Log in

View Full Version : ஒரு நிமிடம் ப்ளீஸ்.........

Hayah Roohi
30-01-2008, 04:31 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
5.நிறைகள் எவை
6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.

aren
30-01-2008, 04:51 AM

1. குறைந்தது ஐந்து மணிநேரம் செலவிடுகிறேன். வேலை அதிகமாக இருந்தது அல்லது வெளியூருக்கு செல்லும் சமயங்களில் மன்றம் வருவது குறையும்.
2. கவிதை, பொது விவாதங்கள், விளையாட்டு, நகைச்சுவை ஆகியவை
3. தமிழில் பேசுவதே அநாகரீகம் என்று நினைத்திருந்த என்னையும் தமிழில் எழுத வைத்தது தமிழ்மன்றம் என்றால் அது மிகையாகாது. இப்பொழுது தமிழ் கதைகளையும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்காரணம் தமிழ்மன்றம்தான். கவிதை பகுதிகளையும் படிக்க வைத்ததுமில்லாமல் என்னையும் அங்கே எழுத வைத்திருக்கிறது என்றால் அதற்கு முழுக்காரணம் தமிழ்மன்றம்.
4. குறைகள் என்று எதையும் காணவில்லை, ஆனால் மன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் ஒரு 20% மக்களே அடிக்கடி வந்து மன்றத்தில் பங்குகொள்கின்றனர். அது இன்னும் அதிகரிக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அப்பொழுதுதான் இன்னும் புதிய கருத்துக்கள் வரும் என்று நினைக்கிறேன்.
5. நிறைகள் பல உள்ளன. முதலில் பலரை தமிழில் அழகாக எழுத வைத்திருக்கிறது. அனைவரையும் ஒரு குடும்பம் போல நினைக்க வைத்திருக்கிறது. தனியாக பல வெளிநாடுகளில் இருக்கும் பலருக்கு ஒரு நட்புப் பாலமாக மன்றம் இருக்கிறது. இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம். இவை அனைத்தும் இலவசமாக அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கிறது. நமது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவி செய்கிறது.
6. மன்றத்தில் பல மாற்றங்கள் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகையால் காலத்திற்கேற்றாற்போல் மன்றமும் தன்னை தானாகவே மாற்றிக்கொள்ளும் என்பது நிச்சயம்.
7. பெயர் - ஆரென். சொந்தமாக தொழில் செய்கிறேன். சிங்கப்பூரில் வசிக்கிறேன், சென்னையைச் சேர்ந்தவன், எம்.பி.ஏ. படித்திருக்கிறேன். (நல்ல காலம் வயது எவ்வளவு என்று கேட்கவில்லை - 28 என்று உண்மையை சொல்லி மாட்டிக்கொண்டிருப்பேன்)

நன்றி வணக்கம்
ஆரென்

ஜெயாஸ்தா
30-01-2008, 05:18 AM
1. சுமார் 14 மணி நேரம்.

2. ஒரு பகுதியை மட்டும் இங்கு நான் குறிப்பிட முடியாது. 'பொதுவிவாதம் மற்றும் அலசல்கள்' கவிதைப்பகுதிகள், ஆன்மீகம், கணிணிசந்தேகங்கள், ஆகியவை என்னை கவர்ந்த பகுதிகள்.

3. வாழ்வின் அன்றாடக் கடமைகளில் தமிழ் மன்றமும் ஒன்றாகிவிட்டது. ஒரு நாள் தமிழ் மன்றம் வரமுடியாவிட்டால் யாரோவொரு குடும்ப உறுப்பினரை பார்க்கமுடியாத அளவுக்கு மனதில் வருத்தம் தோன்றும். நிறைய நண்பர்களை தமிழ் மன்றம் பெற்றுத் தந்திருக்கிறது. வேறு வேலையாக எங்கவாது பயணம் செய்திகொண்டிருக்கும் போது கூட தமிழ் மன்றத்தின் நினைவு சிந்தனைகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவுக்கு தமிழ் மன்றம் என்னுள் தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

4. சொல்லக்கூடிய அளவில் குறைகள் ஒன்றும் எனக்கு புலப்படவில்லை.

5. கருத்துச்சுதந்திரம், உறுப்பினர்களின் நாகரீகமான போக்கு, கணிணி அடிப்படையிலான சந்தேகங்கள் உடனடியாக நம் உறுப்பினர்கள் தீர்த்து வைக்கும் பாங்கு.

6. வேறுபட்ட கருத்துக்களை கொண் அனைத்து தரப்பு உறுப்பினர்களும் சம விகிகதத்தில் கலந்திருக்கச் செய்ய வேண்டும்.

7. தெரிவிக்க விரும்பவில்லை.

இதயம்
30-01-2008, 05:40 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
குறிப்பாக சொல்ல முடியாது. வேலை நேரம் போக, கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பெரும்பாலும் மன்றத்தில் தான் செலவிடுகிறேன்.

