PDA

View Full Version : பல்லில் கறை நீக்கதங்கவேல்
30-01-2008, 05:47 AM
என் இரண்டு வயது பெண்குழந்தைக்கு, பல்லில் கறை படிகிறது. அதுவும் கருப்பாக இருக்கிறது. தினமும் பல் துலக்கி விட்டாலும் கறை படிவது நிற்கவில்லை. இரண்டு டானிக் சாப்பிடுகிறாள். மட்டன், சிக்கன், மீன், நண்டு, காய்கறிகள், பால், பழம் அனைத்தும் சாப்பிடுவார்கள். எதையும் தள்ளுபடி செய்வது இல்லை. பல் கறை நீங்குவதற்க்கு என்ன செய்யனும் ? தெரிந்தவர்கள் உதவுங்கள்... டாக்டரிடம் செல்ல விருப்பம் இல்லை. நாட்டு வைத்தியமாக இருந்தால் பரவாயில்லை.

மலர்
30-01-2008, 06:00 AM
எலுமிச்சை பழத்தோட சாறை எடுத்து அது கூட உப்பை மிக்ஸ் பல்லுல தேய்ச்சா மஞ்சள் கறை போகுமின்னு எங்கேயோ படிச்சேன்...
ம்ம் இல்லாட்டி சித்தவைத்திய கடையில் ஒரு ஆயில் கிடைக்கும் அதை பல்பொடியோட மிக்ஸ் பண்ணி தேய்க்கணும்..
அப்பிடி தேய்ச்சாலும் பல்லுள்ள கறை போகும்....

தங்கவேல் அண்ணா
சரியான பதிலுக்கு நம் மன்ற மக்கள் உதவுவார்கள்,,,,,

இதயம்
30-01-2008, 06:06 AM
பல்லோட இயல்பான நிறம் வெண்மை. அது வேறு நிறத்துக்கு மாறிச்சின்னா அதுக்கு உபயோகப்படுத்துற தண்ணீர், சரி வர பல் துலக்காமை, தேவையான உடல் சத்துப்பொருள் குறைவு, ஏதேனும் நோய்னு பல காரணங்கள் இருக்கும். இது ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டிய விஷயமென்பதால் உறுப்பினர்கள் சொல்லும் பதில் இதற்கு சரி வராது. அது மட்டுமல்லாமல் குழந்தை தொடர்புடைய பிரச்சினை (அதுவும் பெண் குழந்தை) என்பதால் செலவை பார்க்காமல் மருத்துவரை நாடுறது தான் நல்லது தங்கவேல்.!

sarcharan
30-01-2008, 12:14 PM
இப்போ பால் பற்க்கள் தானே தன்னாலே போயிடும்...

aren
30-01-2008, 12:59 PM
இப்போ பால் பற்க்கள் தானே தன்னாலே போயிடும்...

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

சிவா.ஜி
30-01-2008, 01:36 PM
சரவணனும் ஆரெனும் சொன்னதுதான் சரி.விழுந்து முளைக்கும் பல்லை சரியானபடி பராமரித்தால் கறை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

aren
30-01-2008, 01:38 PM
வாயில் கை போட்டு சூப்பாமல் பார்த்துக்கொள்ளவும். இல்லையென்றால் பின்னாளில் வீண் செலவாகும் பல்லை வரிசைப்படுத்த.

தமிழ்ச்சூரியன்
30-01-2008, 10:30 PM
இப்போ பால் பற்க்கள் தானே தன்னாலே போயிடும்...

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

நண்பர்கள் இருவரும் சொன்ன கருத்தை நான் மட்டுமல்ல, அனைவருமே ஆமோதிப்பார்கள் என நினைக்கிறேன்.

தங்கவேல்
31-01-2008, 08:43 AM
மலர், ஆரென், தமிழ், சரன் , இதயம் அனைவருக்கும் நன்றி... உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்கின்றேன்.

அனுராகவன்
12-02-2008, 12:48 PM
பல் சொத்தை, பயோரியா (பற்புறத் திசு நோயினால் பற்களில் அசைவு ஏற்படும்.) போன்ற நோய்கள் வராமல் தடுக்க வாயைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

காலையிலும் இரவு படுக்கப் போகும் முன்பும் நவீன நார்த் துலக்கிகள் (BRUSH) கொண்டு பல் துலக்க வேண்டும்.
பற்பசை - புளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பது நல்லது.

குறிப்பாக குழந்தைகளுக்கு புளோரைடு கலந்த பற்பசை சிறப்பானது.
பற்களில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வெண் சர்க்கரை கொண்ட மிட்டாய் - சாக்லெட் - ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் பற்களைத் துரிதமாக அரித்து விடும்.

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால் வளரக் கூடிய குழந்தைகளுக்குப் பற்களின் வளர்ச்சி முழுமையாகவும் நிறைவாகவும் இருக்கும்.

சாப்பிட்ட பின்பு வாய் நிறைய நல்ல தண்*ரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்தத் தண்*ரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும் (Swish and Swallow). துப்பக் கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.

