PDA

View Full Version : விகாஸ்



இளசு
28-01-2008, 08:15 PM
பெயர்: விகாஸ்...

வயது : பத்து

இடம் : பண்டை பாரத தேச பீகார் மாநில கிராமப்பள்ளி

காலம் : கி.பி. 2007ம் ஆண்டு..


--------------------------------

தள்ளிப்போடா
வாசம் வீசுது
எலி தின்னும் கூட்டம்தானே
எதுக்குடா உனக்குப் பள்ளிக்கூடம்?
என்ன?
திட்டினவுடன் முட்டிக்கிட்டு வருதோ?
என்ன?
எல்லாரைப்போலவும் அந்த கக்கூஸ் போணுமா?
போ.... பூட்டுகிறேன்!
உள்ளியே கிட...
இருட்டில் இன்னும் சில மணி நேரம்...

பட்டால்தான் தெரியும்
இந்த சாதிப் பயல்களுக்கு...

-----------------------------
ஐந்து மணிநேரமாய் கழிவறைக்குள்
ஜந்துபோல் முடங்கிய விகாஸுக்கு
அந்த வேளையில் நினைவுக்கு வந்தது -
எழுத்தறிப்பவன் இறைவன் ஆகும்!


( இது ஓர் உண்மைச் சம்பவம்..)

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!

meera
28-01-2008, 11:04 PM
அண்ணா,

மனதை கசக்கும் சம்பவங்கள் இன்னும் நிகழ்கிறதா???

சாதியின் பெயரில் இன்னும் எத்தனை நாள் பலியாவார்களோ???

பள்ளியில் கூடவா சாதியின் தாக்கம் இருக்கிறது???


இன்னொரு பாரதியை நாம் எங்கே தேடுவது

ஆதவா
29-01-2008, 01:53 AM
சாதி சாதி சாதி....

இந்த சாதியை வெச்சு என்ன சாதிச்சாங்க? ஒரு எழவும் இல்லை.. (மன்னிக்கவும்)

கவிதை சொல்றதுப்படிப் பார்த்தா ஒரு ஆசிரியரே இப்படி நடந்திருக்காரு. சக மாணவனா இருந்தாக்கூட ஏதோ தெரியாம செஞ்சிட்டான்னு சொல்லி சமாதானப்படுத்திக்கலாம். ஒரு ஆசிரியரே......

ஆனா ஒண்ணு சொல்றேன்... சாதி எங்க ஆரம்பிக்கிதுன்னாக்க.. பள்ளிக்கூடத்திலதான். சாதியைத் தனியா பிரிச்சி எழுதிக்கிறானுங்க. அப்பறம் இந்தமாதிரி வாத்திங்க இருக்கிறதால அது இன்னும் வளருது. வாத்தியாருங்கறவர் தலைவிதியை மாத்தக் கூடிய சக்தியை கையில வெச்சிருக்கிறவர். அப்படிப்பட்ட அந்த உன்னதமான தொழிலைக் கையில வெச்சுக்கிட்டு இந்தமாதிரி அநியாயம் பண்றது........ சே சே..

கவிதை படிச்சதும் அந்தப் பையன் என்ன நெனச்சிருப்பான்னுதான் ஞாபகம் வந்திச்சு.

இன்னும் எத்தனை பாரதிகளோட உயிர் வேணும்??? சாதி ஒழிய,,,,,,

சிவா.ஜி
29-01-2008, 03:46 AM
என்னைக் கேட்டால் இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம்தான்.விண்ணப்பப் படிவத்திலேயே இந்த பேதம் தொடங்கிவிடுகிறது.ஏன்...?அரசியல்.சாதி வாக்குகள் தேவைப்படும் அரசியல்வாதிகள் இந்த சாதித் தீயை அணைத்துவிடாமல் எண்ணையூற்றி வளர்க்கிறார்கள்.இதே சாதி பெயரைச் சொல்லி அந்த மாணவனை தண்டித்த ஆசிரியரையும் அந்த பையனின் சாதியில் சேர்த்துவிட்டதாக கூறி சான்றிதழ் வழங்கினால் சந்தோஷமாக வாங்கிக்கொள்வார்.ஆதாயம் கிடைக்குமே.தாழ்த்தப்பட்டவர்களின் மேல் இவர்களுக்கு இருக்கும் கடுப்புதான் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது.
மொத்தத்தில் சாதி பெயரை எங்கும் எதற்காகவும் உபயோகப்படுத்தினால் தண்டனை என்ற நிலை வரவேண்டும்.குறிப்பாக இது பீகார் மற்றும் உபி மாநிலங்களுக்கு மிக மிக அவசியம்.
மனதில் ஏற்பட்ட தாக்கத்தில் மலர்ந்த கவிதை சொல்லும் வரிகளில்....வலி தெரிகிறது.மாறவேண்டும் இளசு.இவையெல்லாமே மாற வேண்டும்...ஆனால் எப்போது....யாரால்....நமக்கு முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி?

aren
29-01-2008, 04:12 AM
ஐயோ!!! என்ன கொடுமை இது!!!

