PDA

View Full Version : மூட்டு நழுவலுக்கு மருந்து முறை தேவை

ஜெகதீசன்
31-01-2008, 01:02 PM
அன்பு நண்பர்களே,

எனக்கு வலது கை தோள்பட்டையில் கை இனையும் இடத்தில் அடிக்கடி வலி ஏறபடுகிறது.
சில சமயங்களில் மூட்டு ஓபன் ஆகிவிடுகிறது.திரும்ப நானே:traurig001::traurig001: கஷ்டப்பட்டு 2 அல்லது 3 நிமிடத்தில்
மூட்டினை இடது கை உதவியுடன் இணைத்துக் கொள்கிறேன். இதுபோல் கடந்த 2 ஆண்டுகளில் 8 முறை
ஏற்பட்டு விட்டது.ஓருமுறை டாடக்டரிடம் காண்பித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தேன் டாகடர் எலும்பு நன்றாக
உள்ளது,பிரச்சனை இல்லை என்று கூறி ஓரு சில மாத்திரைகள் கொடுத்தார். ஆனால் இது திரும்ப திரும்ப
ஏற்படுகிறது.இதற்கு மூலிகை மருத்துவம் மற்றும் மருத்துவ உணவுமுறை ஏதும் பரிந்துரை செய்வீர்களா ?

நல்ல வழிமுறைகள் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன். :traurig001::smilie_abcfra::traurig001:

aren
31-01-2008, 01:09 PM
நம் மன்ற மருத்துவர் இளசு அவர்கள் வந்து உங்களுக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் (சொல்ற நானே செய்வதில்லை என்பது வேறு விஷயம்). உடற்பயிற்சியில் வெயிட் தூக்கினால் இந்த பிரச்சனை போகலாம் என்று நினைக்கிறேன்.

ஜெகதீசன்
31-01-2008, 01:17 PM

நண்பரே உடற்பயிற்சி செய்தால்
என் கை மூட்டு ஓபன் ஆகி விடுவதால் என்னால்
செய்ய இயலாது.கடந்த வாரம் சிறிய உடற்பயிற்சி செய்து
மூட்டு ஓபன் ஆகி பின் இனைந்து இன்னும் வலியுடன் அவதியுறுகிறேன்.:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
நான் இருக்கும் இடம் மேற்கு ஆப்ரிக்கா. இங்கு இந்திய மருந்துகள் கிடைக்காது.:traurig001::traurig001::traurig001:

மலர்
31-01-2008, 08:36 PM
ம்ம் இதே மாதிரி பிரச்சனை என்னோட பிரண்டுக்கும் இருந்திச்சி..
ஆனா ஒரு தடவை கையை மேல தூக்கிவைத்து கட்டு போட்டபிறகு மறுபடியும் இறங்கவே இல்லை...
1)தலையணை இல்லாம தான் தூங்குவாங்க..
2)வெயிட்டான எதையும் அந்த கையால தூக்க மாட்டாங்க..

உங்கள் பிரச்சனை பார்த்தால்
1)டாக்டர் அனுமதி இல்லாம கையை வச்சி செய்யுற எந்த உடற்பயிற்சியும் செய்யாதீங்க...
2)உக்காரும் போது நிமிர்ந்து உக்காரணும்.. ரொம்ப நேரம் கூன் போட்டு உக்கார்ந்திருந்தால் வலி இன்னும் அதிகமாகும்...
3)பேசாமல் தாயகம் வரும்போது சின்ன ஆப்ரேஷன் செய்துக்கொள்ளுங்கள்....

இன்னும் நம் மன்றமக்கள் இன்னும் உதவுவார்கள்.. என எதிர்பாக்கிறேன்..
கவலைபடாதீர்கள்.. சகோதரரே
இது எளிதில் சரியாகிவிடும்...
அதற்கு எப்போதும் எங்கள் பிராத்தனைகள் உண்டு....

