PDA

View Full Version : நீங்கள் எந்த நாடு?



Hayah Roohi
01-02-2008, 09:55 AM
தமிழ் மன்றத்தில் என்னென்ன நாட்டைச்சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்?
எந்த நாடுகளிலிருந்து தொடர்பு கொள்கிறார்கள்?

இங்கு இருப்பவர்கள் என்னென்ன துறைகளை சார்ந்துள்ளார்கள்?


மருத்துவம்,இதழியல்,கணினி பொறியியல்,?

praveen
01-02-2008, 11:09 AM
தமிழ் மன்றத்தில் என்னென்ன நாட்டைச்சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்?
எந்த நாடுகளிலிருந்து தொடர்பு கொள்கிறார்கள்?


இங்கு இருப்பவர்கள் என்னென்ன துறைகளை சார்ந்துள்ளார்கள்?


மருத்துவம்,இதழியல்,கணினி பொறியியல்,?

மேலே சிவப்பு எழுத்தில் இருப்பது தான் எனது பதில், எல்லாம் சரி, பொதுவாக கேள்வி கேட்பவர் யாருக்கும் ஏன் தன்னைப்பற்றி கூறி பின் பிறரை கேட்கும் பழக்கம் இல்லை. சுயபாதுகாப்பா இல்லை அடுத்தவர்களை மட்டும் தெரிந்து கொள்ள எண்ணமா?

lolluvathiyar
01-02-2008, 11:23 AM
தமிழ் மன்றத்தில் என்னென்ன நாட்டைச்சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்?

நான் இந்தியாவை சேர்ந்தவன். என் நாட்டுக்கு பாரதம் என்று மற்றொருபெயரும் உண்டு. அந்த நாட்டில் தென்கோடியில் இருக்கும் தமிழ் நாடு என்று அழைக்கபடும் மாநிலத்தை சேர்ந்தவன் (ஆங்கிலேயர்கள் காலத்தில் மதராஸ் என்ற மாநிலத்தில் இருந்து பிரிக்க பட்டது). தமிழ் நாட்டில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவன். ஒரு காலத்தில் இது கொங்கு நாடு என்று அழைக்கபட்டது.

இங்கு ஹிந்து மதத்தை சேர்ந்தவன். விவசாயத்தை குலதொழிலாக கருதும் சாதியை சேர்ந்தவன். இந்திய அரசானை படி நான் பிற்படுத்த வகுப்பை சார்ந்தவன். எனது தாய் மொழி தமிழ். தந்தை மொழியும் தமிழ் தான்.

இந்த தகவல் போதுங்களா இல்ல இன்னும் வேனுங்களா?

Hayah Roohi
01-02-2008, 12:06 PM
நான் மன்றத்தைப்பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அதற்குத் தேவையான தகவல்களையே கேட்கிறேன்.
இங்கு என்னைப்பற்றி என்ன கூறவேண்டும் என்று புரியவைல்லை.

சரி நான் ஒரு இதழியல் மாணவி.
குழந்தை இலக்கியம்,உளவியல்,பாலர்கல்வி சம்பந்தமான துறையில் கற்றிருக்கிறேன்,
நாடு இலங்கை.


தமிழ் மன்றத்தில் சிலர் என் ஆய்வுக்கு உதவினாலும் பலர் ஒத்துழைப்பு தருவதில் சிக்கனம் காட்டுகிறார்கள்.ஏன் இந்தத் தலைப்பை எடுத்தோம் என்ற வினா என் மனதில் வராமலில்லை.

அரட்டை அரங்கம் போன்றவற்றில் எல்லோரும் ஆர்வமாய் பங்கேற்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

நன்றி

aren
01-02-2008, 12:44 PM
நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். இப்பொழுது இருப்பது சிங்கப்பூரில். சொந்தமாக தொழில் செய்கிறேன். படித்தது எம்.பி.ஏ.