விலங்குகளையும் மனிதர்களாக பாவிக்கும் நம்மிடையில் இந்த மாதிரி மனித விலங்குகளா? கேட்கவே விகாரமாக இருக்கிறதே.

இவையனைத்தும் நிச்சயம் மாறும். மாறியே ஆகவேண்டும்.

அன்புரசிகன்
29-01-2008, 06:57 AM
இன்னமும் இந்த கொடுமைக்கு விடிவு கிடைக்கவில்லையா? உள்நாட்டு இரத்த உண்ணிகளிடம் இருந்து விரைவில் சுதந்திரம் கிடைக்கட்டும்.

பூமகள்
29-01-2008, 07:12 AM
சுடும் பதிவு..!!
நெஞ்சு கனத்து ஒரு நிமிடம் கண் கலங்குகிறது..!

அந்த குழந்தை விகாஷ் நிலையில் இன்னும் எத்தனை எத்தனை குழந்தைகள் பிஞ்சிலேயே வதைபடுகிறதோ???!!!

சாதி சான்றிதழ் கொடுத்தால் தான் பள்ளியில் சேர்ப்போம் என்ற கண்டிப்பை மாற்ற வேண்டும்.

பொருளாதார நிலை வைத்து இலவசக் கல்வி முதல் சலுகைகள் வழங்க வேண்டும்..

இப்படியான பல சிந்தனைகள் மேலிட்டாலும், மேல்தட்டு சாதிப்பித்தர்களின் செயல்களை தூக்கி வீச மீண்டும் ஒரு உலகப்போர் வந்தால் தான் சரியாகுமோ...??

மனம் சுட்ட கவிதை..
நிஜமென்றதும் தீப்புண்ணில் வேல் பாய்ச்சிய வலி..!

காயம் ஆற மாற்றம் அவசியம் தேவை.

மாறுமோ சமுதாயம்..??
மலருமோ மனிதம்??

ஏக்கத்துடன்,

சுகந்தப்ரீதன்
29-01-2008, 07:14 AM
சாதிகள் இல்லையடி பாப்பா
குலதாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்!
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்..!!

பாவம் பாரதி..! பாப்பாக்களிடம்(குழந்தைகளிடம்) ஏது சாதி...!
எல்லாமே மேலோரிடம்(பெரியவர்கள்) மட்டுமே இருக்கும் சதி...!

ஒருவேளை பாரதி பாப்பாவுக்கு பாடாமல் பெரியவர்களுக்கு பாடி இருந்தால் தீர்ந்திருக்குமோ இந்த சிறுவனின் வேதனை....! நிஜக்கவிதை நெஞ்சை வாட்டுகிறது அந்த பிஞ்சு முகத்தை எண்ணி பார்க்கையில்..!

என்றுதீரும் இவர்களின் சுதந்திர தாகம்....??

ஆதி
29-01-2008, 07:34 AM
இன்னும் எத்தனை
விகாஸ்கள் விழியில் படாமல்
இருக்கிறார்களோ..

இப்படி
என்னென்னக் கொடுமைகள்
அனுபவிக்கிறார்களோ..
நெஞ்சை துமிக்கிறது..

உயிரைப் பிளந்து
ஒரு தாளாத வலியைத்
தந்து செல்கிறப் பதிவு..

கலைமகள் ஏந்திய
வீணைப்போல்
விறகை பிரம்பாய் ஆசான்கள்
எடுத்து வருவது
எம்மை திருத்தவே
எனப் பொருத்தோம்..

பிரிவு வெறிகளையும்
பிரம்பாய் கொணர்ந்து
வார்த்தைகளால் அரையும்
வாதியார்கலும் உள தேசத்தில்
பாரதியின் வரிகளை மாற்றிப்
பாடுவோம்..
எழுதறிவிக்க மறுக்கும்
ஆசானை எரிப்போம்..

