PDA

View Full Version : காதலும் கடனும்



ஆதி
29-01-2008, 06:28 AM
கைதனை நீட்டுவாய்,சி ரிப்பில் அசடுசிந்தும்
பொய்வாய் உறுதிகள் ஈதிடுவாய் *_ தைரியம்
தூர்ந்திட ஓடுவாய் தொங்குவாய் ஆதலினால்
நேர்படும்,கா தல்முன் கடனே!


_ ஆதி

ஆதி
29-01-2008, 06:56 AM
இந்தக் கவிதை ஒரு சிலேடை முயற்சியே..

காதலிப்பதும் கடன்வாங்குவது ஒன்றென சொல்ல முயற்சித்துளேன்..

கைதனை நீட்டுவாய் _ காதல் கரம் நீட்டுவாய் உன் இணை நோக்கி..

கடன் வாங்க மற்றவர்களிடம் கைநீட்டுவாய்..

சிரிப்பில் அசடு சிந்தும் _ சின்னச் சின்ன ஊடல்களில் உதட்டு சிரிப்பில் அசடு சிந்தும்..

கடன் வாங்கும் போதும் கடன்காரனிடம் தவனைக் கேட்கும் போதும் உதட்டுச் சிரிப்பில் அசடு சிந்தும்..

பொய்வாய் உறுதிகள் ஈதிடுவாய் _ காதலிக்கு இணையைக் கவர* நிறையக் கதைவிடுவாய்..

பக்கிகளைக் கொடுப்பதாய் நாளை அடுத்தவாரம் முதல்தேதியென பொய்வாய் உறுதிகள் ஈதிடுவாய்..

தைரியம் தூர்ந்திட ஓடுவாய் _ எதிர்ப்புகளை எதிர்க்க முடியாத பட்சத்தில் இணையை இழுத்துக் கொண்டு ஓடுவாய்..

கடனில் முழ்கிப்போகையில் தலைமறைவாவாய்..

தொங்குவாய் குழைந்து கெஞ்சிப்பார்ப்பாய் இணையை எப்படியும் திருமணம் முடிக்க.. இல்லை.. தாலியாய் இணையின் கழுத்தில் தொங்குவாய்..

கடன்காரனில் இருந்து தப்பிக்க முடியாத சூழலில் தூக்கிலும் தொங்குவாய்..


இப்படி ஒற்றுமைகள் உள்ளதால் காதலுக்கு இணை கடன் என கொள்ளலாம்..


அன்புடன் ஆதி

சாம்பவி
29-01-2008, 07:02 AM
கைதனை நீட்டுவாய்,சி ரிப்பில் அசடுசிந்தும்
பொய்வாய் உறுதிகள் ஈதிடுவாய் *_ தைரியம்
தூர்ந்திட ஓடுவாய் தொங்குவாய் ஆதலினால்
நேர்படும் காதலொடு கடனே!
_ ஆதி

காதலொடு
காதல் ஆக*
தளை தழைக்குமோ... !

ஆதவா
29-01-2008, 07:08 AM
நல்ல முயற்சி ஆதி.. தொடர்ந்து சிலேடைகள் கொடுங்கள்.

ஆதி
29-01-2008, 07:14 AM
காதலொடு
காதல் ஆக*
தளை தழைக்குமோ... !

திருத்திவிட்டேன்.. தளை தட்டாது என் நம்புகிறேன் சாம்பவி..

ஒவ்வொரு முறையும் தங்கள் சுட்டு விரல் நீள்கையில் நிறையக் கற்றுக்கொள்கிறேன் அதற்காக என் மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் ஆதி..

சாம்பவி
29-01-2008, 07:40 AM
கைதனை நீட்டுவாய்,சி ரிப்பில் அசடுசிந்தும்
பொய்வாய் உறுதிகள் ஈதிடுவாய் *_ தைரியம்
தூர்ந்திட ஓடுவாய் தொங்குவாய் ஆதலினால்
நேர்படும்,கா தல்முன் கடனே!
_ ஆதி

காதல்முன் கடன் ...
ம்ம்ம்ம்ம்
ஏகத்திற்கு
தளை தட்டுகிறதே.... !!!!
காதல் உத்தமம்.... !!
இங்கு மட்டும்..... !!! !!! ;)

ஓ... கா தல்முன்......
காதலைப் பிரித்துவிட்டீரோ... !


சுட்டு விரல் சுட்டும் போதெல்லாம்
மற்ற விரல்கள் எனைச் சுடுகிறதே
கவிஞரே.... !!!!!!!

ஆதி
29-01-2008, 08:37 AM
ஓ... கா தல்முன்......
காதலைப் பிரித்துவிட்டீரோ... !


சுட்டு விரல் சுட்டும் போதெல்லாம்
மற்ற விரல்கள் எனைச் சுடுகிறதே
கவிஞரே.... !!!!!!!

பிரிந்தது காதலென்றும்
பிழைத்தது தளை(லை)யல்லோ !! :)

அதனால்தான் நீங்கள்
சுட்டப்பழம்... :D


அன்புட*ன் ஆதி

ஆர்.ஈஸ்வரன்
29-01-2008, 10:06 AM
கவிதையும் விளக்கமும் அருமை

பென்ஸ்
29-01-2008, 04:33 PM
கடன்பட்டவனுக்கு காதல் வராமல் இருக்கலாம்
ஆனா காதலிச்சவன் கண்டிப்பா கடனாளி ஆயிடுவான்...

ஆதி
29-01-2008, 04:45 PM
கடன்பட்டவனுக்கு காதல் வராமல் இருக்கலாம்
ஆனா காதலிச்சவன் கண்டிப்பா கடனாளி ஆயிடுவான்...


:D:D:D:D:D

நகைச்சுவையான உண்மை **_ பலர்
நகைச்சுவை ஆன உண்மை..

அன்புடன் ஆதி

அனுராகவன்
30-01-2008, 10:30 PM
நல்ல சிலேடையே மிக குறைவான வரிகளில் தந்து அசத்திவிட்டு அதற்கு விளக்கமும் அருமை..
கா தல் விலை பேசா கடன்
கடனோ விலை பேசும் காதலுக்கு..
என் நன்றி ஆதியே..
ம்ம் தொடர்ந்து எழுதுங்கள்

அனுராகவன்
30-01-2008, 10:32 PM
கடன்பட்டவனுக்கு காதல் வராமல் இருக்கலாம்
ஆனா காதலிச்சவன் கண்டிப்பா கடனாளி ஆயிடுவான்...

நண்பரே நடைமுறை உண்மையும் கூட..
ம்ம் என் நன்றி

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:25 AM
ஆதி விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் விளங்கியே இருக்காது எனக்கு..! தமிழில் நான் உங்களிடம் கடன் வாங்கி கொள்கிறேன்.. அதற்கு நன்றி.. கூடவே காதலாய் உங்கள் அன்பையும்தான்..!!

சிலேடை முயற்சி சின்ன முயற்சியா..? ஆனாலும் அவையடக்கம் அதிகம் நம்ப ஆதிக்கு.. வாழ்த்துக்கள்..!

யவனிகா
02-02-2008, 11:02 AM
அடடா...நன்றாக பொருந்தி வருகிறது, ஆதி.

சிலேடை என்றதுமே சிறுவயதில் படித்த" வாழைப்பழமும்,பாம்பும்" தான் நினைவு வரும்.இனி உங்களது காதலும் கடனும் நினைவு வரும்.வாழ்த்துக்கள் ஆதி.