PDA

View Full Version : கனவுகளில் காத்திருக்கிறேன்......!வசீகரன்
27-01-2008, 02:18 PM
கலகலப்பாக இருந்தது அந்த இல்லம்...!வீடு முழுவதும் மனித நடமாட்டங்கள்... ஆளாளுக்கு உற்சாகங்கள்... வீட்டின் மத்தியில் அனைவரும் விரிக்கப்பட்ட பாய்களில்
அமர்ந்திருந்தனர்.... குமரேசன் படு உற்சாகமாக இருந்தார்... பெண்ணின் தகப்பன்.. தகைந்திருப்பது பெரிய இடம் என்பதில் அவருக்கு கால் நிலை கொள்ளவில்லை.... அவர்களின் ஒவ்வொரு அசைவிர்க்கும் ரொம்பவே சிரித்து சிரித்து தலையை தலையை ஆட்டி பணிவிடைகளை பவ்யமாக செய்தார்... விழுந்து விழுந்து உபசரித்தார்...!
ரொம்ப ஆர்வமாக மாப்பிள்ளை ரைஸ் மில் ஓனர் என்று எல்லோரிடமும் பெருமிதமாக அங்கலாய்த்தார்
என்னங்க என்று சில நேரங்களில் அவர் மனைவி அலமேலு இழுத்தாலும்....கோபம் கொண்டு மனைவியை
எறிந்து விழுந்தார்... எதுவும் பேசாதேடி... எல்லாம் எனக்கு தெரியும்.... ஏதாவது பேசி என் கழுத்த அறுத்துகிட்டிருக்காம போ போய் வேலைய பாரு.... என்று மனைவியை வார்த்தைகளில் எரித்தார்..! அவரை மீறி இதுவரை ஏதும் யோசித்திராத அலமேலுவும் விதியை நொந்து கொண்டு போய்விடுவாள்...
உள்ளூர தாமரை தயாராகி கொண்டிருந்தாள்....
சபையில் மாப்பிள்ளை வீட்டாருடன் இணக்கமாகிஇறுந்தார் குமரேசன்... அடிக்கடி உளே ஓடி சென்று வீட்டு ஆட்களுடன் ஏதோ பேசுவதும் சமயலறை பக்கம்
சென்று மனைவியிடம் ஏதும் சொல்வதுமாக பரபரப்பாக இருந்தார்...! ப்ரோக்கார் ரங்கநாதன் இரு வீட்டார் சார்பாக அவரே எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தார்...!
அப்புறமென்ன பொண்ண வரச்சொல்லுங்க என்று மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் இருந்து குரல்...
குமரேசன் உள்ளே மனைவியை குரல் கொடுத்தார்.... அலமேலு தாமரையை அழைத்து கொண்டு வந்தாள்... அழகின் சொருபமாக கையில் காபி தம்ளர்களுடன் வந்து முன் வரிசையில் இருப்பவர்களுக்கு
கொடுத்தாள்... மாப்பிள்ளை தனசேகரன் இளித்தான் தாமரையை விழுங்கி விடுவதை போல பார்த்தான்... சற்று நேரம் தாமரை அங்கேயே அமர்த்தப்பட்டாள்...அத்தனை கண்களும் அவள் அழகை பொறாமை யோடு விழுங்கின
பின் தாமரை உள்ளே அழைத்து செல்லப்பட்டால்....! எல்லாருக்குமே பரம திருப்தி...!அப்போதே எல்லாம் பேசி முடிக்க பட்டது.... தேதியும் குறிக்கப்பட்டது.... புரோக்கார் ரங்கன்....
எல்லாவற்றிற்கும் வித்தீட்டார்...அடிக்கடி ஹாஸ்யங்களை அடித்து சபையில் கலகலப்பு ஊட்டினார்...! அவருக்கும் நல்ல கமிஷன்....
அடுத்த காட்சி ஆரம்பித்தது.... கட கட வென பாய்கள் விரிக்கப்பட்டன... இலைகள் போடப்பட்டன.... தண்ணீர் தெளிக்கப்பட்டு கறி சோறு பரிமாறப்பட்டது... மாப்பிள்ளை வீட்டார் சோற்றையே பார்க்காதவர்கள் போல் கறிசோற்றை அள்ளி அடித்தனர்
சாப்பாட்டுக்கு முன்னர் கொள்ளை பக்கம் போய் சரக்கை சரித்து விட்டு வந்தவர்களின் அட்டகாசம் வேறு.... லபோ திபோ என தேவை இல்லாத பேச்சு..... குமரேசனும் அலமேலுவும் பம்பரமாக சுழன்றார்கள்.... எல்லாரையும் விளித்து விளித்து அனுசரிததபடி குமரேசன் கவனித்தார்....! அவரின் ஒரே குறிக்கோள்... கல்யாணம் முடிக்கவேண்டும் அதற்காக காலில் கூட விழ தயாராக இருந்தார்.... விருந்து முடிந்து கைகள் கழுவப்பட்டன..... இலைகள் தெருவில் வீசப்பட்டன...!மாப்பிளை வீட்டு கோஷ்டி வந்த ட்ராக்டர் வண்டியில் மீண்டும் ஏறி பயணித்தது....குமரேசனும் அலமேலுவும் தெரு எல்லை வரை வந்து அனைவரையும் சிரித்து சிரித்து வழியனுப்பினார்கள்....
ஒரு வழியாக எல்லாம் முடிந்து விட்டது.....! ஊர்க்காரர்கள் குமரேசனை பாராட்டினார்கள்.....! புரோக்கர் ரங்கன் கதாநாயகனாகப்பட்டார்.... கடை வாய் பற்கள் தெரிய சிரித்தார்....வீட்டு உறவு மக்களும் சந்தோசமாக அரட்டை அடித்து கொண்டார்கள்