*ஆதி

மனோஜ்
29-01-2008, 07:39 AM
சாதி ஒரு சதி என்று தான் சொல்ல வேண்டும்
கவிதை அதை உணர்த்துகிறது அண்ணா
இந்த சதி ஒழிந்தால் தான் சமுதாயம் நலம் பெறும்

sarcharan
29-01-2008, 07:47 AM
பீஹார், குஜராத், ஒரிஸா
நரேந்திர மோடி, லாலு பிரசாத் யாதவ், இத்யாதிகள்...

ஹே மிராண்டிகள்,...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை எண்ணி....

என்று மடியும் இந்த சாதி பேதம்...

பென்ஸ்
29-01-2008, 08:44 AM
இயேசுவும் சாட்டை எடுத்து வீசினார்...
இன்று இளசுவும்...

sarcharan
29-01-2008, 09:01 AM
ஆனால் யாரும் திருந்தவில்லையே..

இளசு
12-02-2008, 10:10 PM
கருத்தளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி..

உண்மைச்சம்பவம் ஆவணப்படமாய் விகாஸின் வாக்குமூலத்துடன் ....கண்டு
கொதித்த மனத்தின் தீக்குழம்புச் சிதறல் இது.....

சாலைஜெயராமன்
13-02-2008, 01:57 PM
சாதியை ஒழிப்பதில் ஆட்சியாளர்களுக்கு மெய்யான விருப்பம் இல்லை திரு சிவா. கல்விச் சாலையில் இருந்து சாதிகளின் தாக்கத்தை ஆரம்பித்து சாதிவெறியர்களின் எண்ணங்களுக்கு தீனிபோடும் ஒரு வஞ்சகச் செயல் இந்த "என்ன ஜாதி" என்று விண்ணப்பத்தில் கேட்கும் ஒரு நடத்தை.

இந்தக் கேவலங்கெட்ட செயல்களுக்கு வெட்கப்படாத கூட்டம் அரசியலையே இந்த அவலங்களைக் கொண்டுதான் நடத்திவருகிறது நாம் செய்த பாவம்.

எழுத்தறிவித்தவன் எமனானான்.

ஐயோ பாவம் விகாஸ். அக்கினிச் சுவாலையாய் உள்ளத்துள் பற்றி எறிந்து, விசாலை இன்னொரு அம்பேத்காரை இந்தியாவிற்கு தரும் ஊக்கியாக அமையட்டும் இந்தக் கொடு நிகழ்வு.

கலங்காதே விகாஸ். நாளை உன் உன்னத நடத்தையால் உலகத்தை மாற்று. உன் உயர்ந்த பண்பால் உனக்கு இழைத்த கொடுமைகளின் கொட்டத்தை வெட்கப் படுத்து. கேடு கெட்ட கோழை சாதி வெறியர்களைப் புறம் தள்ளப் புறப்படு.

வாழ்க நீ எம்மான்

ஓவியன்
28-03-2008, 12:26 PM
இயேசுவும் சாட்டை எடுத்து வீசினார்...
இன்று இளசுவும்...

உண்மைதான் அண்ணா, ஆனால் இனியொருவர் இத்தகு சாட்டை வீசாதிருக்கும் ஒரு நிலை இனியாவது வருமா......???

mukilan
03-07-2008, 06:58 PM
பிஞ்சு நெஞ்சங்களில் சாதி எனும் நஞ்சு கலக்கவா நம் கல்விக்கூடங்கள் இருக்கின்றன. அப்படியானால் அது கல்விதானா? இது எங்கோ ஓர் மூலையில், பீகாரில் மட்டுமல்ல. பாரதி பிறந்த இத்தமிழகத்தில் கூடத்தான் நடக்கிறது. சாதி கூற விருப்பமில்லை என்று விண்ணப்ப படிவத்தில் எழுதும் வாய்ப்பு கிட்டுமா? ஆண் பெண் தவிர்த்து திருநங்கை எனப்படும் மூன்றாம் பாலினர்க்கு விண்ணப்ப படிவத்தில் இடம் இருப்பது போல சாதி மதம் கூற விருப்பமில்லை என்ற ஒரு பிரிவு வரும் நாள் இருப்பதாகவே உணர்கிறேன். அந்நாள் சீக்கிரம் வரும், இருக்கும் உத்தப்புரங்களும் உத்தமபுரங்களாகும்.


பி.கு: தமிழகத்தின் நெற்களஞ்சியத்திலும் வறுமையின் கோரத்தால் எலிக்கறி உண்ட கொடுமை நடந்தது.