-அனு

சாலைஜெயராமன்
12-02-2008, 05:16 PM
யாரும் என்னை அடிக்க வராதீங்க, கொஞ்சம் கடுமையான முறையாக இருக்கலாம். பழகினால் தெரியும் பலன் என்னவென்று.

நான் வழக்கமாகச் செய்வது. வேப்ப இலையுடன் கொய்யா இலையை நன்றாகக் காயவைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அயாடைசடு உப்பு பொடி சேர்த்து இகரில் படாதவாறு மெதுவாகத் தேய்க்கவேண்டும், பின் உப்பு கரைந்து சொரசொரப்பு மாறியவுடன் பிரஷ் கொண்டு நன்றாகத் துலக்கி வாயிலுள்ள கரைசலைத் துப்பியோ அல்லது முழுங்கியோவிடாமல் சிறிது தண்ணீரை விட்டுக்கொண்டு நல்லமுறையில் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாகவும், கூச்சம் ஏற்படாமலும் எனாமல் கெடாமலும் இருக்கும்.

நுரையீரல்
13-02-2008, 05:55 AM
என் இரண்டு வயது பெண்குழந்தைக்கு, பல்லில் கறை படிகிறது. அதுவும் கருப்பாக இருக்கிறது. தினமும் பல் துலக்கி விட்டாலும் கறை படிவது நிற்கவில்லை. இரண்டு டானிக் சாப்பிடுகிறாள். மட்டன், சிக்கன், மீன், நண்டு, காய்கறிகள், பால், பழம் அனைத்தும் சாப்பிடுவார்கள். எதையும் தள்ளுபடி செய்வது இல்லை. பல் கறை நீங்குவதற்க்கு என்ன செய்யனும் ? தெரிந்தவர்கள் உதவுங்கள்... டாக்டரிடம் செல்ல விருப்பம் இல்லை. நாட்டு வைத்தியமாக இருந்தால் பரவாயில்லை.
உங்க மகள் சாப்பிடும் டானிக்கில் இரண்டில் ஒன்று iron டானிக் என்று நினைக்கிறேன். சாதாரணமாக குழந்தைகளுக்கு பசி எடுக்கத்தான் டானிக் வாங்கிக் கொடுப்போம். அந்த மாதிரி டானிக்குகளில் ஒன்று தான் iron இருக்கும் டானிக். இது அதிகப்படியாக கொடுப்பதும் நல்லதல்ல. இம்மாதிரி iron டானிக்கால் பல் கருப்பாகும் வாய்ப்புள்ளது.

வெற்றி
21-02-2008, 12:26 PM
உங்கள் வீட்டு குடிநீரை சோதனை செய்யவும்...(பி..ஹெச்)
ப்ளோரைடு பிரச்சனை இருக்கும் என நினைக்கிறேன்...(அவரசம்....அவசியமும் கூட)...
உடனே மருத்துவ்வரை பார்க்கவும் (ஒரு குழந்தை மருத்துவர் ..பிறகு பல் மருத்துவர்)...இதில் பாட்டி வைத்தியம் பலிக்காது என நினைக்க்கிறேன்

தங்கவேல்
22-02-2008, 03:06 AM
உங்கள் வீட்டு குடிநீரை சோதனை செய்யவும்...(பி..ஹெச்)
ப்ளோரைடு பிரச்சனை இருக்கும் என நினைக்கிறேன்...(அவரசம்....அவசியமும் கூட)...
உடனே மருத்துவ்வரை பார்க்கவும் (ஒரு குழந்தை மருத்துவர் ..பிறகு பல் மருத்துவர்)...இதில் பாட்டி வைத்தியம் பலிக்காது என நினைக்க்கிறேன்

மொக்கைசாமி, பில்லூர் டேம் தண்ணி தான் உபயோகப்படுத்துகின்றேன். நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கின்றேன்.

அனுராகவன்
01-03-2008, 04:06 AM
பல்லை பற்றிய பல சந்தேகங்கள்..
இங்கே சொடுக்கவும்..
http://www.mediaworld.info/show/Language-Tamil-Category-Scientific-Region-Asia-Periodicity-daily-http://www.dinakaran.com/second.htm
இணைப்பை சரியாக இணைக்க முடியல..
முதலில் நான் கொடுத்த பட்டனை கிளிக் செய்து....
பின்பு ஆதி....))ஆரொக்கியம்..))ஆரொக்கியா..

நன்றி : தினகரன்

க.கமலக்கண்ணன்
01-03-2008, 02:58 PM
அனுவுக்கு நன்றி

அற்புதமான விளக்கம்

mgandhi
01-03-2008, 06:56 PM
அடுப்பு கரியும் உப்பையும் நன்றாக பெடிசெய்து பல் தூளக்கினால் கரை நிங்கும்

அனுராகவன்
02-03-2008, 01:39 AM
நன்றி நண்பர்களே!!
தொடர்ந்து பல நீங்களும் இணையுங்களே!!
அதற்கு இந்த திரி வளரட்டுமே!

