PDA

View Full Version : பரமபதம்

rocky
01-02-2008, 11:23 AM
வாழ்க்கை ஒரு
பரமபதமாகவே தோன்றுகிறது
எனக்கு.

இங்கே ஏணிகளைவிட
பாம்புகளுக்கே நீளம்
அதிகம்.

பகடையை உருட்டியதுடன்
முடிகிறது ஆடுபவனின்
கடமை.

வெற்றியும் தோல்வியும்
முடிவாகும் விழுந்த
எண்ணில்.

அதிர்ஸ்டமே ஆதாரமான
விளையாட்டில் அறிவாளியார்
மூடர்யார்.

பரமபதமான வாழ்க்கைப்போட்டியின்
தோல்விகளுக்கு பொறுப்பு
நானல்ல.

வாழ்க்கை சதுரங்கமாகும்போது
என்காய்களை நான் நகர்த்தும்போது
நிச்சயம் நான் வெல்வேன்.

அனுராகவன்
02-02-2008, 05:22 AM
நண்பரே என் நன்றி முதலில்..
என் கேள்வி பரமபதம் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமா..
ம்ம் முயற்சிக்கு எப் பாராட்டுக்கள்

ஆதி
02-02-2008, 05:51 AM
ராக்கி இதற்கு முன் நீங்கள் எழுதிய கவிதைக்கும் இந்த உங்களின் கவிதைக்கும் நிறைய வேறு பாடு இருக்கிறது..

கருவை வார்த்தைகளுக்குள் புகுத்தி சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல இயன்றிருக்கிறது உங்களால்.. அதற்காக ஒரு தனி பாராட்டுக்கள் ராக்கி..

வாழும் மனிதரில் பலர் பல்து குணம் கொண்டவர்.. பல்து நம்பிக்கை கொண்டவர்.. இப்படி வேற்றுமையுடைய நம்மிடம் சில ஒற்றுமைகளும் உண்டு.. என்னவெனில்.. பல சமயங்களில் மற்றவரை நம்ப தயாராக இருக்கும் நான் நம்மை நம்புவதில்லை..

அப்படிதான் அதிஸ்டத்தையும் நம்புகிறோம்.. நம் தன்முயற்சியை நம்பாமல்.. அப்படி அதிஸ்டத்தை நம்பி தன்முயற்சி இல்லாமல் சாதிக்கும் சாதனை எல்லாம் சாதனையா ? என்று நீங்கள் எழுப்பு கேள்வி ஆழமானது சிந்திக்க வேண்டியது..

அப்படி ஒரு வெற்றி வேண்டாம் என்முயற்சியில் எனக்கு கிடைப்பதை தான் வெற்றி என்று ஏற்பேன் எனச் சொல்லி சென்றக் கருத்து ஆணித்தரமானது அற்புதமானது..

நல்லதோர் சிந்தனைக் கவி தந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

அன்புடன் ஆதி

sarcharan
02-02-2008, 06:56 AM
நண்பரே என் நன்றி முதலில்..
என் கேள்வி பரமபதம் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமா..
ம்ம் முயற்சிக்கு எப் பாராட்டுக்கள்

snakes and ladders game தான் தமிழில் பரமபதம். சிறுவயதில் 10 பைசாவுக்கு வாங்கி தாயக்கட்டை உருட்டி விளையாண்டோம்...

அமரன்
02-02-2008, 08:49 AM
வழக்கமாக ராக்கியின் கவிக்குழந்தைகள் அலங்காரம் இல்லாமலே அழகாக இருக்கும். இந்தக்குழந்தையோ அலங்காரத்துடன் அதிகளவு அழகாக உள்ளது. கவிதைக் கட்டமைப்பின் வளர்ச்சி வரைபு உச்சி நோக்கி.. எளிய, அழகு நடை.. வலிய பொருள். பாராட்டுகள் ராக்கி.

மனம்போல வாழ்வமையும் என்பது உண்மை. இது எனது நிலை. எதைபற்றி சிந்திக்கிறோமோ, எதைப்பற்றிப்பேசுகிறோமோ அது எம்மை சேரும் அல்லது நாம் அதுவாகி விடுவோம்.. வாழ்க்கையில் வெற்றி அடைய வாழ்க்கைய்யை எப்படி நோக்குகிறோம், வாழ்க்கையில் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது முக்கியமானது. உங்கள் கவிதையில், அறிந்தோ அறியாமலோ அதை புதைத்துள்ளீர்கள்..

