PDA

View Full Version : என் காதலே கானல் நீரே.இன்பா
31-01-2008, 06:00 AM
சுட்டெறிக்கும் சூரியன்
நிழல் இல்லா பாலைவனம்
எல்லை இல்லா திசைகள்
நடந்தே சோர்ந்த கால்கள்(மனதும் கூட)
தூரத்தில் தெறிந்தது நீ(ர்)
மலர்ந்தது முகம்
அருந்திட நடந்தேன் நடந்தேன்
நான் நெருங்க நீ(ர்) விலக
வேகம் கூட்டி ஓடினேன் உன்னை - நோக்கி
சூரியனும் மறைந்தான் நீயும் மறைந்தாய்
இடிந்தவனாய் உன்னை தொலைத்தவனாய்
அயர்ந்தேன் என்னை மறந்தவனாய்

சூரியன் உதித்தான்
மயக்கம் தெளிந்தேன்
அகம் மகிழ்ந்தேன்
சில அடி தூரத்திலே
சோலைவனம்

திரும்பி பார்தேன்
தெறிந்தது நான் - கடந்த
பாதை அதிலே முட்கள் கற்கள்

என்னை தூண்டியவேளே
நம்பிக்கை தந்தவளே
கானல் நீ(ரே)
நன்றி உனக்கு...

மீண்டும் வருவாய் - என்
நினைவில்
அப்போதெல்லாம்
அழைப்பேன் உன் பெயரால்
என் மகளை...

- வரிப்புலி

.

ஆதி
31-01-2008, 06:42 AM
வரிப்புலியின் வரிகள்
மனதை வலிக்க வைக்கிறது..

கொடும் பார்வைக்கொண்ட புலியின் விழிகளிலும் கண்ணீர்..

கானலானவள் கையுற வாழ்த்துக்கள்..

மென்மையான அழகிய கவிதைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

தொடர்ந்து கொடுங்கள்..

அன்புட*ன் ஆதி

சிவா.ஜி
31-01-2008, 07:15 AM
காதல் என்ற சக்தி ஒருவரை எந்தளவுக்கு ஊக்கமளித்து முன்னேற்றமடைய வைக்கிறது என்பதை அழகான உவமையால் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வரிப்புலி.
சோலை என்ற வாழ்க்கையின் வெற்றியை அடைய காணல் நீராய் காதலியிருப்பது அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துகள் + பாராட்டுகள்.
(எழுத்துப்பிழைகளை மட்டும் கொஞ்சம் திருத்தி விடுங்கள்)

இன்பா
01-02-2008, 04:40 AM
கானலானவள் கையுற வாழ்த்துக்கள்..

மென்மையான அழகிய கவிதைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்..
அன்புடன் ஆதி

நன்றி ஆதி உங்கள் ஊக்கதிற்க்கும், வாழ்த்திற்க்கும் மற்றும் ஆசிக்கும்...

காதல் என்ற சக்தி ஒருவரை எந்தளவுக்கு ஊக்கமளித்து முன்னேற்றமடைய வைக்கிறது என்பதை அழகான உவமையால் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வரிப்புலி.
சோலை என்ற வாழ்க்கையின் வெற்றியை அடைய காணல் நீராய் காதலியிருப்பது அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துகள் + பாராட்டுகள்.
(எழுத்துப்பிழைகளை மட்டும் கொஞ்சம் திருத்தி விடுங்கள்)

மிக்க மகிழ்ச்சி சிவா.ஜி ...

முடிந்த வரையும் பிழைகளை களைந்திருக்கிறேன்...

praveen
01-02-2008, 06:29 AM
வரிப்புலி கவிதையும் எழுதுவார் என்று தெரிந்து கொண்டேன், இவருக்கு எப்படி கவிதை எழுதும் திறன் (அவர் என்னைப்போல என்று நான் நினைத்ததால்) என்று யோசித்து கொண்டே, அவர் எழுதிய கவிதை படித்ததும் தான் தெரிந்தது, காதல் வயப்பட்டுள்ளார் என்று, இன்னும் எவ்வளவு பக்கங்கள் கிறுக்குவாரோ, சீக்கிரம் காதல் (திருமணத்தில்)முடிய வாழ்த்துக்கள்.

