PDA

View Full Version : மனிதனுக்கு என்ன குணம்சாலைஜெயராமன்
01-02-2008, 05:57 PM
நாயின் குணம் நாவிலே
நரியின் குணம் நினைவிலே
பாம்பின் குணம் பல்லிலே
பசுவின் குணம் பாலிலே
படைப்பின் பல குணங்களும்
பாடம் ஏதும் கொள்ளாமல்
பக்குவமாய் பற்றியது
பாவம் இந்த மனுவிற்கு
பாதி மதி சூடிநி்ற்கும்
பரம சிவன் குணமும்
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன் குணமும்
பாழ்பட்ட மனிதனுக்கு
பல நாளும் தெரியலே
எத்தனையோ இறைகுணங்கள்
ஏராளமாய் இருந்தும்
மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தயிம்ப இறைவனும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்
கூறிவந்த குற்றமெல்லாம்
மிருகத்தின் குணங்களாம்
மனிதனுக்கு என்ன குணம்
மறந்தும் கூட தெரியலே
மறைந்திருக்கும் மனிதகுணம்
மறையோன் மட்டும் அறிவானோ
எண்குணத்தான் என்பதெல்லாம்
இறைவனுடைய இயற்பெயேர
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்

அறிஞர்
01-02-2008, 06:46 PM
மிருக குணம் பல இருந்தாலும்....
மனிதனாய் வாழ...
இறைவனை அறிதல் முக்கியம்...

அருமை அன்பரே..

அனுராகவன்
02-02-2008, 06:14 AM
(சாலைஜெயராமன்)இறைவனுடைய இயற்பெயேர
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்
நன்றி நண்பரே..
உங்கள் அககவிதை மிக நன்றி..
இறுதியில் இறைவனை அடைவது சிறந்தது..
ஆறுகள் எங்கிருந்து தொடங்கினாலும் இறுதியில் கடலில் கலப்பது போல மனிதனும் அப்படிதான் ..
ம்ம் என் வாழ்த்துக்கள்

நாகரா
02-02-2008, 12:28 PM
நாயின் குணம் நாவிலே

எத்தனையோ இறைகுணங்கள்
ஏராளமாய் இருந்தும்
மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தயிம்ப இறைவனும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்

எண்குணத்தான் என்பதெல்லாம்
இறைவனுடைய இயற்பெயேர
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்
குற்றமற்ற குணம் கொண்டு
கொற்றவனாய் வாழலாம்

நல்ல வரிகள். சாலை ஜெயராமன் அவர்களே! நல்லதோர் அருங்கவிதைக்கு நன்றியும் பாராட்டுகளும்.

இறைவனுடைய இயற்பெயரையும்
இறைவனின் குணம் இன்னதென்றும்
அறிவோம்
இந்நிலத்தில் நாமே
இறையென்று அறிந்து
அந்நிலையில் வாழ்வோம்.

"பூரணத்துவம்
சுயம்பிரகாசம்
நித்யானந்தம் சச்சிதானந்தம் ஜீவானந்தம்
அமிர்தானந்தம் ஆன்ம நேய ஒருமை
பேரன்பு
பெரறிவு
அருட்பேராற்றல்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
கடவுட்தன்மை
அருட்பேரரசு அவதார மகிமை
நானே நானெனும் பூரணம்
மெய் வழி ஜீவன்"
இவ்விறை குணங்களனைத்தும்
நமக்கு வழங்கி
"நானே நீ, நீயே நான்"
என்று உறுதி சொல்லும்
வள்ளலாரின் வாக்குறுதிகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284)
மறவாதிருப்போம்.

சாலைஜெயராமன்
02-02-2008, 01:42 PM
கருத்துக்களுக்கு நன்றிகள் திரு நாகரா அவர்களே.

சொல்ல வந்த செய்தி தங்களை அடைந்திருப்பது திருப்தியை அளிக்கிறது சகோதரி அனு. நன்றிகள்.

