PDA

View Full Version : சென்னையில் தமிழ் செம்மொழி மையம்



ஜெகதீசன்
31-01-2008, 01:42 PM
03. சென்னையில் தமிழ் செம்மொழி மையம் : முதல்வர் கருணாநிதி தலைவர் - நமது டில்லி நிருபர் -



சென்னையில் ரூ. 77 கோடியில் தமிழ் செம்மொழி மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையத்தின் தலைவராக தமிழக முதல்வர் இருப்பார்.



மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்த போது, குறைந்தபட்ச தேசிய பொதுச்செயல் திட்டம் வரையறுக்கப்பட்டது. அதில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்து, அதற்கான ஆய்வு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசு, தமிழ் மொழியை செம்மொழியாக முறையாக அறிவிப்பு செய்தது. தமிழக முதல்வர் கருணாநிதி டில்லிக்கு வரும் போதெல்லாம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங்கிடம் செம்மொழி மையம் அமைப்பது குறித்து கோரிக்கை விடுத்தார். பிரதமருக்கு பல முறை கடிதங்களும் எழுதினார். இதையடுத்து, செம்மொழி மையம் அமைக்க ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன.

டில்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் தாஸ் முன்ஷி கூறியதாவது: தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ள நிலையில், செம்மொழி மையத்தை சென்னையில் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. `சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிகல் தமிழ்' என்ற பெயரில் அந்த மையம் செயல்படும். மையத்தின் தலைவராக தமிழக முதல்வர் இருப்பார். செம்மொழி மையம் அமைக்க ரூ.76.32 கோடி செலவிடப்படும்.தமிழ் செம்மொழி மையம் அமைக்க, தமிழக அரசு ஏற்கனவே 17 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருந்தது. இந்த நிலத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. மையம் அமைக்கப்பட்ட பின், அதன் செயல்பாட்டுக்கு தேவையான செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். பல வேற்றுமைகளைக் கொண்டது இந்தியா. இந்த வேற்றுமைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு. இந்த பண்பையும், சிறப்பையும் பிரதிபலிக்கும் வகையில் செம்மொழி மையம் அமையும். இவ்வாறு தாஸ் முன்ஷி கூறினார்.:icon_b::icon_b::icon_b:தினமலர் சார்பாக உங்களுக்கு செய்திகளை அள்ளி அள்ளி தருவது :icon_rollout::icon_rollout:

மயூ
31-01-2008, 02:25 PM
கேட்க நன்றாகத்தான் உள்ளது, பார்ப்போம் ஏதாவது உருப்படியாக நடக்கின்றதா என்று!