PDA

View Full Version : இன்மை



ஆதி
29-01-2008, 05:26 AM
உன் இன்மையும்
வெறுமையும் வழிந்தோடும்
நமதிந்த வீட்டில்
அமர்ந்திருக்கிறேன்
ஆற்றாமையின் தோளில் சாய்ந்து..


நம் அறையின்
கண்ணாடியில்
தளும்பும் எனது பிம்பதினோடு
பேசி கழிக்கிறேன்
எனது தனிமைகளை..

சுற்றுச் சுவர்களில்
ஏக்கத்தையும் கனத்தையும்
வரைந்து போகிற
காலத்தின் சிறகில் இருந்து
மனசுக்குள் உதிர்கிறது
ஒரு இறகு
உன் நினைவுகளாய்..

அந்த தூய இறகின்
தொடுகையால்
மாறுகிறேன் நானும்
மிக மெலிந்த துளியாய்
உன் குழலுக்காக பூத்த
ரோஜாகளில் விழுந்துவிடும்
வைராக்கியத்தோடு..

_ஆதி

பூமகள்
29-01-2008, 06:15 AM
ஆஹா... ஆஹா..!
அருமை வர்ணனைகள் ஆதி.


அந்த தூய இறகின்
தொடுகையால்
மாறுகிறேன் நானும்
மிக மெலிந்த துளியாய்
உன் குழலுக்காக பூத்த
ரோஜாகளில் விழுந்துவிடும்
வைராக்கியத்தோடு..

இந்த வரிகள் படிக்கையில் பனித்துளி பட்டு உள்ளம் சிலிர்ந்தது ஒரு கணம்...!

ஒரு அழகான குட்டி கலீல் ஜிப்ரானின் மனத்தினை உங்கள் கவியில் காண்கிறேன்.
பாராட்டுகள் ஆதி.

இப்படியான அற்புதக் கவிகள் கிடைக்குமானால், இன்மையும் இன்பமாகட்டுமே..!! :)

சிவா.ஜி
29-01-2008, 06:20 AM
எப்படி ஆதி இந்த மந்திரத்தை நிகழ்த்துகிறீர்கள்.வாசிக்கும்போதே வார்த்தைகள் காட்சிகளாகி கண்ணுக்குள் நுழைந்து இதயத்தில் அமர்ந்துவிடுகிறதே....

அவளில்லா வெறுமையை இதனை அழகாய் முழுமையாக்கிய கவி வரிகளில் மனதைப் பறிகொடுத்தேன்.கடைசி பத்தி.....ஆஹா...அற்புதம்
வாழ்த்துகள் ஆதி.

ஆதி
29-01-2008, 08:59 AM
இந்த வரிகள் படிக்கையில் பனித்துளி பட்டு உள்ளம் சிலிர்ந்தது ஒரு கணம்...!

ஒரு அழகான குட்டி கலீல் ஜிப்ரானின் மனத்தினை உங்கள் கவியில் காண்கிறேன்.
பாராட்டுகள் ஆதி.

இப்படியான அற்புதக் கவிகள் கிடைக்குமானால், இன்மையும் இன்பமாகட்டுமே..!! :)


ஒரு நிமிடம் எனை மறந்து வானில் பறக்க வைத்தப் பின்னூட்டத்திற்கு மிக நன்றி பூமகள்..


ஜிப்ரான் கவிஞர்களின் கவிஞன் அந்த மகாகவியின் பெயர் இந்த கவிதைத்திரியில் இடம் பெற்றதே கவிதைப் பெரும்பேறு பெற்றமைக்கு நிகர்..


உங்கள் பின்னூட்டம் படித்து எனக்கும் சிலிர்த்து நிக்குது முடியெல்லாம்.. :D

ஒரு ரிம்பார் வாங்கி நல்லா தலைதேச்சி குளிச்சாதான் சிலிர்த்த முடிய சீவ முடியும் நு நினைக்கிறேன் :D


அன்புடன் ஆதி

வாசகி
29-01-2008, 09:00 AM
திறந்த புத்தகத்துடன்
நானிருந்த நள்ளிரவுகளை
விழிதிறந்து கழுவினாய் நீ.

இரட்டைக் கட்டிலை
இரவெல்லாம் நானளக்க
தரை துடைத்தாய் நீ.

பிந்தூங்கி முன்னெழுந்து
காற்றில் கலந்த தூசிகளை
துடைத்து எடுத்தாய் நீ.

வைகறைக் கனவுகளை
மிரட்டும் கடிகாரம் விலக்கி
பகல்கறை கலைத்தாய் நீ.

