PDA

View Full Version : மதுரை மீனாட்சி கோவிலில் விரிசல் : சபையில் 



ஜெகதீசன்
30-01-2008, 01:20 PM
மதுரை மீனாட்சி கோவிலில் விரிசல் : சபையில் காரசார விவாதம்
சென்னை: `மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விரிசல் விழுந்தது யாரால்?' என்று சட்டசபையில் காரசாரமாக விவாதம் நடந்தது. இதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உறுப்பினர்களுக்கு இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, மதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் நன்மாறன், `மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சில இடங்களில் ஏற்பட்ட விரிசலை தடுக்கும் பணியின் தற்போதைய நிலை என்ன?' என்று கேள்வி எழுப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:
அமைச்சர் பெரியகருப்பன்: விரிசல்கள் 91ம் ஆண்டு முதல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விரிசல்களை தடுக்கும் பணி குறித்து புதிய வல்லுனர் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக மீனாட்சி நாயக்கர் நுழைவு வாயில் மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள உத்திரத்தை அகற்றிவிட்டு புதிய கல் உத்திரம் நிர்மாணிக்கவும், விரிசல் ஏற்பட்டுள்ள தூண்களுக்கு பதிலாக தற்போதைய கலை வண்ணம் சிறிதும் மாறாமல் புதிய தூண்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பெங்களூரில் இருந்து புதிய உத்திரக்கல் கொள்முதல் செய்யப்பட்டு கல் விரிசலை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நன்மாறன்: நன்றி. மீனாட்சி கோவிலின் பொற்றாமரைக் குளம் தண்ணீர் இல்லாமல் உள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக் குளத்திலும் தண்ணீர் இல்லை. எனவே, இந்த குளங்களில் தண்ணீர் நிரப்ப இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.