நான் இதைப்பற்றி முன்பே வேறு எங்கோ உங்களுக்காக எழுதினேன் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் பரவாயில்லை, இது உபயோகமாக இருந்தால் சந்தோஷமே.

வேறு என்ன வேண்டும் உங்கள் ஆய்வு அறிக்கையை முடிப்பதற்கு. எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.

சில பர்சனல் விஷயங்களை இங்கே பகிரிந்து கொள்வதில் மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கஷ்டமாக இருக்கலாம், அதனால்தான் பொதுவில் யாரும் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை என்று நினனக்கிறேன்.

பாரதி
01-02-2008, 01:17 PM
பிறந்த நாடு: இந்தியா
தொடர்பு கொள்ளும் நாடுகள்: இந்தியா, ஐக்கிய அரபுக் குடியரசு
பணி புரியும் துறை: மின்சாரத் துறை

சாலைஜெயராமன்
01-02-2008, 01:25 PM
இந்தியத் திருநாட்டின் இன்னுமொரு புதல்வன்.
வங்கிப்பணியில் வாழ்க்கை.
நமது தமிழ்மன்றத்தின் வாயிலாக உலகத்தமிழர் அனைவரோடும் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அன்புரசிகன்
01-02-2008, 01:25 PM
பிறந்த நாடு: இலங்கை.
மன்றத்திற்கு இலங்கை கத்தாரிலிருந்து இதுவரை தொடர்புகொண்டிருக்கிறேன்.
துறை: குடிசார் எந்திரவியல் - கட்டட நிர்மாணம்.

அறிஞர்
01-02-2008, 01:42 PM
பிறந்த நாடு: இந்தியா
தொடர்பு கொள்ளும் நாடுகள்: இந்தியா, அமெரிக்கா
பணி புரியும் துறை: அறிவியல் ஆராய்ச்சி

பூமகள்
01-02-2008, 03:06 PM
என் தாய் நாடு இந்தியா..

மன்றத்தினை இந்தியாவிலிருந்து தான் தொடர்பு கொள்கிறேன்.
கணினி மென்பொறியாளர் துறையைச் சேர்ந்தவள்.

ஓவியன்
01-02-2008, 03:27 PM
பிறந்த நாடு: இலங்கை
தொடர்பு கொள்ளும் நாடுகள்: துபாய், ஓமான்
பணி புரியும் துறை: கட்டட நிர்மாணம் (Building Construction)

அமரன்
01-02-2008, 04:47 PM
பிறந்தது இலங்கை
மன்றம் வருவது ஐரோப்பாவிலிருந்து

மயூ
01-02-2008, 07:00 PM
பிறந்த நாடு: இலங்கை
தொடர்பு கொள்ளும் நாடுகள்: எதுவும் இல்லை
பணி புரியும் துறை: பல்கலை மாணவன்

baseer
01-02-2008, 07:36 PM
நான் இந்திய திருநாட்டை சேர்ந்தவன்.
சவூதி அரேபியாவில் இருந்து தொடர்பு கொள்கிறேன்.


மருத்துவம்,இதழியல்,கணினி பொறியியல்,?
இது ஒரு எடுத்துக்காட்டுக்காக கேட்டுள்ளீர்களா? அல்லது இந்த மூன்று துறைகளை குறிப்பிட்டு கேட்டதற்கு ஏதும் காரணம் உள்ளதா?

என்றும் அன்புடன்,
நெல்லை பசீர்.

meera
01-02-2008, 10:17 PM
பிறந்தது :இந்தியாவில் தமிழ்நாட்டின் தென்கோடியில் ஒரு கிராமம்.
இப்போதைய வசிப்பிடம் :சிங்கபூர்.
படிப்பு :மென்பொருள் சார்ந்தது.