ஜெயாஸ்தா
02-02-2008, 02:25 PM
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டதாலோ என்னவோ இந்த பிரபஞ்சத்தின் அனைத்துக் குணநலன்களும் அவனுள் அடக்கம். நல்ல குணங்கள் தூண்டப்படும்போது இறை நிலையையும், கெட்ட குணங்கள் தூண்டப்படும் போது இழிநிலையையும் அடைகிறான்.

நன்றிக்கு நாய்
உழைப்புக்கு மாடு
உறுதிக்கு சிங்கம்
உயர்வுக்கு பருந்து
சேமிப்புக்கு எறும்பு
சுறுசுறுப்புக்கு தேனி
ஞாபகத்திற்கு யானை
வளர்ப்பிற்கு கங்காரு
என்று ஒவ்வொரு பண்பிற்கு ஒரு மிருகத்தை ஒப்பிடும் நாம் மனிதனை எந்தப்பபண்பிற்கும் இலக்கணமாக கொள்வதில்லை.


மனிதன் என்னும் மிருகத்துக்கு
இவை அனைத்தும் இன்னமும்
இருட்டில்தானே மறைந்திருக்கு
எடுத்தயிம்ப இறைவனும்
இரக்கத்தோடு வந்தால்கூட
இகழ்ந்து விரட்டும் இயல்புதான்
இவன் கொண்ட இழிகுணம்


மிக அருமையான வரிகள் அண்ணா.

சிவா.ஜி
02-02-2008, 02:46 PM
மறந்தும் கூட மனித குணம் கொள்ளாதிருங்கள் மிருகங்களே என்று மன்றாடும் நிலையிதான் மனிதனின் குணமிருக்கிறது.
இறைவனே இறங்கி வந்தாலும் அவனை இளக்காரமாகப் பார்க்கும் அற்பர்களாய் ஆகிப்போனார்களே.....
பட்டியலிட்ட வரிகள் அத்தனையும் பட்டுணர்ந்த அறிவை காட்டுகிறது.மிக்க அருமை ஜெயராமன்.வாழ்த்துகள்.

rocky
02-02-2008, 03:01 PM
அன்புள்ள மன்றத்தோழர் சாலைஜெயராமன் அவர்களுக்கு,

மிகவும் அருமையான கவிதை, மனிதனுக்கு நிலையான குனம் என்ற ஒன்று கிடையவே கிடையாது, தேவைக்கும் சமயத்திற்க்கும் ஏற்றார்போல் தன் மனத்தை மாற்றிக் கொள்வதே இவன் குனம்.

ஐந்து வரை அறிவுபெற்ற
ஜீவனெல்லாம் அடங்கிநிற்க,

அதிகம் ஒன்று பெற்றதனால்
தலைகனத்தில் ஆடுகிறான்,

கொடுத்தவனே எடுக்க வந்தால்
அழித்திடுவான் அவனையுமே

ஆறாம் அறிவு இருக்கும்வரை
இவனுக்கில்லை நல்லகுனம்.

சாலைஜெயராமன்
04-02-2008, 06:47 AM
ஐந்து வரை அறிவுபெற்ற
ஜீவனெல்லாம் அடங்கிநிற்க,

அதிகம் ஒன்று பெற்றதனால்
தலைகனத்தில் ஆடுகிறான்,


அழுத்தமான வரிகள் திரு ராக்கி. அற்புதமான சிந்தனை. நல்ல பொருள் நயமிக்க பின்னூட்டக் கவிதை. நன்றி.

ஐந்து அறிவுக்கு கருவிகளை வெளிப்புறத்தில் வைத்த இறைவன் ஆறாம் அறிவு இருப்பதை அறிவித்து விட்டு அதற்கான கருவியை மறைத்து வைத்து மனிதனைப்படைத்தான். மனிதன் தான் பெற்ற ஐந்தறிவின் பலனை பிறர் நல சிந்தனையில் செலவழித்தால் ஆறாம் அறிவின் கருவியைக் காணலாம். ஏனெனில் அணுவைவிட சக்தி வாயந்த அந்தப் பொருளை மனிதன் சற்று முயற்சித்தால் ஒரு மெய்க்குருவின் அருளினால் கண்டு பயன் பெற முடியும்.

