PDA

View Full Version : வானவில் காலம்.. (அத்தியாயம் 4)...தொடர்கதை..



rambal
30-06-2003, 04:17 PM
வானவில் காலம்.. (அத்தியாயம் 4)...தொடர்கதை..

அடுத்த நாள் காலை. வழக்கமான 11D பஸ். வழக்கத்திற்கு மாறாக பதட்டத்துடன் கௌரி..
நித்யாதான் பேச்சை ஆரம்பித்தாள்.
"ஏண்டி ஒரு மாதிரியா இருக்க?"
"எல்லாம் அந்த கேசவன் மேட்டர்தான்.."
"போகாத.."
"இல்லடி இன்னிக்கு போகணும்.. இன்னியோட இந்த சாப்டரை முடிக்கணும்.."
"என்னவோ பாடத்தில ஒரு சாப்டரை முடிக்கணுங்கிற மாதிரில்ல பேசுற.."
"எனக்கு என்னவோ இது சரியா வரும்ணு தோணலை.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் என்கூட வாடி..ப்ளீஸ்.."
"ஏய் பாவம்டி அவன்.."
"பாவ புண்ணியம்லாம் பாத்தா அப்புறம் நம்ம வாழ்க்கையே கவுந்துரும்.."

அன்று மாலை பேஸ்ட்ரீ கார்னரில் கேசவன் இருந்தான்.
"வா கௌரி.. சொன்ன மாதிரி கரெக்ட்டா டயத்துக்கு வந்துட்ட"
"அப்படீன்னா என்னைய எதிர்பார்த்தியா?"
"ஆமா.. சரி.. இன்னிக்கு என்ன விசேசம்?"
"ஒன்னுமில்லையே"
"ஒன்னுமில்லாமத்தான் இங்க வந்தியாக்கும்.."
"என்ன சொல்றீங்க?"
"என்ன விசயமா இங்க வந்தேன்னு கேட்டேன்.."
"என்னை விளையாடுறீங்களா? நேத்து நீங்கதான சொன்னீங்க.. இன்னிக்கு இங்க நான் வந்தா உங்களை லவ் பண்ணலைன்னு அர்த்தம்.. அதான் இங்க வந்தேன்.."
"நான் ஒன்னும் அப்படி சொல்லலியே.. இங்க வந்தாதான் லவ் பண்றதா அர்த்தம்ன்னுல்ல சொன்னேன்..
நீதான் தப்பா புரிஞ்சுகிட்ட.."
"இங்க பாருங்க கேசவன்... இது நல்லாயில்லை.. மாத்திப் பேசாதீங்க...."
"நானா.. மாத்திப் பேசுறேன்.. உனக்காக அரை மணி நேரமா காத்துகிடக்கிறேன்.."
"இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம் கேசவ்.. நீங்க சொன்னதுனாலதான் இங்க வந்தேன்.. இல்லைன்னா வராமலேயே இருந்திருப்பேன்..""
"அட.. இப்ப நமக்கு யாரையாவது பிடிச்சுப் போச்சுன்னா அவங்களை வரச்சொல்லி பாப்போம்.. பிடிக்காதவங்களை வரச் சொல்லி பாக்றதுக்கு எனக்கு என்ன பைத்தியமா?"
"ஆமா நீ பைத்தியம்தான்.."
"நீன்னு என்னை கூப்பிட்டது எவ்ளோ க்யூட்டா இருக்கு தெரியுமா.. இனிமேல என்னைய நீன்னே கூப்பிடு..
அப்புறம் என்ன சொன்ன? பைத்தியம்னா.. உண்மைதான்.. உன் மேலதான் பைத்தியமா இருக்கேன்.."
"போதும்.. இத்தோட நிறுத்திக்க.. எனக்கு உன் மேல ஒன்னும் கிடையாது.. தேவையில்லாம என்னைய டிஸ்டர்ப் பண்ணாத.."
"ஏய் கௌரி.. நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படற?"
"பின்ன நீங்க பேசுற பேச்சுக்கு கோபப்படாம.."
"அப்ப என் காதலை புரிஞ்சிக்க மாட்டியா.."
"புரிஞ்சிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.."
"என்னைய பிடிக்கலையா.."
"உன்னையையும் பிடிக்க்லை.. உன் லவ்வையும் பிடிக்கலை.."
"சரி நான் என் லவ்வை எப்படி சொன்ன உனக்கு பிடிக்கும்ன்னு சொல்லு.. அந்த மாதிரியே சொல்லிற்றேன்.."
"ஐயோ.. உன் இம்சை தாங்கலீயே.. பேசாம போஸ்டர் அடிச்சு ஒட்டு.."