வாழ்க்கை ஒரு
பரமபதமாகவே தோன்றுகிறது
எனக்கு.
.........................................
........................................
வாழ்க்கை சதுரங்கமாகும்போது
என்காய்களை நான் நகர்த்தும்போது
நிச்சயம் நான் வெல்வேன்.

வாழ்வை பரமபதமாகத் நோக்குபவன் அதிஸ்டம், துரதிஸ்டம் இரண்டுக்கும் நடுவில் பாதை அமைக்கிறான்.. சதுரங்கமாக நினைப்பவன் சிந்தனை, உழைப்பு இரண்டையும் ஓரமாகக் கொண்டு சாலை அமைக்கிறான்..

சதுரங்கமாகும்போது என்பது சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இருந்திருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ..

பாராட்டுகள் ராக்கி.. தொடர்ந்து சிந்தனைகளை சிதறவிடுங்கள்.

rocky
02-02-2008, 11:47 AM
வழக்கமாக ராக்கியின் கவிக்குழந்தைகள் அலங்காரம் இல்லாமலே அழகாக இருக்கும். இந்தக்குழந்தையோ அலங்காரத்துடன் அதிகளவு அழகாக உள்ளது. கவிதைக் கட்டமைப்பின் வளர்ச்சி வரைபு உச்சி நோக்கி.. எளிய, அழகு நடை.. வலிய பொருள். பாராட்டுகள் ராக்கி.

மனம்போல வாழ்வமையும் என்பது உண்மை. இது எனது நிலை. எதைபற்றி சிந்திக்கிறோமோ, எதைப்பற்றிப்பேசுகிறோமோ அது எம்மை சேரும் அல்லது நாம் அதுவாகி விடுவோம்.. வாழ்க்கையில் வெற்றி அடைய வாழ்க்கைய்யை எப்படி நோக்குகிறோம், வாழ்க்கையில் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது முக்கியமானது. உங்கள் கவிதையில், அறிந்தோ அறியாமலோ அதை புதைத்துள்ளீர்கள்..

வாழ்வை பரமபதமாகத் நோக்குபவன் அதிஸ்டம், துரதிஸ்டம் இரண்டுக்கும் நடுவில் பாதை அமைக்கிறான்.. சதுரங்கமாக நினைப்பவன் சிந்தனை, உழைப்பு இரண்டையும் ஓரமாகக் கொண்டு சாலை அமைக்கிறான்..

சதுரங்கமாகும்போது என்பது சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இருந்திருந்தால் கவிதை இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ..

பாராட்டுகள் ராக்கி.. தொடர்ந்து சிந்தனைகளை சிதறவிடுங்கள்.
அன்புள்ள மன்றத்தோழர் அமரன் அவர்களுக்கு, உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. (வழக்கமாக ராக்கியின் கவிக்குழந்தைகள் அலங்காரம் இல்லாமலே அழகாக இருக்கும். இந்தக்குழந்தையோ அலங்காரத்துடன் அதிகளவு அழகாக உள்ளது.) உங்களின் பெருந்தன்மையான பாராட்டிற்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியபடி வார்த்தைகளை மாற்றினாலும் கவிதை அழகாகவே இருக்கும், ஆனால் சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இட்டால் வாழ்க்கை பரமபதமோ சதுரங்கமோ இருப்பது என்னுடைய பார்வையாகவே ஆகிவிடும், ஆக என் தோல்விகளுக்கு நானே பொருப்பாக ஆகிவிடுவேன்.

இப்போது வாழ்க்கை சதுரங்கமாக ஆகும்போது இந்த சந்தர்ப்பங்களும் சூல்நிலைகளும் மனிதர்களும் என் வாழ்க்கையை தீர்மானிக்காமல் என் காய்களை நான் நகர்த்தும் போது மட்டுமே என் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நான் பொருப்பாவேன் என்று கூறியிருக்கிறேன். தோன்றும்போது என்று போட்டால் நம்முடைய என்னத்தில்தான் வாழ்க்கை இருப்பதாக ஆகிவிடும், இது என் கருத்து. உங்களின் கருத்தையும் இதில் எதிபார்க்கிறேன். மிக்க நன்றி.

நண்பரே என் நன்றி முதலில்..
என் கேள்வி பரமபதம் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமா..
ம்ம் முயற்சிக்கு எப் பாராட்டுக்கள்

அன்புள்ள மன்றத்தோழி அனு அவர்களுக்கு உங்களின் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி, பரமபதம் எதுவென்று தோழர் சார்சரன் கூறிவிட்டார் அவருக்கும் என் நன்றிகள்.

rocky
02-02-2008, 11:48 AM
ராக்கி இதற்கு முன் நீங்கள் எழுதிய கவிதைக்கும் இந்த உங்களின் கவிதைக்கும் நிறைய வேறு பாடு இருக்கிறது..

