட்டுவிடும்,பூமலர்ந்தால் வாசனை உண்டாகும்,பார்பவரின் கண்னை ஈர்க்கும்,அதை எப்படியாவது பறித்து சென்று விடுவார்கள். பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது என்றால் தேவையற்ற விஷயங்களைப் பேசி தனக்குத்தானே எதிரியை உருவாக்கிக்கொள்ளும் வாய் என்பதால் வாய் விரிந்து கெட்டது என்பர்.இதையே நுணலும்(தவளையும்)தன் வாயால் கெடும் என்றும் சொல்வது உண்டு.

அறிஞர்
27-02-2007, 09:09 PM
பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.
எதற்கு அடக்கம் வேண்டும்...

மனோஜ்
28-02-2007, 06:30 PM
இலை மறை காயாய்
இலைகளின் இடையில் மறைந்திருக்கும் காய் போன்று நாம் சில முக்கிய காரியங்களை கூருவது சால சிறந்தது எடுத்து காட்டாக இருதய நோய் உள்ளவரிடம் சில காறியங்கள் கூறும் பொழது எச்சரிக்கையாய் கூறவேன்டும்

mgandhi
02-03-2007, 05:06 PM
பாக்கை மடியில் கட்டலாம் தோப்பை கட்ட முடியுமா?


இந்த பழமொழியே மேல்ஒட்டமாகப் பார்த்தால், பாக்கை மடியில் கட்டமுடியும் பாக்கு தோப்பை மடியில் கட்ட முடியாது என்பது போல் தோன்றும்.ஆனால் நம்மால் எந்த காரியத்தை செய்ய முடியுமோ அந்த காரியத்தை தான் நாம் செய்ய முற்பட வேண்டும் அதை விட்டு நம்மால் முடியாது என்று தெரிந்த காரியத்தில் நாம் ஈடுபடகூடாது, அப்படி ஈடுபட்டால் அது நம் நேரத்தையும்,உழைப்பையும் விணாக்கி விடும். என்பதையே இப்பழமொழி விளக்குகிறது.

மன்மதன்
02-03-2007, 05:28 PM
மடியில் எங்கே தோப்பை கட்ட முடியும்.. தொப்பைதான் கட்டலாம்..:D :D

அறிஞர்
02-03-2007, 05:30 PM
தெரியாத காரியத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்கு நல்ல பழமொழி...


மடியில் எங்கே தோப்பை கட்ட முடியும்.. தொப்பைதான் கட்டலாம்..:D :D
நம்மவர்கள் பலருக்கு தொப்பை தான்....
தோப்பு போல் செழித்து காணப்படுகிறது.

mgandhi
11-03-2007, 05:52 PM
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவரை பற்றி ஒரு உவமை உண்டு.ஆனால் இன்று கடன் கொடுத்தார் நெஞ்சம் போல என்று திருத்தி சொல்ல வேண்டும்.

கடனே வாங்ககூடாத போது கடன் வாங்கி கடன் கொடுப்பது இருக்கிறதே,அதைவிடத் துயர் உலகில் இல்லை எனலாம்.இதனை விளக்கும் பழமொழி.

கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும்
மரம் ஏறிக் கைவிட்டவனும் ஓண்ணு.

மரமேறி கை விட்டவன் கதி என்ன ஆகும்? பிறரிடம் கடன் வாங்கி,அதை மற்றவனுக்கு கடன் தருபவனுக்கு ஆகும்.

பென்ஸ்
11-03-2007, 06:42 PM
காந்தி...

என்ன ஒரு அருமையான பதிவு....
நான் இதுவரை பழமொழி வாசித்திருக்கிறென்... புரிந்தோ புரியாமலோ, எதோ அர்த்தபடுத்தி சென்று விடுவேன்....
இன்று வாசித்து மனதுக்குள் பொருளோடு அடக்கி செல்லிகிறென்...

இந்த உங்க சேவை நன்றிக்கு உரியது...

பாராட்டுகள்.....

mgandhi
19-03-2007, 06:27 PM
முதல் மனைவியிருக்க இன்னொரு திருமணம் செய்வதை சின்னவீடுஎன்று கிண்டல் செய்வார்கள்.இது கோவலன் காலத்தில் இருந்தே நடந்தவை தான்.அதற்கு முன்பே எழுந்த அகப்புற இலக்கியத்திலும் பரந்தையர் பற்றி பேசப்படுவதையும் நாம் காணலாம்.கிராமத்து செல்வத்தர்கள் வைப்பாட்டி வைத்துக்கொள்வது ஒரு காலத்தில் பெரிய கெளரவம் என்று கூட கருதப்பட்டது இதை விலக்கும் பழமொழி இது.

கிளி மாதிரி பொண்டாட்டி இருத்தூம்
கொரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி இவனுக்கு. மனைவி அழகாய் இருப்பாள்.அவளைவிட அழகற்ற ஒருத்தியிடம் ஒருவன் மயங்கிக் கிடப்பான்.இச்செயலை நயமாக சாடுவதுதான் இது.

mgandhi
22-03-2007, 05:59 PM
அவசரம் என்று ஒரு அரைவேக்காட்டுத்தனம். பதறாத காரியம் சிதறாதுஎன்பார்கள். அவசரத்தில் போடும் கோலம் கூட புள்ளி மாறிப்போகும்.திடீர் முடிவு எடுப்பவர்களை பற்றி விலக்கும் பழமொழி இது.

விடிஞ்சா கல்யாணம்
புடிடா பாக்கு வெத்திலை

அவசரம் மட்டுமில்லாது,காலம் கடந்து தரும் செய்தியையும் இது குறை, கூறுவதாக் கொள்ளலாம்.

mgandhi
25-03-2007, 06:01 PM
நக்குற நாய்க்கு
செக்கு என்ன? சிவலிங்கம் என்ன?

செக்கிலும் எண்ணைய் வடியும் அது போல சிவலிங்கத்தில் பக்தர்கள் செய்த அபிஷேகம் காரணமாய் எண்ணைய் வடியும் இரண்டும் ஒன்றாகுமா? ஆகாது.ஆனால் நக்கும் நாய்க்கு எண்ணைய் ஓன்றுதானே?
இது போல் சிலர் எதைப்பற்றியும் கவலை படாமல் தம்முடைய காரியத்தில் மட்டும் கண்னும் கருத்துமாய் இருப்பார்கள். எந்த காரியமும் நல்ல வழியில் தான் செய்ய வேண்டுமே தவற தவறுதலான வழியில் செய்ய கூடாது.