இத்துடன் இருவரும் கிளம்பி தத்தம் வீடுகளுக்கு புறப்பட்டனர்..

அடுத்த நாள் பஸ்ஸ்டாப்பில்..

"கௌரி ஐ லவ் யூ..
இதற்கு மேலும்
என் காதலை நீ
புரிந்து கொள்ளவில்லையென்றால்...."

அந்த போஸ்டரைக் கண்டவள் கொஞ்சம் அதிர்ந்தே போய்விட்டாள்..
அந்த அதிர்ச்சியிலேயே பேருந்தில் ஏறுகையில் அங்கும் அதே போஸ்டர்...
பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்தாள்.
"என்னடி நீ சொன்ன மாதிரியே அவன் போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டிட்டாண்டி.."
"கொஞ்சம் சும்மா இருக்கியா.. இதுவரைக்கும் கௌரின்னா யாருன்னு யாருக்கும் தெரியாது.. நீயே காட்டிக் கொடுத்துடுவ போல.."
வழி நெடுக போஸ்டர்கள் கண்களில் தென்பட்டன..
அவுட் போஸ்ட் பஸ்ஸ்டாப்பில் கேசவன் ஏறினான்.
"கௌரி.. இப்பவாவது என்னை லவ் பண்றேன்னு சொல்லு.. அவசர அவசரமா பிரிண்டரைப் பிடிச்சு ஆயிரம் போஸ்டர்
அடிச்சு.. ராத்திரியோட ராத்திரியா எல்லா இடத்திலையும் ஒட்டி.. எல்லாம் நீ சொன்னதுக்காகத்தான்.."
"நான் என்ன சொன்னாலும் செய்வியா.."
"என் லவ்வை நீ புரிஞ்சுக்கிடணும்ன்னா என்ன வேண்ணா செய்வேன்.."
"அப்படின்னா செத்துப் போ.."
"உண்மையாத்தான் சொல்றியா?"
"ஆமாம்.."
"சரி உன் விருப்பம் அதுதான்னா நான் செத்துப் போறேன்.. நான் செத்தப்பறமாவது லவ் பண்றேன்னு சொல்வியா?"
"முதல்ல நீ செத்துப் போ.. அப்புறம் கண்டிப்பா சொல்றேன்.."
"சரி.. தயாரா இருந்துக்கோ.. என் டெட்பாடிகிட்ட காதலை சொல்ல.. பை.."