மும்மலம் என்னப்பட்ட ஆணவம், கன்மம், மாயை என்ற வலையினில் மாட்டிக் கொண்டதால் ஆறாம் அறிவின் அளவை நம்மால் அறிய முடியவில்லை. இந்த இருட்டின் தன்மையை அறிந்து விலக்கும் போது பேரொளியாகிய பகுத்தறிவின் மாட்சி நமக்குப் புலப்படும்.

கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி ராக்கி.

சாலைஜெயராமன்
04-02-2008, 06:51 AM
நன்றி ஜெயஸ்தா,

விட்டுப்போன பல மிருகங்களின் ( மிருகம் என்று சொல்ல சற்று விசனமாயிருக்கிறது), அற்புதமான குணநலன்களை அழகாக வரிசைப் படுத்தியிருந்தீர்கள்.

மனிதனி்ன் நிஜ பண்பை அறிந்து அதைக் கைக்கொள்ளும்போது பேராற்றலான பல கலைகள் நமக்கு கை கூட வாயப்பிருக்கிறது.

நல்ல சிந்தனைக்கு நன்றிகள் பல ஜெயஸ்தா.

சாலைஜெயராமன்
04-02-2008, 06:58 AM
மிருகங்களை வேண்டிக் கொள்வதாக வடித்த கற்பனை அருமை திரு. சிவா. நல்ல பின்னூட்டத்திற்கு நன்றி.

எதில் புழங்குகிறோமே அதாவே ஆகிவிடும் நிலை உயிரனங்களில் மனிதனுக்கு மட்டுமே தரப்பட்டிருப்பதைக் கொண்டு, நன்மையா தீமையா என அறிந்து அதற்கேற்றபடி ஆகிக் கொள்ளும் உரிமை மனிதனுக்கு மட்டும் விசேஷமாகத் தரப்பட்டிருப்பது ஒரு வியப்பான விஷயமாக இருக்கிறது அல்லவா?

நம்மன்றத்தில் நல்ல சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மீண்டும் நன்றி திரு. சிவா.

திரு மரியாதை நிமித்தம் மட்டுமல்ல. அழகு என்ற பொருளையும் தரவல்லதுதானே. நான் திரு சிவா என்றே அழைக்கிறேன்.

ஆதி
04-02-2008, 07:01 AM
ஐய்யா, தங்களின் இந்த கவிதையை நான் முன்பே வாசித்திருந்தாலும்.. மன்றத்தின் பதிவிட்டப் பதிப்பை இன்றே கண்டேன்..

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் ஆறறிவு உடையவர் மனிதனும் தெய்வமும் எனச் சொல்லி இருப்பார்.. அவ்வரிகள் எனக்குள் கொட்டிவிட்டுப் போனச் சிந்தனைகள் இவை..


மனிதனாகிய நானோ, இந்த மிருங்களின் கொடும் குணங்கள் அனைத்தையும் கொண்டுள்ளது போல் அவற்றின் நற்குணங்களை நுண்ணளவும் கொள்ளவில்லையே என்று அவ்வப்போது எனக்குள் கேள்விகள் எழும்..


மனிதனாகிய எனது குணம் என்ன ? இந்த மிருகப் பாதையில் நடந்து தெய்வ இலக்கை அடைதல் தானோ ? அடைதல் என்பது சங்கமமா, அடைக்களமா அல்லது அடங்குதலா ? இப்படி கிளைப் பிடித்து வளரும் கேள்விகள் இலைத்து இன்னும் இன்னும் அடர்ந்து கொண்டிருக்கிறது விடையில்லா இருட்டாய்..

அந்த இருட்டில் இறைத்தன்மைக்கும் விலங்குதன்மைக்கும் உள்ள இடைவெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் மனிதனாய் புனிதம் நோக்கி..