விகடன்
05-04-2007, 01:57 PM
சும்மா சொல்லக்கூடாது.

இந்தளவு நாளும் கொஞ்ச பழமொழிகளை தெரிந்து வைத்துக்கொண்டு அதுதான் உலகமென்றிருந்தேன். ஆனால் "கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு " என்று பாடம் புகட்டிய இந்தத்திரிக்கு எனது முதல் வணக்கங்கள்.

மென்மேலும் எனது அறியாமையை கழையும் இந்தத்திரி வளர எனது வழ்த்துக்கள்.

redson
05-04-2007, 02:17 PM
அன்பு நண்பரே

தங்களின் ஓவ்வொரு பதிவும் முத்துப்போல், அருமையோ அருமை

இருப்பினும்
''பழமொழிகள்'' விளக்கங்கள் இல்லாமல் இருப்பின் யாருக்கு என்ன லாபம்...????????????

விருப்பங்களும் விளக்கங்களும் இரண்டு தனி விசயங்கள்......

தங்களின் விருப்பபடியே செய்யவும்

நன்றி

திருவாசகத்துக்கும் இது பொருந்தும் தானே.


ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

redson
05-04-2007, 02:20 PM
சார் ,
மன்னிக்கவும் ஒரு கேள்வி
பழமொழிக்கு அர்த்தம் தெரியாமல் படித்து என்ன பயன்?

தாழ்மையுடன்
ஓவியா

பதிவு தொகுத்து வழங்குபவரை விரட்டிஅடிக்கவா இந்த கேள்வி?

ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

mgandhi
12-04-2007, 06:53 PM
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

அந்த காலத்தில் சட்டியில் தான் அதிகம் சமைப்பார்கள்.அகப்பை என்பது மரக்கரண்டியைக் குறிக்கிறது. சட்டியிலே பொருள் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று எண்ணத் தோன்றும்,ஆளால்,இதுவே உண்மையல்ல. நாம் ஒரு விஷந்த்தை அல்லது மற்ற உலக விஷயங்களை படித்து அல்லது கேட்டு உணர்ந்திருந்தால்தான் நம் செயல்பாட்டில் அல்லது எண்ணத்தில் வரும்.ஆக நாம் கற்றுணர்ந்த விஷயங்களை சட்டியாகவும்,அனுதினம் நாம் எண்ணும் எண்ணங்களை செயல்பாட்டிற்கு மெல்ல மெல்லக் கொண்டு வருவதால் அதை அகப்பையாகவும் சித்தரித்துக் கூறும் மிக அற்புதமான பழமொழியாகும்.
இதையே ஆன்மீக வாதிகள் வேறு ஒரு கோணத்தில் சிந்தித்து கூறுவார்கள்.அதாவது,பிள்ளைச் செல்வம் இல்லையென்று வருந்தி,பெண்கள்,இறைவனிடத்தில் பிள்ளை வரம் கேட்டு வேன்டுவார்கள்.அவர்களூக்கு ஞானிகள் கூறும் அறிவுரை என்னவென்றால்,சட்டியில் என்பதை சஷ்டியில்என்றும்,''இருந்தாலதானே'' என்பதை ''விரதம் இருந்தால்'' என்றும் ''அகப்பையில் வரும்'' என்பதை விரதமிருப்பதால்,உடலின் உள்ளே உள்ள கருப்பையில் ஏற்படும்இயற்கையான மாறுபாட்டால் ''கரு'' உண்டாக வாய்ப்பு வரும் என்று கூறுவர்.

இளசு
13-04-2007, 06:41 AM
சட்டி -சஷ்டி

புதுமையான விளக்கம்.. நன்றி காந்தி!

mgandhi
13-04-2007, 06:26 PM
ஆடமாட்டாத தேவடியா
கூடம் போதாதுன்னாளாம்
இது தேவதாசி முறை இருந்த காலத்தில் பிறந்தது.தேவர் அடியாள் என்ற அழகான சொல்லே மருவி கொச்சையாக தேவடியாஎன்று வழங்கப் படுகிறது.கோவிலில் பொட்டுகட்டி, அவளை இறைவனுக்கே அர்ப்பணிக்கும் தேவதாசி முறையில், கோவிலில் சதிர் (நடனம்) செய்யவேண்டியது அவள் கடமையில் ஒன்று. எனவே அவள் நடனம் பயில்வாள்,நடனம் பயிலாத ஒருத்தி தன் நடனம் சரிவர அமையாத்திற்க்கு கூடம் போதா குறையே எனப் பொய் கூறுவதேஇது.இதே வாக்கியத்தை

ஆடத் தெரியாத தேவடியா
முத்தம் கோணல் என்றாளாம்
என்றும் சில இடத்தில் கூறுவதுண்டு இரண்டுக்கும் பொருள் ஒன்றே முத்தம் என்பது முற்றம் என்பதின் கொச்சை உச்சரிப்பு மற்றபடி கருத்து ஒன்றே.

நமது இயலாமைக்கு அல்லது தோல்விக்கு எதாவது ஒரு காரணம் கூறி தப்பிப்பதையே இப்பழமொழி விளக்குகிறது.

மனோஜ்
14-04-2007, 08:05 AM
தேவடியா என்ற வார்த்தை ஒரு கேட்ட வார்த்தை என்று தான் அறிந்திருந்தேன் ஆனால் அதன் கருத்தை இன்று அறிந்ததில் மகிழ்ச்சி காத்தி அவர்களே

mgandhi
21-04-2007, 05:05 PM
'' வந்துதடியக்கா சண்டை
வையடி கட்டுச் சோத்தை''

பழமொழியும் இல்லாது,பொன்மொழியும் இல்லாது சில
உபகதைகளை உள்ளடக்கிய,கிராமத்திற்கே உரிய சொல் நயம்
இது. கிராமத்தில் பெண்களிடத்தில் அடிக்கடி சண்டை வரும்.
'சண்டைக்காரி'-'வாயாடி'-'பெரியபட்டி'- என்று பலருக்கு பெயரும் இருக்கும்
.அப்படிப்பட்ட சண்டைக்குணம் உள்ளவர்களை
இடித்துரைப்பதே இது.இதில் ஒரு சிறுகதையே உள்ளது.