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
விவாதப்பகுதி. காரணம், நம் நலன் தவிர்த்து மற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும், உள்ளூர் உலக விஷயங்களை அறிய, புரிய, மன்றத்தினரின் குணநலன்களை நாடிப்பிடிக்க அது மிகவும் உதவுகிறது.

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
பெரும் தாக்கம் இருக்கிறது. நாம் என்ன தான் பல மொழிகள் கற்று பேசி எழுதினாலும் தாய் மொழி தரும் திருப்தி மற்றதில் வராது. அப்படி என்னை தமிழில் சரளமாக எழுத கற்றுக்கொடுத்தது தமிழ் மன்றம் தான். இப்போது என் உணர்வை என் மனைவி தொடங்கி மற்றவர்கள் வரை அனைவரிடமும் உயிரோட்டத்துடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. என் தமிழ் தாகத்தை தீர்க்க வழி ஏற்படுத்தி கொடுத்ததும் தமிழ் மன்றம் தான். என் எழுத்துக்களுக்கென்று ஒரு வட்டத்தை ஏற்படுத்தி நட்புறவுகளை பெற்றதும், அது சவுதியில் தமிழ்த்தென்றல் என்ற தமிழமைப்பை ஏற்படுத்த வழி வகுத்ததும், என் எழுத்தை இரசிக்கும் நட்புறவுகளின் ஊக்கத்தால் நான் ஒரு புத்தகம் எழுதி அது வெளியிடப்பட்டதும் மன்றத்தினால் விளைந்த சாதனையென்பதில் சந்தேகமில்லை.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
குறைகள் என்று பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. இருக்கும் சிற்சில குறைகளும் நான் உள்ளிட்ட மன்ற உறுப்பினர் தொடர்புடையதே..! தன் பதிவுகளில் தரும் கருத்துக்கள் மற்றவரை புண்படுத்தா வண்ணம் அளிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.

5.நிறைகள் எவை
நிறைகள் நிறைய. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எவ்வித பேதமுமற்ற சமுதாயத்தை உருவாக்குதல், பகுத்தறிவை பரப்புதல், உலக அறிவை உணருதல், நட்புப்பாலங்களை உருவாக்குதல், தமிழில் எழுத கற்றல், படைப்பாளிகளை உருவாக்குதல், கருத்து சுதந்திரம், கட்டுக்கோப்பு காத்தல், மன்றத்தவரை மகிழ்ச்சி படுத்துவதில் முக்கியத்துவம் கொடுத்தல், பெண் சுதந்திரம், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தல், நகைச்சுவை உணர்வை வளர்த்தல், குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவர்ந்து வருமளவுக்கு திருப்தியளித்தல், எதைக்கேட்டாலும் கொடுக்கும் அட்சயப்பாத்திரமாக இருத்தல் என்று பல இருக்கிறது.

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
நிர்வாகத்தை பொருத்தவரை மிகச்சிறப்பாக இருக்கிறது. மாற்றங்கள் என்பது மன்ற உறுப்பினர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறேன். தரமான படைப்புகளை அளித்தல், உறுப்பினர்கள் வந்து பார்வையிட்டு மட்டும் போகாமல் பங்களித்தல், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், ஜாதி, மதம், இனம் போன்ற சாயமில்லாமல் மனிதன் என்ற அடையாளத்துடன் மனிதத்துடன் மன்றத்தில் உலவுதல் ஆகியவை மேம்படவேண்டும் என நினைக்கின்றேன்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
மன்றத்தின் நோக்கத்திற்கு இந்த தகவல்கள் எந்த வகையிலும் பயனளிக்காது என்பதால் இது அவசியமில்லை என்று தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் சுய விபரங்களை மன்றத்தில் பொதுவில் பகிர்தல் கூடாது என்பது என் கருத்து (குறிப்பாக பெண் உறுப்பினர்கள்). அது நம் அந்தரங்கத்தை பாதிக்கும். தர விருப்பப்பட்டவர்கள் தொழில், தேசம் போன்ற விபரங்களை சுயவிபரக்கோவையில் இட்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்..!

நன்றி..!

Hayah Roohi
30-01-2008, 05:43 AM
நன்றிகள்,
இதயம் அவர்களே!

ஆய்வறிக்கையில் உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடும் போது உங்கள் விபரம் இருந்தால் அதன் நம்பகத்தன்மை இன்னும் கூடும் என்பதனாலேயே இந்த வினா.

பிழை என்றால் மன்னிக்கவும்.

சிவா.ஜி
30-01-2008, 07:14 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
குறைந்த பட்சம் 20 மணி நேரம்,அதிக பட்சம் 30 மணி நேரம்.

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
கவிதை,கதை,சுவையான சம்பவங்கள் மற்றும் பொது விவாதம்.அதே சமயம் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு சுற்று சென்று வந்து விடுவேன்.ஆன்மீகப் பகுதியைத் தவிர்த்து.