தன் ஞானத்தேடல் தந்த ஐய்யாவிற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

அன்புடன் ஆதி

சாலைஜெயராமன்
04-02-2008, 07:28 AM
நன்றி பல ஆதி,

சமுதாயத்தில் நல்ல சிந்தனைகளைப் பற்றிப் பேச தற்போது நாதியில்லாத இக்காலத்தில் தங்களைப் போன்ற இளைஞர்கள், விடைதேடி வெளியே புறப்படாமல், தன்னுள் தேடத் தொடங்கியிருப்பது ஒரு நல்ல மாற்றம்தான்.

இம்மன்றத்தில், திரு நாகரா போன்ற புதிய சிந்தனையாளர்கள் வரவாகியிருப்பதும், நம் தாய்த்திருநாடாம் பாரதத்தின் எழுச்சி இந்த அகில உலகிற்கே தன் பங்களிப்பை வெகு சீக்கிரம் தரத்தான் போகிறது. மிருக குணம் விட்டகன்று எங்கும் எதிலும் தெய்வீக மணம் கமழ்ந்து ஒரு புதிய உலகின் நிர்மாணம் நம் இந்தியாவிலிருந்து உங்களைப் போல நல்ல பல இளைஞர்கள் மூலமாக நடைபெறும் காலம் மிகச் சமீபமாக இருக்கிறது.

தேடுங்கள் கண்டடைவீர். புனித விவிலிய வேதம் காட்டும் இப்பாதையை தீபத்தின் சுடராக இளைஞர்கள் மத்தியில் பரப்ப நல்ல பல இயக்கங்கள் நமது நாட்டில் வளர வேண்டும். என் வேண்டுதல் அனைத்தும் அதாகவே மாற்றிக் கொண்டுள்ளேன். இந்த எண்ணத்தில் தங்களைப் போன்றோர் இணைந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.

உங்களுக்கு அனுப்பிய அக்கவிதையில் சில மாற்றங்கள் செய்து மன்றத்திற்கு வழங்கினேன்.

பொதுவாக திரி தொடங்கி என் கருத்துக்களை வைப்பதைக் குறைத்துக் கொள்வதுதான் நான் விரும்புவது. பின்னூட்டம் இடுவதுதான் எனக்கு அதிக மகிழ்வைத் தருகிறது. நல்ல படைப்புகள் பல நமது மன்றத்தில் வரவேண்டும். அதில் இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கவேண்டும்.

மீண்டும் நன்றியுடன்

இளசு
07-02-2008, 07:21 PM
என் மனங்கவர் பாட்டுக்கோட்டையாரின் வீரிய வரிகளை வாசித்தது போல்
அதே அனுபவம்..

மனிதன் ஒரு சமுக விலங்கு..

ஆனால் முன்னோக்கியும் பின்னோக்கியும் பல வித்தியாசங்கள் -

கர்ப்ப வாசம் வீசும் பெண் விலங்கை ஆண் நெருங்காதாம்..
ஆனால் ஆண் மனித விலங்கு?

அதே சமயம் இந்த மனித விலங்குதான் -
சிரிக்கும்... கவி எழுதும்...
சிந்தித்து நோய் தீர்க்கும்..
விண்வெளி ஓடம் ஏறும்..
மின், அணு, அண்டம் அறியும்..

குறைகளா..நிறைகளா எது அதிகம் இவ்வினத்திடம்?
பட்டி மன்றம் வைக்கலாம்..
பாதிக்குவளை -காலி, நிரம்பி...
பார்ப்பவர்கள் பார்வைப்படி நிறுவலாம்..

களைகள் களைய சங்கூதவும் வேண்டும்..
பயிர்கள் வளர நீரூற்றவும் வேண்டும்..

மனிதம் இன்னும் செம்மையாகட்டும்..

பணி செவ்வனே தொடருங்கள் சாலை ஜெயராமன் அவர்களே!
வாழ்த்துகள்!