திவ்யமா இருந்தது உங்கள் கவிதை, இது தான் நிஜம், கானல் நீரை தேடியது போல யாரையும் தேடி நேரத்தையும் மனதையும் வீணாக்காதீர்கள்.

பின்குறிப்பு : எனக்கு காதல்/கவிதை இரண்டுமே பிடிக்காது/புரியாது. இரண்டும் நேரத்தை வீனடிக்கும் செயல் என்று எண்ணம். ஆனால் அதை ஒரு வேலையாக வைத்து இருப்பவர்களை பார்த்து பொறாமைப்படுகிறேன். நீங்களாவது கற்பனையிலாவது சந்தோசமா இருக்கிறீர்களே என்று. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், போதை வஸ்து உண்காமலே போதை அடைவதால்.

இன்பா
01-02-2008, 07:36 AM
வரிப்புலி கவிதையும் எழுதுவார் என்று தெரிந்து கொண்டேன், இவருக்கு எப்படி கவிதை எழுதும் திறன் (அவர் என்னைப்போல என்று நான் நினைத்ததால்)

ஆகா... எனக்கு தெறியாதா ப்ரவீன் அண்ணாவுக்கு கதை எழுத வரும் என்பது...

கொங்கு தேர் வாழ்க்கை. . .

இன்னும் நினைவிருக்கிறது... அண்ணா...சீக்கிரம் காதல் (திருமணத்தில்)முடிய வாழ்த்துக்கள்.

நன்றி நன்றி நன்றி...

திவ்யமா இருந்தது உங்கள் கவிதை,

:traurig001: :traurig001: :traurig001:நீங்களாவது கற்பனையிலாவது சந்தோசமா இருக்கிறீர்களே என்று. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், போதை வஸ்து உண்காமலே போதை அடைவதால்.

உங்களுக்கு தெறியுமா கற்ப்பனையில் கிடைக்கும் சுகம் நிஜத்தில் என்றும் கிடைக்காது என்ற உண்மை....

நன்றி பிரவீன்

பூமகள்
01-02-2008, 08:49 AM
கானல் நீராய் காதலி ஒப்பீடு..!

எல்லை இல்லா திசைகளில் நிழல் இல்லா பாலை பயணம்..!

அசத்தல் வரிப்புலி..!

காதல் வலியை அழகாய் சொன்னீர்கள்..!

பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! :)

lolluvathiyar
01-02-2008, 11:30 AM
ஆகா வரிபுலி காதல் கவிதை எழுதுவீரா. சூப்பரா இருக்குது.

அவர் எழுதிய கவிதை படித்ததும் தான் தெரிந்தது, காதல் வயப்பட்டுள்ளார் என்று, இன்னும் எவ்வளவு பக்கங்கள் கிறுக்குவாரோ

என்ன கேள்வி கேட்டுபுட்டீங்க பிரவீன். புலியாக பிற ந்தாலும் காதலிப்பது என்பது உயிரின் உன்மை. அ ந்த உன்மை சூழலில் சிக்கியவர் மீன்டதுன்டோ. இனி வரியா வரியா கிறுக்குவார்.

பூமகள்
01-02-2008, 04:10 PM
இனி வரியா வரியா கிறுக்குவார்.
வாத்தியார் அண்ணா இப்படிச் சொன்னதை,

இதயம், நுரை அண்ணா போன்ற மிகப் பெரும் காதலர்கள் சார்பாக மென்மையாக கண்டிக்கிறேன்..!! :D:D

(அப்பாடா.. வந்த வேலை முடிஞ்சிட்டது....!! :lachen001:)

செல்வா
01-02-2008, 04:58 PM
என்னாலும் புரிந்து இரசிக்க முடிந்த அழகிய கவிதை.... இன்னும் சிறப்பாக பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தை மட்டும் காதல் தரவில்லை சிறந்த கவிதைகளை படைக்கும் திறமையையும்.