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
முக்கியமான தாக்கமென்றால்....தனிமையை போக்கி...மனதுக்கு ஆறுதலை கொடுத்தது.மிக நல்ல உறவுகளை வழங்கியது.சில சமயம் என் சொந்த பிரச்சனைக்குக் கூட ரத்த உறவுகளை கலந்தாலோசிக்காமல் மன்ற உறவுகளை கலந்தாலோசிப்பதில் பெரும் நிறைவைக் காண்கிறேன்.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
பெரிதாக சொல்ல ஒன்றுமில்லையென்றாலும் சமீப காலமாக அருமையான சில படைப்புகள் வெகு சிலரின் பின்னூட்டங்களையே பெற்று வருவது,சில ஒன்றுமில்லாத திரிகள் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களால் வளர்வது இவைதான் என் மனதுக்கு சிறிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

5.நிறைகள் எவை
நிறைகள் என்றால் நிறைய சொல்ல வேண்டும்.தாய்மொழித்தமிழை பல வடிவங்களில் பார்த்து, படித்து,ரசித்து,சுவைக்கும் இடமாக இருப்பது,மழலையாக எழுதுபவரையும் கூட உற்சாகப் பின்னூட்டங்களால் சிறிது நாட்களிலேயே அருமையாக எழுத வைப்பது,அதே சமயம் எழுத்திலுள்ள குறைகளை உரிமையோடு எடுத்துக்கூறி,எழுதுபவரை இன்னும் மெருகேற்றுவது,முக்கியமாய் ஒரு அட்சயபாத்திரமாய்...தேவைப்பட்ட அனைத்தையும் உடனடியாக வழங்குவது..அதற்காக மன்ற உறவுகள் மெனக் கெடுவது....இவையன்றி இன்னும் பல நிறைகளுடன் இயங்கும் இந்த மன்றம் எங்கள் குடும்பம்.

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
தொழில் நுட்ப முன்னேற்றங்கள் எப்படியும் நிர்வாகிகளால் உண்டாக்கப் படும்,அதை விடுத்து சில புதிய பகுதிகளைத் தொடங்க வேண்டும்.குறிப்பாக சுவையான சம்பவங்கள்/நீதிக்கதைகள் என்ற பகுதியை சுவையான சம்பவங்களுக்காக மட்டும் பிரித்து விடவேண்டும்.
மகளிர்க்காக ஒரு பகுதி தொடங்க வேண்டும்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.

பெயர்:கோ.சிவசுப்ரமணியன்
தொழில்: தரக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்
நாடு:இந்தியா
கல்வித் தகுதி:பொறியியல் பட்டப் படிப்பு.

அறிஞர்
30-01-2008, 01:54 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
10 மணிநேரம்

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
சிரிப்பு, விடுகதை, வாழ்த்துக்கள், அறிமுகம், கவிதை, செய்தி,

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
இணையத்தில் தமிழில் எழுத.. கருத்துக்களை பரிமாற.. கற்றுக்கொடுத்தது.. மன்றம்.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
நல்ல எழுத்தாளர்கள் நீண்ட நாள் மன்றத்தில் இருக்காமல் போய்விடுவது. அவர்களை தக்க வைக்க மன்றத்தில் இன்னும் சில மாறுதல்கள் கொண்டுவரலாம்.

5.நிறைகள் எவை?
கருத்துக்களை பரிமாற நல்ல இடம். இளம் எழுத்தாளர்கள் வளர்வதற்கு ஏற்ற இடம்.. இன்னும் நிறைய...

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அனைத்து உலக தமிழர்களை இணைக்கும் வண்ணம்... காலத்திற்கேற்ப மாறுதல்கள் செய்ய வேண்டும். இப்பொழுது மின்னிதழ் வெளியிடுவது நல்லது... இது போல பலரை கவர இன்னும் சில மாறுதல்கள் வேண்டும்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
பி.எச்.டி படித்து அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்.

மனோஜ்
30-01-2008, 01:58 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
6 மணிநேரம் தொடர்ச்சியாக அல்ல

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
நகைசுவை வாழ்த்துக்கள் மற்ற அனைத்திலும்

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
தனிமையை மறக்க செய்தது உலகில் உள்ள பலநல்ல உல்லங்களுடன் பழக வாய்பை ஏற்படுத்தியது

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
குறைகள் குறைவு சில புதிய உறுப்பினர் மன்ற விதிகளுக்கு உட்படாது செயல்படுவது எனினும் பொறுப்பாலர் கவனித்து வருகிறார்கள்

5.நிறைகள் எவை
தங்கள் படைப்புகலை சுதந்திரமாக வெலியிட முடிகிறது அதை மனதாற வாழ்த்தும் உள்ளங்கள் அதை சிறப்பாக செய்யதுன்டுதல் புதியவரும் பங்குபெற செய்யும் ஊக்கம் இங்கு உண்டு அனைவரும் தமிழ் என்ற குடும்பதில் இனையஎந்ததடை இல்லை என்ற பாங்கு இன்னும் பல....