சாலைஜெயராமன்
07-02-2008, 08:31 PM
நன்றி திரு இளசு அவர்களே.
மனிதன் நிச்சயமாகச் சிறப்புக்குடையவன்தான். அகத்தின் விளையும் அற்புதங்களை அழகாகக் கோடிட்டுள்ளீர்கள். வித்தியாசமான பார்வை. பாராட்டுக்கள்.

தன் பெருமை அறியாத மயக்கம்தான் அவனை மிருக குணத்தில் ஆக்கியுள்ளது. இறை குணம் தன்னைக் காட்டாது இருக்கிறது. அதைத் தேடி அடைய வேண்டிய கட்டாயக் கடமை ஒவ்வொரு மனுவுக்கும் கடமையாயுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.

எழுபிறப்பும் ஏமாப்புடைத்து

வள்ளுவம் வகுத்தவழி. ஏழ்பிறப்பு மனிதன் அடையவேண்டும். அது இறந்து இறந்து பிறப்பது அல்ல.

பிறக்கும் போது சவமாக வந்தோம். கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு அனைத்தும் கொண்டிருந்தாலும் உயிரற்ற பொருளாய் வந்தோம். முதற்பிறப்பு பிறந்தது சவம் எனவே பிர+சவம் என்ற பேராயிற்று.

அறிவு கொண்டோம். இரண்டாம் பிறப்டைந்தோம். கண், காது, மூக்கு, வாய், உணர்வு அனைத்தும் உயிர் பெற்று மனிதனாகத் தகுதியடைந்தோம்,

மூன்றாம் பிறப்பு அன்னையை அறிந்தோம் அவள் தரும் பாலுக்காக. அவளாள் அனைத்து சுற்றம் அறிந்தோம்,


நான்காம் பிறப்பு மிட்டாய்க்கு மட்டும் ஆசைப்படும் தீனிப் பிறப்பு, செல்வங்கள் அனைத்தும் இருந்தாலும் அதன் மதிப்பு அறியாது மிட்டாய் இனிப்புதான் உலகத்தின் அதிசிறந்த பொருள் என்ற மாயையில் காசு வேண்டுமா, மிட்டாய் வேண்டுமா என்றால் மிட்டாயைத் தேடும் அறிவில் இருந்தோம்,

ஐந்தாம் பிறப்பு காசைத் தேடிக் கொண்டால் இனிப்பு சாம்ராஜ்யத்தையே தனதாக்கிக் கொள்ளலாம் என்று மிட்டாயை விட்டு பொருள் தேடும் முகத்தான் கல்வி கேள்வியில் பிறந்தோம்.

ஆறாம் பிறப்பால் நன்மை தீமை அறிந்து பொருள் தேடும் வழியில் தடைகளை நீக்கிக் கொள்ள எந்தத் தவறையும் செய்யும் பகுத்தறிவின் பிறப்பை பாழுக்கு ஆக்கிக் கொள்ளும் ஒரு பிறப்பைப் பெற்றோம்.

இதோடு நின்று விட்டது மனிதப் பிறப்பு. ஏழ் பிறப்பென்பது செத்து செத்து பிறப்பது அல்ல. தேகத்திலேயே ஒவ்வொரு முறையும் புதுப்பிறப்பாக கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் புதிய தேகத்தை அடைந்து இதோ ஆறு பிறப்பை அடைந்து மனிதனானோம்.

ஆனால் மனிதன்தான். அதற்குரிய செயல்தான் செய்கிறோமா என்றால் இல்லை. நிச்சயமாக இல்லை. மிருகத்தைவிட கேவலமான பல ரூபங்களை எடுக்கும் வல்லமையைக் கொண்டோம்.

ஏழாம் பிறப்பு ஒன்று பாக்கியிருக்கிறது. அது தேவனாகப் பிறப்பது. மனிதன் இறைவனாக ரூபம் கொள்ளும் ஒரு அதிசயப் பிறப்பு பாக்கி இருக்கிறது. இறைவன் எங்கோ ஆகாசத்தில் இல்லை. நாமே இறைவன். அதை அறியமட்டும் நம்மால் முடியவில்லை. இது சாபமா ? வரமா ?