அமரன்
01-02-2008, 05:47 PM
கரைசேரும் முயற்சியில் அலைகடல் துரும்பு. கரைசேரா முயற்சி சேர்த்த அயர்ச்சி; சோர்வு.
முடங்கிய இயங்கு நிலை; கரைசேர்த்த கடல் அலை.
துரும்பு துடுப்பாகி, சற்றுமுன் தத்தளித்த அதே விசாலக்கடலில் அலைகளை பிறப்பித்து பயணத்துக்கு துணையாக...
துருப்புச்சீட்டு அலை செய்தநன்றியை மறக்காது இருக்கும் அடையாளப் பெயர்மூலம் செஞ்சோற்றுக்கடன்...
கவிதையாக கதை.. கானலாகிப் போன காணலால் காணாமல் போவோருக்கான சாட்டை.
வரிப்புலி வரிகளுக்கு பாராட்டுகள்....

ஞாபகங்கள் கவனமாகக் கையாளப்படவேண்டியவை..
கவனம் பிசகினால் கையாடல் பண்ணிவிடும் வாழ்வை.

rocky
02-02-2008, 10:02 AM
அன்புள்ள மன்றதோழர் வரிப்புலி அவர்களே,

கவிதை மிகவும் நன்றாக இருந்தது, இந்தக் கவிதையில் கடைசிப் பத்தியில் மட்டும் என் கருத்து உங்களுடன் வேறுபட்டிருக்கிறது. இதை நான் உங்களிடம் மட்டுமல்ல இன்னும் பலரிடம் இந்தப் பழக்கத்தைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய குழந்தைக்கு காதலியின் பெயரையோ அல்லது காதலன் பெயரையோ வைப்பதை, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் அது எப்படி தன்னுடைய குழந்தைக்கு காதலியின் பெயரை வைத்துவிட்டு அவளை அழைக்கும் போதெல்லாம் காதலியை நினைத்துக்கொண்டு இருப்பது உங்களின் மனைவிக்கு செய்யும் திரோகமாகத் தோன்றவில்லையா?

யாருக்குமே மறக்க வேண்டிய ஒரு மனிதரின் பெயரை தன்னுடைய குழந்தைக்கு வைக்கத் தோன்றாது. அப்படிப் பெயரை வைத்துவிட்டு மனைவியிடமும் குழந்தையிடமும் ஒன்றாக இருக்கும் போது நீங்கள் யாரை நினைத்து பேசிக்கொண்டிருப்பீர்கள், காதலியையா, மனைவியையா, அல்லது குழந்தையையா, இருவரை வைத்துக்கொண்டு மூவருடன் வாழ்க்கைநடத்திக் கொண்டிருக்கமுடுயுமா? அது தேவையா? காதல் ஒன்றும் மறக்கவே முடியாத ஒன்றல்ல, காலத்தால் எதுவும் சாத்தியமே, உங்களின் காதலியை விட ஒரு நல்ல பெண் மனைவியாகக் கிடைக்கும் பட்சத்தில் குழந்தைக்கு காதலியின் பெயரை வைத்துவிட்டு மனைவியை ஏமாற்றத்தோன்றுமா? காதல் என்பது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டுமே, அதன் கஷ்டத்தை வாழ்க்கை முலுவதும் சுமக்க வேண்டியதில்லை. சிந்தித்துப் பாருங்கள் தவறிருந்தால் மண்னித்துக் கொள்ளுங்கள்.

எங்களின் கோவைக் குசும்புக்கேள்வி ஒன்று, ஒருவேளை ஆண்களுக்கு பெண்குழந்தை பிறக்காமல் ஆண் குழந்தையே பிறந்தால் காதலியின் பெயரை எப்படி வைப்பது? கோபத்துல யாரும் என்னை அடிக்க ஆள் அனுப்பவேண்டாம்.