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் திறன் இருக்குமாறு வடிவமைத்தல் இன்னும் தமிழ் அனைத்திலும் ஆக்கபடுதல் எடுத்து காட்டாக post reply என்பது கூட தமிழாக்படுதல்

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
பெயர்: மனோஜ்
தொழில்: கணிணீஆய்வாளர்
நாடு: இந்தியா தமிழ்நாடு
கல்வி தகுதி: பிகாம் மற்றும் கணிணீமோலான்மை

Hayah Roohi
31-01-2008, 09:14 AM
நன்றிகள் என் ஆய்வை நாளைக்குள் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
தயவு கூர்ந்து உங்கள் பதில்களை இங்கே விரைவில் இடுவீர்களா?

பூமகள்
31-01-2008, 10:02 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
ஒரு நாளைக்கு 4 மணி நேரம் குறைந்த பட்சம். வாரத்துக்கு எவ்வளோ மணித்துளிகள் என்று நீங்களே கணக்கு போட்டுக்கோங்க..!

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
கவிதை, விவாதம், அரட்டை, கவிச்சமர் களம், சிரிப்பு, வாழ்த்துகள், அறிமுகம், சுவையான சம்பவங்கள் மற்றும் கதைப் பகுதி.

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
நிறைய பட்டியலிடலாம்.

1. என் தமிழ்த் தாகத்தைத் தணித்தது
2. என் கவித்திறமையை நான் அறியச் செய்தது
3. என்னாலும் அழகாய் எழுத இயலுமென்று நிரூபித்தது
4. அன்பான உள்ளங்கள் நிறைந்த சகோதர சகோதரிகளை எனக்கு காட்டியது.
5. தினசரி வாழ்க்கையின் பல பெரிய தடைகளைக் கடக்கையில் ஒரு மிகப் பெரிய பலமாக எனக்கு அமைந்தது.
6. பல நல்ல கருத்துகளை பதிவுகள் மூலம் நான் அறியச் செய்தது.

இப்படி பலப் பல..! மனத்தில் இப்போது தோன்றியவை மட்டும் பட்டியலிட்டுள்ளேன்.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
குறையென்று எதுவுமே எனக்கு தென்படவில்லை.

பொதுவாக தமிழ்மன்ற தளத்தை நிறைய பேருக்கு அறிமுகம் செய்து வைக்க போதிய முயற்சி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான முதல் கட்டம், நம் மின்னிதழ் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

5.நிறைகள் எவை?
பல உலக நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நல்ல ஒரு குடும்பமாகவும், சிறந்த பல கருத்துகளை எடுத்து இயம்பி நல்வழிப்படுத்தும் ஆசானாகவும் தமிழ்மன்றம் விளங்குகிறது.
நல்ல பல எழுத்தாளர்களை உருவாக்குகிறது. சிறப்பான ஒரு குடும்பத்தில் வசிக்கும் திருப்தியை அளிக்கிறது.
இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
தமிழ்மன்றத்தினை இன்னும் இன்னும் மெருகேற்றுவது... இன்னும் பல சுவையான பகுதிகள் உருவாக்குவது..

தமிழ் மொழி பரப்ப இயன்ற மட்டும் எல்லாரும் இணைந்து உழைப்பது..

இணையத்தில் தமிழர்கள் அனைவராலும் அறியப்பட்டு பாராட்டத் தக்க தளமாக தமிழ்மன்றம் ஆகும்படி செய்வது..!

இன்னும் இது போல பலப்பல..!

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
கணினி பொறியாளர்.. இந்தியா.

யவனிகா
31-01-2008, 10:26 AM
1.தோராயமாக மூன்று மணி நேரம்.

2.எல்லாப் பகுதிகளுமே சுவையானவை தான். எனக்குப் மிகவும் பிடித்தது, கவிச்சமர், கவிதைகள்,நகைச்சுவை,கதைகள்,விவாதப்பகுதி....

3.ஆக்கப் பூர்வமான மாறுதல்கள். முக்கியமாக தனிமை போக்கும் களம். நமது படைப்புகள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் திருப்தி, உணர்வுகளுக்கு வடிகால்.

4.அதிக உறுப்பினர் இன்மை,நல்ல பதிப்புகளுக்கு தகுந்த வரவேற்பின்மை.

5.குடும்பம் போல உணர்வை ஏற்படுத்தியமை.

6. அதிக உறுப்பினர் சேர்க்கை தேவை. இருக்கும் உறுப்பினர்கள் தொடரச் செய்தல்,கூடுதல் கண்டிப்பு நிர்வாகம்.

7.டயடிசியன், சவூதி அரேபியா.