ஒரு ஊரில் சகோதரிகள் இருவர்.இருவரும் பெரிய
சண்டைகாரிகள்.அந்த ஊரில் உள்ள அத்தனைப் பேர்களிடத்தும் சண்டை வளர்த்து முடித்து விட்டார்கள்
.இனி சண்டை வளர்க்கவே ஆ ள்
இல்லை என்ற நிலையில்,இருவரும் கட்டுச் சோறு
கட்டிஎடுத்துக் கொண்டு,சண்டைக்கு ஆ ள் தேடி அடுத்த ஊருக்கு
நல்ல வெய்யில் காலத்தில் புறப்பட்டனர்.வழியில் வந்த ஒரு பெண்மனி, இவர்களை பார்த்து,

''யாரு நீங்க?எங்கே போறீங்க'' என விசாரிக்க அது கேட்ட தங்கை,தனது அக்காவிடம்,


''வந்துதடியக்கா சண்டை
வரப்புல வையடி கட்டுச் சோத்தை'' என்கிறாள்.

உடனே இருவரும்,அந்த பெண்ணிடம்,

''நாங்க எங்கே போனா உனக்கென்ன?

நீ யாருடி கேட்க? என்று கேட்டு சண்டைக்கு இழுத்தார்களாம் கதை எப்படி?

காரணம் இன்றி சண்டைக்கு இழுக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

mgandhi
25-04-2007, 07:27 PM
தோல்வி வருவது இயற்கை அத்துடன் நஷ்டமும்,கஷ்டமும் சேர்ந்தால் எப்படி இருக்கும்.அதற்க்கு உதாரணமான பழமொழி இது.

குதிரை குப்புறவும் தள்ளி
குழியும் பறிச்சுதாம்!இது எப்படி இருக்கு ஒருவன் குதிரையில் ஏறிவருகிறான் குதிரை அவனைக் கீழே தள்ளுகிறது,காயம் படுகிறது அது மட்டுமா அவனை புதைத்திட குழியும் பறித்தால்?

ஆறுவயசுல அண்ணன்-தம்பி
பத்து வயசிலே பங்காளி.
வாழ்க்கையின் யதார்த்தத்தை அழகாகக் கூறும் பழமொழி இது.
அண்ணன் என்னடா தம்பி என்னடா-இந்த
அவசரமான உலகத்திலே
என்று கவிஞர் கண்ணதாசன் பாடினார்.பாசம் என்பது ஒரு வயது வரையில் தான். பாகப்பிரிவினை என வரும்போது தம்பியே பகையாகலாம், அண்ணன் அந்நியன் ஆகலாம்.இது உலக நடப்பு.

இதே கருத்தை விளக்கும் மற்னொன்று.

தாயும் பிள்ளையும் என்றாலும்
வாயும் வயிறும் வேறு வேறு
உலகில் சிறந்தது தாய் பாசம் தான் ஆனபோதும் தன்னைக் கவனிக்காத மகனையும் தாய் திட்டுவது கசப்பான உண்மை தானே?

mgandhi
07-05-2007, 06:55 PM
இருவர் கூட்டாக ஓரு செயலை செய்தால் அதில் இருவரின் பங்கும் சரிசமமாக இருக்க வேண்டும். இதை விட்டு ஒருவர் பங்கு அதிகமாகி, மற்றவர் பங்கு குறைவாகி இருந்தால் பலனை சமமாய் அனுபவிப்பது நியாயமா?


நீ அரிசி கொண்டா
நான் உமி கொண்டாறேன்
சமமாய் கலந்து
நாம் ஊதி ஊதி சாப்பிடலாம் என்றானாம்?
அரிசியும் உமியும் ஓன்றா என்ன.

mgandhi
13-05-2007, 06:10 PM
முயற்சி திருவினையாக்கும் சரி ஆனால் எத்தனை முயற்சி செய்தாலும் சமயத்தில் சில விளைவுகள் நமக்கு நஷ்டம் தரலாம். இது இயல்பு இந்த சமயத்தில்தான் நாம் விதி எனப்புலம்புகிறோம் சதி என அலறுகிறோம்
போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருத்துஎன உணர்ந்து மனதை தேற்றிகொள்ள வேண்டும் இதோ ஒரு ஆறுதல் வாசகம்

எண்ணெயை தடவிகிட்டு
குப்பர விழுந்து புரண்டாலும்
ஒட்டற மண்தான் ஒட்டும்.

mgandhi
04-06-2007, 05:58 PM
பாம்பின்கால் பாம்பறியும்

இப்பழமொழி பாம்பின் மூலம் மனிதனுக்கு உணர்த்தும் அறிவுரைகள் ஏராளம்.ஒரு பாம்பு எந்தத் திசையில் சென்றது அல்லது சென்றதா,இல்லையா என்பது மற்றொரு பாம்புக்குக்தான் தெரியும்.அதுபோல ஒரு திருடனைப் பற்றிய விவரங்கள் மற்றொரு திருடனுக்கும்,ஒரு நல்லவரைப் பற்றிய குணநலங்கள் மற்றொரு நல்லவருக்கும்தான் தெரியும்!ஆக நம் செயல்கள் நல்லவை என்றால் நாம் நல்லவர்களை இனம் கண்டுகொள்ள முடிகின்றது.நம் எண்ணம் தீது என்றால் தீயவர்களைத்தான் நமது மனமும் நாடும் என்பதை விளக்கும் பழமொழி.