அனுராகவன்
03-02-2008, 09:24 AM
நன்றி வரிப்புலி அவர்களே!!
ம்ம் காதல் இனிய வாழ்த்துக்கள்..
காதல் சுகம் இனியமையானது,,
என் நன்றி

இதயம்
03-02-2008, 10:13 AM
அன்புள்ள மன்றதோழர் வரிப்புலி அவர்களே,

கவிதை மிகவும் நன்றாக இருந்தது, இந்தக் கவிதையில் கடைசிப் பத்தியில் மட்டும் என் கருத்து உங்களுடன் வேறுபட்டிருக்கிறது. இதை நான் உங்களிடம் மட்டுமல்ல இன்னும் பலரிடம் இந்தப் பழக்கத்தைப் பார்த்திருக்கிறேன். தன்னுடைய குழந்தைக்கு காதலியின் பெயரையோ அல்லது காதலன் பெயரையோ வைப்பதை, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் அது எப்படி தன்னுடைய குழந்தைக்கு காதலியின் பெயரை வைத்துவிட்டு அவளை அழைக்கும் போதெல்லாம் காதலியை நினைத்துக்கொண்டு இருப்பது உங்களின் மனைவிக்கு செய்யும் திரோகமாகத் தோன்றவில்லையா?

காதல் உணர்வு மிகவும் விநோதமானது. நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும் பொழுது உங்கள் காதலிக்காக, காதலுக்காக என்னென்னவோ செய்ய தோன்றும். அவை அனைத்தும் தன் காதலை காதலிக்கு உணர்த்த செய்ய மேற்கொள்ளப்படும் அதிகபட்ச முயற்சிகள். அந்த காதல் வெற்றியடையாது போனால் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மனதளவில், உடலளவில் பெரும் இழப்பே.! சிலருக்கு அதை மறக்க அல்லது இயல்பு நிலைக்கு மாற வெவ்வேறு கால அளவு தேவைப்படும். அது காதலின் ஆழத்தை பொறுத்ததே தவிர காதலித்த காலத்தை பொறுத்ததல்ல. சிலருக்கு சில நாட்களில் மறக்க முடிகிறது. சிலருக்கு சாகும் வரை மறக்கவே முடிவதில்லை. அதனாலேயே எவரும் காதலிக்க துணியும் முன் அந்த பெண்ணையோ, அல்லது ஆணையோ கைப்பிடிக்கும் துணிவுடன் இருக்க வேண்டும். பொழுது போக்கு காதல்(!) இதில் சேராது.

காதல் கைகூடாத ஒருவர் காதலன், காதலியின் பெயரை தன் குழந்தைக்கு இடுவது என்பது தன் காதலை காலம் தனக்குள் மறக்கடித்துவிடுமோ என்று அவருக்குள் ஏற்பட்ட அச்சத்தின் பிரதிபலிப்பு எனலாம். காதலி வேறு, மனைவி வேறு என்று பிரித்து பார்ப்பவர்களுக்கு இந்த பெயரிடுதல் காலம் முழுதும் உறுத்தலை கொடுத்துக்கொண்டே இருக்கும். என்னைப்பொருத்தவரை காதலியையே மனைவியாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அப்படி அது முடியாது போனால் மனைவியிடம் காதலியை பார்க்கும் மன பக்குவம் வேண்டும் (அதுவே மனைவியையும் காதலிக்க ஒரு காரணமாய் அமைந்து விடும்..!! அதற்கு இருவரின் தோற்றமும், குணமும் வேண்டுமே என்று சொல்லாதீர்கள். நாம் நடப்பது போல் நடந்தால் இருவரும் ஒன்றாக தெரிவது பெரிய விஷயமே இல்லை. இருவரும் பெண் என்ற ஒற்றுமையை தவிர வேறொன்றும் தேவையில்லையே.! இது காதலருக்கும் பொருந்தும்). இவை இரண்டும் இல்லாது போனால் வாழ்க்கை என்பது இரசனையற்று போய்விடும், துன்பமே வாழ்க்கை என்றாகிவிடும்.!!