சுகந்தப்ரீதன்
31-01-2008, 11:26 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?

குறைந்தது ஐந்து மணித்துளிகளை பயனிடுவேன்...! வேலை அதிகமெனில் இதன் எண்ணிக்கை குறையும்.. வேலை குறைவு எனில் இதன் எண்ணிக்கை கூடும்..!

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?

கவிதை, கதை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், சிறுவர் மையம்.. மற்ற இடங்களில் அவ்வப்போது சென்று திரும்புவதுண்டு..!

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

நிறைய.. என் தனிமையை போக்கி இருக்கிறது.. என் உணர்வுகளுக்கு வடிகாலாய் இருந்திருக்கிறது இருந்து கொண்டிருக்கிறது... நல்ல பல நட்புகளையும் உறவுகளையும் வாரி வழங்கியிருக்கிறது...குடும்பத்தில் இருப்பது போன்ற குதுகலத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது..!

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?

இளசு அண்ணாவை போல் எல்லோரும் நெடுநாட்கள் தொடந்து மன்றத்தில் இணைந்திருப்பதில்லை என்பதுதான்..!

5.நிறைகள் எவை

மேற்கண்ட குறை நீங்கினால் எல்லாமே நிறையே..!!

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

அடுத்த இளைய தமிழ் தலைமுறைக்கு இணையத்தில் ஒரு வழிகாட்டியாக இருக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் மெருகேற்ற பட்டு அவ்வப்போது புதுப்பிக்க படவேண்டும்..!

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.

பெயர்: ஜெ.பெ.சீனிவாசன்
தொழில்: மதிப்பீட்டு பொறியாளர்
நாடு: இந்தியா
கல்வி: இளங்கலை பொறியியல் பட்டம்

அமரன்
31-01-2008, 12:26 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?

தோராயமாக ஒரு வாரத்தில் 20 மணித்தியாலத்துக்கு அதிகமாக மன்றத்தில் களி(ழி)க்கிறேன்.

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?

எனது ஆக்கங்கள் உள்ள கவிதைப்பகுதியும் கதைப்பகுதியும் அதிகம் நான் உலாவும் பகுதிகள். சிரிப்புப் பகுதிகளில் படிப்பதோடு சரி. அப்பப்போ குறைந்தளவில் எழுதுவேன். விவாதக்களங்களில் படித்து பயனடைவதுடன், கண்காணிப்பும் வேண்டி இருப்பதால் உன்னிப்பான கவனம் உண்டே ஒழிய பங்களிப்பி மிகசொறபளவே. வாழ்த்துகள், உறுப்பினர் வர்வேற்பு பகுதிகளில் பொதுவாக எத்திரியையும் விட்டு வைப்பதில்லை. ஒரு வசனத்தில் சொன்னால் எல்லா இடத்திலும் படித்தல் இருந்தாலும் எழுத்து மூலமான பங்களிப்பு கவிதை, கதை, சிரிப்பு..

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

மன்ற அறிமுகத்தின் பின்னர்,

சூழலைக் கூர்ந்து அவதானித்து திறனாய்வு செய்துகொள்ளும் தன்மை அதிகரித்து உள்ளது.
சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாகவும், விரைவாகவும், தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடிகிறது.
ஆளுமை, மனவலிமை, மேலாண்மை, சில தொடர்கள் மூலமாக நம்பிக்கை என்பன அதிகரித்து உள்ளன.4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?

குறைந்தளவு குறைகள்..

எல்லா ஆக்கங்களும் எல்லாரும் படிக்கப்படுவதில்லை. நேரமின்மை காரணம்.. ஆனாலும் வரும் நேரத்தில் தொடர்ந்து ஒரே ஆக்கத்தில் கவனம் செலுத்துவதை விட, பல ஆக்கங்களில் கவனத்தை விரிவாக்கலாம். இதை சில அன்பர்கள் செய்வதில்லை. சமயத்தில் நான் கூட அப்படித்தான்..
கருத்தாடும் விவாதக்களங்களில் கருத்துகளுக்குப் பதில் கருத்தாளர்கள் அப்பப்போ மோதிக்கொள்வது மிகப்பெரியகுறை. மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துவது என்பதை விட திணிப்பு ஆதிக்கம் செலுத்தும்போது இவ்வாறு நிகழ்கிறது.
போட்டிகளில் பங்கெடுப்போர் உறுப்பினர் தொகையுடன் ஒப்பிடுகையில் சொற்பம். வாக்களித்தாவது பங்கெடுக்காமல் இருப்பது இக்குறையின் உச்சம்.
5.நிறைகள் எவை

நிறைய நிறை.. சொல்லி மாளாது.