அமரன்
04-06-2007, 06:11 PM
எப்போது திரி பார்வைக்கு வரும் என்று பார்த்துக்கொண்டு இருந்தீர்களோ. உடனடியாக ஒரு பழமொழியை பதிந்து பரவசத்தில் ஆழ்த்தி விட்டீர்களே காந்தி. நல்ல விடயங்களை தந்துள்ளீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.

mgandhi
26-06-2007, 06:26 PM
நாய்க்கு வேலையில்லையாம், ஆனால் நிற்பதற்கு நேரமில்லையாம்

பொதுவாக நாயின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் பல உண்மைகள் புரியும், நாய் எந்த கம்பெனிக்கும் அலுவகத்திற்க்கோ சென்று வேலை செய்து பிழைப்பு நடத்தப் போவதில்லை, ஆனால் நாம் அந்த நாயை இங்கே வா என்று அழைத்தோமானால்,அது மிக அவசரமாக தெருமுனை வரை ஓடிச்சென்று பார்த்து விட்டு சிறிது நேரம் கழித்து நம்மிடம் வரும்.
அதுபோல வேலைக்குச் செல்லாமல்,எந்த தொழிலும் புரியாமல் விட்டில் வீணாக பொழுதைக் கழிப்பவரை அவசர வேலையாக கடைக்கோ அல்லது முக்கியமான நபரை பார்ப்பதிற்க்கோ அனுப்பி வைத்தோமானில்,முதலில் அவர் அங்கே போகமாட்டார் பிறகு தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாகச் சொல்வார் ஆக வெட்டியாய் வீணாகப் பொழுதைக் கழிப்பது தவறு என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி இதுவாகும்.

mgandhi
27-06-2007, 05:43 PM
ஒரு செயலை நாம் செய்தால் அதைச் சரியாக செய்ய வேண்டும் சிலர் சரியாக செய்ய மாட்டார்கள் அவர்களிடம் நாம் எவ்வளவு பக்குவமாக சொன்னாலும் திரும்ப திரும்ப அப்படியே வேறுமாதிரி செய்வார்கள் அவர்கள் நினைப்பதை தான் செல்வார்கள் அல்லது செய்வார்கள் இவ்வாறுசெய்பவர்களை

வச்சா குடுமி
செரச்சா மொட்டை வைக்கவேண்டியது காராப்பு அதை விட்டு விட்டு குடுமி வைப்பான் ஏன்டா இப்படி என்றாள் சரி என மொட்டை அடித்து கொள்வார்கள்.

அக்னி
28-06-2007, 09:45 PM
இவ்வளவு நாட்களும் அருமையான திரி ஒன்று என் பார்வையில் படவில்லை.
இனித் தொடர்ந்தும் இணைந்திடுவேன்.
பழமொழிகளும் அவை பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும், மிகவும் சுவையாகத் தருவதற்கு,
மோகன் காந்தி அவர்களுக்குப் பாராட்டுக்கள்... நன்றிகள்...

mgandhi
29-06-2007, 05:13 PM
அக்னிக்கு நன்றி

mgandhi
29-06-2007, 05:36 PM
நாட்டு புறத்தில் ஏழ்மையை வெளிப்படுத்தும் விமர்சனம் இது விவசாயத்தில் ஆறு மாதம் கூட சரியாக வேளை இருக்காது ஏழைத் தொழிளாளி எவ்வளவு தான் கஷ்டப் பட்டு உழைத்தாலும் வறுமை நீங்காது இதை விளக்கும் பழமொழி இது.
அரக்கப்பறக்க சம்பாதிச்சாலும்
படுக்க பாய் இல்லே

mgandhi
16-07-2007, 06:23 PM
நாட்டு புறத்தில் ஏழ்மையை வெளிப்டுத்தும் விமர்சனம் இது விவசாயத்தில் ஆறு மாதம் கூட சரியாக வேலை இருக்காது ஏழைத் தொழிளாளி எவ்வளவு தான் கஷ்டப் பட்டு உழைத்தாலும் வறுமை நீங்காது இதை விளக்கும் பழமொழி இது.

மாசிவரைக்கும் மத்தள கொட்டு
சித்திரை பொறந்தா குப்புற கொட்டு.

நாட்டு புறத்தில் விவசாயத்தில் நஷ்டம் அதிகம் ஏற்பட வாய்ப்பு அதிகம் ஏன் என்றாள் இது இயற்கையை நம்பி செய்யப்படுவதால் இதனால் இந்த தொழிலில் லாப நஷ்ட கணக்கு பார்ப்பது கஷ்டம் இதனை விளக்கும் பழமொழி இது

உழுதவன் கணக்குப் பாத்தா
ஒழக்கும் மிஞ்சாது.

மீனாகுமார்
17-07-2007, 04:11 PM
இவ்வளவு நாட்களும் அருமையான திரி ஒன்று என் பார்வையில் படவில்லை.
இனித் தொடர்ந்தும் இணைந்திடுவேன்.
பழமொழிகளும் அவை பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களும், மிகவும் சுவையாகத் தருவதற்கு,
மோகன் காந்தி அவர்களுக்குப் பாராட்டுக்கள்... நன்றிகள்...


நானும் இதையே தான் கூறுகிறேன்...

மோகன் காந்தி அருமையான பதிவுகள்... தொடருங்கள்...

mgandhi
19-07-2007, 05:56 PM
அரைப்படி அரிசி அன்னதானம்
விடிய விடிய மோள தாளம்

சிலர் சிறிய உதவி செய்து விட்டு பெரிய விளம்பரம் தேடிக் கொள்வார்கள் ட்யுப்லைட்டை கோவிலுக்கு தந்து விட்டு அதன் வெளிச்சம் வெளியில் தெரியாத அளவுக்கு தன் பெயரை அதில் எழுதிவைப்பார்கள்.

இன்றைய அரசியல் வாதிகள் நடத்தும் சில உதவிகளுக்காக நடத்தப்படும் கூட்டத்திர்க்கு செய்யும் செலவுகளை விட விழாசிலவுகள் அதிகம் செய்வார்கள்.
கோவில் அன்ன தானத்திர்க்கு அரை படி அரிசி தந்து விட்டு கோவில் விழாவில் விடிய விடிய மேளக்கச்சேரி வைப்பது எப்படி?

mgandhi
22-07-2007, 05:46 PM
சிலருக்கு மற்றவர் துயரம் கொஞ்சமும் புரியாது. தனது சுய நலமே பெரிதாகக் கருதுவார்கள். [/B[B]]எருது புண் காக்கை அறியுமே ?
என்ற பழமொழி இதை அழகாக விளக்குகிறது.

