PDA

View Full Version : நிம்மதி



rocky
01-02-2008, 11:25 AM
நிம்மதியை நிலையாய்
பெரும் வழியைக்
கெடுத்த இறைவனிடமே
கேட்டேன்,

நான் கேட்டதும்
எதிரில் வந்தார்
உன் கேள்விகளைக்
கேள் என்றார்.

உன்னையே எண்ணி
உருகுவோரைக் காணாமல்
ஒரேமுறை அழைத்தவன்
என்னிடம் ஏன்வந்தாய்
என்றேன்?

என்னிடம் யாசிப்போரை
நான் விரும்புவதில்லை
நீ கேள்வி கேட்டதால்
வந்தேனென்றார்.

நான் இதுவரை
நிம்மதியாய் இருந்ததேயில்லை
எனக்குஏன் அதைத்
தரவில்லையென்றேன்?

கொடுத்ததைத் தொலைத்தவர்கள்
கொடுக்கவே இல்லையென்று
குறைகூறக் கூடாது
என்றார்,

எனக்கு நினைவுதெரிந்து
நான் நிம்மதியாய்
இருந்ததில்லையே நானெப்படி
தொலைப்பேனென்றேன்?

உன்நினைவு தெரிந்ததாலும்
உன்தேவைகளை அறிந்ததாலும்தான்
தொலைத்தாய், மீண்டும் பெருவது
கடினமென்றார்.

பதிலை உணர்ந்தவனாய்
பரிதாபமாய் நின்றேன்,
வேறு வழியிருந்தால்
சொல்லென்ரேன்?

இருக்கிறதென்றார், பதிலை
உடனே தந்தார், ஒன்று
நீ குழந்தையாய் இரு, அல்லது
குழந்தைகளோடாவது இரு
என்று கூறி மறைந்தார்.

அனுராகவன்
02-02-2008, 05:19 AM
நண்பரே ராக்கி...
நிம்மதி அடைய பல வழிகள் இருக்கு..
அதிலும் உங்கள் கேள்வி உள்நோக்கி சென்று இறைவனை காண முயல வேண்டும்....
ம்ம் அத்துடன் போதுமா..
வேற வரம் வேண்டாமா..
ம்ம் என் நன்றி

rocky
02-02-2008, 10:01 AM
அன்புள்ள மன்றத்தோழி அனு அவர்களுக்கு,

உங்களின் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி, நிம்மதியை அடைய உள்நோக்கிச் சென்று இறைவனை காண முயலவேண்டும் என்கிறீர்கள், அந்த அளவுக்கு பொருமை உள்ளவன் நானில்லையே என்னசெய்வது? அப்புறம் வேறு வரம் வேண்டாமா என்றீர்கள், நிம்மதியைத் தவிர வேறு என்ன பெரிய வரம் இருக்கப்போகிறது, அது ஒன்றே போதும். நன்றி.

ஓவியன்
03-02-2008, 07:24 AM
நிம்மதியை நாம் நம்மினுள்ளே தான் தேட வேண்டும் வெளியே அல்ல...
பலருக்கும் உள்ள பிரச்சினையே இதுதான் உள்ளே இருக்கும் நிம்மதியை கண்டெடுக்கத் தெரியாமல் எங்கெங்கோ எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...