அனுராகவன்
01-02-2008, 10:30 PM
என் சொந்த நாடு :இந்தியா.
இபோது இருக்கும் நாடு :சிங்கபூர்.
என் சொந்த கிராமம்: தஞ்சைமாவட்டம்
தொழில் :கணினியில்
ம்ம் மேலும் பிறகு..

விகடன்
02-02-2008, 02:42 AM
பிறந்த நாடு: இலங்கை (சிலோன்)

பணி புரியும் துறை: கட்டட நிர்மாணம் (Building Construction)

praveen
02-02-2008, 03:27 AM
நான் மன்றத்தைப்பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அதற்குத் தேவையான தகவல்களையே கேட்கிறேன்.
இங்கு என்னைப்பற்றி என்ன கூறவேண்டும் என்று புரியவைல்லை.

தமிழ் மன்றத்தில் சிலர் என் ஆய்வுக்கு உதவினாலும் பலர் ஒத்துழைப்பு தருவதில் சிக்கனம் காட்டுகிறார்கள்.ஏன் இந்தத் தலைப்பை எடுத்தோம் என்ற வினா என் மனதில் வராமலில்லை.

அரட்டை அரங்கம் போன்றவற்றில் எல்லோரும் ஆர்வமாய் பங்கேற்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

நன்றி

சகோதரியே, நமக்கு தேவையான தகவல் வேண்டும் என்றால், நாம் தான் தெளிவாக அதனை கூறி கேட்க வேண்டும். நம் மனதில் ஒன்றை நினைத்து, அதை வார்த்தையில் இடாமல் மற்றவரிடம் ஒரு வரி கேள்வி கேட்டால், பதில் எப்படி நாம் எதிர்பார்ப்பது போல பெற இயலும். நீங்கள் முதலிலே சரியான காரணத்தை கூறி கேட்டிருந்தால் நம் நண்பர்கள் அனைவரும் தெளிவாக பதில் தந்திருப்பார்கள். உங்களின் 3வது பதிவிற்கு பிறகு நண்பர்கள் எப்படி சர சரவென்று பதில் தந்திருக்கிறார்கள் பாருங்கள்.

மேலும் இம்மாதிரி தளம்\உறுப்பினர் பற்றிய தகவல் பொதுவிலே கேட்கும் முன் நிர்வாகத்திற்கு தனிமடலில் கேட்டு பின் திரி ஆரம்பித்திருந்தால் அதை sticky ஆகவோ அல்லது read this thread before enter site என்பது போன்ற ஆப்சன் மூலம் தளத்தில் லாகின் ஆகும் அனைவரும் இதை கண்ணுற்ற பின் பிற திரி செல்வது போல வைத்திருப்பார்கள்.

அதை விடுத்து அரட்டை அரங்கத்தில் ஆர்வமாய் உள்ளனர் இதற்கு பதில் தர ஏனோ மாட்டேன்கிறார்கள் என்பது போன்ற வரிகள் நிச்சயம் படிப்பவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.

இதோ என் பங்கிற்கு கூடுதல் தகவலாக தமிழ்மன்றத்தை உலகில் பார்வையிடுபவர்கள் சதவீத கணக்கை தருகிறேன்.

India 50.0%
Qatar 19.2%
United Kingdom 11.5%
Switzerland 7.7%
Saudi Arabia 3.8%
Malaysia 3.8%
Germany 3.8%
மீதி பிற நாடுகளில் இருந்து.
(புள்ளிவிவர உதவி அலக்ஸா)

இதயம்
02-02-2008, 03:41 AM
பிறந்தது: இந்தியா, தஞ்சைமாவட்டம்

தற்பொழுது வசிப்பது: சவுதி அரேபியா, ராபிக்

படிப்பு: கணிப்பொறி அறிவியல்

பணிபுரியும் துறை: கட்டுமானத்துறை

Narathar
02-02-2008, 04:46 AM
பிறந்தது இலங்கைத்திருநாட்டில் உள்ள நீர்கொழும்பு என்னும் இடத்தில்.........