முடிவு அவரவர் கையில்.

கருத்துக்களுக்கு நன்றி திரு இளசு

ஜெகதீசன்
07-02-2008, 08:53 PM
சாலை
கவிதை நன்றே.வாழ்த்துக்ள்.

மனிதன் மனிதனாய் வாழ
ஐந்து அல்லது ஆறு வரிகளில்
நடைமுறைக்கு உதவும் வரிகலை
கூற இயலுமா ?

சாலைஜெயராமன்
08-02-2008, 04:14 AM
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஜெகத்துக்கெல்லாம் ஈசனே.

திரு ஜெகதீசன் அவர்களே


மனதி்ருந்தால் மார்க்கமுண்டு
மார்க்கம் என்பது
மனதினை மாய்ப்பது
மாயத்தை மாய்த்தால்
மனிதன் ஈசனே
இல்லை
மனிதன் நீசனே

Narathar
09-02-2008, 05:36 PM
இறைவனின் குணம்
இன்னதென்று அறிந்துவிட்டால்
இந்நிலத்தில் நீயே
இறையென்று அறியலாம்சரியாய் சொன்னீர்கள்
வாழ்த்துக்கள்

நாகரா
20-02-2008, 05:55 AM
தன் பெருமை அறியாத மயக்கம்தான் அவனை மிருக குணத்தில் ஆக்கியுள்ளது. இறை குணம் தன்னைக் காட்டாது இருக்கிறது. அதைத் தேடி அடைய வேண்டிய கட்டாயக் கடமை ஒவ்வொரு மனுவுக்கும் கடமையாயுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.

ஐயா, ஒவ்வொரு மனிதனும் பொன்னே போல் போற்ற வேண்டிய இந்நல்வரிகளுக்கு மிக்க நன்றி.ஏழாம் பிறப்பு ஒன்று பாக்கியிருக்கிறது. அது தேவனாகப் பிறப்பது. மனிதன் இறைவனாக ரூபம் கொள்ளும் ஒரு அதிசயப் பிறப்பு பாக்கி இருக்கிறது. இறைவன் எங்கோ ஆகாசத்தில் இல்லை. நாமே இறைவன். அதை அறியமட்டும் நம்மால் முடியவில்லை. இது சாபமா ? வரமா ?

முடிவு அவரவர் கையில்.

எழுபிறப்பைப் பற்றிய புதிய பார்வை அருமை ஐயா.

கம்பளிப் புழு, பட்டாம் பூச்சியாகப் பரிமாறும் அதிசயத்தைக் கண்கூடாகக் காணும் மனிதன், தான் இறைவனாகும் அதிசயத்தை ஏன் நம்ப மறுக்கிறான்?

நல்லதோர் பின்னூட்டத்திற்கு நன்றி பல, ஐயா.

சாலைஜெயராமன்
20-02-2008, 02:39 PM
ஆமாம் திருமிகு நாகரா.

ஊர்வன ஜாதி பறப்பன ஜாதியாக உருவெடுக்கமுடியுமானால் நம்மால் ஏன் அமரத்துவம் அடைய முடியாது?

நிச்சயம் முடியும்.

அக்னி
20-02-2008, 06:39 PM
ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு குணம்...
அனைத்து மிருகக் குணங்களினதும் தொகுப்பு மனிதம்...
நல்லவையாக... தவிர்க்கவேண்டியவையாக...
இத் தொகுப்புத்தான், ஆறாம் அறிவாம் பகுத்தறிவோ..?

பகுத்தறிவு...
பகுப்பாய்வு செய்தால்
பகுபதம்...
இல்லாவிட்டால்
பகாப்பதம்...

பகுப்பறிவு பொருளானதாக இருந்தால் மனிதன், முதன்மை வழிகாட்டி.
பகுப்பறிவு பொருளாக மட்டுமிருந்தால் மனிதன், இழிமைக் குறிகாட்டி.

சிறப்பான கவிதை. கருத்தாழமிக்க பின்னூட்டங்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகளுடன்...