PDA

View Full Version : யாஹூவை வாங்கியது மைக்ரோஷாப்ட்அன்புரசிகன்
02-02-2008, 01:29 PM
உலகில் மிகப்பாரிய இணைய சேவையை வழங்கும் யாஹூவை 44.6 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மைக்ரோஷாப்ட் நிறுவனம் வாங்குகிறது.

இது தொடர்பான தகவலை கூடல் இணையத்தில் வாசித்தேன். செய்தி இங்கே (http://www.koodal.com/news/world.asp?id=26606&title=tamilnadu-news-headlines-in-tamil).


யாகூ இணையதளத்தை மைக்ரோசாப்ட் வாங்குகிறது
சான் பிரான்சிஸ்கோ, பிப். 2-

உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான யாகூவை 44.6 பில்லியன் டாலர்களுக்கு (ரூ. 1,73,940 கோடிகள்) மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குகிறது.
உலகின் இன்னொரு மகா பெரிய இன்டர்நெட் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியால் யாகூ பின் தங்கி வரும் நிலையில் மைக்ரோசாப்ட் அதை வாங்குகிறது. ஒவ்வொரு யாகூவின் பங்குக்கும் 31 டாலர்கள் வழங்குவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மைக்ரோசாப்டின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் (Steve Ballmer is chief executive officer of Microsoft Corp) யாகூ போர்ட் ஆப் டைரக்டர்கள் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன்மூலம் யாகூவை வாங்க பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 44.6 பில்லியன் செலவு பிடிக்கும். சில காலமாகவே யாகூவின் பங்கு மதிப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அதே நேரத்தில் கூகுள் நிறுவன பங்குகள் அதிவேகத்தில் வளர்ச்சி கண்டு கொண்டுள்ளன. யாகூவை மைக்ரோசாப்ட் வாங்கப் போவதாக செய்தி வெளியான உடனேயே யாகூவின் பங்குகளின் விலை 60 சதவீதம் அதிகரித்துவிட்டது. கூகுள் பங்குகளின் மதிப்பு 8 சதவீதம் அளவுக்கு சரிந்தது.
ஓராண்டுக்கு முன்பே யாகூவை வாங்க மைக்ரோசாப்ட் முயன்றது. ஆனால், அப்போது அதை யாகூ ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாகூ நிறுவனத் தலைவரான டெர்ரி செமல் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். மேலும் செலவைக் குறைக்க 1,000 பேரை வேலை நீக்கம் செய்யவும் யாகூ திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் யாகூவை கைப்பற்றுகிறது.


நன்றி - கூடல் இணையம்.

ஓவியன்
02-02-2008, 02:03 PM
ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த யாகூவின் நிலை, இப்போது இப்படியாக கூகிளின் அதீத வளர்ச்சியும் ஒரு காரணமே....

இணைய உலகின் தாதாவாக தான் மட்டும் இருக்க வேண்டுமென்பதில் மைக்ரோசொப்ட் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது....

தகவல் பகிர்வுக்கு நன்றி அன்பு.......!!

மயூ
02-02-2008, 02:52 PM
நேற்று வாங்க முயற்சிகள் நடப்பதாக வாசித்தேனுங்கோ.. இன்று வாங்கிட்டானுக... என்னா வேகம்!!!

aren
03-02-2008, 09:57 AM
கூகிளின் வளர்ச்சியைக் கண்டு யாஹூவும், மைக்ரோசாஃப்டும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தன. இந்த விஷயம் எப்பொழுதோ நடந்திருக்கவேண்டும், இரண்டு வருடங்கள் கழித்து நடந்திருக்கிறது. கூகிள் இன்னும் முன்னேறிவிட்டது.

என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். போட்டிகள் இருந்தால் நல்லதுதான். இதனால் பல நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அன்புரசிகன்
03-02-2008, 11:15 AM
என்ன தான் கூகிளில் சிறப்பு இருந்தாலும் கூகிள் சட்டவிரோதமாக இணையதகவல்களை திருடுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. ஈரானில் ஏற்கனவே இது தடைசெய்யப்பட்டுவிட்டது. இன்னும் என்ன நடக்க இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

சூரியன்
03-02-2008, 11:29 AM
கேள்விபட்டேன்.
இதனால் நமக்கு நிறைய புதிய புதிய வசதிகள் கிடைக்கும் என நம்பலாம்.

மன்மதன்
03-02-2008, 12:06 PM
இனி யாஹூவின் சேவைகளை 'ஒரிஜினல்' விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும் என்று ஒரு செய்தி அடிபடுகிறது.. யாஹூவின் இலவச சேவைகளான பல அம்சங்களை இனி உபயோகிக்கும் போது , ஒவ்வொரு தடவையும் 'விண்டோஸ் ஜெனியூன் டூல்' சோதனை செய்யுமாம்.. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று அனைவரும் இனி பாடவேண்டியதுதான்..
( இந்தியாவின் 92% சதவீதம் பேர் டுபாக்கூர் விண்டோஸ் உபயோகிக்கிறார்களாமாம்.. :D)

பூமகள்
03-02-2008, 01:44 PM
நாங்களெல்லாம் கூகில் சப்போர்ட்...!

இந்த மைக்ரோசாஃப்ட் ஆசாமிங்க எதையுமே ப்ஃரீயா தர மாட்டாங்க..!!

ஹி ஹி..!!

கூகிலா கொக்கா...!!!!

கமான் கூகில் கமான்..! :D

aren
03-02-2008, 01:46 PM
நாங்களெல்லாம் கூகில் சப்போர்ட்...!