ஜெகதீசன்
01-02-2008, 03:58 PM

மின்னியல் சகதோரியே , என்இனிய தாயகத்து மலரே.

தகவலுக்கு நன்றி.

இனி தலையனை இல்லாமல் உறங்க முயற்சி செய்கிறேன்.

நேராக உட்கார பழகிக்கொள்கிறேன்.

அறுவைசிகிச்சை என்றால் எத்தனை நாட்கள் நான் ஓய்வில் இருக்க வேன்டும் ?

தங்களின் பஞ்ச் டயலாக்கை என்னால் நிறைவேற்ற முடியாது.:traurig001: அதாவது பெலத்தோட

எதையாவது செய்தால் என் மூட்டு திறந்துக் கொள்ளும்.:icon_rollout: எதையும் என்னால் பெலத்தோட

செய்ய முடியாது. தயவுசெய்து வுருத்தப்பட வேண்டாம்.

இளசு
03-02-2008, 07:47 AM
அன்பு நண்பருக்கு

எலும்புகள் எக்ஸ்ரேயில் நல்லபடி தோன்றினாலும்
பந்து -கிண்ண மூட்டைத் தாங்கும் திசு-தசைநார்கள் பலவீனத்தால்
அல்லது ''கிண்ண'' விளிம்பின் அமைப்பின் பிழையால்
இந்த '' ரெகர்ரண்ட் டிஸ்லொகேஷன்'' நிகழ்கிறது.

1) இது என் நிபுணத் துறை அன்று. எனவே என்னால் முழு ஆலோசனை வழங்க இயலாது. மன்னிக்கவும்.

2) மூலிகை , உணவு போன்றவற்றால் பயனுண்டா? - தெரியாது.

3) மலர் சொல்வதுபோல் வலிய பணிகள் செய்யாமல் இருப்பது நழுவும் நிகழ்வுகளைக் குறைக்கலாம்.

4) பிஸியோதெரபி வல்லுநர்கள் இன்னும் நல்ல ஆலோசனைகள் தரக்கூடும்.
5) நல்ல ஆர்த்தோபீடிக் சர்ஜனை அணுகி முழு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

யவனிகா
03-02-2008, 08:26 AM
இது கொஞ்சம் சிரமமான விசயம் தான்.
மூட்டு விலக்கத்திற்கு கேரள நாட்டு ஆயுர்வேத எண்ணை வைத்தியம், பயனளிக்கும் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆலோசனையின்றி உடற்பயிற்சிகள் செய்வது ஆபத்தான விசயம்.எது போன்ற வேலைகள் செய்யும் போது மூட்டு விலகுகிறது என்று தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்தல் நலம்.சைக்கலாஜிக்கலாக ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எப்போது மூட்டு விலகுமோ,உயிர் போகும் வலி அனுபவைக்க வேண்டி இருக்குமோ என்று.
அன்றாட வேலை செய்வதற்கும் கூட பயமாக இருக்கும்
உங்கள் வேதனை புரிகிறது சகோதரரே.

மருத்துவரை கட்டாயம் விசாரித்து என்னால் இயன்ற விபரங்களைத் தருகிறேன்.

அனுராகவன்
03-02-2008, 08:30 AM
மூட்டு நழுவலுக்கு மருந்து முறை தேவைதான் எல்லொருக்கும்...
ம்ம் மிகவும் பயனுள்ள தகவல்..
ம்ம் மிக்க நன்றி!!