இன்பா
04-02-2008, 02:21 AM
தன்னுடைய குழந்தைக்கு காதலியின் பெயரை வைத்துவிட்டு அவளை அழைக்கும் போதெல்லாம் காதலியை நினைத்துக்கொண்டு இருப்பது உங்களின் மனைவிக்கு செய்யும் திரோகமாகத் தோன்றவில்லையா?

காதலியின் பெயரை வைத்துவிட்டு மனைவியை ஏமாற்றத்தோன்றுமா? காதல் என்பது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டுமே, அதன் கஷ்டத்தை வாழ்க்கை முலுவதும் சுமக்க வேண்டியதில்லை. சிந்தித்துப் பாருங்கள் தவறிருந்தால் மண்னித்துக் கொள்ளுங்கள்.

நன்றி ராக்கி,

ஏதோ என்னுள் ஏற்ப்பட்ட பாதிப்பைத்தான் அப்படி எழுதினேன் அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கும் பக்குவம் இன்றி.

எங்களின் கோவைக் குசும்புக்கேள்வி ஒன்று, ஒருவேளை ஆண்களுக்கு பெண்குழந்தை பிறக்காமல் ஆண் குழந்தையே பிறந்தால் காதலியின் பெயரை எப்படி வைப்பது? கோபத்துல யாரும் என்னை அடிக்க ஆள் அனுப்பவேண்டாம்.

குசும்பான பதில் கொடுக்க முடியும் ஆனால்...? வேண்டாமே...

காதல் உணர்வு மிகவும் விநோதமானது அவை அனைத்தும் தன் காதலை காதலிக்கு உணர்த்த செய்ய மேற்கொள்ளப்படும் அதிகபட்ச முயற்சிகள்...

(அதுவே மனைவியையும் காதலிக்க ஒரு காரணமாய் அமைந்து விடும்..!! அதற்கு இருவரின் தோற்றமும், குணமும் வேண்டுமே என்று சொல்லாதீர்கள். நாம் நடப்பது போல் நடந்தால் இருவரும் ஒன்றாக தெரிவது பெரிய விஷயமே இல்லை. இருவரும் பெண் என்ற ஒற்றுமையை தவிர வேறொன்றும் தேவையில்லையே.! இது காதலருக்கும் பொருந்தும்). இவை இரண்டும் இல்லாது போனால் வாழ்க்கை என்பது இரசனையற்று போய்விடும், துன்பமே வாழ்க்கை என்றாகிவிடும்.!!

நன்றி இதயம்,

உணர்வுப்பூர்வமான அறிவுரைக்கு...

rocky
04-02-2008, 06:39 AM
அன்புள்ள மன்றத்தோழர் இதயம் அவர்களுக்கு,

உங்களின் கருத்துக்களுக்கும் எனது கருத்துக்களுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. நீங்கள் இந்த விசயத்தை ஒரு ஆணின் பார்வையிலேயே பார்க்கிறீர்கள், நான் இதை ஒரு பெண்னின் பார்வையில் பார்க்கிறேன், எந்தப் பெண்னும் தன்னுடைய கணவர் திருமணத்திற்க்குப் பிறகும் காதலியை நினைத்துக் கொண்டிருப்பதை தாங்கிக்கொள்ளமாட்டால்.

(காதல் கைகூடாத ஒருவர் காதலன், காதலியின் பெயரை தன் குழந்தைக்கு இடுவது என்பது தன் காதலை காலம் தனக்குள் மறக்கடித்துவிடுமோ என்று அவருக்குள் ஏற்பட்ட அச்சத்தின் பிரதிபலிப்பு எனலாம்.)
காதலர்கள் தங்களின் குழந்தைகளுக்கு இவ்வாறு பெயர் வைப்பது காலம் தன் காதலை மறக்கடித்துவிடுமோ என்ற ஆச்சத்தின் பிரதிபலிப்பு என்றால் அது அவர்கள் காதலின் நம்பிக்கையின்மையையே காட்டுகிறது. இன்னொன்று அப்படி ஒருவேளை காலத்தால் அந்தக் காதல் மறக்குமானால் அது நல்லதுதானே,(மறக்கமுடியாது என்பது வேறு). நம் வாழ்வில் நடக்கும் சில துயரங்களை நாம் மறக்கமுயர்ச்சிப்பதில் தறில்லையே. அவ்வாறு மறக்க வேண்டிய ஒன்றை இந்தக் காரியத்தால் ஏன் நாமே நியாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