ஓவியா
05-09-2008, 11:40 PM
உப்பு, எழுமிச்சை சாரு, அடுப்பு கரி, என இது போன்ற பற்பொடிகள் பற்க்களை கரைக்குமா?

பல் தேயும் கரையும் அதனால் மென்மையான பொடிகள் தான் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் சொல்லிய ஞாபகம்.

காபி, டீ இவைகளை குடிக்காமலே இரண்டு பற்களில் நடுவில் வளரும் கறையை எப்படி போக்குவது?

வாழைப்பழம் உண்டால் பற்களில் கறை பிடிக்குமா?

lolluvathiyar
25-09-2008, 09:00 AM
இந்த திரியை இன்று தான் கன்டேன் தங்கவேல். என் அனுபவத்தில் சொல்கிறேன். பல் கறையை நீக்க எதுவும் செய்ய வேன்டாம், ஒரு வாரம் கோபால் பல்பொடி போட்டு பல் துழக்கினால் கரை போய் விடும்

சரண்யா
05-12-2009, 01:12 PM
நல்ல திரி இன்று தான் பார்த்தேன்...
மருத்துவர் என்ன சொன்னார் என்று சொல்லவே இல்லை..
டானிக்கால் கருப்பு ஆகிறது என்று கேள்வி பட்டிருக்கேன்....
மேலும் தண்ணீரை சோதனை செய்யுங்கள் என மொக்கைசாமி அவர்கள் கூறுகிறார்கள்...அது எப்படி சோதனை செய்வார்கள்...

வெற்றி
07-12-2009, 06:05 AM
மேலும் தண்ணீரை சோதனை செய்யுங்கள் என மொக்கைசாமி அவர்கள் கூறுகிறார்கள்...அது எப்படி சோதனை செய்வார்கள்...

நிஜமாகவே தெரியாமல் கேட்ட்கிறீர்களா ? :)
சுத்தம் சுகாரதாரம் என்றால் என்னவென்ற தெரியாமல் ஆனால் அதைப்பற்றி ரொம்ப பலர் பேசுவார்கள் ஆனால் அவர்கள் தினசரி பாவிக்கும் பலதிலும் இருக்கும் பி.எச் சை சோதிக்க நினைப்பது கிடையாது ...

எந்த ஒரு ரிசர்ச் லேபிலும் அதை சோதிக்க இயலும்.. ( சில சயிண்டிபிக் கடைகளில் பி.ஹெச் சோதிக்க காகிதங்கள் கிடக்கும் விலையும் மலிவே.. நீங்களாகவே சோதிக்கலாம்,,)

உங்கள் வீட்டின் குடி நீரில் அளவு , கோக் பெப்சி யில் அளவு.வீட்டு டீ யில் அதன் அளவு என சோதித்து இங்கே பதியுங்கள் .............
(நீங்கள் திருவிளையாடல் தருமி அல்ல என்பதை நிறுபியுங்களேன் ப்ளிஸ் )

richard
07-12-2009, 06:11 AM
இந்த திரியை இன்று தான் கன்டேன் தங்கவேல். என் அனுபவத்தில் சொல்கிறேன். பல் கறையை நீக்க எதுவும் செய்ய வேன்டாம், ஒரு வாரம் கோபால் பல்பொடி போட்டு பல் துழக்கினால் கரை போய் விடும்

சிகப்பா தித்திப்பா இருக்குமே அதை சொல்கிறீர்களா

richard
07-12-2009, 06:14 AM
அடுப்பு கரியும் உப்பையும் நன்றாக பெடிசெய்து பல் தூளக்கினால் கரை நிங்கும்

பல்லுக்கு எதாவது சேதாராம் ஆகுமா

richard
07-12-2009, 06:21 AM
என் இரண்டு வயது பெண்குழந்தைக்கு, பல்லில் கறை படிகிறது. அதுவும் கருப்பாக இருக்கிறது. தினமும் பல் துலக்கி விட்டாலும் கறை படிவது நிற்கவில்லை. இரண்டு டானிக் சாப்பிடுகிறாள். மட்டன், சிக்கன், மீன், நண்டு, காய்கறிகள், பால், பழம் அனைத்தும் சாப்பிடுவார்கள். எதையும் தள்ளுபடி செய்வது இல்லை. பல் கறை நீங்குவதற்க்கு என்ன செய்யனும் ? தெரிந்தவர்கள் உதவுங்கள்... டாக்டரிடம் செல்ல விருப்பம் இல்லை. நாட்டு வைத்தியமாக இருந்தால் பரவாயில்லை.

எனக்கு தெறிந்து பல் டாக்டரிம் கான்பிப்பதுதான் நல்லது, இப்போது நவீன சிகிச்சைகள் உள்ளன ,பற்க்களை பிளீச்சிங் எல்லாம் கூட செய்கிறார்கள், பற்க்கள் முத்துக்கள் போல் பிரகாசிக்கும் ,முரட்டு வைத்தியத்திற்க்கு போகாதீர், பல் டாக்டரிடம் போகமாட்டேன் என்று அடம் பிடிக்காதீர்,