PDA

View Full Version : நான் யார்?



நாகரா
28-01-2008, 05:32 AM
இருப்பில் இருப்பாய் இருப்பை அறியுமெய்ப்
பொருளாய் இருக்கிறேன் நான்

இருப்பில் தானாய்த் தோன்றி இருக்கிறேன்
இருப்பே நானாய் விளங்கி

இருப்பில் நான்தோன்றியே இருக்கிறேன் மெய்யாமவ்
விருப்பே தான்நானெனும் பொருள்

மெய்யாம் இருப்பிற்குள் இருக்கிறேன் உயிராய்நான்
பொய்யா விளக்கென்றும் நானே

தானேயென இருக்கும் மெய்ப்பதி தன்னை
நானேயென விளக்கும் நான்

தானேயென சுத்தவெளியாய் இருக்கும் அதன்கண்
நானேயெனும் சித்துருவாய் நான்

தானேயென இருக்குமோர் பரிபூரணந் தானும்
நானேயென விளங்கவேதான் நான்

தானேயென நின்ற சத்தியச் சந்நிதியில்
நானேயென உள்ளேன் நான்

தீபா
28-01-2008, 07:30 PM
இப்படி
இருப்பை
விருப்பாய் பொறுப்பாய்
எழுதிப் போட்டால்
நெருப்பாய் விழாது...
கரியாய் போகும்.

ஆடையில்லாத மேனி
அவன் பேர் அந்நாளில் ஞானி - ஏதோ ஒரு பாடல்

அழுக்கனாய் இருந்தால் சித்தன்
அழகாய் இருந்தால் புத்தன்

கல்லாய் இருந்தால் தெய்வம்
கொல்லா திருந்தால் பாவம்.

ஞானம் எதைச் சொல்கிறது?
இம்மூவகை நிலையோ?

நான் - அகங்காரம். யார் சொன்னது?

நானில்லையேல் நாலுமில்லை.
நானில்லையேல் நம்பிக்கையில்லை.

நான் வென்றதும்
கை ஊன்றியது தலைக்கனம்.

அதன் பேர்தான் அகங்காரம்.

நான் தோற்கலாமா?
கூடாது.
தோல்வி வெற்றியின் படி,
நான் வெல்லலாமா?
கூடாது
வெற்றி தோல்விக்கு அடி...

"நான்" யார்... புரிந்துகொண்டீரா?

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:38 AM
சத்தியமாய் புரிந்துக்கொள்ளும் அளவிற்க்கு எனக்கு ஞானமில்லை.. நண்பர்களே..!! ஆமாம் அப்ப நான் யார்..??

அனுராகவன்
03-02-2008, 03:51 AM
நான் என்பது உடலா..?.உயிரா.?
அப்ப நான் யார்..!!
கேள்வி எழுப்பி நண்பர் பதில் அளிக்கவில்லையே..
நான் என்பது ஆன்மா..
தூய நிர்வாண உடல்..
ம்ம் நன்றி நாகரா..