( அப்படி அது முடியாது போனால் மனைவியிடம் காதலியை பார்க்கும் மன பக்குவம் வேண்டும் (அதுவே மனைவியையும் காதலிக்க ஒரு காரணமாய் அமைந்து விடும்..!! அதற்கு இருவரின் தோற்றமும், குணமும் வேண்டுமே என்று சொல்லாதீர்கள். நாம் நடப்பது போல் நடந்தால் இருவரும் ஒன்றாக தெரிவது பெரிய விஷயமே இல்லை. இருவரும் பெண் என்ற ஒற்றுமையை தவிர வேறொன்றும் தேவையில்லையே.! இது காதலருக்கும் பொருந்தும்). ).

இந்தக் கருத்தை நான் மிகவும் எதிர்க்கிறேன், இந்த முறை நாம் ஒரு பெண்னின் பார்வையிலிருந்து யோசிக்க வேண்டாம், நம் பார்வையிலேயே சிந்தித்துப் பாருங்கள், தன்னுடைய மனைவி தன்னை தன் காதலனாக என்னிப் பார்த்தால் அவனுக்கு எப்படி இருக்கும், ஒரு ஆண் தன்னுடைய மனைவியிடமிருந்து தன் தாயைப் பார்க்க ஆசைப்படலாமே தவிர காதலியைப் பார்க்க ஆசைப்படுவது நியாயமா?.

இந்தக் காலத்தில் நிச்சயமாக திருமணத்திற்க்கு முன் காதலிக்காதவர்களின் எண்னிக்கை மிகவும் குறைவே, அதுபோல் காதலித்தவர்கள் சேருவதும் மிக மிக குறைவே, ஆகையால் திருமணத்திற்க்கு முன் அந்தப் பெண்னிடம் தன்னுடைய முதல் காதலைப் பற்றி சொல்லிவிட்டே திருமணம் செய்யலாம், ஆனால் அதன் பிறகு மனைவிக்கு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். இது சாத்தியமா என்று நீங்கள் கேட்கலாம், (திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண்னிடம் தன் முந்தைய காதலைப் பற்றிக் கூறுவது) நிச்சயம் சாத்தியம் காரணம் இது அவர்களுக்கும் நடந்திருக்கலாம், அனால் பழைய காதலியை மறப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமா என்று நீங்கள் கேட்கலாம்? அவ்வாறு தேவையற்றதை மறக்கும் சக்தி நம்க்கிருந்தால் பல பிரச்சனைகள் வராது,

இந்த இடத்தில் எனக்குப் பிடித்த ஒரு வசனத்தை கூற விரும்புகிறேன், நாம் விரும்பும் ஒருவர் நம்க்குக் கிடைக்காவிட்டால் நம்மை விரும்பும் ஒருவர் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆகையால் நமக்காகவே நம்மை மட்டுமே நம்பி வாழ்க்கை முழுதும் துணையாக வரும் ஒரு பெண்னிற்க்காக கொஞ்ச நாள் காதலித்த ஒருத்தியை நிச்சயம் மறக்கலாம் என்றே நான் கருதுகிறேன். தவறிருந்தால் மண்னித்துவிடுங்கள்.

நுரையீரல்
04-02-2008, 09:09 AM
நண்பர் ராக்கியின் காதல் பற்றிய கண்ணோட்டம் மிக அருமை. காதல் என்பது ஒரு உணர்வே.

இந்த உணர்வு மற்றணைத்த உணர்வுகளை விட மிகச் சிறந்தது என்றும் சொல்ல முடியாது. காதலுக்காக தற்கொலை செய்தவர்கள் இருக்கலாம், அதே நபர் தற்கொலை செய்வதற்கு முன், 3 நாட்கள் கொலைப்பட்டினி இருக்கச் சொல்லுங்கள், நான்காவது நாள் பசிக்குதே என்று தான் சொல்வானே தவிர காதலியை தேடி அலையமாட்டான்.

