PDA

View Full Version : பொன்மொழிகள்

அனுராகவன்
27-01-2008, 01:18 AM
அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

-அனு

மலர்
31-01-2008, 03:33 AM
வாவ் சூப்பரான பொன்மொழி...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...
அனுக்கா அப்படியே
இன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்
தொடர்ந்து தாங்களேன்....

ஓவியன்
31-01-2008, 03:41 AM
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)

மலர்
31-01-2008, 03:47 AM
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)
அக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....
அதைபோய்
எப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க..... :eek: :eek:

சிவா.ஜி
31-01-2008, 04:07 AM
அனு அதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

அன்பைத்தருவதில் வள்ளலாக இருங்கள்
புறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்
கோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்
தீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்

அனுராகவன்
31-01-2008, 08:09 AM
வாவ் சூப்பரான பொன்மொழி...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...
அனுக்கா அப்படியே
இன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்
தொடர்ந்து தாங்களேன்....

நன்றி மலர்...
ம்ம் விரைவில் தருகிறேன்..
தொடர்ந்து வருக...

அனுராகவன்
31-01-2008, 08:11 AM
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)

ஓ அவ்வளவுதான் உங்க கணிப்பு..
நல்லதை நல்லதாக பாருங்கள்..
ம்ம் என் நன்றி

அனுராகவன்
31-01-2008, 08:12 AM
அக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....
அதைபோய்
எப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க..... :eek: :eek:

நன்றி மலர்..
மனிதர்கள் பலவிதம் அதில் சில இப்படி....
(சும்மா)

அனுராகவன்
31-01-2008, 08:14 AM
அன்பைத்தருவதில் வள்ளலாக இருங்கள்
புறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்
கோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்
தீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்

நன்றி சிவா.ஜி
ம்ம் என் வாழ்த்துக்கள்..

ஜெகதீசன்
31-01-2008, 01:30 PM
அனு அக்கா:icon_b:

பொன்மொழி நல்லாதான் இருக்கு

ஆனா ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா ?
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

aren
31-01-2008, 01:41 PM
வாவ் சூப்பரான பொன்மொழி...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...
அனுக்கா அப்படியே
இன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்
தொடர்ந்து தாங்களேன்....

உங்களுக்குத்தான் தலைக்கணம் அதிகமாக இருக்கிறதே. இன்னும் எதற்கு.

aren
31-01-2008, 01:43 PM
முடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........!! :)

எப்படிங்க உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.

ஹீம், இப்படி யோசித்தும் நீங்கள் அடுத்தவாரம் மாட்டிக்கொள்ளப் போகிறீங்கள். அந்த விஷயத்தில்மட்டும் எப்படிங்க கோட்டை விட்டீர்கள். விதி யாரை விட்டது என்கிறீர்களா?

ஷீ-நிசி
31-01-2008, 02:09 PM
வாவ் சூப்பரான பொன்மொழி...

"வாவ்" சூப்பரான பொன்மொழியா?! :cool:

அனுராகவன்
23-02-2008, 01:18 AM
அனு அக்கா:icon_b:

பொன்மொழி நல்லாதான் இருக்கு

ஆனா ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா ?
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

நன்றி ஜெகதீஸா...
நீங்கள் சொல்வது உண்மைதான்..
நீங்களும் பழமொழிகள் தாரளமாக இங்கு தரளாம்..

அனுராகவன்
23-02-2008, 01:20 AM
உங்களுக்குத்தான் தலைக்கணம் அதிகமாக இருக்கிறதே. இன்னும் எதற்கு.

வேண்டாம் ப்லீஸ்..
மலர் மனம் புண்படக்கூடாது..

அனுராகவன்
02-03-2008, 01:39 AM
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை
வேறு யாரும் காப்பாற்ற முடியாது.

அனுராகவன்
02-03-2008, 01:40 AM
எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு,
ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை

அனுராகவன்
02-03-2008, 01:40 AM
உங்களிடம் அறிவொளி இருந்தால்
அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

அனுராகவன்
14-03-2008, 01:08 AM
எங்கே நல்ல உள்ளம் இருக்கிறதோ
அங்கே சோதனையும் மலிந்திருக்கும்

அனுராகவன்
14-03-2008, 01:09 AM
எல்லாமே இழந்துவிட்டோம் என்று தோன்றும் போது
ஒன்றை மறவாதீர்கள்--அது எதிர்காலம் ஒன்று இருப்பதுதான்

அனுராகவன்
14-03-2008, 01:10 AM
உன்னைத் தாய் பத்து மாதங்கள் சுமந்தவள்
தன் பாலூட்டி வளர்த்தவள்
உனக்கு எல்லாம் அவள்தான்
அந்தத் தாய் உன்னைப்பற்றி ஆண்டவனிடம்
முறையிடும்படி விட்டுவிடாதே