அன்று மாலை வீட்டில்.. பத்மநாபனும் மீருவும்..
"இப்படியெல்லாமாக் கூட இருப்பாங்க?"
"என்ன சொல்றீங்க?"
"யாரோ கௌரியாம்.. அவளை ஒருத்தன் லவ் பண்றானாம். அவ கேட்டுகிட்டதுக்காக போஸ்டர் அடிச்சு ஒட்டி
இம்ப்ரஸ் பண்றானாம்.. வீட்டில இருந்து கிளம்பி ஆபீஸ் போற வரைக்கும் வழி நெடுக போஸ்டர்.."
"இப்படியெல்லாம் செய்றதுக்கு எப்படிதான் மூளை வேலை செய்யுதோ?"
"நீ ஏன் சலிச்சுக்கிற.. நான் உனக்கு இப்படி போஸ்டர் அடிச்சு ஒட்டலைன்னா?"
"அட நீங்க வேற.. சும்மா.."
"ஆமா கௌரி வந்துட்டாளா.."
"அப்பவே வந்துட்டு மொட்டை மாடிக்கு போயாச்சு.."
"சரி.. சரி.. எதுக்கும் அவளை கொஞ்சம் கவனிச்சுக்க.."
"யாரோ ஒரு கௌரிக்காக எவனோ ஒருத்தன் போஸ்டர் அடிச்சு ஒட்டினா.. நம்ம குழந்தை மேல சந்தேகப்படறதா?"
"அப்படியெல்லாம் இல்லை.. இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணுமில்லையா.. அதுக்காக சொன்னேன்.."

அடுத்த நாள் வழக்கம் போல் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்க கௌரி ஏதோ ஒரு சிந்தனையில் அனிச்சையாய்
அவுட் போஸ்ட் பஸ் ஸ்டாப்பில் முகம் திரும்ப..
"என்ன யாரை தேடுற?"
"நான் யாரையும் தேடலை.."
"அதான் உன் முகம் சொல்லுதே..."
"நீ எப்படி வேணுண்ணா நினைச்சுக்க.. நான் அவனை தேடலை.. சும்மா முகத்தை இப்படி திருப்பிடக் கூடாதே.. உடனே
ஆரம்பிச்சிருவியே.."
அப்போது ஒருவன் வேக வேகமாக கௌரி இருந்த சீட்டிற்கு அருகில் வந்து
"நான் கேசவனோட பிரெண்டு.. நீங்க தான கௌரி?"
"ஆமா.."
"கேசவன் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்குறான்.."
"என்ன ஆச்சு?"
"பாய்சன் சாப்பிட்டுட்டான்"
"என்னது பாய்சனா? எதுக்கு?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நேத்துல இருந்து ஒரு மாதிரியா இருந்தான்..
கடைசியா, இன்னிக்குக் காலைல அவன் ஏரியா பசங்க வந்து சொன்னபிறகுதான் எனக்கே தெரியும்..
அதுக்கு அப்புறமா அவனை ஹாஸ்பிட்டல்ல பாத்தப்ப.."
"எந்த ஹாஸ்பிட்டல்?"
"ஜி.ஹைச். எமர்ஜென்ஸி வார்ட். உங்களை கடைசியா ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்.."
தக்வல் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்..

கௌரியிடம் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. அவனுக்கு மட்டும் ஒன்னும் ஆகக் கூடாது..
மனசு வேண்டிக் கொண்டது..

"என்ன இப்ப திருப்தியா?"
"நான் விளையாட்டுக்கு சொன்னதை வேத வாக்கா எடுப்பான்னு யாருக்குடி தெரியும்?"
"அதான் எடுத்துட்டானே.. இருந்தாலும் நீ அவனை ரொம்பத்தான் டீஸ் பண்ணிட்டே"
"நான் செஞ்சதெல்லாம் தப்புதான்.. ஒத்துக்கிறேன்.. அதுக்காக இப்படியா பண்ணுவாங்க..."
அவர்கள் இருவரும் ஜி.ஹைச். எமர்ஜென்ஸி வார்டிற்குள் நுழைந்தனர்..
அங்கு...

(தொடரும்)

பாரதி
30-06-2003, 05:40 PM
கதையிலும் புயல்! கதை வேகத்திலும் புயல் !!

இளசு
03-07-2003, 05:00 PM
மிக இயல்பான வசனங்களும்
விரைவான கதைப்போக்கும்
சுவாரசியம் கூட்டுகின்றன ராம்...

நானும் பரபரப்போடு அவசரசிகிச்சை வார்டுக்குள் நுழைகிறேன்...
அங்கே..??????