சுருங்கக்கூறின் குடும்பமாகப் போல்ப் பழகும் உறுப்பினர்கள். அடித்துக்கொண்டாலும் அடுத்த கணம் சமாதானமாகிப்போகும் அவர்களின் நல்லுள்ளம்.
கேட்டதை உடனடியாக நிறைவேற்றும் மன்ற நிறுவனர்.
எல்லாருக்கும் வழிகாட்டும் மன்ற முன்னோடிகள்.
அழகு தமிழில் இயன்றளவு அளவளாவல்..
6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இப்போது இருக்கும் எல்லாமே (புரிந்துணர்வு, பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் அன்பர்கள் செயல்பாடு, இப்படிப்பல...) அதிகளவில், சிறப்பாக மேம்படுதல் அவசியம்.
உறுப்பினர்களின் தினப்படி வரவு எண்ணிக்கையும் பதிவுகள் மூலமான பங்கெடுப்பும்

அன்புரசிகன்
31-01-2008, 03:57 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
ஏறத்தாள 20-30 மணிநேரம்.

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
நகைச்சுவை சிறுகதை சுவையான சம்பவங்கள் நிர்வாகப்பகுதி

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
குடும்பத்தில் இன்னொரு அங்கத்தவன். கூகிள் இற்கு அடுத்ததாக எனக்கு தேவையானவற்றை தந்துதவும் ஒரு செயலி...

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?

நிலைப்பவர்கள் குறைவு. ஆனால் தற்காலத்தில் அவை குறைந்துகொண்டு வருகிறது.

சிலர் வெட்டி ஒட்டுதல்.

மன்ற விதிமீறல்கள்.

சில எழுத்துப்பிழைகள்.
தமிழ்மன்றமாக இன்னும் சில முன்னேற்றம் உண்டு.5.நிறைகள் எவை.

உதவிகள் புரிபவர்கள் அதிகம். (எள் எண்ணெய் சிறந்த உதாரணம்)
பெரியவர்களின் நட்பு.
வாழ்க்கை பக்குவம்.
இலைமறைகாயாக இருப்பவை வெளிவருகிறது.
சிறந்த ஊக்குவிப்பு. படைப்பாளர்களுக்கு சிறந்த அடித்தளம் வகுக்கிறது.
புரிந்துணர்வுகள் அதிகம்.
முகம் தெரியாத உறவு - நட்பு.
6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
தமிழ் பேசமட்டும் தெரிந்தவர்கள் எழுதக்கூட தெரியவேண்டும். தமிழ் என்றால் தமிழ் மன்றம் நினைவுக்கு வரவேண்டும். இவற்றிற்கு ஏதுவாக தமிழ் மன்றம் அமைந்திட வேண்டும்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
அன்பு என்றே குறிப்பிடுங்கள். பிறந்தது யாழ்ப்பாணம்-இலங்கை. தொழில் புரியும் இடம் மத்தியகிழக்கு. இதுவரை கத்தார். தற்போது அமீரகம். (துபாய்) கல்வித்தகமை: கணியஅளவியல் பட்டப்படிப்பு.

ஓவியன்
31-01-2008, 05:41 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?

பொதுவாக 20-25 மணி நேரம், ஆகக் கூடுதலாக 40-50 மணி நேரங்களைச் செலவிட்டதும் உண்டு....

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?

சிரிப்பு, சுவையான சம்பவப் பகிர்வு, கவிதை, வாழ்த்துக்கள் பகுதி மற்றும் புதியவர்கள் அறிமுகப் பகுதி...

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

குடும்பமாகக் பழகும் உறவுகளை அறிமுகப் படுத்தியமை..
எனக்கும் ஒரு அடையாளம் ஏற்படுத்தித் தந்தமை..
தமிழிலும், இணையத்திலும் ஏராளமான விடயங்களை கற்றுக் கொள்ள களம் அமைத்துக் கொடுத்தமை..
மத்திய கிழக்கு தனிமையைப் போக்கியமை......

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?

காலத்துக்கு காலம் வெவ்வேறானவர்கள் பிரகாசித்து விட்டு காணாமல் போகின்றமையே....
எல்லோரும் தொடர்ந்து வருவதில்லையே என்ற ஏக்கமே அதிகம்...

5.நிறைகள் எவை

சொல்லி மாளாது, மிக முக்கியமாக குடும்பமாகப் பழகும் அன்பு உறவுகள்...

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

ஒரு கருத்துக் களமாக மாத்திரம் இருக்காது, செய்திக் களம், பல்சுவை சஞ்சிகை வெளியீடுகள் என்று பல்வேறு பரிமாணத்தில் ஜொலித்து இணைய உலகில் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.

பெயர்: ஓவியன் என்றே இருக்கட்டுமே
தொழில்: கிரய முகாமையாளர்
நாடு: இலங்கை
தொழில் புரியும் இடம்: ஓமான்
கல்வி: கணிய அளவியல் பட்டதாரி

அக்னி
01-02-2008, 01:28 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
ஏறத்தாழ 25-30 மணித்துளிகள் (தவிர்க்கமுடியாத, தனிப்பட்ட காரணங்களால் கூடிக் குறையலாம்).