கருவை வார்த்தைகளுக்குள் புகுத்தி சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல இயன்றிருக்கிறது உங்களால்.. அதற்காக ஒரு தனி பாராட்டுக்கள் ராக்கி..

வாழும் மனிதரில் பலர் பல்து குணம் கொண்டவர்.. பல்து நம்பிக்கை கொண்டவர்.. இப்படி வேற்றுமையுடைய நம்மிடம் சில ஒற்றுமைகளும் உண்டு.. என்னவெனில்.. பல சமயங்களில் மற்றவரை நம்ப தயாராக இருக்கும் நான் நம்மை நம்புவதில்லை..

அப்படிதான் அதிஸ்டத்தையும் நம்புகிறோம்.. நம் தன்முயற்சியை நம்பாமல்.. அப்படி அதிஸ்டத்தை நம்பி தன்முயற்சி இல்லாமல் சாதிக்கும் சாதனை எல்லாம் சாதனையா ? என்று நீங்கள் எழுப்பு கேள்வி ஆழமானது சிந்திக்க வேண்டியது..

அப்படி ஒரு வெற்றி வேண்டாம் என்முயற்சியில் எனக்கு கிடைப்பதை தான் வெற்றி என்று ஏற்பேன் எனச் சொல்லி சென்றக் கருத்து ஆணித்தரமானது அற்புதமானது..

நல்லதோர் சிந்தனைக் கவி தந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

அன்புடன் ஆதி
அன்புள்ள மன்றத்தோழர் ஆதி அவர்களுக்கு, உங்களின் பின்னூட்டமும் பாராட்டும் எனக்குத் தொடர்ந்து கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் இந்த ஆதரவை நிச்சயம் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பேன், மிக்க நன்றி.

ஆதவா
02-02-2008, 12:05 PM
தேறிட்ட ராக்கி....

என்னைக் கேட்டீன்னா, நீ இப்பதான் ஒரு கருத்தை கவிதை வடிவத்தில எழுதியிருக்கேன்னு சொல்லுவேன்.... அதற்கு முதற்கன் பாராட்டுகள்...

இந்த கவிதை நன்றாக இருப்பதால் உனக்கு இன்னிக்கு ட்ரீட்... நைட்டு ஆபீஸுக்கு வந்து சேரு

rocky
02-02-2008, 12:09 PM

நிச்சயமா வ்ர்ரேன், ஆனால் ஒரு சாக்லெட்ட வாங்கிக் குடுத்துட்டு ட்ரீட் முடுஞ்சதுன்னு சொல்லிடாதே, அப்புரம் உன்னோட இசங்களுக்கு பின்னூட்டம் குடுத்திருக்கிறேன், அதைப் பார்த்துட்டு ட்ரீடைக் கேன்ஸல் பன்னக்கூடாது.

அமரன்
04-02-2008, 08:26 PM
ஆனால் சதுரங்கமாகத் தோன்றும்போது என்று இட்டால் வாழ்க்கை பரமபதமோ சதுரங்கமோ இருப்பது என்னுடைய பார்வையாகவே ஆகிவிடும், ஆக என் தோல்விகளுக்கு நானே பொருப்பாக ஆகிவிடுவேன்.

இப்போது வாழ்க்கை சதுரங்கமாக ஆகும்போது இந்த சந்தர்ப்பங்களும் சூல்நிலைகளும் மனிதர்களும் என் வாழ்க்கையை தீர்மானிக்காமல் என் காய்களை நான் நகர்த்தும் போது மட்டுமே என் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நான் பொருப்பாவேன் என்று கூறியிருக்கிறேன். தோன்றும்போது என்று போட்டால் நம்முடைய என்னத்தில்தான் வாழ்க்கை இருப்பதாக ஆகிவிடும், இது என் கருத்து. உங்களின் கருத்தையும் இதில் எதிபார்க்கிறேன். மிக்க நன்றி..

பரமபதத்தில் உடலுழைப்பு குறைவானது. மூளை மூலதனம் அறவே இல்லை. சதுரங்கத்தில் மூளையுழைப்பு அதிகம். சரீர தேய்மானம் சொற்பம். உழைப்பு இல்லாத இஅடத்தில் வெற்றிக்கும் தோல்விக்கும் நானெப்படி காரணாமாக முடியும்.. ஞாயமான கேள்வி. அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

வாழ்க்கை சதுரங்கமாகும்போது என்ற பதத்தில், கவிதை நாயகன் அதிட்டத்தை நம்பும் பதத்தில் இருப்பதாக தோன்றியது. அதுவே சதுரங்கமாகத் தோன்றும்போது என்ற பிரயோகத்தில் உழைப்பை நம்பும் ஒருவனாக தோன்றினான். அதனால் மாற்றம் சிறப்போ என வினாவினேன்.