எறியிற வீட்டில்
புடுங்கினது லாபம்

வீடு எரிகிறது வீட்டுகாரனுக்கு நஷ்டம்,கஷ்டம் அதுபற்றி எல்லாம் கவலைப்படாது,தீயை அணைப்பது போல அவ்வீட்டில் புகுந்து அங்கு உள்ள பொருளை சுருட்டி நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாலை,ரயில் விபத்து என்றால்உதவி செய்பவர்களை விட கை,பையில் உள்ளவற்றை அபகறிப்பவர்கள் தான் அதிகம்.
பிறர் நலம் கானாது தன்நலம் நினைக்கும் இவர்களை விலக்கும் பழமொழிதான் இது.

mgandhi
26-07-2007, 07:11 PM
எந்த ஒரு செயலையும் சரியாகச் செய்ய வேண்டும் செய்யக்கூடாத செயலை செய்வதும் தவறு செய்ய வேண்டிய செயலை செய்யாமல் இருப்பதும் தவறு
தவறான செயலை செய்தல் விளைவும் தவறாகதான் இருக்கும்.

சும்மா இருந்த சங்கை
ஊதிக் கெடுத்தாணாம் ஆண்டி
காலம்,நேரம் தெறியாமல் தேவை இல்லாதவற்றை செய்து சிலர் சங்கடத்தில் மாட்டி கெள்வார்கள் இதை விளக்கும் பழமொழி இது.

சும்மா இருந்த சிட்டுக்குருவியின்
முதுகில் குத்துவானேன்
அது கொண்டையை கொண்டையை
லாத்திக்கிட்டு கொத்த வருவானேன்?
இதுவும் கூட செய்யக் கூடாதவற்றை செய்வது தவறு என விளக்கும் பழமொழி

mgandhi
30-07-2007, 07:05 PM
காலத்தில் செய்யாத எந்த காரியமும் வெற்றி பெறாது

காலத்தே பயிர் செய்
வேலை உள்ள நாட்களிள் திண்ணைத் தூங்கியாய் இருந்து விட்டு பலனை நாடி விழித்தால் பலன் எப்படி கிடைக்கும். [/ப்]

[B]ஆடிப்பட்டம் தேடி விதை
ஆடியில் விதைத்தால் தான் தைமாதம் அறுவடை செய்யலாம்ஆடியில் மாமியார் வீட்டுக்கு சென்று விருந்து உண்டு விட்டு வயலை தரிசாய் போட்டு விட்டு தைமாதம் வயலுக்கு வந்தால் வயலில் என்ன இருக்கும்?இதை விளக்கும் பழமொழி இது.


உழிகிறநாளில் ஊருக்குப் போய்யிட்டு
அறுக்கிறநாளில் அரிவாள் எடுத்துட்டுப்
போனானாம்.

mgandhi
03-08-2007, 06:18 PM
ஓரு செயலுக்கு பின்னும் ஓரு விளைவு இருக்கும். நாம் நன்மை செய்தால் அது நமக்கு நன்மையாகவும் தீமை செய்தால் அது நமக்கு தீமையாகவும் விளையும்.
நம் என்னம் போல் தான் நம் வாழ்க்கையும் அமையும் இதை

எண்ணம் போல் வாழ்வான் நாட்டு கோட்டை செட்டி
என்பர். கிராமங்களில்.

இது ஆன்றோர்கள் வாக்கு, தினை விதைத்தான் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
என்று கூறுவர்.

mgandhi
15-09-2007, 06:18 PM
சாணி சட்டியும் சருவச் சட்டியும் ஒன்றா?

மாடு போடும் சாணியையும் சட்டியில் தான் எடுத்து வைக்கிறோம் அதுபோல சீர் வரிசை களையும் சட்டியில் தான் எடுத்து வைக்கிறோம் இதனால் இரண்டும் ஒண்றாகாது,மிக பழமயான பழமொழி இது அந்த காலத்தில் மன்பாட்டம் தான் பயன் படுத்தப்பட்டது.
மனிதர்கள் எல்லோரும் ஒன்றாகி விடமுடியாது.சாதாரன மனிதனுக்கும் கல்வி களைகலைகள் கற்று தேரியவருக்கும் வித்தியாசம் உண்டு இருவரும் மனிதர்கள்தான் என்ணத்தால் ,செய்கையால்,தேர்ந்த அறிவால் வித்தியாசப் படுகின்றனர்.என்பதை விழக்கும் பழமொழி இது

mgandhi
18-09-2007, 05:25 PM
ஆயி பார்த்த கல்யாணம் போயி பார்த்தால் தெரியும்

ஆயி என்றாள் குடும்பத்தில் மூத்தவர் என்று பொருள்.
அப்படிபட்டவர்கள் தான் நடத்த இருக்கும் கல்யாணத்தை சிறப்பாக எடுத்து கூறுவார்கள் அப்படி அவர்கள் சொன்னாலும் அதை நாம் நேரில் போய் பார்த்தாள் தான் அது உண்மையா என்பது புரியும்.
எதையும் நாம் மற்றவர் கூறினால் நம்பக் கூடாது எதையும் நாம் ஆராய்ந்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

mgandhi
24-09-2007, 05:26 PM
துடைக் முடியாவற்றை தட்ட வேண்டும்

நம் விட்டில்உள்ள அரைகளில் தூசி படித்தால் அதை லேசாத துடைப்போம் அப்படியும் அது போக வில்லை என்றாள் தூணியால் வேகமாகத்தட்டி பின் துடைப்பேம்

அது போல சில கெட்ட மனிதர்களை அன்பால் பேசி திருத்த முயல வேண்டும் அப்படியும் திருந்தா விட்டாள் அடித்து தான் திருத்த வேண்டும் என்பதை விளக்கும் பழமொழி இது.

mgandhi
26-09-2007, 07:12 PM
அக்கரைக்கு இக்கரை பச்சை

இந்த கரையில் இருந்து எதிரில் உள்ள மற்றொரு கரையை பார்த்தால் அது பச்சையாத்தான் தெரியும்.நமக்கு நம்மிடம் உள்ள எந்த நிறை களும் நமக்கு பெரிதாகத் தெரியாது ஆனால் மற்றவரிடம் உள்ளவைகளே நமக்கு பெரிதாகத் தெரியும் இதையே இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும் கூறுவர்

mgandhi
28-09-2007, 05:51 PM
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

எந்த ஒரு பெருள் அல்லது உணவு எதுவாக இருந்தாலும் ஒரு கூறிப்பிட்ட அளவு தான் இருக்க வேண்டும் அதிகமாக இருந்தால் அதனால் நமக்கு தீமைதான் உண்டாகும் என்பதை விளக்கும் பழமொழி இது.

