PDA

View Full Version : மனித மரணம்



நாகரா
31-01-2008, 03:53 AM
மர நாவுகள் அறுபட்ட
மண் ஊமையானது
மழை நாவுகளை அறுத்து
விண்ணும் ஊமையானது
மனிதன் நடுகல்லானான்

ஓவியன்
31-01-2008, 03:58 AM
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று சும்மாவா சொன்னார்கள், அது இங்கேயும் நிதர்சனமாக........

"மர நாவு அறுக்க, மேக நாவு அறுந்த" என்ற கருவை வெளிப்படுத்தப் பாவித்த வார்த்தைப் பிரயோகங்கள் பிரமிக்க வைக்கிறது...!! :icon_b:

பாராட்டுக்கள் நாகராஜன் அவர்களே...!!

சிவா.ஜி
31-01-2008, 04:00 AM
அசத்தல் சிந்தனை நாகரா.மிக அருமையாக இயற்கையின் அழிவை சொல்லியிருக்கிறீர்கள்.மிகச் சரிதான்.மரமழித்து,மழை நிறுத்தி மனிதன் சாதித்தது என்ன.....நடுகல்லாய் நிற்கப்போவதுதான்.வாழ்த்துகள் நாகரா.

சாம்பவி
31-01-2008, 04:09 AM
விளக்குமாற்றுக்கென்ன*
பட்டுக்குஞ்சலம்......!

நாவறுத்தவனுக்கென்ன*
நடுகல்... !!!!!!!!!!!!!

அக்னி
31-01-2008, 05:05 AM
மர நாவுகள் அறுபட்ட
மண் ஊமையானது
மழை நாவுகளை அறுத்து
விண்ணும் ஊமையானது
மனிதன் நடுகல்லானான்
நா வரளும் போது,
புரிகிறது,
நாவறுத்த தவறு...

வித்தியாசமான வரிகளுக்குப் பாராட்டுக்கள் நாகரா அவர்களே...


விளக்குமாற்றுக்கென்ன*
பட்டுக்குஞ்சலம்......!

நாவறுத்தவனுக்கென்ன*
நடுகல்... !!!!!!!!!!!!!
நாவறுத்தவனுக்கு
நாவறுக்காத நா வறுக்கப்பட்டவன்
துணை நடுகல்...

நாகரா
01-02-2008, 04:40 AM
மண்ணின் மரப் புலன்களையெல்லாம்
மனிதன் வெட்டிப் போட்டான்
உணர்விழந்து கல்லானான்

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:11 AM
கவிதை கனமாய்..இருக்கிறது நண்பரே...வாழ்த்துக்கள்..!!

மொழியின் செறிவும் சிந்தனையின் செறிவும் ஒருங்கே அமைந்தமைக்கு பாராட்டுக்கள்..!

அனுராகவன்
03-02-2008, 04:01 AM
மர நாவுகள் அறுபட்ட
மண் ஊமையானது
மழை நாவுகளை அறுத்து
விண்ணும் ஊமையானது
மனிதன் நடுகல்லானான்

நல்ல கவி..
மனிதன் அதை காக்க வேண்டும்..
பின்பு மனிதன் தெய்வமாவான்..

நாகரா
04-02-2008, 07:43 AM
ஓவியன், சிவா, சாம்பவி, அக்னி, சுகந்தப்ரீதன், அனு, உமது பின்னூட்டங்களுக்கு நன்றி அன்பர்களே.

மர நாவுகளால் மண் பேச*
மழை நாவுகளால் விண் பேச*
மனித நாவுகளால் கடவுள் பேச*
பசி, வறுமை, நோய், அஞ்ஞானம், மரணம்
இவற்றுக்கு நடுகல் வைத்து
இறவாப் பெருநிலையில்
இம்மண்ணில் வாழ்வோம்.