PDA

View Full Version : பயமுறுத்தி வருகிறது பங்குச் சந்தை - சேதுர



ஜெகதீசன்
31-01-2008, 01:58 PM
மறுபடியும் பயமுறுத்தி வருகிறது பங்குச் சந்தை - சேதுராமன் சாத்தப்பன் -:fragend005::fragend005::fragend005: :icon_p::icon_p:



பங்குச் சந்தை மறுபடியும் பயமுறுத்தி வருகிறது. இதற்கு மேல் கீழே இறங்காது என்று பலரும் நினைத்தனர்.



ஆனால், சந்தையில் எந்த மாறுதல்களும் இல்லை. சந்தையின் இறக்கத்திற்கு முடிவே இல்லை என்பது போல தினம் தினம் இறங்கி வருகிறது. அதிக வட்டிக்கு வங்கிகளில் பர்சனல் லோன் வாங்கியும், கிரெடிட் கார்டுகள் மூலமாக லோன்கள் வாங்கியும் சந்தையில் முதலீடு செய்துள்ள பலர் கையை பிசைந்து கொண்டிருக்கும் நிலை.திங்களன்று ஒரு போராட்டமாகவே இருந்தது. உலகளவில் பங்குச் சந்தைகள் நன்றாக செல்லாததால், இந்தியாவிலும் அன்றைய தினம் மேலும், கீழுமாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் 900 புள்ளிகள் கீழே சென்றது. முடிவாக 208 புள்ளிகள் மட்டுமே குறைந்து முடிவடைந்தது.நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி ரேட் கட் செய்யும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது தான் முக்கிய நோக்கம் என்று ரேட் கட்டை பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த செய்தி வந்தவுடன் சந்தை மிகவும் கீழே இறங்கினாலும், பிறகு சிறிது சுதாரித்து மேலே சென்றது. முடிவாக 60 புள்ளிகள் மட்டுமே குறைந்து முடிந்தது. வங்கித் துறை, கட்டுமானத்துறை பங்குகள் வேகமாக கீழே வந்தன. ஆனால், முடிவில் சிறிது மேலே சென்று நஷ்டத்தை குறைத்தது. நேற்று முன்தினம் இரவு அமெரிக்க பங்குச் சந்தைகள் சிறிது மேலேயே முடிவடைந்தன. ஆசிய அளவிலும் பங்குச் சந்தைகள் நேற்று காலை நன்றாகவே இருந்தன. ஆனால், இந்தியாவில் துவக்கம் முதலே கீழே இறங்கியே வந்தது. மதியத்திற்கு மேல் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் கீழே வந்ததால், நமக்கும் சரியான அடி கிடைத்தது. முடிவாக மும்பை பங்குச் சந்தை 333 புள்ளிகளை இழந்து முதலீட்டாளர்களை கதிகலக்கி சென்றது. ஆயில், காஸ், பவர் துறைகள் அதிகம் அடிபட்டன.நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 17,758 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 5,167 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.

புதிய வெளியீடுகள்: பல நல்ல வெளியீடுகள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் இந்த மார்க்கெட் நிலவரத்தை வைத்து திரும்பி கூடப் பார்ப்பதில்லை.வரப்போகும் மிகப்பெரிய வெளியீடான எம்மார் எம்.ஜி.எப்., இந்த சந்தையில் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது பெரிய கேள்விக் குறி. துபாயில் மிகப்பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி. வெளியீடு வந்த சமயம் சரியில்லை. இது போல சூழ்நிலைகள் இந்தியாவில் மட்டுமில்லை. உலகளவிலும் பல நாடுகளில் புதிய வெளியீடுகளின் நிலை இது தான். சிலர், தங்களது வெளியீடுகளை தள்ளி வைத்துள்ளனர் அல்லது கேன்சல் செய்துள்ளனர். மருத்துவமனைகளை நடத்திவரும் வோகார்டு மருத்துவமனை வெளியீடும் வருகிறது.

சிறிய முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? : இந்த சந்தர்ப்பத்தில் சந்தையில் சிறிது தள்ளி இருப்பதே நல்லது. சந்தையில் இன்னும் 500 புள்ளிகள் குறையுமானால், வாங்குவதற்கு நல்ல சந்தர்ப்பம். நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்த கம்பெனிகளை வாங்கலாம். அல்லது அடிப்படையில் நல்ல பங்குகளை வாங்கலாம். அப்படி நீங்கள் வாங்கும் பட்சத்தில் குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்கும் பொறுமை வேண்டும்.ஏறும் போது லாபம் குறைவு, இறங்கும் போது நஷ்டம் அதிகம்.சமீபகாலமாக பார்த்தால் 500 புள்ளிகள் ஏறும் போது கிடைக்கும் லாபம் ஐந்தாயிரம் ரூபாய் என்றால், 250 புள்ளிகள் குறையும் போது 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஏறும் போது கஷ்டப்பட்டு ஏறுகிறது. இறங்கும் போது சறுக்குகிறது.

இன்றும், நாளையும் எப்படி இருக்கும்? :மறுபடியும் அமெரிக்காவின் பெட் ரேட் கட் செய்யுமா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். கட் செய்யப்படுமானால் அது உலகளவில் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும். பவர் பணம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரும்பி அடுத்த வாரம் வர ஆரம்பிக்கும்.அவ்வளவும் பங்குச் சந்தைக்கு வருகிறதா என்று பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீதமாவது வந்தால் சந்தைக்கு புதிய ரத்தம் பாயும் என்பது உறுதி.பியூச்சர் கேபிடல் வெளியீட்டின் அலாட்மென்ட் வந்துவிட்டது. கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். 400 வரை பிரிமியம் தற்போது உள்ளது. ரீபண்டுகளும் வரத்தொடங்கி விடும். 16,000 கோடி ரூபாய் ரீபண்டாக வரவுள்ளது. எவ்வளவு பங்குச் சந்தைக்கு வரும் என்று பார்க்க வேண்டும்.நாளை முதல் ஷார்ட் செல்லிங் செய்யலாம் என்பது அமலுக்கு வருகிறது. அது, சந்தையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.சந்தைக்கு வரும் வெளிநாட்டு பணத்தையும், பவர் போன்ற புதிய வெளியீடுகளின் மூலம் திரும்பி வரும் பணம் சந்தைக்கு வருவதைப் பொறுத்தும், எப் அண்டு ஒ செட்டில்மென்ட் இன்று எப்படி போகிறது என்பதைப் பொறுத்தும் சந்தையின் போக்கு இருக்கும். தினமலர் சார்பாக உங்களுக்கு செய்திகளை அள்ளி அள்ளி தருவது:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

aren
31-01-2008, 08:00 PM
ஒரு வருடத்திற்கு முன் 10000க்கும் குறைவான புள்ளிகளில் இருந்த பங்குச்சந்தை ஒரே வருடத்தில் 20000த்தைத் தாண்டி இன்னும் மேலே ஏறிக்கொண்டேயிருந்தது. அது எவ்வளவு நாளைக்குத்தான் அப்படியே போய்க்கொண்டிருக்கும். லாபத்தைப் பார்க்க நினைப்பவர்கள் பங்குகளை விற்றார்கள், அனைத்தும் இறங்கிவிட்டது.

இப்படி அதிகமாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் சில சறுக்கல்களையும் எதிர்பார்த்தேயிருக்கவேண்டும். அதுதான் வாழ்க்கை.