PDA

View Full Version : புதிய வார்ப்பு



நாகரா
31-01-2008, 04:15 AM
நிசப்த ஓலமிடும் வெண்தாள்கள்
செவிகளில் பறையறைந்து
நெற்றியை விழிக்கச் செய்கின்றன

வெண்தாள்களின் நாவுகளைச்
சுட்டுக் கருக்க
விரல்களுக்கிடையே
நெற்றிப் பார்வை
தீப்பிழம்பாய் நீளும்

அந்நாவுகள் கருகும் நெடி
உறைந்த புலன்களை உருக்கிக்
கவிதையில் வார்க்கும்

உறைந்த ஐந்து
உருகிப் பாய்ந்த பின்
ஆறாகும்
புதிய வார்ப்பு

பரிணாமப் பாய்ச்சல்
அரிது அரிது

சாம்பவி
31-01-2008, 04:56 AM
ஆறாம் விரல்
பொழிந்த*
ஆற்றுப் பெருக்கு.... !!

அக்னி
31-01-2008, 05:15 AM
சிதை(ந்த) மனங்களுக்காய்,
கொள்ளி காவும் விரல்கள்...

அனுராகவன்
31-01-2008, 08:06 AM
ஆகா நல்ல வார்ப்பை பற்றிய கவிதை..
ம்ம் என் வாழ்த்துக்கள் நாகரா

ஆர்.ஈஸ்வரன்
31-01-2008, 10:57 AM
வாழ்த்துக்கள் நாகரா

ஓவியன்
04-02-2008, 01:10 PM
பல்வேறு உணர்ச்சிகளின் வடிகால் இந்த ஆறாம் விரல் தானே...

பாராட்டுக்கள் நாகராஜ் அவர்களே வித்தியாசமான கவி வார்ப்புக்கு...!!

சாலைஜெயராமன்
04-02-2008, 02:54 PM
நாவினால் சுடுவது
நாற்காரண ராஜ நிலை
நாதாங்கி நீக்கி
நடுநின்ற பொருளை
நாமம் விளித்து
நன்மாறம் கூற
திரண்டுவரும் நீதமது
தீங்கில்லா வெண்ணையாம்
நவநீதம் என்பதும்
நல்ல கதி என்பதும்
நாரணனின் நாமமே
வெண்தாளை வேக வைத்து
சுடாத தீயை சுகமுடனே
சுகித்திருக்க சூட்சுமத்தின்
சூத்திரத்தை சூரியனுக்கு
அர்ப்பணித்தால் தீபார்த்த முத்தை
தீங்கிலாமல் காணலாமே