என்னைப் பிரிந்த ஏக்கத்தில்
நீ சிந்திய கண்ணீர்துளிகளை
உறிஞ்சிப் பிறந்த-புகுந்த
வீட்டு ரோஜாவின் தொங்குதுளியை
திரையாக்கிக் கொள்கிறது என்விழி..

வாசகி
29-01-2008, 09:31 AM
முன்னால் ராஜாவே
நீ சூடிய ரோஜாவுக்கு
புதியவன் ஒருவன்
சூட்டப்போகும் ரோஜாவின்
களங்கமா? பவித்திரமா?
துளியாகும் நீ?

ஆதி
29-01-2008, 03:06 PM
வாசிக்கும்போதே வார்த்தைகள் காட்சிகளாகி கண்ணுக்குள் நுழைந்து இதயத்தில் அமர்ந்துவிடுகிறதே....

அவளில்லா வெறுமையை இதனை அழகாய் முழுமையாக்கிய கவி வரிகளில் மனதைப் பறிகொடுத்தேன்.கடைசி பத்தி.....ஆஹா...அற்புதம்
வாழ்த்துகள் ஆதி.

நெஞ்சை நெகிழ வைத்தப் பின்னூட்டத்திற்கு மிக நன்றிகள் அண்ணா..

மிக மகிழ்ந்தேன் அண்ணா..

அன்புடன் ஆதி

பென்ஸ்
29-01-2008, 04:07 PM
நல்ல தரமான கவிதை ஆதி...

கதை வாசிப்பது போல் வேகமாக வாசித்து செல்ல முடியவில்லை,
கவிதை வாசிப்பது போல் வரி வரியாக வாசித்து ரசித்தேன்...

யாரும் அனுபவிக்க கூடாத நிலை,
எல்லோரும் அனுபவிக்கும் வரிகள்...

ஆதி
30-01-2008, 01:00 PM
திறந்த புத்தகத்துடன்
நானிருந்த நள்ளிரவுகளை
விழிதிறந்து கழுவினாய் நீ.

இரட்டைக் கட்டிலை
இரவெல்லாம் நானளக்க
தரை துடைத்தாய் நீ.

பிந்தூங்கி முன்னெழுந்து
காற்றில் கலந்த தூசிகளை
துடைத்து எடுத்தாய் நீ.

வைகறைக் கனவுகளை
மிரட்டும் கடிகாரம் விலக்கி
பகல்கறை கலைத்தாய் நீ.

என்னைப் பிரிந்த ஏக்கத்தில்
நீ சிந்திய கண்ணீர்துளிகளை
உறிஞ்சிப் பிறந்த-புகுந்த
வீட்டு ரோஜாவின் தொங்குதுளியை
திரையாக்கிக் கொள்கிறது என்விழி..


என் க*விதையின் தாக்க*த்தில் தொட*ர்ந்து உங்க*ள் க*விதை மிக* அருமை உத*ய*நிலா..

மிக* ந*ன்றிக*ள்..

அன்புட*ன் ஆதி

அனுராகவன்
30-01-2008, 01:05 PM
என் வாழ்த்துகள் ஆதியே
என் கவிதையே படித்திர்களா!!!
ம்ம் என் நன்றி

ஆதி
01-02-2008, 01:03 PM
முன்னால் ராஜாவே
நீ சூடிய ரோஜாவுக்கு
புதியவன் ஒருவன்
சூட்டப்போகும் ரோஜாவின்
களங்கமா? பவித்திரமா?
துளியாகும் நீ?

ஒரு படைப்பு மற்றவரையும் படைக்க தூண்டினால் அதுவே அப்படைப்பின் வெற்றியென இளசு அண்ணா, தன் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தால்.. அந்த வெற்றையை இந்த கவிதை அடைந்துவிட்டிருக்கலாம் என் நம்புகிறேன்..