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
அநேகமாக அனைத்து பகுதிகளையும் பார்வையிடுவேன்.
ஆனால், கவிதைப்பகுதிக்கே மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
எனது அறிமுகத்திரியில் குறிப்பிட்டதையே மேற்கோளிடுகின்றேன்.

தமிழீழத்தில் பிறந்து, ஐரோப்பியக் கண்டத்தில் வாழும் நான், "தமிழ்மன்றம்" எனும் குடும்பத்தில் இணைந்துகொண்ட பின்னர், எனது வாழ்க்கையின் தனிமையான கணங்களும், தூரத்தால், காலத்தால் உறவுகளைப்பிரிந்து வாழும் பாசத்தின் ஏக்கங்களும், பெரிதும் குறைந்து, மனதில் இனம்புரியாத சந்தோஷம், ஆறுதல் ஊற்றெடுப்பதை உணர்கின்றேன்.

தமிழர்களோடு பின்னிப் பிணைந்து வாழும் இந்த அசாத்தியமான இணைப்பை, உண்மையிலேயே "தமிழ்மன்றம்" எனக்கு மீண்டும் சாத்தியமாக்கித் தந்துள்ளது. மீண்டும் பல ஆண்டுகளின் பின்னர் எனது இளம்பராயத்தின் இன்பமான காலத்தை அனுபவிக்கின்றேன் என்றால் அது மிகையாகாது.

ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது. ஏதாவது முக்கிய வேலைகள் இருந்தால் அவற்றை முடிக்கும் மட்டும் "தமிழ்மன்றம்" வரக்கூடாது. ஏனென்றால், இங்கே உள்நுழைந்தால் நேரம் போவதும் தெரியவில்லை. எளிதில் விலகிப்போகவும் முடியவில்லை. அவ்வளவிற்கு "தமிழ்மன்றம்" என்னை ஈர்த்துவிட்டது.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?

கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல்களாக நேரடிச் சாடல்களாக வெடிப்பது.
உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும், வருகைக்கும் ஏற்ப பதிவாளர்களின் விகிதம் இல்லாமை.5.நிறைகள் எவை

ஒவ்வொருவரின் திறமைகளும் வெளிப்படுதலும், வெளிப்படுத்தப்படுதலும், ஊக்குவிக்கப்படுதலும்.
இனிமையான உறவுப் பாலம்.
மன்றக் கட்டமைப்பு.6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இணைய உலகில், எங்கு எது தொடர்பாகவேனும் தமிழ்த் தேடல் ஏற்படின், முதல் முகவரியாக தமிழ்மன்றம் தோன்ற வேண்டும்.
அதற்கேற்ப அனைத்து விடயங்களும் அடக்கப்பட வேண்டும்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
மன்னிக்கவும். இவ்வினாவைத் தவிர்த்துக் கொள்கின்றேன்.

உங்களது ஆய்வு சிறப்பாக பூர்த்தியாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு,
சிறந்த பெறுபேறுகளுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.

பாரதி
01-02-2008, 01:39 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
குறிப்பிட்டு சொல்லுவது கடினம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்வையிடுவேன்.

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
முன்பு கணினிப்பகுதியை. இப்போது எல்லாப்பகுதிகளும் - அரட்டை மற்றும் விவாதப்பகுதிகள் தவிர்த்து.

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
அமீரக வாழ்க்கையில் தனிமையை போக்கியது; கனவிலும் நினையாத வகையில் பாசமும் அன்பும் வைத்திருக்கும் உறவுகள் அமைந்தது.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
மன்னிக்கவும். இந்தக்கேள்விக்கு நேரிடையாக பதில் கூற இயலாது. குறைகளை மேற்பார்வையாளர் மற்றும் நிர்வாகிகளிடம் தெரிவிப்பதுதான் சரி என்று எண்ணுகிறேன்.

5.நிறைகள் எவை?
தமிழை தட்டச்ச வைத்திருப்பது;
தனிப்பட்ட நபர்களின் படைப்புத்திறனை வளர்ப்பது, உற்சாகப்படுத்துவது;
ஓரளவுக்கு ஒற்றுமை உணர்வை வளர்ப்பது;
ஓரளவுக்கு கணினி அறிவை ஊட்டியது;
இந்த மன்றத்தைக் கண்டு வியந்து, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் வளர்ந்திருப்பது;

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
உலகமெங்கிலும் ஒன்றுபட்ட, ஒரே முறையிலான தமிழ் தட்டச்சு முறையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தன்னாலான பணியைச் செய்ய வேண்டும்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
தொழில்: மின் துறை
நாடு: இந்தியா, ஐக்கிய அரபுக் குடியரசு.

மயூ
01-02-2008, 07:05 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
6-7 மணிநேரம் செலவிடுவேன்

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
கணனிப் பகுதி, சிறுகதைப் பகுதி

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
முகம் தெரியாத சகோதர சகோதரிகளை உருவாக்கித் தந்தமை!