அதற்காக பசி என்ற உணர்வு தான் சிறந்தது என்றும் சொல்ல வரவில்லை. அனைத்தும் ஒருவகையான உணர்வுகள். சிலருக்கு சிலவற்றில் நாட்டம் அதிகமாக இருக்கும் அவ்வளவே...

ஆதி
04-02-2008, 09:23 AM

சூப்பர் நுரையண்ணா, நீங்கள் சொன்னது உண்மையே.. எல்லாம் ஒருவித உணர்ச்சியால் விளையும் விழைவுகளே.. இதைதான் ஒவ்வொரு நெறி(மதம்)யும் நம்க்கு சொல்ல முயன்றது, நமக்குதான் புயாமல் போனது போல..

ஒவ்வொரு செயலும் ஒரு உணர்வின் பயனாய் விளைவது.. உணர்வே சக்தி.. கோபம் மகிழ்ச்சி காதல் காமம் ஆசை இப்படி எல்லா உணர்வும் சக்தியின் வடிவமே..

இந்த சக்தி என்னும் ஆற்றலை நாம் எப்படி பயன்படுத்துகிறமோ அதற்கு ஏற்றே நமக்கு எல்லாம் நடக்கும்..

அதே போல அந்த ஆற்றல்களை கட்டுப்படுதவும் கூடாது..

எடுத்துக்காட்டாக, ஒருவர் மீது நமக்கு சினம் போன்றுகிறது.. சினம் என்பது சக்தி.. இந்த சினம் அவரை எதிர்க்க அவருடன் போரிடும் அளவுக்கு நம் உடம்பில் போதிய சக்தியை தயாரித்துவிடும்..

ஆனால் ஏதோ காரணத்தால் அந்த சக்தியை நம்மா குறைத்தோ முழுமையாகவோ பயன்படுத்த முடியாமல் போகிற பட்சத்தில் அந்த சக்தி நம் உடம்பில் தேங்கிவிடுகிறது..
தேங்கிய அந்தப் பயனற்ற ஆற்றல்தான் பிற்காலத்தில் நம் உடம்பில் நோய்களாக வெளிப்படுகிறது..

அதனால் உணர்ச்சிகளை உணர்ந்து நடத்தல் நலமெ என்று எல்லா ஞானிகளும் குறிப்பிடுகின்றனர்.. உணர்வோ உணர்ச்சிகளை வெல்வோம்..

அன்புடன் ஆதி

நுரையீரல்
04-02-2008, 06:20 PM
ஒருவர் மீது நமக்கு சினம் போன்றுகிறது.. சினம் என்பது சக்தி.. இந்த சினம் அவரை எதிர்க்க அவருடன் போரிடும் அளவுக்கு நம் உடம்பில் போதிய சக்தியை தயாரித்துவிடும்..

ஆனால் ஏதோ காரணத்தால் அந்த சக்தியை நம்மா குறைத்தோ முழுமையாகவோ பயன்படுத்த முடியாமல் போகிற பட்சத்தில் அந்த சக்தி நம் உடம்பில் தேங்கிவிடுகிறது..
தேங்கிய அந்தப் பயனற்ற ஆற்றல்தான் பிற்காலத்தில் நம் உடம்பில் நோய்களாக வெளிப்படுகிறது..

அதனால் உணர்ச்சிகளை உணர்ந்து நடத்தல் நலமெ என்று எல்லா ஞானிகளும் குறிப்பிடுகின்றனர்.. உணர்வோ உணர்ச்சிகளை வெல்வோம்..

அன்புடன் ஆதி
நல்ல டைமிங் அறிவுரை சகோதரர் ஆதி..

உங்கள மாதிரி பல தம்பிகள், அண்ணன்மாருக்கு அறிவுரை சொல்லி புத்திமதிகள் சொல்வது சாலச்சிறந்தது..