அன்புடன் ஆதி

சாலைஜெயராமன்
01-02-2008, 01:37 PM
காலம் நீண்டதொரு பயணம் இதில்
கண்ணிமைக்கும் நேரம்
காதல்வய வாழ்வு
காட்சிகளி்ன் கோலங்கள்
கருக்கலைப்பு நாடகம்
காதலுக்கு கைம்மாறு
காதலென்னும் சித்தாந்தம்
கண்ணைக் குருடாக்கும்
காதலிக்க கடல்போல்
கருத்துக்கள் பல உண்டு
எதிர்மறைப் பாலின்
ஏக்கத்தைவிட்டு
ஏறி வர இன்னும்
எத்தனையே இன்பங்கள்
இந்நிலத்தில் உண்டு
இல்லாத காதலை
எடுத்து எறிந்து விட்டால்
இன்மையில் எல்லாம்
நன்மைதானே

ஆதி
01-02-2008, 01:50 PM
இல்லாத காதலை
எடுத்து எறிந்து விட்டால்
இன்மையில் எல்லாம்
நன்மைதானே

ஐய்யா, இது காதல் பிரிவு எழுப்பிய ஏக்கமில்லை, மனைவியை பிரிந்தக் கணவன் பாடும் பாடல் இது, என் கவிதையின் நாயகன் ஏதோ ஒரு காரணத்தில் தன் மனைவியைப் பிரிந்து இருக்கிறான் அது தற்காலிகப் பிரிவு என்றும் கொள்ளலாம்.. அல்லது நிரந்தரப் பிரிவு என்றும் கொள்ளலாம்.. அந்தப் பிரிவு ஆற்றாமையில்தான் என் நாயகன் தளும்புகிறான்.. அது காதல் கவிதை என்றாலும்.. ஒரு மனைவி கணவனுக்கு இடையில் உள்ளக் காதலைப் பாடும் கவிதையே..

உங்கள் அழகியப் பின்னூட்டக் கவிதை மிக தெளிவானப் பாடம் சொல்கிறது.. காதலையும் தாண்டி இந்த உலகில் பல விடயங்கள் இருக்கிறது.. அதை காதல் விழிகள் பார்க்க மறுக்கிறது என்று.. நிதர்சனம் ஐய்யா.. நிலை மாறும் என்று நம்புவோம்..

தன் கருத்துக்கும்.. பின்னூட்டத்திற்கும் மிக நன்றிகள்..

அன்புடன் ஆதி

ஆதி
05-02-2008, 07:43 AM
என் வாழ்த்துகள் ஆதியே
என் கவிதையே படித்திர்களா!!!
ம்ம் என் நன்றி

வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா..

அன்புடன் ஆதி

ஆதவா
05-02-2008, 08:30 AM
இன்மை..

இக்கவியைப் படிக்கையில் சலிப்பின்மை.

இன்மையில் உதிரும் அந்த சிறகுகளின் மென்மை.. கவிதை காண்கிறது பொலிவின்மையின் பொருண்மை.

ஆற்றமை??

தனிமைகள் கழிக்க பிரதிபலிப்புகளோடு பேசுவதா? என்ன வகை உண்மை?
-----------

அவள் இல்லாத கணங்களைப் போக்குவதற்கு அவள் அன்றிருந்த நினைவுகளைப் பெட்டகமாக்கித் திறப்பது எல்லாருடைய வாடிக்கையும்.

சொல்லவந்த விதத்தில் நல்ல தரம். ஒரு பூவிதழில் அமர்த்தி நகர்வலம்.

ரோஜாகளில்...?

தொடர்ந்து உங்கள் கவிதைகள் காதலையோ அல்லது கணவன்-மனைவி ஊடல் பிரிவு ஆகியன சம்பந்தப்பட்ட மூன்றாவது பாலிலேயே தங்குவதைத் தவிர்க்க முயலுங்கள்... இது என் கருத்து.

அழகிய கவிதை

சுகந்தப்ரீதன்
05-02-2008, 09:17 AM
வாழ்த்துக்கள் ஆதி.. இன்மையை பற்றி மென்மை கலந்து கவிதை தந்த தன்மை..தனிமையாய் காட்டுகிறது உன்னை...!

பாராட்டுக்கள் நண்பா..!

செந்தமிழரசி
06-03-2008, 06:21 AM
மனைவியின் பிரிவை தனிமையை வெறுமையை இத்துனை நயமாய் எழுத உங்களால் எப்படி முடிகிறது ஆதி.

கவிதைத்தனத்தையும் கனத்தையும் சமவிகிதம் பிசைந்து செய்யப்பட்ட சிற்பமாய் இன்மை.

காலத்தின் சிறகில் இருந்து விழுந்த இறகு உன் நினைவு, புது சிந்தனை வசீகரம் கசிகிற வரி, உங்கள் பேனாவில் மைதான் ஊற்றுவீர்களா ?
மாய திரவம் எதுவும் வைத்திருக்குறீர்களா ?

சில பத்திகளில் வார்த்தைகள் அளவு கடந்து இருக்கின்றன, வார்த்தைகளை சுருக்கி கருமியாய் எழுதினால் கவிதை இன்னும் நன்நயமுறும்.