அரசனை நம்பி புருஷனை கைவிட்டாள்

இதை மேலோட்டமாகப் பார்த்தால் பொருள் மாறும் இதன் கருத்து இல்லாததை எதிர்பார்த்து இருப்பதை தவறவிட்டு விடக்கூடாது இருப்பதை எண்ணி சிறப்புடன் வாழவேண்டும் அதுதான் நிம்மதியான வாழ்க்கையை தரும்.இதே கருத்தை விளக்கும் மற்றொரு பழமொழி இருப்பதை விட்டு பரப்பதிர்கு ஆசை பட்டான் என்றும் கூறுவர்.

mgandhi
02-10-2007, 06:22 PM
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

ஒன்றை கண்டே அல்லது அதை பற்றியோ எண்ணிக் கொண்டிருப்பவனுக்கு தாம் காணுவதெல்லாம் அதுவாகவே தெரிவது மனபிரமை,அவன் நிழல் கூட அவனை பயம் முருத்தும். எந்த ஒரு காரியத்திர்க்கும் தைரியமும் துணிவும் வேண்டும்அப்படி இல்லா விட்டால் அந்த காரியம் சரியாக வருமா வராதா என்றபயத்தால் காரியத்தை சரிவர செய்ய இயலாது.
இதனை விளக்கும் பழமொழி இது.

rajaji
06-10-2007, 05:41 AM
மிகச் சிறந்த பணி......

பழமொழிகளும் அதற்கான விளக்கங்களுமாக சிறப்பாக இருக்கிறது.....

இன்று நீங்கள் தந்த சில (பலவாகவும் இருக்கலாம்) பழமொழிகள் வழக்கொழிந்து வருகின்றன....

நகரத்தில் இருப்போர் பெரும்பாலும் மறந்தே விட்டனர்....

அப்படியான இந்நேரத்தில் இப் பதிவு மிகவும் அவசியமாகிறது....

மிகச் சிறந்த இப் பணியை மேற் கொள்ளும் நண்பர் மோகன் காந்திக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்....

(இந் நல்ல பதிப்புக்கு என்னால் தர முடிந்தது 100 ஐ−காஷ்)

mgandhi
23-10-2007, 05:27 PM
மிகச் சிறந்த பணி......

பழமொழிகளும் அதற்கான விளக்கங்களுமாக சிறப்பாக இருக்கிறது.....

இன்று நீங்கள் தந்த சில (பலவாகவும் இருக்கலாம்) பழமொழிகள் வழக்கொழிந்து வருகின்றன....

நகரத்தில் இருப்போர் பெரும்பாலும் மறந்தே விட்டனர்....

அப்படியான இந்நேரத்தில் இப் பதிவு மிகவும் அவசியமாகிறது....

மிகச் சிறந்த இப் பணியை மேற் கொள்ளும் நண்பர் மோகன் காந்திக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்....

(இந் நல்ல பதிப்புக்கு என்னால் தர முடிந்தது 100 ஐ−காஷ்)

தங்கள் ஊக்கத்திர்க்கு நன்றி

mgandhi
23-10-2007, 05:36 PM
''புலியை பார்த்து பூனை சூடு பேட்டது ''
என்பார்கள் ஒருவன் படித்தவனை பேலவும், பனம் படைத்தவன் பேலவும் நடந்து கொன்டாலும் சிற்சில விஷயங்கள் அவனை காட்டி கொடுத்து விடும்.பூனை தன் உடலில் சுடு போட்டு கொன்டாலும் அதன் இயல்பு கள் அதனை காட்டிக் கொட்த்து விடும்.

எவ்வளவுதான் உயரத்தில் பறந்தாலும் ""குருவி பருந்தாகாது.""

எங்கு சென்றாலும் தமிழன் குணம் மனம் மாறாது.

mgandhi
23-10-2007, 05:37 PM
அரண்மனையை பகைத்தாலும் அண்டை வீட்டை பகைக்காதே.

அண்டை வீட்டாருடன் நாம் எப்போதும் அன்புடனும் நல் உறவுடனும் இருக்கவேண்டும் அவர்கள் தான் நம்முடைய சுக,தூக்கங்களுக்கு உடன் வந்து உதவுவார்கள். (அரண்மனை) அரசாங்கத்தில் நமக்கு ஆள் வைத்து இருந்தாலும் அது அவசரத்திர்க்கு உதவாது. இதனை விளக்கும் பழமொழி இது.

அக்னி
24-10-2007, 01:37 AM
சிறிய இடைவெளியின் பின்னர்,
பழமொழிகள், அழகிய விளக்கமொழிகளோடு மீண்டும் வலம் வருகின்றன...
பாராட்டுக்கள்... நன்றிகள்... காந்திஜி...

மாதவர்
31-10-2007, 02:50 AM
படிக்க படிக்க இன்பம்

mgandhi
01-11-2007, 04:00 AM
படிக்க படிக்க இன்பம்

நன்றி மாதவர்

mgandhi
01-11-2007, 04:01 AM
சிறிய இடைவெளியின் பின்னர்,
பழமொழிகள், அழகிய விளக்கமொழிகளோடு மீண்டும் வலம் வருகின்றன...
பாராட்டுக்கள்... நன்றிகள்... காந்திஜி...

மிக்க...நன்றி......அக்னி

mgandhi
01-11-2007, 11:53 AM
அகப்பையில் குறைந்தால் கொழுப்பும் குறையும்

இது வயிற்றுக்கு போடும் உணவை குறைத்து விட்டால் உடல் தானாகவே குறைந்து விடும் என பொருள் படும் இதன் உட்கருத்து பணம் படைத்தவர்கள் பலர் தலைகால் புரியாமல் ஆடுவார்கள் யார் எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களிடம் உள்ள பணம் குறைந்தால் அவர்களிடம் உள்ள ஆணவம் குறைந்து விடும் என்பதினை விளக்கும் பழமொழி இது.

mgandhi
04-11-2007, 05:35 PM
'அவசரம் ஆபத்தில் முடியும்'

எதர்க்கும் ஒர் பொறுமைவேண்டும் பொறுமை கடலினும் பெரிது எனவும் ஒர் பழமொழி உண்டு.அப்படி நாம் பொறுமையை கடை பிடிக்காவாட்டால் அது ஆபத்தில்தான் முடியும். ஆகவே எதையும் அவசரப் படாது நிதானமாக செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

mgandhi
08-11-2007, 03:13 AM
அடிக்கிற கைதான் அணைக்கும்

எதற்கு எடுத்தாலும்ஆத்திரத்தை கொட்டுபவர்களின் உள்ளத்தில்தான் அன்பு இருக்கும்.இதற்கு இணையாக கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்றும் சிரிக்க சிரிக்க பேசுவர் பிறர் அழ அழ பேசுவர் தமர் என்றும் கூறுவர் நம்மிது அக்கரை உள்ளவர்கள் தான் நல்து கெட்டதை எடுத்து கூறி நம்மை நல்வழி படுத்த நினைப்பார்கள். மற்றவர்களோ நாம் செய்வதை எல்லாம் சரி என கூறு நம்மை சங்கடங்களில் மாட்டி விடுவார்கள்.

