PDA

View Full Version : விபியில் காம்போ பாக்ஸ் சந்தேகம்



lolluvathiyar
27-01-2008, 05:18 AM
விபியில் காம்போ பாக்ஸ் சந்தேகம்

வனக்கம் எனக்கு ஓரளவுக்கு விசுவல் பேசிக் தெரியும். அதில் காம்போ பாக்ஸ் பற்றிய சிறு சந்தேகம் யாராவது தீர்த்து வைக்க முடியுமா.
என் சந்தேகம் என்னவென்றால் காம்போபாக்ஸில் லிஸ்ட் சேர்த்து பிறகு அதை ரன் செய்யும் போது அதில் ஏதாவது தேர்வு செய்த பின் டைப் அடித்தால் எழுத்து மாறுகிறது. அப்படி இரு ந்தால் சில அசௌகரியங்கள் ஏற்படுகிறது. செலெக்ட் மட்டும் பன்ன முடியும் ஆனால் அதில் டைப் அடிக்க முடியாத வகையில் ஏதாவது பிராபர்டி இருகிறதா?
அதுபோல ரன் ஆனவுடனே முதல் ஐட்டத்தை டிபால்டாக காட்ட ஏதாவது பிராப்பர்டி இருகிறதா (அது காலியாக இருகிறது)

praveen
27-01-2008, 05:37 AM
விபியில் காம்போ பாக்ஸ் சந்தேகம்

என்ன பதிப்பு என்று சொல்லுங்கள் நான் தேடி தருகிறேன். பதிப்பெண் 6 தானே.

அன்புரசிகன்
27-01-2008, 07:32 AM
இங்கே (http://www.vbtutor.net/vbtutor.html) சென்று பாருங்கள். ஒவ்வொரு படிமுறைகளாக உள்ளன.

இணையத்தில் உள்ள ஒரு உரையாடலை அப்படியே இங்கு தருகிறேன். உதவினால் சந்தோசமே.


கேள்வி: I designed simple program with combobox and i want to lock this combobox. I dont want to allow the user to type in this combobox. Only the list item data can be selected and not allowed to type any value..


for example:

Displaying "Gender" using combobox . The item list are "male" and "female" only. I want the user to select only from this option at not allowing them to type or to change the value of this combobox..

anybody have idea or who can help to do this..

பதில்: You can do this by setting the Style property to 2 - Dropdown List.
சுட்டி (http://www.daniweb.com/forums/thread98557.html)

உங்களுக்கு தேவையானது என்னிடம் இருந்தால் தருகிறேன். சற்று அவகாசம் தரவும். தேடவேண்டும். :D

செல்வா
27-01-2008, 12:31 PM
வாத்தியாரண்ணா... ரொம்ப இலகுவாக நீங்கள் நினைப்பதை சாதிக்கலாம்.
1) செலெக்ட் மட்டும் பன்ன முடியும் ஆனால் அதில் டைப் அடிக்க முடியாத வகையில் ஏதாவது பிராபர்டி இருகிறதா?
combo box propertie ல் style - ஐ 2 - drop down list என மாற்றுங்கள் . இப்போது உங்களால் தட்டச்ச முடியாது மாறாக தேர்வு செய்ய மட்டுமே இயலும்.

2) ரன் ஆனவுடனே முதல் ஐட்டத்தை டிபால்டாக காட்ட ஏதாவது பிராப்பர்டி இருகிறதா
நாம் தான் text property க்கு assign செய்ய வேண்டும்
உங்களுக்கு default ஆக வரவேண்டிய text தெரியும் என்றால் நீங்களாகவே நேரடியாக assign செய்யலாம் . அல்லது list(index) property ம் பயன் படுத்தலாம். உதாரணமாக கீழேயுள்ள நிரலை கவனியுங்கள்

With Combo1
.AddItem "India", 0
.AddItem "Pakistan", 1
.AddItem "China", 2
.AddItem "Bangladesh", 3
.Text= "china" 'இப்படி நேரடியாகவும் பதியலாம்
.Text = .List(2) 'இப்படி கொடுக்கும் பேபாது தொகுப்பிலுள்ள மூன்றாவது வார்த்தை தானாகவே தெரியும்.
End With

இது ... விசுவல் பேசிக் 6. விசுவல் பேசிக் .net என்றால் இன்னும் வித்தியாசம் இருக்கிறது. மேலும் விபரங்கள் வேண்டும் என்றால் சொல்லுங்கள்.

lolluvathiyar
28-01-2008, 07:14 AM
சந்தேகத்தை தீர்த்து வைத்த அனைவருக்கு மிக்க நன்றி. செய்து பார்த்தேன் நன்றாக வேலை செய்கிறது.
முதல் ஐட்டம் வர நான் பார்ம் லோடில்
combo1.listindex=0
என்று எழுதி விட்டேன். அதுவும் வந்து விட்டது
உதவி நன்பர்களுக்கு மிக்க நன்றி

reader
08-04-2008, 01:09 PM
வாத்தியாருக்கே சந்தேகமா? அப்போ பசங்களுக்கு எல்லாம்?

அன்புரசிகன்
08-04-2008, 01:36 PM
வாத்தியாருக்கே சந்தேகமா? அப்போ பசங்களுக்கு எல்லாம்?

நண்பரே... பதிவுகளில் நகைச்சுவை இருக்கலாம். தவிர நையாண்டி வேண்டாம்.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லித்தாருங்கள். விடுத்து வேறு தேவையற்ற பதிவுகள் நீக்கப்படும்.