படித்தஎன்னவோ கணக்கியலும், வர்த்தகமும் ஆனால் தொழில் புரிந்தது ஒலிபரப்புத்துறையில்

தொழில் நிமித்தம் லண்டன் சென்றால் அங்கிருந்தும் இலஙயிலுருந்தும் மன்றம் வருவேன்

இது போதுமா?

ஜெயாஸ்தா
02-02-2008, 05:59 AM
பிறந்தது மற்றும் தற்போது வசிப்பது இந்தியா.
தொழில். கணிணித்துறை

கிஷோர்
02-02-2008, 10:53 AM
பிறந்தது : ஈழம் , அம்பாறை மாவட்டம்
படிப்பு : கணிணி வன்பொருள் நுட்பம்
தற்போது கணிணி வன்பொருள் வியாபாரம்.
தொடர்பு நாடுகள் : இந்தியா,சிங்கபூர்,மலேசியா

சிவா.ஜி
02-02-2008, 11:03 AM
பிறந்தது:இந்தியத்திருநாடு
படிப்பு:இளங்கலை பொறியியல்
தொழில்:தரக்கட்டுப்பாட்டில் ஆய்வாளர்
தற்சமயம் சவுதியிலிருந்து மன்றத்தை தொடர்பு கொள்கிறேன்.

சூரியன்
03-02-2008, 01:48 PM
பிறந்தது: இந்தியா, தமிழ்நாடு
தற்பொழுது வசிப்பது: தமிழ்நாடு,திருப்பூர்.
படிப்பு: குறைவுதான்
பணிபுரியும் துறை: Textile.
பணி:Quality Controller.

சராஜ்
03-02-2008, 02:22 PM
பிறந்தது: தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம்

தற்பொழுது வசிப்பது: ஹாங்ஜோ, சீனா

படிப்பு: கணிப்பொறி அறிவியல்

பணிபுரியும் துறை: கணினித்துறை

மாதவர்
11-02-2008, 01:35 AM
பிறந்தது :நாகப்பட்டினம் மாவட்டம்,தமிழ்நாடு.
படிப்பு : எம்.ஏ, எம் பி ஏ, எம் சி ஏ
தெடர்ந்து credit card fraudsஇல் phd பகுதி நேர ஆய்வு
பணிபுரியும்துறை: இதழியல்
போதுமா நண்பரே!!!

சுபன்
11-02-2008, 01:59 AM
பிறந்தது : ஈழம்
இருப்பது: கனடா
பணிபுரியும் துறை: பாடசாலை மாணவன், இறுதி(12) தரம்

உதயா
23-02-2008, 06:54 AM
என் சொந்த நாடு : பாரதம்
இப்போது : துபாய்
நான் பிறந்த ஊர் : மீமிசல் பக்கம் ஒரு கிராமம், ஆனால் காரைக்குடியில் என்னை சேர்த்துக்கொண்டேன். ஆகவே நான் செட்டிநாட்டுக்காரன்.
படித்தது : புதுக்கோட்டை மற்றும் திருச்சி
தொழில் : Administration

kavitha
23-02-2008, 08:00 AM
அன்பு சிங்களத்தோழி ஹையா ரூஹி, (இப்படி அழைக்கலாமா? இது தான் உங்கள் பெயரா?)


நான் மன்றத்தைப்பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.அதற்குத் தேவையான தகவல்களையே கேட்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி.


இங்கு என்னைப்பற்றி என்ன கூறவேண்டும் என்று புரியவைல்லை.
உளவியல் படித்த தங்களுக்கு இது கூடவா புரியவில்லை?



சரி நான் ஒரு இதழியல் மாணவி.
குழந்தை இலக்கியம்,உளவியல்,பாலர்கல்வி சம்பந்தமான துறையில் கற்றிருக்கிறேன், நாடு இலங்கை.
நல்லது.