வந்தவரை அவர்களால் முடிந்தது.... குமரேசன் அடுத்த கட்ட வேலைகளை மனதில் கணக்கு போடத்தொடங்கினார்..! ஏழை குடியானவனான அவருக்கு சொந்தத்திலும் யாரும் பெண் எடுப்பதர்க்கு முன் வராத போது எப்படி இதுகளை தள்ளி விடுவது என்று இருந்தவர்க்கு... ப்ரோக்கர் ரங்கநாதன் சொன்ன இந்த சம்பந்தம்.... மனதில் வெல்லமாக இனித்தது...! ஆனால் இரண்டாந்தாரமாக குடுப்பதர்க்கு அல மேலு எதிர்த்தாள்..... பெத்த மனசு கொஞ்சமாக கசிந்த போதும் அவரின் இயலாநிலைக்கு அவர் எதுவெனும் செய்ய துணிந்தார்.... மனைவியை அடக்கினார்....வாய மூடிக்கிட்டு இருடி.... வரிசையா
பொட்ட புள்ளைங்கள பெத்து போட்டுட்டு யார்டி இதுகளுக்கு பாடு எடுக்கறது..... ஏதும் பேசாதடி... எத எப்படி செய்யணயும்னு எனக்கு தெரியும்.... அவரின் ஆளுமையை காட்டினார்..!. புரோக்கார் ரங்கநாதன்
ஜாரூராக மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்....! தாமரையை யாரும் ஏதும் கேட்கவில்லை....! உன்ன பொண்ணு பார்க்க வருவாங்க என்று மட்டும் குமரேசன் சொல்லி இருந்தார்..!
கடைசி வரை பேசாமலே இருந்தால் தாமரை.... வந்தார்கள் பார்த்தார்கள் பிடித்து போய்
தேதியும் குறித்து சென்று விட்டார்கள்..... எல்லாருக்கும் மகிழ்ச்சி..... எல்லாரும் சந்தோசமாக வந்தார்கள் உண்டார்கள் சென்றார்கள்... உனக்கு பிடித்திருக்கிறதா என்று கூட யாரும் அவளை கேட்கவில்லை.... !
அவளுக்கென்று ஒரு இதயம் இருப்பதும்..... அதற்கென்ற நியாயமான வயதுக்கனவுகள் இருப்பதும் யாருக்கும்
தெரிந்திருக்கவில்லை.....மாப்பிள்ளை 40 வயது மனிதன்..... அப்பாவைவிட பத்து வயதுதான் வித்தியாசம், கருப்பு நிறம் , குண்டு உருவம், சிரிக்கும்போது விகாரம்.... அவனுக்கு இரண்டாந்தாரமாக தாமரை.....!
யாரும் அவளின் விருப்பத்தை கேட்கவில்லை.... !
வெளியே பேச முடியவில்லை என்றாலும் உள்ளத்து கேள்விகள்
வெடித்தன....! நானா வரம் கேட்டு பிறந்தேன்.....
அவரின் வறுமைக்கு யார் காரணம்.... எனக்கென்று கனவுகள் இல்லையா..? எனக்கென உணர்ச்சிகள் இல்லையா... எனக்கென ஒரு மனம் இல்லையா..... வீட்டின் பின் கொள்ளை புறம் சென்று மோட்டார் ரூமிற்குள் சென்று கதவை தாழிட்டு
மூலையில் அமர்ந்த நொடியில் சார சாரவென வழிந்தது..... அடக்க ப்பட்டிருந்த கண்ணீர்.!
ஊமையாக்கப்பட்ட அவள் உணர்வுகளின் வடிகாலாய் கண்ணீர் நிலத்தில் சிந்தி.... நீர்த்திராவகம் எடுத்தது... அவளுக்கென்றிருந்த அழகான சிறிய உலகம்.... தொலைவில்
எங்கோ சென்றதாக உணர்ந்தாள்..! அணை தாண்டிய ஆற்றாமைகள் கரை தாண்டி கண்ணீறாக கரைந்தாள்.....! மனம் மலர்ந்து
மணந்த நாட்கள் இனி வானம் வரப்போவாதில்லை.... கவிதைகளை ரதித்து கவிந்திருந்த கணங்கள் இனி கடந்து செல்லப்போவதில்லை.....! கண்களை மூடினாள் தாமரை......!
ஏனோ தெரியவில்லை திடீரென கணேஷின் அழகான முகம் நினைவில் நீந்தியது...!
அவனின் சிரித்த முகம் மனத்திரையில் மறையாமல் நின்றது....
அவன் பார்த்தபோதெல்லாம் தலையை திருப்பிக்கொண்டு சென்றதும்....
எதிர்ப்படும் போதெல்லாம்... தலையை குனிந்து சென்றதும் நினைவில் நிழலாடியது....!
ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்திருந்தால் இன்று எனக்காக என் வாயிலில் வந்து நின்றிருப்பானோ..?
மனதிலேயே போட்டு மடிந்த எண்ணங்களையும்.... தொண்டைகுழிக்குள்ளேயே போட்டு புதைத்துகொண்ட கேள்விகளையும்......உள்ளக்குமுறல்களையும் எனக்காக உரைத்திருப்பானோ..... கரம் பற்றி ஆதரவாய் என் தலை கோதி..... கண்கள் வடிந்த நீரை கைகள் கொண்டு துடைத்து
மார்போடு எனை அனைத்திருப்பானோ....! உடன் இட்டு சென்றிருப்பானோ...!
கண்ணீரோடு கனவுகளையும் அஸ்தமித்து காற்றானால்.... அந்தி மாந்தாரை........ அந்த தாமரை....!கனவுலகம் நோக்கிய அவள் பயணம் தொடர்ந்தது......!
.