உழைப்பு உச்சத்தில் வைத்தவர்களும் அதிட்டம் உயர்த்தியவர்களும் உலகில் உள்ளனர். அதேபோல அதிட்டமும், உழைப்பும் அதளபாதாளத்தில் தள்ளியர்களும்.. பெரும்பான்மை எதுவோ அதுவே ஆட்சியை தீர்மானிக்கிறது. பெரும்பான்மையை திரட்ட தோன்றல் முக்கியமாகிறது.

கவிதை வாசித்து முடித்த கணத்தில் தோன்றியவை இரண்டு. உள்ளிருந்து பார்த்தபோது ஆதியுடன் ஒத்துப்போனேன். வெளியேறிப் பார்த்தபோது முரண்பட்டேன். அதிட்டத்தால் உயர்தவர்கள் கொட்டத்தைப் பார்த்து கடுஞ்சினமும், இன்னபிறவால் விரக்தியும் அடைத்த ஒருவனாக கவிதை நாயகன் தெரிந்தான். அவனே சதுரங்கமாகும்போது என்று (அதிட்டத்தை) நம்பி இருப்பது ஒவ்வாதோ என நினைத்தேன்..

இளசு
04-02-2008, 08:33 PM
வாழ்க்கை எப்போது நம்மை நகர்த்துகிறது?
வாழ்க்கையை எப்போது நாம் நகர்த்துகிறோம்?

இவை இரண்டு தனித்தனிக் கட்டங்களா?
இல்லை மாற்றி மாறி சுற்றும் வட்டங்களா?

இந்தத்தெளிவு வந்துவிட்டால் குழப்பமில்லை!
இது வராது இறுதிவரை தவிப்பதால்தான் தொல்லை!!

வாழ்த்துகள் ராக்கி!

rocky
05-02-2008, 10:31 AM

மிக்க நன்றி இளசு அண்ணா,

உங்களைப்போன்ற பெரியவர்களின் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் நிச்சயம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. மிக்க நன்றி.

rocky
05-02-2008, 11:47 AM
பரமபதத்தில் உடலுழைப்பு குறைவானது. மூளை மூலதனம் அறவே இல்லை. சதுரங்கத்தில் மூளையுழைப்பு அதிகம். சரீர தேய்மானம் சொற்பம். உழைப்பு இல்லாத இஅடத்தில் வெற்றிக்கும் தோல்விக்கும் நானெப்படி காரணாமாக முடியும்.. ஞாயமான கேள்வி. அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

வாழ்க்கை சதுரங்கமாகும்போது என்ற பதத்தில், கவிதை நாயகன் அதிட்டத்தை நம்பும் பதத்தில் இருப்பதாக தோன்றியது. அதுவே சதுரங்கமாகத் தோன்றும்போது என்ற பிரயோகத்தில் உழைப்பை நம்பும் ஒருவனாக தோன்றினான். அதனால் மாற்றம் சிறப்போ என வினாவினேன்.

உழைப்பு உச்சத்தில் வைத்தவர்களும் அதிட்டம் உயர்த்தியவர்களும் உலகில் உள்ளனர். அதேபோல அதிட்டமும், உழைப்பும் அதளபாதாளத்தில் தள்ளியர்களும்.. பெரும்பான்மை எதுவோ அதுவே ஆட்சியை தீர்மானிக்கிறது. பெரும்பான்மையை திரட்ட தோன்றல் முக்கியமாகிறது.

கவிதை வாசித்து முடித்த கணத்தில் தோன்றியவை இரண்டு. உள்ளிருந்து பார்த்தபோது ஆதியுடன் ஒத்துப்போனேன். வெளியேறிப் பார்த்தபோது முரண்பட்டேன். அதிட்டத்தால் உயர்தவர்கள் கொட்டத்தைப் பார்த்து கடுஞ்சினமும், இன்னபிறவால் விரக்தியும் அடைத்த ஒருவனாக கவிதை நாயகன் தெரிந்தான். அவனே சதுரங்கமாகும்போது என்று (அதிட்டத்தை) நம்பி இருப்பது ஒவ்வாதோ என நினைத்தேன்..