இதயம்
03-02-2008, 08:43 AM
மூட்டு என்பது எதையாவது வைத்து முட்டு கொடுக்கும் விஷயம் கிடையாது. அது இயற்கை உயிர்களுக்கு அளித்த அற்புதமான உடலியல் அமைப்பு. அதை நீங்கள் தேவைப்படும் பொழுது எடுத்து வைத்துக்கொள்வதாக படிக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. இயற்கைக்கு மாறாக இந்த மூட்டுகள் நழுவி இடம் பெயரும் பொழுதோ, அடி படும் பொழுதோ உடலின் இயல்பான அசைவுகள், செயல்கள் பெரும் பாதிப்பு அடைகிறது. கால் மூட்டில் பிரச்சினை உள்ள ஒருவனை ராஜநடை நடக்கச்சொல்லுங்கள் பார்க்கலாம்..! இந்த மூட்டுப்பிரச்சினைகளை அது தொடர்பில் படித்த மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது. அதை விடுத்து கண்ணில் தெரியும் மருத்துவர்களிடம் போவதோ, கண்ட மூலிகைகளை பயன்படுத்துவதோ ஆபத்தானது. எனவே எச்சரிக்கையாக உங்கள் பிரச்சினையை கையாளுங்கள்..!!

ஜெகதீசன்
06-02-2008, 08:53 PM
இது கொஞ்சம் சிரமமான விசயம் தான்.
மூட்டு விலக்கத்திற்கு கேரள நாட்டு ஆயுர்வேத எண்ணை வைத்தியம், பயனளிக்கும் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆலோசனையின்றி உடற்பயிற்சிகள் செய்வது ஆபத்தான விசயம்.எது போன்ற வேலைகள் செய்யும் போது மூட்டு விலகுகிறது என்று தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்தல் நலம்.சைக்கலாஜிக்கலாக ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எப்போது மூட்டு விலகுமோ,உயிர் போகும் வலி அனுபவைக்க வேண்டி இருக்குமோ என்று.
அன்றாட வேலை செய்வதற்கும் கூட பயமாக இருக்கும்
உங்கள் வேதனை புரிகிறது சகோதரரே.

மருத்துவரை கட்டாயம் விசாரித்து என்னால் இயன்ற விபரங்களைத் தருகிறேன்.
நீங்கள் கூறியது போல் சைக்கலாஜிக்கல் பயமே எனக்கு அதிகம்.
என்னை சரியாக புரிந்து இதமாக தந்த பதிலுக்கு நன்றிகள்.:icon_b:

ஜெகதீசன்
06-02-2008, 08:55 PM
இதமான எழுத்துக்களில் மருந்தாய்
உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள பல.

மலர்
07-02-2008, 01:20 PM
தகவலுக்கு நன்றி.
தயவுசெய்து வுருத்தப்பட வேண்டாம். அதெல்லாம் முடியாது...
நான் வருத்தப்பட்டுட்டேன்....
அதுக்கு தண்டனையா பெஞ்சில ஏறி 10நிமிஷம் நில்லுங்க... :cool: :cool:
இல்லாட்டி இனிமே இப்பிடி போடமாட்டேன்னு ஒரு 25 தடவை இம்போஷிசன் எழுதுங்க.... :eek: :eek:
ஏன்னா நாங்க எல்லாம் கண்டிப்பான ஆட்கள்... :sauer028: :sauer028:
ஆமா ...... :rolleyes: :rolleyes:
-----------------------
தலையணை இல்லாமல் அப்புறம் நேராக உக்கார ஆரம்பிச்சா,,,,
அப்படின்னா இப்போ தோள்பட்டை வலி எப்படி இருக்குது...?
அப்புறம்
அறுவைசிகிச்சை என்றால் எத்தனை நாட்கள் ஓய்வெடுக்கணுமின்னு நேக்கும் தெரியாது.....:confused: :confused:

ஜெகதீசன்
07-02-2008, 01:29 PM
பாதி வலி மன்ற உறுப்பினர்களின் இதமான வார்த்தைகளிலும்
அன்பான மலரக்காவின் பிரார்த்தனையிலும் குனமானது.மீதி பாதி
மருத்துவர் தந்த மாத்திரையில் குணமாகிக்கொண்டு இருக்கிறது.கையில் வலி
இருந்தாலும் தஙகளால் என் மனதில் வலி இல்லை.