அனுராகவன்
27-01-2008, 04:00 PM
படித்ததா(அ) சொந்த கதையா.....
ம்ம் நல்ல தொடர்ந்து செல்லட்டும்..

வசீகரன்
28-01-2008, 05:05 AM
சொந்தக்கதைதான் அனு என் நண்பி ஒருவளின் வாழ்வில் நடந்த நிகழ்வு அது....! இன்னமும் எங்கள் ஊரில் இப்படி பெண்கள் கிணற்று தவளைகளாகவே வளர்க்கப்படுகிறார்கள்.....! அவர்களின் உலகம் அதுவரைதான்..... உரிமைகள் மறுக்கப்படுகின்றன.... அதிகம் பேசுரிமை கிடையாது....!தாய் தகப்பன் சொல்வதுதான் அவர்கள் வரையில் எதுவும்..... அப்படிப்பட்ட ஒரு
பெண்ணின் உண்மை கதைதான் அது அனு.....! வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க
நன்றி அனு..... உங்கள் படைப்புகளையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவருகிறேன்....
நன்றி.....! தொடர்ந்து விமர்சியுங்கள்.....!

சுகந்தப்ரீதன்
28-01-2008, 08:59 AM
வசீகரா..! உங்கள் ஊரில் மட்டுமல்ல.. எங்கள் ஊரிலும் இப்படிதான் இருக்கிறார்கள் பெண்கள்..! காலம் காலமாய் போடபட்ட அடிமை சங்கிலியை இன்னும் கழட்டாமல் கழட்ட முடியாமல் உணர்வுகளையும் கனவுகளையும் உள்ளுக்குள்ளேயே போட்டு புதைத்து கண்ணீர்விட்டு மனதுக்கு உரமாக்கி விடுகிறார்கள்..!