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
எதுவும் இல்லை

5.நிறைகள் எவை
பல.. உதாரணமாக சிறந்த நிர்வாகம், தனி மனிதத் தாக்குதல்கள் அனுமதியாமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
பெயர்; ஜெ.மயூரேசன்
தொழில்; பல்கலை மாணவன்
கல்வித்தகமை; B.Sc in Management and Information Tech

ஆதவா
02-02-2008, 11:59 AM
1. ஒரு வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து மணிநேரம் வரை.. சில வாரங்கள் அதுவும் இல்லாமல்...
2. எல்லா பகுதியும்... எதையும் ஒதுக்க விருப்பமில்லை... நேரமின்மையின் கட்டாயத்தில் பல பகுதிகள் பார்க்க இயலுவதில்லை.
3. என்னை ஒரு கவிஞனாக ஏற்றுக் கொண்டது.... எனது தனிமையை போக்கியது... எனது வடுக்களை மறைத்தது... இன்னும்.................
4. மேற்ச்சொன்ன அனைத்து குறைகளும்........
5. மேற்ச்சொன்ன அனைத்து நிறைகளும்...... ஒரு சாதாரண மனிதனை நல்ல படைப்பாளியாக்குவது..
6. மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.... நான் என்ன நினைக்கிறேனோ அதைவிட அதிகமாகவே மாற்றங்கள் நிகழுகின்றன
7. ஆதவன்......... கணிணியில்..... பாரதம்... SSLC

சூரியன்
03-02-2008, 01:33 PM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
எப்படியும் 2 மணிநேரம்.

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
அனைத்து பகுதியையும் பார்வையிடுவேன்,குறிப்பாக ரோஜா மன்றம்.

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
நிறையவே அதை சொல்ல தெரியவில்லை.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
அப்படி சொல்லும் அளவிற்கு எதுவுமில்லை.

5.நிறைகள் எவை.
எவ்வளவோ.

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இதற்கு பதில் நண்பர் அக்னி அவர் கூறியுள்ளார்.

7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
பெயர்: சூரியன் (புனைப்பெயர்)
தொழில்:Quality Controller(Textile)
நாடு: இந்தியா
கல்வி: கொஞ்சம் குறைவுதான்

மாதவர்
11-02-2008, 01:45 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?
குறந்தது 30 மணித்துளிகள்
2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?
அனைத்து பகுதிகளும் ,மின்பத்தகங்கள் கவிதை ஆகியனமிகவும் விரும்பும் பகுதி
3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
நல்ல தமிழில் எதையும் செய்ய முடியும்,தமிழ் தட்டச்சு பழக்கம்4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?
நிறைவுதான் ,குறை ஒன்றும் இல்லை.5.நிறைகள் எவை

மின்புத்தங்கள்
6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
புதிய அறிவியல் மற்றும் கணனி செய்திகளை தரவேண்டும்
7.உங்களது உண்மையான பெயர்,தொழில்,நாடு,கல்வித்தகமைகளை விரும்பினால் குறிப்பிடவும்.
மாதவன், இதழியல்,இந்தியா,எம்,ஏ,எம் பி ஏ ,எம் சி ஏ

lolluvathiyar
13-02-2008, 08:04 AM
1.தமிழ் மன்றத்தில் ஒரு வாரத்துக்கு எத்தனை மணித்துளிகளை செலவிடுவீர்கள்?

தினமும் 1 மனி நேரம் செல்விட்டிருகிறேன்

2.எந்தப்பகுதியை நீங்கள் அதிகம் பார்வையிடுவது வழக்கம்?

பொதுவிவாதம், சிரிப்பு, வாழ்த்து, அறிமுகம்.

3.உங்களுடைய வாழ்வில் தமிழ் மன்றம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

கட ந்த ஒரு மாதமாக வேலை பலு காரனமாக மன்றம் சரியாக வரமுடியவில்லை. ஆனால் என் மனம் மன்றத்து உறவுகளை நினைக்காமல் இருப்பதில்லை. அவ்வபோது மன்றத்தில் இனைய முடியவில்லையே என்று ஏக்கம் வரும்.

4.தமிழ் மன்றத்தில் நீங்கள் காணும் குறைகள் எவை?

தமிழ் எழுத்து அடிக்கும் வகையில் இருக்கும் பேசிக் எடிட்டரில் பார்மாட்டிங் வசதி இல்லாதது (முன்பு இருந்தது) ஒரு பெரிய குரையாக தெரிகிறது.

6.வருங்காலங்களில் என்ன மாற்றங்களுக்கு தமிழ் மன்றம் உட்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

இதை பற்றி தனி திரி எழுதி இருகிறேன். 3000 குடிசைக்கு தீவைத்த லொள்ளுவாத்தியார் என்று