PDA

View Full Version : செய்தி தாள் - படங்கள்



அறிஞர்
30-01-2008, 04:11 PM
செய்தி தாளில் ரசித்த படங்களை இங்கு கொடுக்கலாமே...



மத்திய அமெரிக்க நாடான எல்சால்வடாரின் தலைநகர் சான்சால்வடாரில் மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சூப்பர் சீனியர் சிட்டிசன் பட்டம் வென்ற 101 வயது பாட்டி கேடலினா பினடா, கிரீடத்துடன் போஸ் கொடுக்கிறார். மங்கிய பார்வை, தோல் சுருக்கங்களையும் தாண்டி வெற்றிப் பெருமிதம் அவரது முகத்தில் தெரிகிறது.
http://i13.photobucket.com/albums/a282/aringar/paati.jpg
நன்றி-தினகரன்
-----------------------------------------------------------



கடந்த ஆண்டில் செயற்கரிய சாதனைகள் படைத்தவர்களுக்கான சிறப்பு விருதுகளை சி.என்.என்-ஐ.பி.என். டிவி நேற்று வழங்கியது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அரசியல் சாதனைக்கான விருதை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வழங்குகிறார் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி. (அடுத்த படம்) புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லட்சுமணுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விருது வழங்கினார். கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் லட்சுமண், சந்தோஷம் தாங்க முடியாமல் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்.


http://i13.photobucket.com/albums/a282/aringar/rk.jpg


நன்றி-தினகரன்.

அன்புரசிகன்
30-01-2008, 05:08 PM
வெற்றிக்களிப்பிலும் அதற்கான பலன் கிடைக்கும் போது கண்ணீர் தவிர்ந்த வேறு வார்த்தைகள் வாராது... பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

மாதவர்
17-02-2008, 05:25 AM
ஆமாம் கண்ணீரும் ஒரு மொழி அல்லவா!