இந்த மைக்ரோசாஃப்ட் ஆசாமிங்க எதையுமே ப்ஃரீயா தர மாட்டாங்க..!!

ஹி ஹி..!!

கூகிலா கொக்கா...!!!!

கமான் கூகில் கமான்..! :D

உங்களுக்கு கூகுளில்தான் வேலை என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். சந்தோஷம்!!!

சூரியன்
03-02-2008, 01:57 PM
நாங்களெல்லாம் கூகில் சப்போர்ட்...!

இந்த மைக்ரோசாஃப்ட் ஆசாமிங்க எதையுமே ப்ஃரீயா தர மாட்டாங்க..!!

ஹி ஹி..!!

கூகிலா கொக்கா...!!!!

கமான் கூகில் கமான்..! :D

தற்போது கூகிலில் தான் பல இலவச சேவையை தருகிறார்கள்.

பூமகள்
03-02-2008, 01:58 PM
கூகில் இல்லாட்டி.. முக்கால் வாசி சாஃப்ட்வேர் இஞ்சினியர் கதி???????

கஸ்ட காலம் ஆயிடுமே..!

கூகிலுக்கு ஜே... கூகிலுக்கு ஜே...!!

பூமகள்
03-02-2008, 02:07 PM
உங்களுக்கு கூகுளில்தான் வேலை என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். சந்தோஷம்!!!
வேறு விதமாய் சொல்வதானால்..
மைக்ரோசாஃப்ட்க்கு எதிரி..!!:icon_ush:

முக்கியமா 'புள்ளி வலை'க்கு எதிரி..!!:rolleyes:

இப்போ புரியுதுங்களா நான் எதுல வேலை செய்யறேன்னு..?!!!!!:D:lachen001:

aren
03-02-2008, 02:22 PM
.Netற்கு எதிரின்னா எனக்குத் தெரியாது. ஜாவாவா. அப்பாடியென்றால் சூரியனா?

பூமகள்
03-02-2008, 02:39 PM
.Netற்கு எதிரின்னா எனக்குத் தெரியாது. ஜாவாவா. அப்பாடியென்றால் சூரியனா?

ஹி ஹி.. நோ கமெண்ட்ஸ்...!! :):)

aren
03-02-2008, 11:03 PM
சூரியனை விரைவில் ஆரக்கிள் வாங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

thangasi
04-02-2008, 04:40 PM
இணைய உலகத்தில் இரண்டு ரத்தினங்கள் யாகுவும்,கூகுளும். அதில் ஒன்றை கணணி அரசன் மைக்ரோசாப்ட் தனது மகுடத்தில் பதித்தால் அதற்கு மதிப்பு கூடத்தான் போகிறது. நமக்கு இன்னும் பல நல்ல விசயங்கள் கிடைக்கத்தான் போகிறது. வரவேற்போமே....

aren
05-02-2008, 01:36 AM
நேற்று கூகுளும் யாஹூவும் பேசியுள்ளன. மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் பணம் போதவில்லை என்று யாஹூ என்னுகிறது. கூகுளும் மைக்ரோசாஃப்டை உள்ளே வரவிடக்கூடாது என்று நினைக்கிறது. இதனால் யாஹூ பங்குகாரர்களுக்கு அதிகமான பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சண்டை ஆரமபம். கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான்.

வெற்றி
16-02-2008, 12:20 PM
இணைய உலகத்தில் இரண்டு ரத்தினங்கள் யாகுவும்,கூகுளும். அதில் ஒன்றை கணணி அரசன் மைக்ரோசாப்ட் தனது மகுடத்தில் பதித்தால் அதற்கு மதிப்பு கூடத்தான் போகிறது. நமக்கு இன்னும் பல நல்ல விசயங்கள் கிடைக்கத்தான் போகிறது. வரவேற்போமே....

MS அரசன் அல்ல.. ஒரு சர்வாதிகாரி(வியாபாரி)....வாங்கிவிட்டால் வைக்கும் ஆப்பு( பயன்படுத்துவேருக்கு)
புது செய்தி....யாகூ பேரத்துக்கு படியலை....
வாழ்க...யாகூ..வாழ்க..கூகுள்

aren
16-02-2008, 02:03 PM
யாஹூ நிச்சயம் படிந்துவிடும். அப்படியில்லையென்றால் அவர்களால் கூகிளின் வளர்ச்சியில் தாக்குபிடிக்கமுடியாமல் கிடைக்க இருப்பதும் போய்விடும். ஆகையால் அது நிச்சயம் மைக்ரோசாஃப்டின் கிளையாகிவிடும்.

மீனாகுமார்
16-02-2008, 05:24 PM
ஏன்யா.. பேச்சுவார்த்தை ஆரம்பிச்சா அதுக்குள்ள வாங்கியாச்சுன்னு செய்தி போட்டிருக்கீங்க.. ரொம்ப டப்பு...

கண்ணாமூச்சி விளையாட்டு தானே நடக்குது இப்போ ? முடிவு என்னவாகும் பார்ப்போம்.

reader
08-04-2008, 01:55 PM
யாகூ எல்லாம் இதுக்கு மசியுமா? ஆனால் கூகுள் மாதிரி அதால முடியலயே....... இருந்தாலும் சில யாகூ சேவைகளை போல் கூகுள் அளிக்கவில்லையே எ.கா: யாகூ சாட் எவ்வளவு நண்பர்கள் அங்கே பார்க்கலாம்.