தமிழ் மன்றத்தில் சிலர் என் ஆய்வுக்கு உதவினாலும் பலர் ஒத்துழைப்பு தருவதில் சிக்கனம் காட்டுகிறார்கள். ஏன் இந்தத் தலைப்பை எடுத்தோம் என்ற வினா என் மனதில் வராமலில்லை.
முன்னரே உங்களது தெளிவான அறிமுகத்தையும், தேவையையும் கூறியிருந்தால் நீங்கள் கேட்டதைவிடவும் நிறைய தகவல்கள் கிடைத்திருக்கும்.

என் பெயர்: கவிதா
வசிப்பது: இந்தியாவில் சென்னைக்கு அருகில்.
படித்தது: முதுகலை கணினிப்பொறியியல்
படித்துக்கொண்டிருப்பது: இதழியல் - தொடர்புத்துறை
வேலை பார்ப்பது: கல்வித்துறையில்


தமிழ்மன்ற அறிமுகம் கவிஞர். நண்பன் அவர்களால், 2003 ஆம் ஆண்டு எனக்குக்கிடைத்தது. எனது எழுத்தறிவு வளர்ந்ததற்கும், கவிதைகள் எழுதி பிரசுரித்ததற்கும் தமிழ்மன்றம் ஒரு காரணம் என்றால் என்னை இங்கே ஊக்குவித்த உள்ளங்கள் மிகப்பெரிய காரணம்.

பல களங்களையும், கோணங்களையும் கொண்ட இத்தமிழ்மன்றத்தின் தலைவர் திரு.இராசகுமாரன் அவர்கள். பல கண்காணிப்பாளர்களும் இதற்கு உறுதுணை செய்கிறார்கள்.

மக்களால் பதிவிடப்பட்டு, மக்களால் ஊக்குவிக்கப்பட்டு மக்களால் பதிவுகள் தேர்ந்தெடுக்கப்படுகிற சிறந்த தளம் இதுவென்றால் மிகையாகாது.

பல்வேறு நாடுகளிலிருந்தும் உணர்வால், எண்ணங்களால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்று பட்டு உயர்ந்து நிற்கின்ற தளம் இது.

பல சிறந்த எழுத்தாளர்களை, கவிஞர்களை, எதிர்பார்க்காது உதவும் உள்ளங்களை அளித்த தளம் இது. (கார்கில், ஆழிப்பேரலை நிதி)
எ.டு: நண்பன், இளசு அண்ணா, ராம்பால், நிலா, பப்பி கவிதைகள், பூ கவிதைகள், பாரதி கட்டுரைகள்.

நிதியால் மட்டுமல்ல...மதியாலும் தமக்குத்தெரிந்ததை மற்றவர்களுக்கு பங்கிட்டு பரிமாறிக்கொள்வதும்,
தூரத்தில் முகம் தெரியாத இதயங்களின் அன்பை எழுத்துக்களில் அறிவதற்கும் இத்தளம் உதவுகிறது.

இது போதுமா ரூஹி? இன்னும் என்ன உங்களுக்கு வேண்டும்??

இளசு
24-02-2008, 05:47 AM
கவீ-யின் மன்றக்குறிப்பு - சிறப்பு!

வாழ்த்துகள் கவீ!

சாலைஜெயராமன்
24-02-2008, 11:26 AM
நச்சென்று ஒரு பதில் சகோதரி கவிதாவிடமிருந்து.

இது நச்சல்ல. அமிர்தம்.

நல்ல பின்னூட்டத்தை கவிதையாக்கித் தந்திருப்பது தமிழ் மன்ற அபரிமித ஊக்குவிப்பால்தான் என்றால் மிகையல்ல.