நேசம்
08-11-2007, 04:03 AM
சில பழமொழிகள் வெளிப்படையாக ஒரு அர்த்தம் கொடுத்தாலும் அதன் உண்மையான விளக்கத்தை தந்து கொண்டு இருக்கும் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்-நன்றி

xavier_raja
09-11-2007, 09:03 AM
நண்பர்களே, ஒரு சிறிய யோசனை... இப்படி பாடல் போல் இல்லாமல், ஒரு பழமொழி அதற்க்கு ஒரு விளக்கம் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.. (சன் டிவியில் தமிழ் மாலை பகுதியில் காலை 8.45க்கு புஷ்பவனம் குப்புசாமி சொல்வதுபோல் இருந்த்தால் சூப்பர்)

mgandhi
09-11-2007, 03:44 PM
சில பழமொழிகள் வெளிப்படையாக ஒரு அர்த்தம் கொடுத்தாலும் அதன் உண்மையான விளக்கத்தை தந்து கொண்டு இருக்கும் காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்-நன்றி

நன்றி

mgandhi
09-11-2007, 03:46 PM
நண்பர்களே, ஒரு சிறிய யோசனை... இப்படி பாடல் போல் இல்லாமல், ஒரு பழமொழி அதற்க்கு ஒரு விளக்கம் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.. (சன் டிவியில் தமிழ் மாலை பகுதியில் காலை 8.45க்கு புஷ்பவனம் குப்புசாமி சொல்வதுபோல் இருந்த்தால் சூப்பர்)

முயற்சி செய்யுங்கள் நன்பரே

mgandhi
09-11-2007, 03:49 PM
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

நாம் தருமம் செய்தாலும் ஒரு அளவோடுதான் செய்ய வேண்டும் அதிகம் பணம் இருக்கிறது என்று வாரி வாரி தந்து விட்டால் பிற்காலத்தில் நமக்கு இல்லாமல் போய்விடும் இதன் அடிப்படையில் வந்த மற்றொரு பழமொழி தனக்கு மிஞ்சிதான் தானமும், தரும்மும்.

mgandhi
14-11-2007, 04:40 PM
ஆபத்திற்க்கு பாவம் இல்லை

தவறு செய்வது தவறுதான் என்றாலும் ஒரு தவறை ஒர் நல்ல காரியத்திர்க்காக செய்தால் தவறில்லை. என்பதினை விளக்கும் பழமொழி இது.

mgandhi
14-11-2007, 04:41 PM
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

நாம் ஒரு முடிவை ஆத்திரத்திலும்,அவசரத்திலும் எடுக்க கூடாது. ஏன் என்றால் ஆத்திரத்தில் மனிதனின் பார்வை மங்கி விடும்.அவன் அறிவு மழுங்கிவிடும்.அவன் தன்நிலை இழந்து விடுவான்.அப்போது அவன் எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்காது.அப்படி செய்தால் பின்னால் அது அவனுக்கே துன்பமாகவிளையும் என்பதில் ஐய்யம் இல்லை.

mgandhi
19-11-2007, 04:18 PM
ஆழமறியாமல் காலை விடாதே

குலத்தில் இறங்கி குளிக்க வேண்டுமானால் அந்த குளத்தில் எவ்வளவு ஆழம் உள்ளது எங்கு எங்கு என்ன உள்ளது என்று தெரிந்து கொண்டுதான் இறங்க வேண்டும். அது போல நாம் ஓரு காரியத்தில் இரங்கும் முன்போ அதைபற்றி நன்கு தெரிந்தவர்களிடமும்,அனுபவம் உள்ளவர்களிடமும் ஆலோசனை பெற்ற பின்போ இறங்க வேண்டும் அப்படி செய்தால்தான் அந்த செயலில் நாம் வெற்றி பெறமுடியும்.

mgandhi
22-11-2007, 05:00 PM
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

எந்த ஒரு செயலை செய்தாலும் அதை முழு மனத்துடன் செய்து முடிக்க வேண்டும் அப்படி செய்யாமல் மனக்குழப்த்துடன் செயலாமா,வேண்டாமா என்று குழம்பிக்கொண்டிருந்தால் எதுவும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.எடுக்கும் காரியத்தில் முழு மனத்துடன் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும்.

mgandhi
01-12-2007, 06:28 PM
இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

கிணற்றில் நீர் எடுக்க எடுக்கத்தான் சுரக்கும் நாம் எடுக்கா விட்டால் அது சுரக்காது அது போல் நாம் கற்ற கல்வியையும், அனுபவத்தையும் பிறருக்கு பயன் படும் படி செய்ய வேண்டும் அப்படி செய்யாவிட்டில் கற்றதினால் எந்த பயனும் இருக்காது.

mgandhi
04-12-2007, 04:33 PM
இருந்து கொடுத்ததை நடந்து வாங்கு

கடன் வாங்குபவர்கள் நம் வீடு தேடி வந்து கடன் கேட்பான் அப்பொழுது நாம் முன்பின் யோசிக்காது அமர்ந்து கொண்டே கடன் கொடுத்தால் அதை வாங்க அவன் வீட்டிர்க்கு நடந்து நடந்துதான் வாங்கவேண்டும்.மிக அழகாக உணர்த்துகின்ற பழமொழி இது.

mgandhi
07-12-2007, 04:21 PM
இரவல் சோறு பஞ்சம் தீர்க்குமா?

நாம் பிறர் தயவாள் வாழ்வதும்,யாசகம் பெற்றும் எவ்வளவு நாள் தான் வாழமுடியும் அது நம்முடைய பஞ்சத்தை தீர்க்காது.நாம்உழைத்து உண்டால் தான் மனதிர்க்கு நிம்மதியும்,நமது வருமையையும் போக்கும் ஆகவே நாம் உழைத்து உண்ண வேண்டும்.