சுகந்தப்ரீதன்
05-02-2008, 06:44 AM
வரிப்புலிக்கு வாழ்த்துக்கள்..! வலிகளை வரிகளில் வடித்தவிதம் மிகவும் அருமை..! மேலும் தொடர வாழ்த்துக்கள்..வரிபுலியாரே...!

rocky
06-02-2008, 03:16 AM
நண்பர் ராக்கியின் காதல் பற்றிய கண்ணோட்டம் மிக அருமை. காதல் என்பது ஒரு உணர்வே.

இந்த உணர்வு மற்றணைத்த உணர்வுகளை விட மிகச் சிறந்தது என்றும் சொல்ல முடியாது. காதலுக்காக தற்கொலை செய்தவர்கள் இருக்கலாம், அதே நபர் தற்கொலை செய்வதற்கு முன், 3 நாட்கள் கொலைப்பட்டினி இருக்கச் சொல்லுங்கள், நான்காவது நாள் பசிக்குதே என்று தான் சொல்வானே தவிர காதலியை தேடி அலையமாட்டான்.

அதற்காக பசி என்ற உணர்வு தான் சிறந்தது என்றும் சொல்ல வரவில்லை. அனைத்தும் ஒருவகையான உணர்வுகள். சிலருக்கு சிலவற்றில் நாட்டம் அதிகமாக இருக்கும் அவ்வளவே...

மிக்க நன்றி நுரையீரல் அவர்களே, உங்களின் பாராட்டுக்களுக்கு.
(இன்னும் இதயம் அண்ணன் வந்து பார்த்தாரா என்று தெரியவில்லையே, அவரது பதிலுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறேன்.)

rocky
06-02-2008, 05:44 AM
அன்புள்ள மன்றத்தோழர் இதயம் அவர்களுக்கு,

இந்த விஷயத்தில் நிச்சயம் நாம் ஒரு ஆரோக்கியமான விவாத்தை நடத்தலாம் என்று நினைக்கிறேன், ஆனால் அதை நீங்கள் கூறியது போல் ஒரு கவிதைத்திரியில் இட்டு இந்தத் திரிக்கு இடைஞ்சல் தருவதை விட இதை பொது விவாத்ங்கள் பகுதியில் மாற்றினால் அனைவரும் பங்குபெரும் ஒரு விவாதமாக்கிவிடலாமே, நாம் இருவர் மட்டும் இதைப் பற்றிப் பேசுவதை விட பலரின் கருத்தையும் அறியலாம் அல்லவா?. பொருப்பாளர்களிடம் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். நன்றி,

இதயம்
06-02-2008, 06:22 AM

நண்பரே,
உங்கள் விருப்பப்படியே விவாதப்பகுதியில் பழைய காதலை மறக்காதது சரியா..? என்ற தலைப்பில் திரி தொடங்கியாயிற்று..!! பொறுப்பாளர்கள் இங்குள்ள அது தொடர்பான விவாத பதிவுகளை அந்த திரிக்கு நகர்த்திவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!! உங்கள் விவாத கருத்துக்களை அங்கே கொடுத்து அசத்துங்கள்..!!

விவாதத்திரியின் சுட்டி: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14474

அமரன்
06-02-2008, 06:41 AM
அன்பு இதயம், ராக்கி!
கவிதையை வெறுமனே படித்து நல்லா இருக்குன்னு சொல்றதில் எனக்கும் உடன்பாடில்லை. கவிதையின் மையப்பகுதியில் நின்று பார்வைப்பரப்பை அகலமாக்கவேண்டுமென்மதில் நாட்டம் அதிகம். அதை இருவரும் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்..

இவை இங்கேயே இருந்து அணிசேர்க்கட்டும். புதிய விவாததிரியில் மேற்கொண்டு நண்பர்கள் அனைவரும் தொடரட்டும்..

இன்பா
06-02-2008, 07:45 AM
இதயம், உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. நல்ல ஆரோக்யமான கலந்துரையாடல்.

நன்றி