அனுராகவன்
14-03-2008, 01:11 AM
உன்னுடைய மகிழ்ச்சியை உலகம் பகிர்ந்துகொள்ளத்
தயாராக உள்ளது, ஆனால் உன்னுடைய துயரத்தை
நீ மட்டும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்..ஏனெனில்
மகிழ்ச்சியைக்காட்டிலும் துயரத்தைத்தான் உலகம் தன்னுள்
பெருமளவில் கொண்டுள்ளது

அனுராகவன்
14-03-2008, 01:12 AM
நீ யாருடன் சிரித்து மகிழ்ந்தாய் என்பதை மறக்கலாம்
ஆனால் யாருடன் அழுதாய் என்பதை மறக்கமுடியாது

உலகத்தில் எல்லாம் தெரிந்தவனும் இல்லை
ஒன்றுமே தெரியாதவனும் இல்லை

மற்றவர்களின் துயரத்தைக் கண்டு இரக்கப்படுங்கள்
ஆனால் உங்களுடைய சொந்தக் கஷ்டங்களை
உங்களிடமே வைத்திருங்கள்

அனுராகவன்
05-04-2008, 01:50 AM
சிந்தனைத் துளி!

வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரியமான, அன்பான நண்பர்களை
நீ அடையலாம்... ஆனால் உன்னுடைய தாயின் மூலம் உனக்குக்
கிடைத்த விபரிக்க முடியாத அன்பையும், கண்ணியத்தையும்...
வேறு யார் மூலமாகவும் உன்னால் பெற முடியாது!

அனுராகவன்
17-04-2008, 08:10 AM
எங்கே நல்ல உள்ளம் இருக்கிறதோ
அங்கே சோதனையும் மலிந்திருக்கும்

எல்லாமே இழந்துவிட்டோம் என்று தோன்றும் போது
ஒன்றை மறவாதீர்கள்--அது எதிர்காலம் ஒன்று இருப்பதுதான்

உன்னைத் தாய் பத்து மாதங்கள் சுமந்தவள்
தன் பாலூட்டி வளர்த்தவள்
உனக்கு எல்லாம் அவள்தான்
அந்தத் தாய் உன்னைப்பற்றி ஆண்டவனிடம்
முறையிடும்படி விட்டுவிடாதே

உன்னுடைய மகிழ்ச்சியை உலகம் பகிர்ந்துகொள்ளத்
தயாராக உள்ளது, ஆனால் உன்னுடைய துயரத்தை
நீ மட்டும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்..ஏனெனில்
மகிழ்ச்சியைக்காட்டிலும் துயரத்தைத்தான் உலகம் தன்னுள்
பெருமளவில் கொண்டுள்ளது

நீ யாருடன் சிரித்து மகிழ்ந்தாய் என்பதை மறக்கலாம்
ஆனால் யாருடன் அழுதாய் என்பதை மறக்கமுடியாது

உலகத்தில் எல்லாம் தெரிந்தவனும் இல்லை
ஒன்றுமே தெரியாதவனும் இல்லை

மற்றவர்களின் துயரத்தைக் கண்டு இரக்கப்படுங்கள்
ஆனால் உங்களுடைய சொந்தக் கஷ்டங்களை
உங்களிடமே வைத்திருங்கள்

SathyaThirunavukkarasu
17-04-2008, 02:54 PM
அனு மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் உண்மையை
தொடரட்டும் உங்கள் பணி

அனுராகவன்
18-04-2008, 04:33 PM
அனு மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் உண்மையை
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி தங்கையே..
தொடர்ந்து வருக..

க.கமலக்கண்ணன்
18-04-2008, 04:45 PM
அனு இதுவரை இந்த திரியை பார்க்கவில்லை

அஹா மிகமிக

அற்புதமான கருத்துக்களை

அனுபவமான பொன் பொழிகள்

அருமை அனு நன்றி தெடருங்கள்...

அனுராகவன்
18-04-2008, 05:10 PM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்

எண்ணம்
20-04-2008, 01:50 PM
சிந்திக்க வைக்கும் வரிகள். மிக்க நன்றி. :icon_b:

visu_raj87
20-04-2008, 02:46 PM
அருமையான கருத்துக்கள்.

அனுராகவன்
20-04-2008, 02:52 PM
சிந்திக்க வைக்கும் வரிகள். மிக்க நன்றி. :icon_b:
எண்ணம் அவர்களே மிக்க நன்றி!!
என்றைக்கும் வாருங்கள்..
என்றும் அன்புடன்!!