மலர்
02-02-2008, 06:20 PM
சகோதரரே....
ஏற்கனவே காந்தி அண்ணாவால் பழமொழி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=158717&postcount=1) என்று ஒரு திரி தொடங்கப்பட்டுள்ளது....

கிஷோர்
03-02-2008, 12:06 AM
மிக்க நன்றி , மிகவும் பயனுள்ள வழிகாட்டல்.

sarcharan
05-02-2008, 07:43 AM
ஆசைஅறுபது நாள்
மோகம் முப்பது நாள்

இப்பழமொழி காமத்திற்கு மட்டும் சொன்னதன்று.பொதுவாக மணமுடித்து வாழத் துவங்கும் தம்பதிகள்அநேக ஆசைகளும்,மோகமும் ஏற்படும். அந்த ஆசையும்,மோகமும்
சேர்ந்து தொண்ணூறு நாள் கழிந்த பின் மங்கத் தொடங்கும்.
அந்த தொண்ணூறு நாளில் இருந்த உற்சாகமும்,மனக்கிளர்ச்சியும் பின்னாளில் குறையும்.இதையே பல்வேறு செல்வத்துடனும் ஒப்பிடலாம் .உதாரணத்திற்கு நாம் புதிதாக ஒரு கலர்டிவி வாங்கினோமேயானால் அந்த டிவியை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வோம், பிறகு நாள் செல்லச் செல்ல முன் இருந்த அக்கறை குறையும். இண்னும் பல உதாரணம் கூறலாம். நாம் புதியதாக இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பும்,மரியாதையும் தருகிறோம்.

அத்தோடு 90 நாட்கள் முடிந்தபின் வீட்டில் புதிய அங்கத்தினர் வருவதாலும் இப்படிச்சொல்வார்கள்

sarathecreator
16-02-2008, 02:17 PM
ஆறாயிரம் தமிழ்ப் பழமொழிகள் - ஆங்கில விளக்கத்துடன் மென்னூல் சுட்டி இங்கே உங்கள் பார்வைக்காக

http://www.esnips.com/nsdoc/33fa329a-7c2e-459b-8973-1363352ec91b

http://www.scribd.com/doc/528047/6000-Tamil-Proverbs-Aphorism

aren
16-02-2008, 02:21 PM
அத்தோடு 90 நாட்கள் முடிந்தபின் வீட்டில் புதிய அங்கத்தினர் வருவதாலும் இப்படிச்சொல்வார்கள்

வரவர மாமியார் கழுதைப்போல் ஆனாளாம் என்றும் சொல்வார்கள். அதைச் சொல்கிறீர்களா

அனுராகவன்
16-02-2008, 11:57 PM
ஆறாயிரம் தமிழ்ப் பழமொழிகள் - ஆங்கில விளக்கத்துடன் மென்னூல் சுட்டி இங்கே உங்கள் பார்வைக்காக

http://www.esnips.com/nsdoc/33fa329a-7c2e-459b-8973-1363352ec91b

http://www.scribd.com/doc/528047/6000-Tamil-Proverbs-Aphorism

நன்றி நண்பரே..
மிக்க நன்றி
தொடர்ந்து வருக..

mgandhi
22-05-2008, 07:42 PM
மனிதனுக்கு சுயநலம் மட்டும் முக்கியமில்லை அதோடு கொஞ்சம் பொது நலமும் தேவை ‘தன்னைபோல பிறரையும் நினை ‘ என்பார்கள். இந்த நிலை வந்தால் பகை குறையும் மனிதநேயம் வளரும்

ஊரான்வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன்பிள்ளை தானே வளரும்.

எவ்வளவு அருமையான பழமொழி இது.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு. கூடி வாழும் இயல்புடையவன் ஊருடன் ஒத்துவாழ் என்றும், ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்ற எச்சரிக்கையும் ஊரின் நிலைக்கு ஏற்பவே வாழவேண்டும் என்பதை வேறுவிதமாக கூறும் பழமொழி இது

ஆடையில்லாத ஊர்ல
கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.

எல்லோறும் ஆடை இல்லாமல் திரியும் ஊரில் நாம் மட்டும் ஆடை அணிந்து இருந்தால் நம்மை அவர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள்

அனுராகவன்
23-05-2008, 12:40 AM
அருமை காந்தி அவர்களே!!
இன்னும் தாங்க..

mgandhi
23-05-2008, 06:58 PM
சாகாமல் கற்பதே கல்வி
பிறரிடம் ஏகாமல் உண்பதே ஊன்.

எந்த மனிதனும் சுயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பழமொழி இது.
சாகாமல் கர்பதே கல்வி என்றால் எந்த ஒரு கலையோ அல்லது கல்வியோ கற்கும் போது அலட்சியமாகவே அல்லது சிரமப்பட்டு கொண்டே கற்றுக் கொள்ள கூடாது அப்படி கற்ற கல்வி மனதில் நிலையாக நிற்காது மனமகிழ்சியுடன் கற்ற கல்வியே நிலைக்கும்.

அதுபோல் அடுத்தவர் உதவியை கேட்டு அதன் மூலம் உண்ணும் உணவு தொடர்த்து கிடைக்காது.பிறர்முலம் கிடைக்கும் உணவை தவிர்த்து நம் சொந்த முயர்ச்சியில் உழைத்து உண்ணுதலே சாலச் சிறந்தது அதுவே நிலைத்து நிற்க்கும்


அருமை காந்தி அவர்களே!!
இன்னும் தாங்க..

மிக்க நன்றி அனு

mgandhi
28-05-2008, 12:25 PM
சிந்தின வீட்டில் சேராது மங்கின வீட்டில் வராது.

சிந்தினது என்றால் தானியங்கள் சிதரி கிடக்கும் வீட்டில் அதாவது (*பொருப்பு இல்லாதவீடு )
மங்கின என்றால் இருள் சூழ்ந்த வீடு அதாவது (நன்கு சுத்தமாக பராமரிக்காத வீடு)இப்படி பட்ட வீடுகளுக்கு செல்வமும், கல்வியும்,முறையே சேராது வராது என்பதை விழக்கும் பழமொழி இது.