அன்புள்ள மன்றத்தோழர் அமரன் அவர்களுக்கு,

நான் உங்களுக்கு ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்தக் கவிதையில் நாயகன் நிச்சயம் அதிர்ஸ்டத்தை நம்புபவன் கிடையாது, நான் சதுரங்கமாகும்போது என்று குறிப்பிட்டதற்குக் காரணம், இந்த வாழ்க்கை நிச்சயம் சதுரங்கமாகாது இது என்றுமே பரமபதமாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்ததால், ஒருவேளை இந்த வாழ்க்கை சதுரங்கமாகும்போது நான் வெல்வேன் என்று கூறியிருக்கிறேன்.

காரணம் நம் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளில் பெரும்பங்கு நம்முடைய சூல்நிலையயும் நம்மைச் சார்ந்த மனிதர்களியும் ஒத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக நம் வாழ்க்கையை நாம் ஒரு விதத்தில் திட்டமிட்டு வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த ஆண்டு புதிய வீடு கட்டப் போகிறேன் என்ற திட்டம், ஆனால் நாம் அவ்வாறு நினைத்திருக்கையில் நமக்கு வேறு விதத்தில் தேவையற்ற பணவிரயமோ அல்லது ஒரு விபத்தோ நேர்ந்து நம்முடைய அந்த திட்டத்தை கெடுக்கும் போது பரமபதத்தில் பாம்பு கடிப்பதுபோலாகும், ஆக அந்தத் தோல்விக்கு நாம் பொருப்பல்லவே, அதுவே சதுரங்கத்தில் நாம் திட்டமிட்டதை எதிராளி ஊகித்து த்ப்பித்துக்கொள்ளும் போது அங்கே வேண்டுமானால் நாம் தோற்றதாக ஒத்துக்கொள்ளலாம் இல்லையா?

இதைத்தான் கூறினேன். மற்றபடி வென்றவர்களைக் கண்டு கோபமோ, விரக்த்தியோ துளியும் கிடையாது, இன்னொன்று சதுரங்கமாகத் தோன்றும்போது என்று குறிப்பிடும்போதே வாழ்க்கையை நாம்தான் சதுரங்கமாகப் பார்க்காமல் பரமபதமாகப் பார்ப்பதாக அர்த்தமாகிவிடும், எனக்கு வாழ்க்கை சதுரங்கமாகத்தோன்றினால் எல்லாம் சரியாகிவிடாதல்லவா? உண்மையிலே வாழ்க்கை சதுரங்கமாகும்போது நாம் அனைவரும் வெல்வோம். நன்றி.

aren
05-02-2008, 09:48 PM
ராக்கி - அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

கவிதைப்போட்டியிலும் உங்கள் கவிதை இடம் பெற வேண்டும். எழுதுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

rocky
06-02-2008, 03:13 AM
ராக்கி - அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

இன்னும் நிறைய எழுதுங்கள்.

கவிதைப்போட்டியிலும் உங்கள் கவிதை இடம் பெற வேண்டும். எழுதுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஆரென் அண்ணா,

உங்களின் வாழ்த்துக்களுக்கும் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும். போட்டி போடுமளவுக்கு எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை, இருந்தாலும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் போட்டிகளில் இனி கலந்து கொள்ள முயற்சிக்கிறேன், கலந்துகொள்வதுதானே முக்கியம் வெற்றியும் தோல்வியும் இரண்டாம்பட்சம்தான். ( தயவுசெய்து உடனே தற்கொலை திரிக்கு போய் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

RRaja
06-02-2008, 03:42 AM
வாழ்வியல் கவிதைகள் அதிகம் வழங்கும் ராக்கியை மனதார பாராட்டுகிறேன்.

வசீகரன்
06-02-2008, 04:29 AM
தன்னம்பிக்கையுடன் நடை போதும் இந்த கவிதை நிச்சயம் பாராட் டுக்குரியது....!
நண்பர் ராக்கி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்ட....!தொடருங்கள்

சுகந்தப்ரீதன்
06-02-2008, 06:42 AM
பரமபதமான வாழ்க்கைப்போட்டியின்
தோல்விகளுக்கு பொறுப்பு
நானல்ல.

வாழ்க்கை சதுரங்கமாகும்போது
என்காய்களை நான் நகர்த்தும்போது
நிச்சயம் நான் வெல்வேன்.
ராக்கி...அவர்களே...!

மேற்கண்ட வரிகள் உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்துமென்றே நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்...!

வாழ்க்கையை பலரும் பலவிதமாக உருவகப்படுத்துவார்கள்.. இங்கே நீங்கள் உங்கள் கவிதையில் பரமபதத்துடன் ஒப்பிட்டமை மிக அழகு..பாராட்டுக்கள் நண்பரே...!