இதற்கெல்லாம் என்ன காரணம்.. அறியாமை..! தன் தகுதிக்கு மீறி குழந்தைகளை பெற்றுக்கொள்வது.. ஆண் குழந்தை வேண்டும் என்ற மோகம்.. போன்றவைதான்..! வெறுமையாகத்தான் இருக்கிறது இன்றைக்கும் கிராமத்து பெண்களின் நிலை...!

அடுத்து வசீகரா.. இது உன் முதல் கதை என்று நினைக்கிறேன்..! இன்னும் உரைநடையை உன்னால் மெருகு கூட்டி எழுத முடியும் என்று தோன்றுகிறது..முயற்சித்து பார்..கண்டிப்பாக எழுத முடியும்..! இக்கதையில் நிமிர்ந்து பார்த்திருந்தால் இப்படி எல்லாம் இந்நேரம் நடந்திருக்குமோ என்று எண்ணும் ஒரு பெண்ணின் உணர்வை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறாய்.. வாழ்த்துக்கள் வசீகரா..!

இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது வேடிக்கையாய் வலி நிறைந்த வாழ்க்கை வாடிக்கையாய்...! தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன் நண்பா..!

மனோஜ்
28-01-2008, 09:20 AM
அழகாய் பெண்ணின் மதை வெளிபடுத்தும கதை
கிராமத்து கொடுமை இந்த கதையிலும் வாழ்த்துக்கள் வசீகரன்

ஆர்.ஈஸ்வரன்
28-01-2008, 09:58 AM
கதை நன்றாக இருக்கிறது. பெண்களின் முன்னேற்றம் நகரங்களில் அதிகமாகவும், கிராமப்புறங்களில் குறைவாகவும் உள்ளது. கிராமமும் விரைவில் மாறும்.

வசீகரன்
29-01-2008, 05:36 AM
அடுத்து வசீகரா.. இது உன் முதல் கதை என்று நினைக்கிறேன்..! இன்னும் உரைநடையை உன்னால் மெருகு கூட்டி எழுத முடியும் என்று தோன்றுகிறது..முயற்சித்து பார்..கண்டிப்பாக எழுத முடியும்..! இக்கதையில் நிமிர்ந்து பார்த்திருந்தால் இப்படி எல்லாம் இந்நேரம் நடந்திருக்குமோ என்று எண்ணும் ஒரு பெண்ணின் உணர்வை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறாய்.. வாழ்த்துக்கள் வசீகரா..!

தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வேண்டுகிறேன் நண்பா..!

நிச்சயமாக நண்பா... நேரமின்மை முதன் காரணம்...! மற்றொன்று..... நான் மன்ற நண்பர்களைபோன்று சொந்த கணினியை வைத்திருக்கவில்லை..... ப்ரௌஸிஂங் நிலையத்திலிருந்து மன்றத்தை தொடர்பு கொள்கிறேன்.....! அதனால் எனது பதிவுகளும் குறைவு,,,, மன்ற நண்பர்களுடன் எண்ணபகிர்வுகளும் குறைவு....!
இருந்தாலும் என் மனம் முழுதும் என்றும் மன்றம்தான்....! விரைவில் சொந்தமாக கணினி வாங்க உத்தேசித்து உள்ளேன்.... அப்புறம் பார்.....!
இது எனது முதல் சிறுகதை மன்றத்தில்.... தொடர்ந்து எழுதுகிறேன்..... சுகந்த்....
தொடர்ந்து வழங்கிவரும் தோழமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் நண்பா...!
என் சார்பில் மன்றத்தில் உனது பங்கு அதிகமாக இருக்கட்டும் நன்றி சுகந்த்....!
இதை படிப்பாய் என நம்புகிறேன்...!

வசீகரன்
29-01-2008, 05:38 AM
அழகாய் பெண்ணின் மதை வெளிபடுத்தும கதை
கிராமத்து கொடுமை இந்த கதையிலும் வாழ்த்துக்கள் வசீகரன்

மிக்க நன்றிகள் நண்பர் மனோஜ்....! தொடர்ந்து விமர்சியுங்கள்.... காத்திருக்கிறேன்.... பங்களிப்புகளை நல்க...!

வசீகரன்
29-01-2008, 05:41 AM
கதை நன்றாக இருக்கிறது. பெண்களின் முன்னேற்றம் நகரங்களில் அதிகமாகவும், கிராமப்புறங்களில் குறைவாகவும் உள்ளது. கிராமமும் விரைவில் மாறும்.


மிக்க நன்றி ஈஸ்வரன்.... தங்கள் விமர்சனத்திர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்....
தொடர்ந்து விமர்சியுங்கள்...!