கண்டுகொள்வீர் ரூகி

subas
15-08-2008, 10:24 AM
நான் பிறந்தது ஈழம் (முல்லைத்தீவு) இப்போது வாழ்வதும் மண்றத்திற்கு வருவதும் இந்தியா ( சென்னை) யில் இருந்து. படிப்பு க.பொ.த (சாதாரண தரம்-இலங்கை) இந்தியாவில் கம்பியூட்டர் மையம் அமைத்து சுயமாக தொழில் செய்து கொண்டிருக்கின்றேன்

shibly591
15-08-2008, 05:30 PM
பெயர்---ஷிப்லி

பிறந்தது வளர்ந்தது எல்லாமே---இலங்கையிலுள்ள நிந்தவூர் எனும் கிராமம்

துறை----முகாமைத்துவ தகவல் முறைமை (தென்கிழக்குப்பல்கலை பட்டதாரி)

நெட் கபே வழியாகவே (எங்கள் பகுதி இணைய இணைப்பு படு மெது) மன்றம் வருகிறேன்..எங்கள் கிழக்கு மாகாணம் மற்றும கொழும்பிலிருந்து

உங்கள் ஆய்வு முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

உதயசூரியன்
16-08-2008, 05:04 AM
நான் பிறந்தது ஈழம் (முல்லைத்தீவு)


பிறந்தது : ஈழம்
(12) தரம்


பிறந்தது : ஈழம் , அம்பாறை மாவட்டம்



அன்பு சிங்களத்தோழி ஹையா ரூஹி, (இப்படி அழைக்கலாமா? இது தான் உங்கள் பெயரா?)



சிங்கள தோழிக்கு தமிழ் இந்தளவுக்கு எழுத வருகிறதா..?? பரவாயில்லையே..??!!

அன்பு தோழிக்கு.. தங்கள் ஆராய்ச்சிக்கு.. உதவும் அனைத்து விபரங்களையும் மன்றத்து உறுப்பினர்களும் தந்து கொண்டு இருக்கின்றனர்..

தங்களால்.. இயலுமாயின்.. என்றாவது ஒரு நாள்.. நீங்களும்.. முடிவெடுக்கும் இடத்தருகில் இருந்தால்..
மேலே குறிப்பிட்ட ஈழத்து தமிழ் மக்களையும்.. நினைத்து பார்த்து கொள்ளுங்கள்.. அவர்களது துயரங்களை.. எடுத்துரையுங்கள்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

arun
17-08-2008, 06:04 PM
எனது தாய் நாடு இந்தியா
தொடர்பு கொள்வது சென்னை
பணிபுரிவது தொலை தொடர்பு துறை

mukilan
17-08-2008, 06:47 PM
அனைவரும் இங்கே தகவல் கேட்ட ஹாயா ரூஹிக்குஒத்துழைப்பு தருவது மகிழ்ச்சி தருகிறது. அவர் ஆராய்ச்சி முடித்து விட்டாரோ என்னவோ?

பென்ஸ்
18-08-2008, 03:15 AM
பிறந்தது: இந்தியா
இருப்பது: அமெரிக்கா
படித்தது: முதுகலை பொறியியல்
பணி: நேற்று - ஏரோ ஸ்பேஸ் , இன்று: பயோ மேடிக்கல், நாளை: ????

SathyaThirunavukkarasu
18-08-2008, 12:08 PM
சொந்த ஊர்: தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம்
படிப்பு : முதுகலை நிதிமேலாண்மை
மன்றம் வருவது: சவுதியிலிருந்து

tamilambu
18-08-2008, 02:06 PM
மன்ற நண்பர்கள் இவ்வளவு பதிவுகள் செய்தபின்னர் அதனைக்கேட்ட அந்த தோழியை இந்தத் திரிப்பக்கம் காணவில்லையே???

மதுரகன்
18-08-2008, 06:08 PM
பெயர்- மதுரகன்
பிறந்தது வளர்ந்தது வாழ்வது வாழப்போவது - இலங்கை (வவுனியா மாவட்டம்)
துறை/கல்வி - மருத்துவ மாணவன் (கொழும்பு பல்கலைக்கழகம்)